Category: மொழிபெயர்ப்பு

எழுத்து

சிகை – வில்லியம் ஃபாக்னர்

கார்குழலி · 10.10.22

1 இந்தப் பெண் சூசன் ரீட் ஓர் அனாதை. பர்ச்செட் குடும்பத்தினர் தங்களின் மற்ற இரண்டு மூன்று குழந்தைகளுடன் சேர்த்து அவளையும் வளர்த்தனர். சூசன் அவர்களின் கூடப்பிறந்தவர்களின் மகள் அல்லது வேறு யாரோ உறவினரின் மகள் என்று ஊரில் எல்லோரும் பேசிக்கொண்டனர். இன்னும் சிலர் திருவாளர் பர்ச்செட்டின் நடத்தையில் சந்தேகம் கொண்டனர். இன்னும் சிலருக்கு அவர் மனைவியின் ஒழுக்கம் குறித்து சந்தேகம். உங்களுக்குத்தான் தெரியுமே! இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள்தான். ஹாக்சா இந்த ஊருக்கு வந்து சேர்ந்தபோது அவளுக்கு […]

எழுத்து

கிளாரா – ராபர்ட்டோ பொலான்யோ

கோ.கமலக்கண்ணன் · 10.10.22

தடமுலைகள், மெலிந்த கால்கள், நீல விழிகள். அவளை அப்படித்தான் ஞாபகத்தில் வைக்க விரும்புகிறேன். நான் ஏன் அவளை வெறித்தனமாகக் காதலித்தேன் என்று அறியேன். ஆனாலும் காதலித்தேன். முதல் நாட்கள், முதல் மணித்துளிகள் என்று தொடக்கம் மிகச் சிறப்பாகவே கடந்தன. அவள் பார்செலோனாவுக்கு விடுமுறையைக் கழிக்க வந்தாள். பின்னாட்களில் கிளாரா தெற்கு ஸ்பெயினில் தான் வசித்த நகரத்திற்குத் திரும்பியதும் எல்லாம் சிதையத் தொடங்கின.  ஓரிரவு என் கனவில் தேவதூதன் வந்தான். வெறுமையாக இருந்த அகன்ற மதுவகக் கூடத்தில் நான் நடந்தபோது […]

எழுத்து

திறவுகோல் – ஐசக் பாஷவிஸ் சிங்கர்

கோ.கு.குமார் · 10.10.22

மதியம் மூன்று மணிவாக்கில், பெஸ்ஸி பாப்கின் சாலைக்குக் கிளம்பத் தொடங்கினாள். வெளியே கிளம்புவதென்பது, அதுவும் ஒரு வெக்கையான வெயில் நாளில் கிளம்புவதென்பது, நிறைய சிரமங்களுக்குள்ளாக்குவது. முதலில் இறுக்கமான கச்சு உடைக்குள் தன் கொழுத்த உடலை வலிந்து புகுத்திக்கொள்ள வேண்டும். வீங்கிய பாதங்களைச் சப்பாத்துகளுக்குள் திணிக்க வேண்டும். தலை வார வேண்டும், வீட்டிலேயே வைத்து எல்லா நிறங்களிலும் – மஞ்சள், கருப்பு, சாம்பல், சிகப்பு என- சாயமிடப்பட்ட, முரட்டுத்தனமாக வளர்ந்திருந்த முடியை வார வேண்டும். பிறகு, தானில்லாதபோது அண்டை வீட்டார் […]

எழுத்து

செவ்வந்தி – ஜான் ஸ்டெயின்பெக்

கோ.கமலக்கண்ணன் · 30.08.22

கூதிர்காலம். உச்சியில் மூடுபனிச் சாம்பல் நிற இழையாகப் படர்ந்து விசும்பில் இருந்தும் உலகின் பிற பகுதிகளில் இருந்தும் சாலினாஸ் மலைச்சரிவைத் தனிமைப்படுத்துவதைப் போலப் போர்த்தியது. அனைத்து திசை மலைகளின் மீதும் ஒற்றை மூடி என உட்கார்ந்து, மாபெரும் பள்ளத்தாக்கை ஒரு மூடிய பானையென அது உருமாற்றியது. அகண்ட பார்வைக் கோணத்தில் ஆழமாக உழுத கருந்துண்டாக நிலம் காட்சியளித்தது. ஆங்காங்கே கீறல்பட்ட உலோகமெனத் தரை மின்னியது. சாலினாஸ் நதியின் குறுக்கே மலையடிவாரத்தில் இருந்த பண்ணை நிலத்தில் குறுந்தண்டுகள் முளைத்த […]

எழுத்து

The White Ribbon: திரைக்கதை (பகுதி 7) – மைக்கேல் ஹனகே

கோ.கமலக்கண்ணன் · 30.08.22

முதல் பகுதி இரண்டாம் பகுதி மூன்றாம் பகுதி நான்காம் பகுதி ஐந்தாம் பகுதி ஆறாம் பகுதி 61. வெளியே / பகல்: விசாலமான வீதி. பள்ளியாசிரியரும் ஏவாவும் குதிரை வண்டியில் செல்கின்றனர். அவர்களுக்குப் பின்னால் இருக்கும் நகரத்தைச் சில கணங்கள் காண்கிறோம். கதைசொல்லி நகரத்தின் ரயில் நிலையத்தில் சந்திக்க முடிவுசெய்திருந்தோம். ஏவா ஊரில் எங்கள் இருவரையும் யாரேனும் பார்த்துவிடுவார்கள் என்பதால் அப்படி ஒரு ஏற்பாடு. அவள் தனது தூரத்து உறவினருடன் வாழ்ந்து வருகிறாள். அவர்கள் அவ்வப்போது அவளது […]

எழுத்து

நீச்சல்காரன் – ஜான் சீவெர்

இல. சுபத்ரா · 25.07.22

“நேற்று நான் நிரம்பக் குடித்துவிட்டேன்” எனச் சொல்லியபடி எல்லோரும் வட்டமாக அமர்ந்திருக்கிற ஒரு வேனிற்கால ஞாயிறு அது. தேவாலயத்திலிருந்து கிளம்பும் திருச்சபையினர் அவ்வாறு கிசுகிசுப்பதை நீங்கள் கேட்டிருக்கலாம், தனது நீண்ட அங்கியுடன் மல்லுக்கட்டியபடி வருகிற மதகுருவின் உதடுகளிலிருந்தேகூட நீங்கள் அதைக் கேட்டிருக்கலாம், கோல்ஃப் புல்வெளியிலும் டென்னிஸ் மைதானத்திலும் கேட்டிருக்கலாம், தாளமுடியாத தலைச்சுற்றலில் ஆடபான் (Audubon) குழுமத்தின் தலைவர் துடித்துக்கொண்டிருக்கும் வனஉயிரிகள் பாதுகாப்பகத்தில் கேட்டிருக்கலாம். “நான் நிறையக் குடித்துவிட்டேன்” என்றான் டொனால்ட் வெஸ்டர்ஹேஸி. “நாம் எல்லோருமே நிறையக் குடித்துவிட்டோம்” என்றாள் […]

எழுத்து

முறிவு – ஜான் அப்டைக்

கோ.கமலக்கண்ணன் · 25.07.22

இனிய நாள். அற்புதமான நாள். மேப்பில் தம்பதியரின் அகத்துயரை, வெய்யோன் ஒளியின் பொன் தம்பங்களாலும் இயற்கைப் பெருக்கின் கெட்டிப்பசுமையாலும் ஆன ஜூன் மாதப் பருவநிலை பரிகாசம் செய்தது. அவர்களது உரையாடல் இந்த இயற்கையின் அற்புதத்தை ரசிக்கும் ஆவலைக் குன்றச்செய்து, தங்களது துயரையே எண்ணி நோகும் தற்புலம்பல்கள் மட்டுமே ஆகி இருந்தது. அது மட்டுமே அங்கு நிலவிய இயற்கைப் பேரழகின் மீதான ஒற்றைக் கறை என்று அப்போது தோன்றியது. வழக்கமாக இந்தப் பருவத்தில் அவர்கள் தோலில் கரும்புள்ளிகள் தோன்றியிருக்கும். […]

எழுத்து

நிச்சயிக்கப்பட்டவள் – ஆண்டன் செகாவ்

எஸ்.கயல் · 25.07.22

இரவு பத்து மணி. தோட்டம் முழுதும் பௌர்ணமி பொலிந்தது. ஷூமியின் பாட்டி மர்ஃபா மிஹலோவ்னா கேட்டுக்கொண்டதால் ஷூமியின் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாலை வழிபாட்டுக் கூட்டம் அப்போதுதான் நிறைவடைந்தது. தோட்டத்துக்குச் சென்ற நாடியா இரவு உணவுக்காக மேஜை தயாராக இருப்பதையும் பேரழகான பட்டாடையில் பாட்டி ஆரவாரத்துடன் வளையவருவதையும் பார்த்தாள். மாவட்டத் தலைமைத் திருக்கோயிலின் தலைமைப் பாதிரியான திரு. ஆண்ட்ரே,  நாடியாவின்‌ அம்மா, நீனா இவனோவாவிடம் பேசிக் கொண்டிருந்தார். அவருக்கு அருகே நின்றிருந்த அவருடைய மகன் ஆண்ட்ரே ஆண்ட்ரிச் […]

எழுத்து

The White Ribbon: திரைக்கதை (பகுதி 6) – மைக்கேல் ஹனகே

கோ.கமலக்கண்ணன் · 25.07.22

முதல் பகுதி இரண்டாம் பகுதி மூன்றாம் பகுதி நான்காம் பகுதி ஐந்தாம் பகுதி 51. உள்ளே / பகல்: மருத்துவரின் இல்லம். மருத்துவர் தன் இருக்கையில் அமர்ந்திருக்க, அவருக்கு எதிரே பார்வையாளரது இருக்கையில் செவிலி அமர்ந்திருக்கிறாள். அவருக்குக் கர மைதுனம் செய்ய முயல்கிறாள். இப்போதும் இருவரும் முழு உடையணிந்த நிலையில் இருக்கின்றனர். தன் உடைக்கு மேல் வெண்ணிறப் புறச்சட்டையையும் மருத்துவர் அணிந்திருக்கிறார். அவள் செய்யும் வேலையைச் சற்று நேரம் உற்று கவனித்த பிறகு வெடுக்கென்று சொல்கிறார். மருத்துவர் […]

எழுத்து

வெற்றியின் விதிகள் – வில்லியம் ஃபாக்னர்

கார்குழலி · 25.04.22

குன்றின் உச்சியில் இருந்தது அந்த மரத்தாலான வீடு. வீட்டில் இருந்த ஐவரும் ஜன்னலருகே நின்றிருந்தனர். குதிரையில் சவாரி செய்தபடி குன்றின்மேல் ஏறி வந்த புதியவர்களைக் கண்ணெடுக்காமல் பார்த்தனர். அவர்கள் ஒருவழியாகச் சேறும் சகதியுமாக இருந்த சரிவான பாதையில் ஏறி வாயில் கதவருகே வந்துசேர்ந்தனர். குதிரையை வழிநடத்தியவன்தான் முதலில் வந்தான். முகத்தை மறைக்கும் பெரிய அகன்ற தொப்பியும் இற்றுப்போன சாம்பல் நிற மேலங்கியும் அணிந்திருந்ததால் அவன் உடல் எந்த வடிவமுமின்றி இருப்பதைப் போலத் தோற்றமளித்தது. இடது கையை அங்கிக்கு […]

எழுத்து

ஓசியானின் பாடல்கள் – கதே

எம்.கோபாலகிருஷ்ணன் · 25.04.22

ஓசியானின் கவிதை (Ossian) கதேயைப் பெரிதும் பாதித்திருப்பதை “The Sorrows of Young Werther” நாவலின் போக்கில் நம்மால் உணரமுடியும். ஓசியான் ஒரு ஐரிஷ் கவிஞர். போர் சாகசங்களையும் வீர மரணங்களையும் குறித்துப் பெருமளவு பாடிய இவர் கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக் கவிஞர் என்று கருதப்படுகிறார். ஸ்காட்லாந்தின் கெய்லிக் என்ற புராதன மொழியில் எழுதப்பட்டிருந்த இவருடைய கவிதைகளைக் கண்டுபிடித்து உலகிற்குத் தந்தவர் ஸ்காட்லாந்தின் பிரபல கவிஞர் ஜேம்ஸ் மக்பெர்சன் (James Macpherson) ஆவார். 1760ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தின் […]

எழுத்து

நாத்திகரின் பூசை – பால்சாக்

ராஜேந்திரன் · 24.02.22

மருத்துவர் ஒருவர் மனித உடற்கூறு பற்றி மிகச் சிறப்பான கோட்பாட்டை வழங்கியதற்காக விஞ்ஞான உலகமே அவருக்கு நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளது. அவர் பாரிஸ் நகர மருத்துவப் பாடசாலையின் புகழ்பெற்ற வல்லுநர்களில் ஒருவராகத் தனது இளம் வயதிலேயே திகழ்ந்து சாதனை படைத்தார். உயர்தரக் கல்வியைப் புகட்டுகிற பாரிஸ் நகரின் மருத்துவப் பாடசாலை ஐரோப்பிய மருத்துவர்கள் அனைவருமே புகழ்ந்து போற்றுவதாகும். மருந்து சம்பந்தமான ஆராய்ச்சிகளில் தம்மை அர்ப்பணித்துக்கொள்வதற்கு முன்னதாக பியான்கன் என்னும் அந்த மருத்துவர் அறுவை சிகிச்சையைத்தான் நீண்ட காலமாகச் […]