Tag: பால்சாக்

தமிழ்

சாத்தானின் வாரிசு – பால்சாக்

எஸ்.கயல் · December 27, 2022

பாரீசின் புகழ்பெற்ற நாட்ரே டேம் தலைமைத் தேவாலயத்தின் மதகுரு ஒருவர் புனித பியர் ஆக்ஸ் பஃப் அருகே தன் சொந்த வீட்டில் வசித்தார். அவர் பாரீசுக்கு வந்தபோது உறையில்லா வாளைப் போல ஏதிலியாக வந்தார். வசீகரத் தோற்றமும் பொருள் வளமும் இருந்ததாலும் பலரது வேலையைத் தனி ஒருவராகத் தானே செய்ததாலும் நல்ல மதிப்பு பெற்று உயர்ந்தவர், அதிக உடலுழைப்பு தேவைப்படாத, பெண்களுக்குப் பாவமன்னிப்பு வழங்கும் பணியை ஏற்றார். துயரத்தில் இருந்தவர்களை அதிலிருந்து மென்மையாக விடுவித்தும் நோயுற்றவர்களுக்குத் தன் வசமிருந்த ஆறுதல் […]

தமிழ்

நாத்திகரின் பூசை – பால்சாக்

ராஜேந்திரன் · February 24, 2022

மருத்துவர் ஒருவர் மனித உடற்கூறு பற்றி மிகச் சிறப்பான கோட்பாட்டை வழங்கியதற்காக விஞ்ஞான உலகமே அவருக்கு நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளது. அவர் பாரிஸ் நகர மருத்துவப் பாடசாலையின் புகழ்பெற்ற வல்லுநர்களில் ஒருவராகத் தனது இளம் வயதிலேயே திகழ்ந்து சாதனை படைத்தார். உயர்தரக் கல்வியைப் புகட்டுகிற பாரிஸ் நகரின் மருத்துவப் பாடசாலை ஐரோப்பிய மருத்துவர்கள் அனைவருமே புகழ்ந்து போற்றுவதாகும். மருந்து சம்பந்தமான ஆராய்ச்சிகளில் தம்மை அர்ப்பணித்துக்கொள்வதற்கு முன்னதாக பியான்கன் என்னும் அந்த மருத்துவர் அறுவை சிகிச்சையைத்தான் நீண்ட காலமாகச் […]

தமிழ்

அதீத அப்பாவியாக இருப்பதன் அபாயம் – பால்சாக்

விஜயராகவன் · August 29, 2021

மாண்ட்கண்ட்டூர் பிரபு தீரமிக்கப் போர்வீரர் ஆவார். ஆஞ்ஜு (Anjou) சமஸ்தான சீமானின் மாட்சிமைக்காக நடந்த போரில் இவர் தன் தைரியத்தை வெளிப்படுத்தி மத வெறியர்களை வென்றதால் இவருக்கு இந்தப் பட்டப்பெயரைப் பின்னர் மன்னராக முடிசூட்டிக்கொண்ட ஆஞ்ஜுவின் சீமான் அளித்தார். ஊவ்ரே (Vouvre) பிரதேசத்தில் கட்டப்பட்ட கோட்டைக்கும் இப்பெயரே வாய்த்தது. இந்தப் போர்வீரருக்கு இரண்டு மகன்கள். அவர்கள் இருவரும் நல்ல கத்தோலிக்கர்கள்தாம். இதில் மூத்த மகன் அரசவையில் இடம்பெற்றிருந்தார். புனித பார்த்தோலோமியோவின் தினத்தை முன்னிட்டு என, தந்திரமான உபாயமாக […]

கட்டுரை

மானுடத்தின் எல்லைகள் – பால்சாக்கின் “தந்தை கோரியோ”

பாலாஜி பிருத்விராஜ் · July 27, 2021

ஓர் அழகியல் மரபின் ஆரம்பகாலப் படைப்புகளைப் படிப்பது எப்போதும் ஆர்வமூட்டுவது. வளர்ந்த மூங்கிலைப் பின்சென்று குருத்து நிலையில் பார்ப்பதைப் போன்ற உணர்வு அது. எந்தக் கணு எவ்வாறு முளைத்து வளர்ச்சி பெறப்போகிறது என்கிற சாத்தியத்தை அதில் காணும்போது ஏற்படும் கிளர்ச்சி அலாதியானது. மேலும் அவ்வகையான அழகியல் எழுந்து வருவதற்கான தேவையும் எவ்வகையில் அது முந்தைய வடிவிலிருந்து வேறுபட எத்தனிக்கிறது என்பதை அவதானிப்பதும் ஒரு இலக்கிய வாசகர் அம்மரபைப் புரிந்துகொள்வதற்கு முக்கியமானது. பால்சாக்கின் படைப்புகள் இலக்கியத்தில் யதார்த்தவாதத்தைத் தொடங்கி […]

தமிழ்

தலைமைக் காவலரின் மனைவி – பால்சாக்

இல. சுபத்ரா · February 27, 2021

அர்மனாக்கின் தலைமைக் காவலதிகாரி தான் விரும்பியது போன்ற வளமான எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளும் பொருட்டு கோமாட்டி ‘பான்’-ஐ மணம் முடித்தார். அப்பெண்ணோ, அதற்கு முன்பே, மன்னர் ஆறாம் சார்லஸின் அரண்மனை காரியஸ்தருடைய மகனாகிய இளைய சர்வஸியிடம் தன் மனதைப் பறிகொடுத்திருந்தார். தீரமிக்கப் போர்வீரனான தலைமைக் காவலதிகாரி அழகற்றவராகவும் கடுமையானவராகவும் அடர் தாடியுடனும் எப்போது பார்த்தாலும் சினத்தில் வார்த்தைகளை உமிழ்பவராகவும் தூக்கிலிடுவதையே தொழிலாய்க் கொண்டிருப்பவராகவும் போர்க்களச் சிந்தையிலோ அல்லது காதல் தவிர்த்த பிற விஷயங்களிலோ மூழ்கியிருப்பவராகவும் இருந்தார். திருமண வாழ்வின் இனிமையை […]