எழுத்து
முகம்
“செத்துப் போகணும்னு முடிவுசெஞ்சேன். ஆட்டோ புடிச்சு நேரா இங்க வந்து படுத்தேன்!“ என்றார் பாசு. அவர் சொல்லி முடிக்கும்போதே காலை வெயிலை ஏற்று எதிரொளித்துக்கொண்டு ஒரு புகைவண்டி போயிற்று. கொஞ்ச நேரம் அந்தத் தடக்தடக்கில் கூடிக்கொண்டிருந்தது மனம். சாவதற்கு நல்ல இடம். சாலை விஸ்தரிக்கப்பட்டு, கட்டிடங்கள் அதிகரித்து, சுரங்கப்பாதை எல்லாம் வந்து, போக்குவரத்து நெருக்கினாலும்கூட, நாற்பது வருடங்களுக்கு அப்புறமும் இது சாவதற்கு ஏற்ற இடம்தான். இவ்வளவு காலம் போன பின்னாலும், அந்த இடத்தை அவ்வளவு சீக்கிரம் யாராலும் கூர்ந்து […]