Tag: நம்பி கிருஷ்ணன்

தமிழ்

மொழியாலானது இவ்வுலகம் அல்லது ‘விட்கன்ஷ்டைனின் ஆசைநாயகி’

நம்பி கிருஷ்ணன் · December 27, 2022

“சந்தேகத்திற்கு இடமின்றி இவை எல்லாம் மனதைக் குழப்பும் வேலைக்காகாத புதிர்மைகளே. இருப்பினும், வேலைக்காகாத புதிர்மைகளே இருப்பின் அடிப்படை மனநிலையாக இருக்கக்கூடுமோ என்று நாம் மீண்டும் மீண்டும் சந்தேகிக்கிறோம். எவரோ ஒருமுறை கூறியது போல் அல்லது கண்டிப்பாகக் கூறியிருக்க வேண்டியது போல், பதற்றம் என்பது இருப்பின் அடிப்படை மனநிலை.“ – விட்கன்ஷ்டைனின் ஆசைநாயகி, டேவிட் மார்க்சன். இது விட்கன்ஷ்டைனின் ஆசைநாயகியைப் பற்றிய அறிமுகமல்ல. எனக்குத் தனிப்பட்ட முறையில் விட்கன்ஷ்டைனையோ அவரது ஆசைநாயகியையோ தெரியாது. ஏனெனில் விட்கன்ஷ்டைன் 1951இலேயே இறந்துவிட்டார் […]

கட்டுரை

பூட்லேரின் சொர்க்கமயமான தீமையின் மலர்கள்

நம்பி கிருஷ்ணன் · April 25, 2022

பூட்லேரைப் பொறுத்தமட்டில் அவருடன் தொடர்பிலிருந்த பெண்களுடனேயே ஒருவர் ஆரம்பிக்கலாம். லே ஃப்லேர் டு மால் (Les Fleurs du Mal, The Flowers of Evil) தொகுதியின் முதல் கவிதை ஒரு தாயின் குரலில் தொடங்குகிறது, அனைத்துப் பெண்களின் விதிகளிலிருந்தும் தனக்காக இந்தப் பிரத்யேக விதியைத் தேர்ந்தெடுத்ததற்காக, முஷ்டியை மடக்கியபடி கடவுளிடம், கோபத்துடன் மன்றாடுவதைப் போல் அது தொடங்குகிறது: “Since I was chosen of all my sex bring this scandal to my bed and board […]

கவிதை

மறைந்தழியும் உலகுடன் ஒரு கடைசி செல்ஃபி – சமேர் அபூ ஹவேஷ்

நம்பி கிருஷ்ணன் · April 25, 2021

சில சமயங்களில் அசட்டை செய்யப்பட்ட இலையொன்றே தவறவிட்ட பெயரொன்றின் பூட்டைத் திறந்து வைக்கிறது. * சிரத்தின் வனத்தில் பொதிந்திருக்கும் பேசா முகங்களின் தொலைந்த குரல்களை மீட்டளிக்க சுடுரசத்தை ஊதித் தணிப்பது போல் ஆவிபடர் குளியலறை ஆடியின் மீது மூச்செறிவதே போதுமானது. * உன்னிடமிருந்தா அல்லது சருமத்திற்கு மிக  நெருக்கமானதொரு தொலைவில் அச்சுறுத்தும் அருகாமையில்  இருக்கும் ஒரு விலங்கிடமிருந்தா  என்று நிர்ணயம் செய்ய முடியாத அளவிற்கு இப்போது காட்டு விலங்கை ஒத்திருக்கும்  மூச்சிரைத்தலை ஆடிமுன் நின்றுகொண்டிருக்கும் உன்னாலுமேகூட கட்டுப்படுத்த […]

தமிழ்

கட்டுரை எனும் கலை: ஜான் மாரிஸ் நேர்காணல்

நம்பி கிருஷ்ணன் · December 22, 2020

ஒரு சில வாரங்களுக்கு முன், ஜான் மாரிஸ் தன் கனிந்த 94வது வயதில் வாழ்வின் அக்கரைக்குப் பயணப்பட்டார். அவர் அந்த அடைமொழியை வெறுத்தார் என்றாலும், என்னளவில் ஜான் மாரிஸ் உலகின் தலைசிறந்த “பயண எழுத்தாளர்களில்” ஒருவர், எக்காலத்திலும்.  அவரைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் ‘கிளர்ந்தெழும்’ என்ற சொல் என் மனதில் தோன்றுகிறது, காலத்தையும் இடத்தையும் அவை கிளர்ந்தெழச் செய்வதால். அவர் எழுதிய நூல்களில் நான் வாசித்த முதல் நூல்கள், பாக்ஸ் பிரிட்டானிகா (Pax Britannica) முந்நூல் தொகை (ஆணாக […]

கட்டுரை

தல்ஸ்தோயின் க்ராய்ட்சர் சொனாடா அல்லது நரி முள்ளெலி டூயட்

நம்பி கிருஷ்ணன் · November 18, 2020

ஒரு இலக்கியப் படைப்பு ரயில் பயணத்தின் எல்லைக்குட்படுத்தப்படுவது ஏதோ ஒரு விதத்தில் நம் மனதைத் தொடுகிறது. சொல்லப்படுவதற்காக அதற்கு அளிக்கப்பட்டிருக்கும் நேரம் அதை உடனழைத்துச் செல்லும் பயணத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. அதைச் செவிமடு்ப்பவர்கள் அதில் பாத்திரம் வேடம் தரித்துக்கொண்டாலும், அவரவர் நிறுத்தங்களில் ரயிலையும் அதையும் விட்டு, தங்கள் அன்றாடத்தைத் தொடரப் போய்விடுகிறார்கள். பயணம் முடிகையில் அது தனித்து நிற்கிறது, அதன் வருங்கால வாசகப்-பயணியை எதிர்பார்த்து.  சாகியின் கதைசொல்லி என்று தலைப்பிடப்பட்ட கதைதான் இவ்வகைமையில் எனக்கு மிகவும் பிடித்தமான கதை. அதில் […]

கட்டுரை

பொலான்யோவின் ‘2666’, அல்லது சீரணிக்க முடியாததைச் சீரணித்தல்

நம்பி கிருஷ்ணன் · April 14, 2020

எடுத்ததும் இயக்குனர் பியர் பாவோலோ பஸோலினி தான் (Pier Paolo Pasolini) நினைவுக்கு வருகிறார். குறிப்பாக, அவரது ‘சாலோ’. இதுவரை எடுக்கப்பட்ட திரைப்படங்களில் மிகவும் குரூரமானதும் அருவெறுக்கச் செய்யுமளவு நேர்மையானதுமான திரைப்படம் அது, உங்களுக்கு நினைவிருக்கிறதா தெரியவில்லை. மார்கீடுசாதின் (Marquis de Sade) ‘120 டேஸ் ஆஃப் சாடம்’ என்ற நூலின் திரைவடிவம், இது துல்லியமான புவி மற்றும் வரலாற்றுப் பின்புலங்கள் சேர்த்து சாதின் அழகியலை சமகாலத்துக்குரியதாக்குகிறது. சீரணிக்க முடியாத மிகைநுகர்வுகளை விவரிக்கும் சாதின் நாவலில், சமூகத் […]

தமிழ்

காலத்தின் தொடர்வேட்டன்: பி கானும் அவரது “நயநுணுக்கமிக்க பிணங்களும்”

நம்பி கிருஷ்ணன் · August 17, 2019

Cadavre exquis (ஆங்கிலத்தில் Exquisite Corpse, நயநுணுக்கமிக்க பிணம்) என்று பிரெஞ்சுக்காரர்கள் அழைக்கிறார்கள் அல்லவா, அங்கு துவங்குகிறேன். சர்ரியலிஸ்டுகளே விளையாட்டுத்தனமாகத் தான் இதைத் தொடங்கி வைத்தார்கள் என்று கூறப்படுகிறது. எந்த விளையாட்டையும் போல் இவ்விளையாட்டிற்கும் முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்ட சில விதிமுறைகள் உண்டு. அவற்றின்படி சித்திரங்கள் அல்லது சொற்றொடர்களை விளையாடுபவர்கள் அடுத்தடுத்து இணைத்துக் கொண்டே செல்ல வேண்டும். பங்களிக்கையில் அதுவரையில் தொகுக்கப்பட்டிருக்கும் பங்களிப்புகளில் ஒரு பகுதியை மட்டுமே ஒருவர் பார்வையிட முடியும் போன்ற நிபந்தனைகளும் உண்டு. சைனீஸ் […]

கட்டுரை

புகைப்படங்கள் வழியே இருண்மையாக, அமெரிக்கா – சூசன் சாண்டாக்

நம்பி கிருஷ்ணன் · March 18, 2019

கலாச்சாரத்தின் வருங்கால ஜனநாயக அகல்பரப்புக் காட்சிகளை, பீர்கையில் வால்ட் விட்மன் அழகிற்கும் அழகின்மைக்குமிடையே, சாரத்திற்கும் சாரமின்மைக்குமிடையே உள்ள வேறுபாட்டிற்கு அப்பால் பார்க்க முனைந்தார். பெருந்தன்மையான தரப்பிரித்தல்களைத் தவிர மற்ற தகவுப் பாகுபாடுகள் அனைத்துமே கண்மூடி அடிமைத்தனமாகவோ அல்லது மேட்டிமைத்தனமாகவோ அவருக்குத் தோன்றியது, நம் கலாச்சார புரட்சியின் அதிதீரமும், அதிபித்தும் வாய்ந்த கவிஞர் கபடில்லாத நேரடித்தனத்தின் மகோன்னதங்களை அதிகமாகவே பறைசாற்றினார். அமெரிக்க வாழ்வனுபவத்தின் ‘அனைத்தையும் அரவணைத்து’க் கொள்ளும் குணத்தையும், அதன் வீரியத்தையும் ஏற்று அதன் நிதர்சனத்தை ஆரத் தழுவிக் […]

கட்டுரை

அந்தக் குரங்குகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன? – கை டாவன்போர்ட்

நம்பி கிருஷ்ணன் · September 13, 2018

புல்வெளிகள் இம்ப்ரஷனிசம் தன் அந்தரங்க நோக்கத்தை, அதனை அறிந்திராத காரணத்தால், ரகசியமாய் வைத்திருந்தது: சாலைகள் குறித்த மனவுருவம். சாலை, ஆறு, பாதை இல்லாத இம்ப்ரஷனிஸ்ட் கான்வாஸ் ஒன்றைக் காண்பது அரிது. எதிர்பார்க்க முடியாத இடங்களில் ரயில்கள் தோன்றுகின்றன, அம்மாக்களுக்கும் பெண்களுக்கும் பின்னால், அமைதியும் அழகும் ஆனந்தமும் நிறைந்த ஆதர்ச கிராமிய சித்திரங்களின் பின்னணியில், தொலைவில். உண்மைதான், ஐரோப்பிய வரலாற்றில் முதல்முறையாக சாலைப் பயணம் பாதுகாப்பானதாக இருந்தது, முன் எப்போதும் இல்லாத வகையில் வர்த்தகம் விரிவடைந்து கொண்டிருந்தது. மொனே […]