சிறுகதை
பொட்டை
ஒரு கிழவியின் பழைய கண்ணாடியின் ஒடிந்த காலை மாட்டிக் கொடுத்துக்கொண்டிருக்கும் போது ஓர் ஆள் வந்து நின்ற மாதிரி இருந்தது. பக்கத்து வீட்டுப் பையன். ”ஆச்சி உடனே வரச் சொல்லிச்சி.” நாதன் நிமிர்ந்து, “ஏம்லே.. என்ன விஷயம்?” என்று கேட்டான். பையன், “தெரியலை, உடனே வரணுமாம்” என்றான். நாதன், “கிழவி, போட்டுப் பாரு… பார்ப்போம்” என்று கண்ணாடியைக் கொடுத்தான். அவள் அதைப் போட்டுக்கொண்டு “ஆங்” என்று முகம் மலர்ந்தாள். “எவ்வளவு கொடுக்கணும் ராசா?” “இருக்கிறதை கொடு.” அவள் […]