Category: மொழிபெயர்ப்பு

எழுத்து

இலையுதிரும் காலம் – வில்லியம் ஃபாக்னர்

கார்குழலி · 24.02.22

I செப்டம்பர் மாத அந்திநேரத்து வானம் செக்கச் சிவந்திருந்தது. அறுபத்தி இரண்டு நாட்களாக ஒரு பொட்டு மழையில்லை. அந்த வதந்தி, அந்தக் கதை, எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், காய்ந்த புல்லில் பற்றிய நெருப்பு போலப் பரவியது. செல்வி மின்னி கூப்பர், ஏதோவொரு கறுப்பினத்தவன், இருவரையும் பற்றியது. தாக்கப்பட்டார், அவமதிக்கப்பட்டார், அச்சுறுத்தப்பட்டார். யாருக்கும் உண்மையில் என்ன நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. அது ஒரு சனிக்கிழமை மாலை, முடி திருத்தும் கடையில் அவர்கள் கூடியிருந்தார்கள். கூரையில் இருந்த மின்விசிறி […]

எழுத்து

காதலின் துயரம் – கதே

எம்.கோபாலகிருஷ்ணன் · 24.02.22

இந்தச் சொற்களின் ஆற்றல் அனைத்தும் துக்கமுற்ற அவனது சுயகட்டுப்பாடுகளைத் தகர்த்தெறிந்தது. கதியற்றுப் போனவனாய் அவன் லாதேயின் பாதங்களில் வீழ்ந்தான். அவள் கைகளைப் பற்றினான். கண்களிலும் நெற்றியிலும் வைத்து அழுத்திக்கொண்டான். அதிர்ச்சிகரமான அவனது துயர முடிவைக் குறித்த உள்ளுணர்வு அவளது மனத்தில் பளிச்சிட்டது. அவளது மூளை குழம்பியது. அவனது கைகளை இறுகப் பற்றித் தன் மார்பின் மீது வைத்து அழுத்திக்கொண்டாள். துயரப் பெருமூச்சுடன் அவனைத் தழுவினாள். தகிக்கும் இருவரது கன்னங்களும் உரசின. உலகத்தை மறந்தனர். அவளைக் கைகளால் பின்னித் தன் […]

எழுத்து

சோர்பா என்ற கிரேக்கன் – நீகாஸ் கசந்த்சாகீஸ்

கோ.கமலக்கண்ணன் · 24.02.22

என்னைத் துயில் முற்றாக ஆட்கொண்டிருந்தது. நான் விழித்தெழுந்தபோது சோர்பா வெளியே சென்றிருந்தார். குளிரடித்தது. எழவேண்டும் என்று எனக்குத் துளியும் எண்ணமில்லை. என் தலைக்கு மேல் இருந்த புத்தக அடுக்குகளில் துழாவி, என்னுடன் எடுத்துவந்த நூல்களுள் ஒன்றான, எனக்குப் பிடித்த மாலர்மேவின் கவிதைகளை எடுத்தேன். நான் மெதுவாக மனம் போன போக்கில் பத்திகளைத் தேர்வுசெய்து வாசித்தேன். நூலை மூடினேன். மீண்டும் திறந்தேன். இறுதியாகக் கீழே தூக்கிப் போட்டேன். என் வாழ்விலேயே முதல்முறையாகக் குருதியற்ற, மணமற்ற, மானுட சாரமே இல்லாத […]

எழுத்து

சோதனைக் குடுவை – சில்வியா பிளாத்

மதுமிதா · 24.02.22

சுவாரஸ்யமான சில மருத்துவமனைக் காட்சிகளைக் காட்டு என்று பட்டியைக் கெஞ்சிக்கொண்டே இருந்தேன். அதனால் ஒரு வெள்ளிக்கிழமை அனைத்து வகுப்புகளையும் வெட்டிவிட்டு நீண்ட வார விடுமுறை எடுத்துக்கொண்டேன். அவன் எனக்கான வேலைகளைக் கொடுத்தான். நான்கு பிணங்கள் இருந்த அறையில், வெள்ளைக் கோட்டு ஒன்றை அணிந்துகொண்டு ஒரு உயரமான நாற்காலியில் அமர்ந்துகொண்டேன். பட்டியும் அவனுடைய நண்பர்களும் பிணத்தை அறுத்துக்கொண்டிருந்தனர். அந்தப் பிணங்கள் மனிதத்தன்மை இல்லாத தோற்றம் கொண்டிருந்தாலும், அவை என்னைச் சற்றும் பயப்படுத்தவில்லை. அவை கருமையான ஊதா நிறத்துடன், பதனிட்ட […]

எழுத்து

போர் – லூயிஜி பிராண்டெல்லோ

எஸ்.கயல் · 24.02.22

அதிவிரைவு வண்டியொன்றில் ரோமைவிட்டுக் கிளம்பிய பயணிகள், சுலோமனாவுக்குச் செல்லும் சிறிய புராதான உள்ளூர் ரயிலுக்காக, ஃபேப்ரியோனாவின் சிறிய புகைவண்டி நிலையத்தில் விடியும்வரை காத்திருக்க வேண்டியிருந்தது.  முந்தைய இரவு அந்த இரண்டாம் வகுப்புப் பெட்டியில் ஐந்து பேர் தங்கியிருந்தனர். அது இப்போது புழுக்கத்துடனும் புகைமூட்டத்துடனும் இருந்தது. கோணல்மாணலாக மூட்டையைப் போலிருந்த, துயரார்ந்த முகத்துடனிருந்த பருமனான ஒரு பெண்மணி அதில் இப்போது ஏறினாள். வாயிலிருந்து புகையை வெளியேற்றியபடி, அழுக்கான மெலிந்த உடலும் பலவீனமான தோற்றமும் கொண்ட அவளுடைய கணவன் அவளைப் […]

எழுத்து

அங்கே சொற்களுக்கு அவசியமில்லை

க. மோகனரங்கன் · 24.02.22

வெற்றிடம் – அம்ருதா ப்ரீதம் (Amrita Pritam) இரண்டு இராஜ்ஜியங்கள் மட்டுமே அங்கேயிருந்தன. முதலாவது அவனையும் என்னையும் வெளியேற்றியது. இரண்டாவதை நாங்கள் புறக்கணித்தோம். வெறுமையான வானத்தின் கீழ் நான் நெடுங்காலமாக  என் மேனியின் பொழிவில் மூழ்கிப்போயிருந்தேன். அவனோ தனது ஈரத்தில் அழுகிக்கொண்டிருந்தான். பிறகு வருடக்கணக்கான நேசத்தை விஷத்தைப் போலப் பருகியவன், தனது நடுங்கும் கைகளால் எனது கரத்தைப் பற்றியவாறு சொன்னான் “அதோ,நமக்கு முன்பாக, உண்மைக்கும் பொய்க்குமிடையே  சிறியதொரு வெற்றிடம் இருக்கிறதே அங்கே,  நம் தலைகளுக்கு மேலாக ஒரு […]

எழுத்து

மலையைக் கடந்து வந்த கரடி – ஆலிஸ் மன்ரோ

இல. சுபத்ரா · 30.01.22

ஃபியோனா தன் பெற்றோரின் இல்லத்தில் வசித்துவந்தாள். அவளும் க்ராண்ட்டும் பல்கலைக்கழகத்திற்குச் சென்றுவந்த நகரத்தில் அது இருந்தது. மிகப்பெரிய அவ்வீடு, கூண்டுவடிவ வெளித்தள்ளிய ஜன்னலைக்கொண்டிருந்தது. விரிப்புகள் தரையில் கலைந்து கிடக்க, காபிக் கோப்பைகளின் அடிவளையங்கள் மேஜையின் மேற்பூச்சில் தழும்புகளாய்ப் படிந்திருக்கும் அவ்வீட்டினை ஒழுங்கற்றதும் சொகுசானதும் எனக் க்ராண்ட் எப்போதும் கருதியிருக்கிறான். ஐஸ்லாந்திய குணாதிசயங்கள் கொண்ட அவளது அம்மா, ததும்பும் வெண்கூந்தலையும் தீவிர இடதுசாரி அரசியலையும் வரித்தவர். நகரின் முக்கியமான இதய சிகிச்சை மருத்துவரான அவளது அப்பாவிற்கு, மருத்துவமனையில் நல்ல […]

எழுத்து

உயர்ந்த மனிதர்கள் – வில்லியம் ஃபாக்னர்

கார்குழலி · 30.01.22

இருளைப் பூசிக்கொண்டு நின்ற பஞ்சாலையைக் கடந்ததும் உள்ளே விளக்கு எரிந்துகொண்டிருந்த அந்த வீடும் அதன் வாயிலில் நிறுத்தப்பட்ட மருத்துவரின் காரும் தெரிந்தன. உரத்த குரலில் நாய் குலைத்தது.  “இதோ வந்துவிட்டோம்!” என்றார் வயது முதிர்ந்த துணை காவல் அலுவலர். “அந்த இன்னொரு கார் யாருடையது?” இருவரில் இளையவர் கேட்டார். அவர் புதியவர், அந்த மாகாணத்தின் புலனாய்வாளர். “மருத்துவர் ஸ்கோஃபீல்டுடையது,” என்றார் காவல் அலுவலர். “நாம் வருகிறோம் என்பதை மேக்கெல்லமிடம் லீ தொலைபேசியில் சொன்னபோது அவரை அனுப்பிவைக்கச் சொன்னார்.” […]

எழுத்து

கார்ல் ஊவ் கிளெனஸ்கார்டின் எனது போராட்டம்: சில குறிப்புகள் – ஜேம்ஸ் லே

கோ.கமலக்கண்ணன் · 30.01.22

A DEATH IN THE FAMILY நூலின் முதல் வரிகள் எளிய சொற்கள் மூலம் கச்சிதமாக நம் கவனத்தைத் தூண்டிலிட்டு ஈர்க்கின்றன. ‘இதயத்தைப் பொறுத்தவரை, வாழ்தல் எளிமையானது’ என்று தொடங்குகிறது. உடனடியாக இந்தச் சொற்றொடர் ஒரு காதல் கதையின் தேய்வழக்கைப் போல நம்மை ஆரத்தழுவி வெப்பமூட்டி அமைதியளிக்கிறது. இதயம் எளிமையானது என்று நினைத்துவிடுகிறோம். ஆனால் அது ஒரு மடமையான எண்ணம். இதயம் எங்கு வேண்டுமானாலும் நம்மை அழைத்துச் செல்கிறது. பகுத்தறிவால் இதயத்தின் தீர்வைக் காண முடியாது. அது […]

எழுத்து

திருமதி. ஃப்ரோலாவும் அவரது மருமகன் திரு. போன்ஸாவும் – லூயிஜி பிராண்டெல்லோ

விலாசினி · 30.01.22

கடவுளே! உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா? திருமதி. ப்ரோலாவா அல்லது திரு. போன்ஸாவா – இந்த இருவரில் யார் பைத்தியம் என்று கண்டுபிடிக்க முயல்வது உண்மையில் நம்மைத்தான் பைத்தியக்காரர்களாக்கும். அனைத்துவிதப் பைத்தியக்காரத்தனமும் கொண்ட அந்நியர்களுக்கு மெக்காவாக மாறியிருக்கும் இந்தத் துரதிர்ஷ்ட நகரமான வால்டானாவில் மட்டும்தான் இவ்வாறெல்லாம் நடக்கும்! ஒன்று, மாமியார் பைத்தியம் அல்லது மருமகன். இதில் நடுநிலை கிடையாது. அவர்களில் ஒருவர் நிச்சயமாகப் பைத்தியமாகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் நமக்கிருக்கும் பிரச்சினை எந்த வகையிலும் இதற்குக் குறைவில்லை… […]

எழுத்து

சோர்பா என்ற கிரேக்கன் – நீகாஸ் கசந்த்சாகீஸ்

கோ.கமலக்கண்ணன் · 30.01.22

நாங்கள் குடிலுக்கு வந்து சேர்ந்ததும் சேராததுமாக மஞ்சத்தில் விழுந்தோம். சோர்பா தன் உள்ளங்கைகளைத் திருப்தியுடன் தேய்த்தார். ’இன்று நல்ல நாளாக அமைந்தது தலைவா. நான் “நல்லது” என்று எதைக் குறிப்பிடுகிறேன் என்று நீங்கள் கேட்க விரும்புவீர்கள். அப்படித்தானே? நான் முழுமையான நாள் என்ற பொருளிலேயே அப்படிக் குறிப்பிடுகிறேன். கொஞ்சம் சிந்தியுங்கள். இன்று காலை பல மைல்கள் தொலைவில் இருக்கும் மடாலயத்தில் மதகுருவிடம் வியாபாரத்தைச் சிறப்பாகச் செய்து முடித்தோம். அவர் நிச்சயம் நம்மைச் சபித்திருப்பார்! அதன்பிறகு கீழிறங்கி நம் […]

எழுத்து

பராமரிப்பாளர் – சோஃபியா சேமட்டார்

இல. சுபத்ரா · 24.12.21

நான் ஒரு பராமரிப்பாளர். செயிண்ட்.பெனடிக்ட் கதிரியக்கப் பொருட்கள் கட்டுப்பாட்டு மையத்தைப் பராமரிக்கிறேன். கடினப்படுத்தப்பட்ட கண்ணாடி வழியாகவே நான் வெளியுலகத்தைக் காண்கிறேன். எனது சுற்றுப்புறம் உயிர்ப்பற்றது என்றாலும் வசதியானது. எனக்கு விருப்பமான எதை வேண்டுமானாலும் – தேவையோ சொகுசோ – கூட்டாட்சி நிலைத்தன்மை திட்டத்திடம் கேட்டு நான் பெற்றுக்கொள்ளலாம். நான் கோரிய பொருட்கள் ஒரு சரக்கு வண்டியின் வாயிலாகக் கொணரப்பட்டு நச்சுநீக்கம் செய்கிற பெட்டிக்குள் வைக்கப்படும். காற்றிலிருக்கிற நச்சினைக்கூட அதனால் நீக்க முடியும். வெளியுலகின் நச்சுத்தன்மையிலிருந்து என்னைக் காப்பதல்ல […]