Tag: ஸ்டாலின் ராஜாங்கம்

எழுத்து

அன்றாடத்தின் கற்பிதம்: தமிழ்த் திரைப்படங்களில் உள்ளூர் நாயகர்கள்

ஸ்டாலின் ராஜாங்கம் · 27.07.21

1980களில் பல்வேறு உள்ளூர் அம்சங்கள் திரைப்படச் சட்டகத்திற்குட்பட்டு தமிழ்த் திரை வெளிக்குள் கொணரப்பட்டன. உள்ளூர் நினைவுகளில் நிலைத்துவிட்ட நாட்டார் நாயகர்கள் பற்றிய கதைகளை மையமாக்கி வெளியான படங்கள் அவ்வகையில் முக்கியமானவை. அவற்றுள் இரண்டு போக்குகள் உண்டு. மக்களிடையே வாழ்ந்து வாய்வழிக் கதைகளாக உள்ளவர்களின் வரலாறை வெகுஜன கதையாடலுக்கேற்ப மாற்றி வெளியிட்ட படங்கள் முதல்வகை. கரிமேடு கருவாயன், மலையூர் மம்பட்டியான், சீவலப்பேரி பாண்டி போன்ற படங்களை இந்த வகையில் கூறலாம். இவர்கள் பெரும்பாலும் உள்ளூரில் நிலவிய ஏதோவொரு அதிகாரத்தால் பாதிக்கப்பட்டு […]

எழுத்து

பாலுத்தேவரும் சேனாதிபதியும்: தமிழ்த் திரைப்படங்களில் காவல் உரிமையும் வாக்கைக் காத்தலும் – ஸ்டாலின் ராஜாங்கம்

ஸ்டாலின் ராஜாங்கம் · 25.09.20

வேத நூல்களை குழிதோண்டிப் புதைத்துவிட்டு புயலாகிப் புறப்படும் ‘புதுமைப்பெண்’ணை (1984) காட்டிய பாரதிராஜா மூன்றாண்டுகள் கழித்து வேதங்களைப் புதிதாக்க வேண்டும் என்ற திட்டத்தோடு (வேதம் புதிது 1987) வந்தார். இரண்டிலும் வேதம் பழமையின் குறியீடாகச் சொல்லப்பட்டு மாற்றத்திற்கான அடையாளமாக புதுமை/புதிது எனும் சொற்கள் வைக்கப்பட்டன. புதுமைப்பெண்ணில் பெண்ணடிமைத்தனம். வேதம் புதிதில் சாதி. இரண்டு படங்களிலும் பாகுபாடுகளுக்குமான ஆதாரமாக வேதங்கள் புரிந்துகொள்ளப்பட்டிருந்தன. இவ்விரண்டு பாகுபாடுகளின் அழிவும் வேதம் அழிவது அல்லது மாறுவது என்பவற்றோடு தொடர்புகொண்டிருந்தன. வேதங்கள் பிராமணர்கள் தொடர்பில் […]

எழுத்து

ஒரு சம்பவமும் ஐந்து படைப்புகளும்: படைப்புக்காரணிகளும் ஊடகங்களும் – ஸ்டாலின் ராஜாங்கம்

ஸ்டாலின் ராஜாங்கம் · 20.07.20

இந்தக் கட்டுரை ஐந்து படைப்புகளை முன்வைத்து எழுதப்படுகிறது. எனவே, அப்படைப்புகளின் சுருக்கத்தை முதலில் தொகுத்துக் கொள்வோம். I மனுசங்கடா சென்னையில் விடியப்போகும் வேளை. தூக்கத்திலிருக்கும் கோலப்பனுக்கு கிராமத்திலிருக்கும் அவன் தந்தை சின்னய்யன் இறந்துவிட்டார் என்று போன் வருகிறது. சிதம்பரம் வட்டம் அம்மையப்பன் கிராமத்தைச் சேர்ந்த அவன் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டு அறையெடுத்து தங்கியிருக்கிறான். பஸ்ஸில் ஊருக்குக் கிளம்பும் அவனுக்கு அப்பா இறந்த கவலையோடு மற்றொரு கவலையும் சேர்ந்து கொள்கிறது. ஊரில் மயான பாதை […]