Tag: இதழ் 29

கட்டுரை

டாக்டர் ஜீவா – சில நினைவுகள்

எம்.கோபாலகிருஷ்ணன் · March 28, 2021

‘ரிஷ்யசிருங்கர்’ எனும் ஈரோடு ராஜேந்திரன் “டாக்டரைப் பாக்கலாம் வாங்க” என்று அழைத்துச் சென்றார். மாலை ஏழு மணி. இருட்டு விழுந்திருக்க மங்கலான வெளிச்சத்துடனான பழைய கட்டிடம். நலந்தா மருத்துவமனையில் எந்தப் பரபரப்பும் இல்லை. டாக்டர் தீவிரமாக எதையோ எழுதிக்கொண்டிருந்தார்.  “அடடே, வாங்க” என்றவரின் முகம் முழுக்கச் சிரிப்பு. மேசையின் மீதிருந்த தாளில் கருப்பு மசியால் அவருடைய அழகான கையெழுத்தில் ஒரு அறிவிப்பு தயாராகிக்கொண்டிருந்தது.  “ஈரோடு வந்துட்டீங்களாமே?” மகிழ்ச்சியுடன் விசாரித்தவர், பக்கத்தில் வைத்திருந்த அன்றைய நாளின் ஹிந்து செய்தித்தாளிலிருந்து […]

கட்டுரை

தஸ்தாயேவ்ஸ்கியின் இருத்தலியம்

சர்வோத்தமன் சடகோபன் · March 28, 2021

‘இருத்தலியமும் மார்க்ஸியமும்’ நூலில் பாஸ்கலிலிருந்து சார்த்தர் வரையிலான இருத்தலியலாளர்களைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார் எஸ்.வி.ராஜதுரை. தஸ்தாயேவ்ஸ்கியைத் தவிர! ஆனால் புனைவுலகில் இருத்தலியத்தைப் பேசியவர்களில் தஸ்தாயேவ்ஸ்கி முதன்மையானவர். இருத்தலியத்தின் தந்தை என்று சொல்லப்படும் கீர்க்கேகார்ட் காலத்தில் வாழ்ந்தவர் தஸ்தாயேவ்ஸ்கி. தஸ்தாயேவ்ஸ்கி எழுதிய ‘பீடிக்கப்பட்டவர்கள்’ (The Possessed) நாவலை அடிப்படையாகக் கொண்டு மூன்று மணி நேரத்திற்கும் மேலாக வரக்கூடிய நாடகம் ஒன்றை எழுதி இயக்கினார் ஆல்பெர் காமு. தஸ்தாயேவ்ஸ்கியின் மற்ற நாவல்களுடன் ஒப்பீடுகையில் இந்தப் பீடிக்கப்பட்டவர்கள் நாவலே எவ்வித மீட்சியும் […]

சிறுகதை

வன்மம்

இராசேந்திர சோழன் · March 28, 2021

ஊருக்கு ஒதுக்குப்புறமாயிருந்தது அந்த மண்டபம். மண்டபத்துக்குள் யாரோ சில சோம்பேறிகள் ‘மங்காத்தா’ வெட்டிக்கொண்டிருந்தார்கள். வெளித் திண்ணையில் வீராசாமி உட்கார்ந்திருந்தான். வருடக்கணக்காக மழிக்கப்படாத அடர்ந்த தாடியும் மீசையும் முகத்தை மறைத்திருந்தன. நடுவே பீடித்துண்டு புகைந்துகொண்டிருந்தது. உழைத்து உரமேறிப்போன உடம்பு உருக்குலைந்து தளர்ந்து போயிருந்தது. வியர்வைத் துளிகள் பொங்கி அரும்பு கட்டி நின்றன. உச்சி வெயில் கொடுமையாக இருந்தது. எப்போதோ ஒருமுறை மண்டபத்தை வந்தடையும் காற்றும் வெப்பம் மிகுந்ததாய் வறண்டு தாக்கியது. மத்தியான நேரத்து அமைதி எங்கும் வியாபித்துக் கிடந்தது. வீராசாமி […]

தமிழ்

ஃபியோதர் தஸ்தாயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் (ரஸ்கோல்நிகாவ் கதாபாத்திரத்தை முன்வைத்து) – ஹெரால்டு ப்ளூம்

கார்குழலி · March 28, 2021

ரஸ்கோல்நிகாவ் வருத்தமும் அதன் விளைவாக ஏற்படும் தணியாத கோபமுங்கொண்ட ஒரு மாணவன். தன்னை ஏமாற்றிய அடகுக்கடை வைத்திருக்கும் பேராசைப் பிடித்த கிழவியைக் கொல்லவேண்டுமென்ற கற்பனையை வளர்த்துக்கொள்கிறான். கிழவியை மட்டுமில்லாமல் அவளுடைய புத்திபேதலித்த மாற்றாந்தாயின் மகளையும் கொல்லும்போது அதுவரையிலும் அவனுடைய கற்பனையில் விரிந்துகொண்டிருந்த காட்சிகள் உண்மையாகிவிடுகின்றன. இந்தக் குற்றத்தை ரஸ்கோல்நிகாவ் செய்துமுடித்ததும் அவன் அடுத்தடுத்து சந்திக்கும் நாவலின் மூன்று முக்கியக் கதைமாந்தர்களால் அவன் தலைவிதி எழுதப்படுகிறது. முதலாவதான சோன்யா இளவயதினள், பக்திமிக்கவள், தேவதையைப் போன்றவள். உடன்பிறந்தோரை வாழவைப்பதற்காகத் தன்னுடைய […]

கட்டுரை

ஆகமம், அரசு, அரசியல்: ஜயந்த பட்டாவின் ஆகமடம்பரத்தை முன்வைத்து

B.C. அனீஷ் கிருஷ்ணன் நாயர் · March 28, 2021

ஜயந்த பட்டா எழுதிய ஆகமடம்ரம் என்னும் வடமொழி நாடகம் தன்னளவில் பல சுவாரஸ்யங்களைக் கொண்டது. இது தவிர ஒன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்நாடகம் அக்காலகட்டத்தில் வலிமையாக இருந்த மதப் பிரிவுகள், அவற்றிற்கு இடையே இருந்த பிணக்குகள்- இணக்கங்கள் ஆகியவற்றைக் குறித்த ஒரு விரிவான சித்திரத்தையும் தருகிறது. இதனாலேயே இந்நாடகம் இன்றளவும் இந்து சமய வரலாறைப் புரிந்துகொள்ள உதவும் ஒரு பிரதியாகப் பயன்படுகிறது . நான் இக்கட்டுரையைக் கீழ்க்கண்டவாறு கட்டமைக்கலாம் என்று தீர்மானித்துள்ளேன். முதல் பகுதியில் நாடகாசிரியரைக் குறித்தும், […]

தமிழ்

நூல்கோல்கள் – சாகத் ஹசன் மண்ட்டோ

ஜான்ஸி ராணி · March 28, 2021

‘தயவுசெய்து வேலைக்காரனிடம் எனது மதிய உணவைக் கொடுத்தனுப்பு. நான் பசியால் தவிக்கிறேன்.’ ‘மணி மூன்றாகிறது. இந்நேரம் எங்கிருந்து உங்களுக்கு உணவு கிடைக்கும்?’ ‘மூன்று மணியானாலென்ன – இங்குதான் நான் வாழ்கிறேன். நான் சாப்பிட வேண்டும். அனைத்திற்கும் மேலாக இந்த வீட்டில் எனக்கென்று சில உரிமைகள் வேண்டும்.’ ‘ஓ, சரி. என்ன உரிமைகள்? எத்தனை உரிமைகள்?’ ‘எப்போதிருந்து நீ இதுபோன்ற விஷயங்களைக் கண்காணிக்கத் தொடங்கினாய் – இவ்வாறு என்னைக் கேள்வி கேட்கிறாய்?’ ‘நான் கேட்கவில்லையெனில், இந்த வீடு இத்தனை […]

தமிழ்

ஒற்றை நிலைப்பாடு – இடாலோ கால்வினோ

மோகன ரவிச்சந்திரன் · March 28, 2021

பால்வெளி மண்டலத் திரள்களின் வேகம் பற்றிய எட்வின் பி.ஹப்பிளின் கணக்கீடுகள் வாயிலாக, அனைத்து பிரபஞ்ச விசயங்களும் ஒரே நிலைப்பாட்டில் குவிந்திருக்கும் அந்தத் தருணத்தை, வெட்டவெளியில் அது விரிவடையத் துவங்குவதற்கு முன், எங்களால் நிறுவ முடியும். இயல்பாகவே, நாங்கள் அனைவரும் அங்குதான் இருந்தோம் – பழைய Qfwfq கூறியது – வேறு எங்கு நாங்கள் இருந்திருக்க முடியும்? வெட்டவெளி என்ற ஒன்று இருக்க முடியும் என்பது அப்போது எங்களில் யாருக்கும் தெரியாது அல்லது காலம் என்பது இருக்க முடியும் […]