தமிழ்
செவ்வந்தி – ஜான் ஸ்டெயின்பெக்
கூதிர்காலம். உச்சியில் மூடுபனிச் சாம்பல் நிற இழையாகப் படர்ந்து விசும்பில் இருந்தும் உலகின் பிற பகுதிகளில் இருந்தும் சாலினாஸ் மலைச்சரிவைத் தனிமைப்படுத்துவதைப் போலப் போர்த்தியது. அனைத்து திசை மலைகளின் மீதும் ஒற்றை மூடி என உட்கார்ந்து, மாபெரும் பள்ளத்தாக்கை ஒரு மூடிய பானையென அது உருமாற்றியது. அகண்ட பார்வைக் கோணத்தில் ஆழமாக உழுத கருந்துண்டாக நிலம் காட்சியளித்தது. ஆங்காங்கே கீறல்பட்ட உலோகமெனத் தரை மின்னியது. சாலினாஸ் நதியின் குறுக்கே மலையடிவாரத்தில் இருந்த பண்ணை நிலத்தில் குறுந்தண்டுகள் முளைத்த […]