Tag: The Shroud

தமிழ்

சவச்சீலை – முன்ஷி பிரேம்சந்த்

கோ.கமலக்கண்ணன் · August 29, 2021

குடிசைக்கு வெளியே அணைந்து போன தீக்குழிக்கு முன்பாக தந்தையும் மகனும் அமர்ந்திருந்தனர். உள்ளே பேறுவலி கண்ட மகனின் இளம் மனைவி, புத்யா அவ்வப்போது இதயத்தைக் கிழிக்கும் கூரிய ஓலங்களை அவர்களுக்கு அனுப்பித் துணுக்குற வைத்தாள். அவள் வலியால் துடித்துக்கொண்டிருக்கிறாள் என்பதை அவ்வோலமே அறிவித்தது. கடுமையான குளிர் இரவு. எங்கும் உறைவு நீக்கமற நிறைந்திருந்தது. அந்தக் கிராமத்தை இருள் மெல்ல மெல்ல மொத்தமாக விழுங்கியிருந்தது. ‘இவள் உயிர் பிழைப்பாள் என்று தோன்றவில்லை’ என்றார் கிஷு. ’இந்த நீண்ட நாள் முழுவதும் […]