Tag: இதழ் 21

தமிழ்

நானொரு குதிரைக்குட்டி – லேலா பாலபக்கி

ஜான்ஸி ராணி · June 16, 2020

இன்னமும் என்னுடைய உடல் தளர்ந்துதான் இருந்தது. என் கழுத்தின் மீது விரல்களை ஓட்டினேன். துருத்திய பச்சை நரம்புகளின் துடிப்பையுணர்ந்தேன். மேலாடையை  நெஞ்சுப் பகுதியைச் சுற்றி இழுத்துவிட்டுக் கொண்டு, கண்களை மூடி, அறையின் மேற்கூரையை நோக்கி என் முகத்தை உயர்த்தினேன். மறுபடியும் என்னுடைய கால்மூட்டுகளின் மேல், ஆடையின் கனத்தை உணரத் துவங்கினேன். என் தோள்களை அணைத்தபடி தலையைத் தாழ்த்தி, என் முகவாயை ஆடைக்குள் புதைத்துக் கொண்டேன். பின்பகுதியில் உடை ஒட்டிக்கொண்டது. திடீரென ஒரு குறிப்பிட்ட வாசனையை நுகர்ந்தேன். பின்பு […]

சிறுகதை

விஷ்ணு வந்தார்

லோகேஷ் ரகுராமன் · June 16, 2020

“மகா விஷ்ணு எலைக்கு ஆள் சொல்லீட்டேளா? போன வாட்டி மாதிரி விட்டு போய்டப் போறது? இந்த வாட்டி கண்டிப்பா வெறும்ன விடமுடியாதுனு எங்காத்துக்காரர் சொல்லிட்டார்.” “ச்ராத்த பெரியவாளோட கொள்ளுப் பேரன ஒக்காத்தி வைக்கலாமே மாமி” “என் புள்ள தான் ஆஸ்திரேலியா போயிட்டானே. இருந்துருந்தா பேரனை ஒக்காத்தி வச்சுருப்பேன். மாமா விடாப்பிடியா இருக்கார். மகாவிஷ்ணு வேணும்னு. போன வருஷம் வரை எப்படியோ பொறுத்துண்டுட்டார். இந்த வாட்டி கங்கணம் கட்டிண்டு நிக்கறார்.” “சரி மாமி” “என்ன சரி மாமின்னு இழுக்கறேள். […]

கட்டுரை

தமிழ்ச் சிறுகதை இன்று – இருண்ட வானில் ஒளிரும் நட்சத்திரங்கள்: கார்த்திக் பாலசுப்ரமணியத்தின் கதைகள்

எம்.கோபாலகிருஷ்ணன் · June 16, 2020

‘தமிழ்ச் சிறுகதை இன்று’ கட்டுரைத் தொடரின் ஏழாவது பகுதி இது. தூயனில் தொடங்கி சுரேஷ் பிரதீப், சித்துராஜ் பொன்ராஜ், கிருஷ்ணமூர்த்தி, ராம் தங்கம், அனோஜன் பாலகிருஷ்ணன் ஆகியோரது சிறுகதைகளைப் பற்றி எழுதியதைத் தொடர்ந்து கார்த்திக் பாலசுப்ரமணியத்தின் கதைகளைக் குறித்து வெளியாகிறது இந்தப் பகுதி. * எழுதுவதும் வெளியிடுவதும் பதிப்பிப்பதும் இன்று மிகச் சுலபமான காரியங்கள். இணைய இதழ்களின் வழியாக உலகளாவிய வாசக கவனிப்பையும் பெற முடிகிறது. இரண்டாயிரத்தில் நாவல்கள் பெரும் வீச்சில் எழுதப்பட்ட போது சிறுகதைகளின் மீதான […]

English

It is a matter of insecurity – a trait to be nurtured within

வி.அமலன் ஸ்டேன்லி · June 16, 2020

The whole world is talking about Covid-19, the global pandemic caused by an unassuming, invisible, but seemingly invincible enemy of the humankind. Even in the rural areas and suburbs, there are barricades, banning the public to move around, or even pass by a house, or a vegetable shop, having been identified as a place of […]

கவிதை

கார்த்திக் திலகன் கவிதைகள்

கார்த்திக் திலகன் · June 16, 2020

குறள் தாலாட்டின் முதல் வரியையும் ஒப்பாரியின் இறுதி வரியையும் ஒன்றாக இணைத்து நவீனன் எழுதிய புதிய குறள் நான் என்னை உனது அதிகாரத்தின் கீழ் காமத்துப் பாலில் கொண்டு சேர்த்துவிட்டாய். இப்போது பார் அதிரும் உன் அழகுக்குள் எனதாசைகளை நுழைத்து குறுகத் தறித்துவிட்டது உன் காமம். முட்டை விமானம் என்பது உலோகப்பறவை அதன் முட்டை ஒன்றை அறையில் வைத்திருந்தேன் அலுவலகம் போய்வந்து கதவு திறந்தால் அறை எங்கும் பறக்கின்றன குட்டிக் குட்டி விமானங்கள் அறையின் சூட்டிலேயே முட்டை […]

கட்டுரை

பந்தயக் குதிரைகள் – ஆர்த்தி தன்ராஜ்

ஆர்த்தி தன்ராஜ் · June 16, 2020

கோகுல் பிரசாத் என்னைத் தொடர்புகொண்டு, “தமிழினிக்கு எழுதுகிறீர்களா?“ எனக் கேட்ட போது நான் வாழைப்பழத்தை அரைத்து, ஐஸ்க்ரீம் என்று எனக்கு நானே சொல்லி, மனச் சமாதானத்திற்கு அதன் மேலே பூஸ்ட் தூவி சாப்பிட்டுக் கொண்டு, தோலை நறுக்கி கோழிக்குப் போட்டு, அது உண்பதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன். “உடைவு என்கிற சிறுகதையை போகன் சங்கர் எழுதினாரே? அந்தப் பத்திரிக்கையா? அதில் நான் எழுதவா? எனக்குக் காய்ச்சலுங்க. வாய் பேச வராது.. எழுதப் படிக்கத் தெரியாது… ஜல்பு பிடித்து விட்டது.. […]