Tag: கோ.கமலக்கண்ணன்

தமிழ்

ஆஸ்கார் விருதுகள் 2019

கோ.கமலக்கண்ணன் · February 17, 2019

1 ஆஸ்கார் எப்போதும் ஒரு வித கலவையான ரசனையுடனேயே படத்தேர்வில் ஈடுபடுகிறது. முழுக்க சிறந்த திரைப்படங்களை மட்டுமோ, அல்லது முழுக்க வணிக வெற்றி படங்களையோ கொண்டோ அது தன் பட்டியலை நிரப்புவதில்லை. அது அதிகளவிலான மக்களைத் தன்னுடன் இணைத்துக் கொண்டாடிக் கொள்வதற்கான தருணமாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவதற்கான பிரயத்தனங்களிலேயே எப்போதும் ஈடுபடுகிறது. ஆஸ்காரின் தேர்வுகள் ஏதோவொரு அரசியல் நோக்கத்தைத் தன்னுள்ளே வைத்தே செயல்பட்டு வருகிறது என்பது இன்று புரிந்து கொள்ள முடியாத கருத்தமைவல்ல. அது கூடிய மட்டும் […]

தமிழ்

அழகியல் மீதான வன்முறை – டராண்டினோவின் திரைப்படங்கள் குறித்து ஒரு பார்வை

கோ.கமலக்கண்ணன் · January 13, 2019

1 படைப்புதிறனை உளவியல் துறையில் ‘விரிசிந்தனையின் வழியே புதியதாகவும் பயனுள்ளதாகவும் எதையேனும் உருவாக்கும் இயல்பு’ என்று கில்ஃபோர்ட் வரையறுக்கிறார். சினிமாவில் புதியது எப்படி உருவாக்கப்பட முடியும், புதியது என்பது கதைகளின் வழியே, கதை மாந்தர்களின் வழியே, இயக்கத்தைக் கொண்டு உணர்வுகளைக் கடத்துவதன் வழியே, தொழில்நுட்பங்களின் நிரல் நிரை மாற்றங்களைக் கொண்டு உருவாகும் எண்ணிலா பார்வையின் வழியே, நிலங்களின் வழியே என ஈறேயில்லாத வாய்ப்புகளைக் கொண்டு புதுமை செய்ய முடியும். சிறந்த திரைப்படங்களாகக் கருதப்படும் எவற்றிலும் உள்ள அழகியலும் யதார்த்தக் […]

தமிழ்

2018ம் ஆண்டின் தலைசிறந்த தொடர்கள்

கோ.கமலக்கண்ணன் · December 15, 2018

தொலைக்காட்சித் தொடர்களை சினிமாவிற்கு இணையாக உலகெங்கும் பிரபலப்படுத்திய முக்கிய தொடரான Game of Thrones இவ்வாண்டு ஒளிபரப்பப்படவில்லை. ஆனால், அதைப் பற்றிய வருத்தமே ரசிகர்களுக்கு ஏற்படாத அளவிற்கு நெட்ஃப்ளிக்ஸ், ஃபாக்ஸ், ஹூலூ, அமேசான் என அனைத்து கட்டண சேவை நிறுவனங்களும் தொடர்களை வாரி வழங்குகிறார்கள். இவ்வாண்டின் இறுதியில் மட்டுமே ஐநூறுக்கும் மேற்பட்ட தொடர்கள் இணையத்தில் நிறைந்து வழிகின்றன. அவற்றுள் கணிசமானவை தரத்துடன் இருக்கின்றன. தொலைத்தொடர்களின் பொற்காலம்! 2018 இல் கவனிக்கத்தக்க, தனித்துவமிக்க வரையறுக்கப்பட்ட தொடர்கள் (Limited Series) மற்றும் திரட்டுதொடர்களின் (Anthology […]