Tag: இதழ் 21

எழுத்து

அமைதி என்பது… – எம். கோபாலகிருஷ்ணன்

எம்.கோபாலகிருஷ்ணன் · June 16, 2020

பாதையை மறைத்துப் படர்ந்திருந்தது பனிமூட்டம். ஓரடிக்கும் அப்பால் அனைத்தும் உறைந்த காட்சிகளாகவே தென்பட்டன. சருமத்தை ஊடுருவிய குளிரில் நடுங்கி நின்றேன். வலதுபக்கமாய் ஆஸ்பெஸ்டாஸ் கூரையுடன் நீண்ட கட்டடம். சுவரையொட்டிய அடர்ந்த புதர்களில் நனைந்த டேலியா பூக்கள். இலைகளில் ஈரம். கட்டடத்துக்குப் பின்னால் நெருப்பைக் கண்டதும் அருகில் விரைந்தேன். தரையில் கிடந்த சுள்ளிகளையும் கட்டைகளையும் தாண்டி நின்றேன். தீயின் கதகதப்பு குளிரை விரட்டியது. அடுப்பில் விறகு எரிந்து கொண்டிருந்தது. பையை ஓரமாக வைத்து விட்டு தீயில் கைகளைக் காட்டி […]

எழுத்து

ஆகுதி

மயிலன் ஜி சின்னப்பன் · June 16, 2020

ஏழாவது நோயறிக்கையில் முந்தைய தின மருந்துகளையே இன்றைய தேதியிட்டு மீண்டும் எழுதும்போது மோகனாவிற்கு ரொம்பவே சலிப்பாக இருந்தது. மாற்றம் எதுவும் இருந்தால் மட்டும் குறிப்பிட்டால் போதாதா? ஏன் இப்படி தாள்களையும், பேனா மையையும், நேரத்தையும், மனித வளங்களையும் வீணடிக்க வேண்டும்? எழுதி முடித்த தாள் கொத்தை சற்று தள்ளியிருந்த அதற்கான தட்டிற்குள் வீசினாள். அதிலிருந்த அதிருப்தியை அருகிலிருந்த செவிலி கவனித்து விட்டாரா என்று பார்த்தாள். அவர் பொருட்படுத்தியதாக காட்டிக்கொள்ளவில்லையெனினும் பார்த்திருந்தார். அதனால் அடுத்த சீட்டை எடுக்கும்போது ஓர் […]

எழுத்து

மின்னும் வண்ணப் பூக்களெல்லாம் (பகுதி 1) : இளையராஜாவின் முதல் ஐந்து ஆண்டுகள்

ஆத்மார்த்தி · June 16, 2020

இளையராஜா தொழில்முறை இசை அமைப்பாளர்களின் பெயர்ப் பட்டியலில் பெருமதிப்புக்கு உரிய பெயர். திரை உலகில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி 45 ஆண்டுகளில் ஆயிரம் படங்களைக் கடந்து தயாரிப்பாளர்-பாடலாசிரியர்-பாடகர் எனப் பல முகங்களைக் கொண்டிருக்கக் கூடியவருடைய படங்களையும் பாடல்களையும் கலைத்து அடுக்கி அவரது பங்கேற்பு குறித்தத் தோரணம் ஒன்றைக் கட்டமைக்கலாம் என்கிற நெடுங்கால ஆசையின் எழுத்தாக்கமே இந்தப் பத்தி. தரவுகளும் அவதானங்களும் கைக்கொண்டபடி இளையராஜாவின் இசை உலகத்தைச் சற்று நெருங்கிப் பார்க்க விழையும் முயல்வு இளையராஜாவின் முதல் படம் […]

எழுத்து

கனவு இல்லம் – லிடியா டேவிஸ்

எஸ்.கயல் · June 16, 2020

மலையின் பக்கவாட்டில் இருந்த சாலையிலிருந்து அந்த நிலம் எனக்குக் காண்பிக்கப்பட்டது. பார்த்த உடனே அதை நான் வாங்க விரும்பினேன். நில விற்பனை முகவர் அதிலிருக்கும் குறைபாடுகளாக  எதைச் சொல்லியிருந்தாலும் அந்த நேரத்தில் எனக்குக் கேட்டிருக்காது. பருவம் தப்பிய கோடை மழையால் பாதி வெள்ளம் சூழ்ந்த இரத்தச் சிகப்பு நிறத்து திராட்சைத் தோட்டங்கள் பரவிக் கிடந்த நீண்ட பள்ளத்தாக்கு, களைகளும் முட்செடிகளில் மலர்ந்துள்ள பூக்களும் நிரம்பி வழிந்த மஞ்சள் வயல்களின் பின்னிருந்த குன்றை மறைக்கும் செழித்த காடுகள், பள்ளத்தாக்கின் […]

எழுத்து

மனவழுத்தம் கொண்டவர் – டேவிட் ஃபாஸ்டர் வாலஸ் – தமிழில்: கார்குழலி

கார்குழலி · June 16, 2020

மனவழுத்தம் கொண்டவர் பயங்கரமானதும் முடிவேயில்லாததுமான உணர்வுப்பூர்வமான வலியில் இருந்தார். அதுகுறித்து எவரிடமும் பகிர்ந்துகொள்ளவோ விவரித்தோ கூறமுடியாத அடிப்படையான பேரச்சமே வலியின் ஒரு கூறாகவும் அது நிகழக்கூடிய ஒரு காரணியாகவும் இருந்தது. உணர்வுப்பூர்வமான வலியை விவரிப்பதே மனக்கசப்பூட்டுவதாக இருந்தாலும் அது நிகழும் சூழல் குறித்தாவது சொல்லலாம் — அதன் வடிவம், இழையமைப்பு ஆகியவை பற்றி உள்ளது உள்ளபடியே சொல்வது மூலம் அதன் காரணவியலுடன் தொடர்புடைய சூழ்நிலையைப் பற்றி விவரிக்கலாம் என்று நம்பிக்கை கொண்டிருந்தார் மனவழுத்தம் கொண்டவர். எடுத்துக்காட்டாக, மனவழுத்தம் […]

எழுத்து

நாய் வேஷம்

இராசேந்திர சோழன் · June 16, 2020

திகிலும் கலவரமும் சூழ சத்திரத்துத் திண்ணையில் சீட்டாடிக் கொண்டிருந்தான் இருசப்பன்.  போன ஆட்டமே ஒரு சீட்டில் போய் விட்டது. கையிலும் காசு போண்டி. இந்த ஆட்டமாவது காட்டினால் தான் தொடர்ந்து ஆட முடியும். நாலடி கட்டுக் கட்டியாகிவிட்டது. மூணடி கட்டும் ஒன்று பூர்த்தி. ஸ்பேட் நாலும் அஞ்சும் கையிலிருக்கிறது. மூணு வந்தாலும் சரி, ஆறு வந்தாலும் சரி. கையைக் காட்டி விடலாம். மேசை ரெண்டரை ரூபாய் வரும். அடுத்த ஆட்டம் போடலாம்.  ஆனால் அதற்குள் யாரும் கையைக் […]

எழுத்து

நெடுநீர், புனையின்றி நீந்துதல்: The Painted Bird (2019)

கோ.கமலக்கண்ணன் · June 16, 2020

கருப்பு வெள்ளைக்குள் எல்லா நிறங்களும் நிறமின்மைகளும் ஒளிந்து கொள்கின்றன. நிறமற்ற குமிழுக்குள், தான் உடையும் கணத்திற்கும் முன் பல நிறங்களையும் பிரித்து, பிரதிபலித்துப் பார்த்துவிட வேண்டும் என்ற உந்தம் இருப்பதும், வளி வழியே அது மேலெழும்பிப் பறப்பதும் இயற்கையின் சாகசக் கவிதைகளுள் ஒன்று. நீளாயிரம் ஆண்டுகளாய் தங்கள் முகங்களையே மாற்றி மாற்றிப் பார்த்து சலித்துவிட்ட ஐம்பூதங்களும் புவியில் உயிர்களைப் பரப்பி நாற்களமாடி இரசித்தன. அவ்விளையாட்டின் மேம்பட்ட வடிவமாய், இன்று மானுட இனத்தின் நாடகங்களை இரசித்துக் கொண்டிருக்கின்றனவோ என்ற […]

எழுத்து

இளையராஜாவும் பிம்பத் தயாரிப்பாளர்களும் – அரவிந்தன் கண்ணையன்

அரவிந்தன் கண்ணையன் · June 16, 2020

சமீபகாலமாக இளையராஜாவே தனக்கு வரித்துக் கொள்ளாத, அவருக்குப் பொருந்தாத சில பிம்பங்களை, பல காரணங்களுக்காக சில தரப்புகள் சமைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவரை சமூத்தின் சம்பிரதாயமான வரம்புகளைத் தகர்த்து, திரையிசைத் தாண்டி, தனக்கென பிரத்யேகமான ஒரு பீடத்தை அடைந்திருக்கிறார் என்று நிறுவும் முயற்சியில் பேராசிரியர் தருமராஜ் முன்னிலையில் இருக்கிறார். தருமராஜின் அயோத்திதாசர் பற்றிய புத்தகத்தில் சமர்ப்பணமாக “நந்தனைக் கடந்த, அயோத்திதாசரைக் கடந்த, பெரியாரையும் கடந்த இசைஞானி இளையாராஜாவிற்கு சமர்ப்பணம்” என்று சொல்கிறார். அப்படிச் சொன்னதை பற்றிய விவாதம் முகநூலில் […]

எழுத்து

ஜெயமோகனின் கதைத் திருவிழா

விஷ்வக்சேனன் · June 16, 2020

சில நாட்களுக்கு முன்பு, கேரளாவில் ஒரு பிடி யானையை வெடி வைத்துக் கொன்ற செய்தியைக் கேட்ட போது நினைவுக்கு வந்த முதல் விஷயம், ஜெயமோகன் எழுதிய ராஜன் என்ற சிறுகதை தான். ராஜன் ஒரு யானையைப் பற்றிய கதை. தென் திருவிதாங்கூரில், சிற்றூர்களின் மாடம்பிகளான இருவருக்கும் இடையே நடக்கும் ஒரு கர்வப் போட்டியில், பர்வதராஜன் என்ற அந்த யானையை விஷம் வைத்துக் கொல்ல ஒரு தரப்பின் எஜமானன் முடிவெடுத்து தனது பாகனிடம் பேசுவதில் தொடங்குகிறது அக்கதை. பூதத்தான் […]

எழுத்து

இளமை – ராஜ சுந்தரராஜன்

ராஜ சுந்தரராஜன் · June 16, 2020

அம்மாவுக்கு வயதாகவே இல்லை. இறந்தபோதிருந்த இளமையிலேயே இப்போதும். அம்மாவோடு கண்மாய்க்கரை நிறுத்தத்தில் பேருந்து வரக் காத்திருந்தான் அவன். “கனகு இருந்திருந்தா உன் கூடப் படிக்க ஒரு துணையா இருந்திருக்கும்,” அம்மா வாயாறினாள். இருந்திருக்குமா என்று, எட்ட நின்ற ஆலமரத்துக்குப் போய்த் திரும்பிய கவனம் அவனை யோசிக்க வைத்தது. கல்லூரிப் படிப்புக்காக பட்டணம் புறப்பட்டுவிட்ட உற்சாகம் ஒருமட்டு குறைந்தது. பட்டணத்தில், பிரியாணிக் கடைமுற்றத்தில் வரையப்பட்டிருந்த வட்டங்களில் ஒன்றில் காத்து நின்றான். மதியவேளை. இடைவெளி விட்டு, சில நாய்களும் காக்கைகளும். […]

எழுத்து

இறப்பின் நடனம் – குஸ்தாவ ஃப்ளாபெ

எஸ்.கயல் · June 16, 2020

முன்குறிப்பு: இறைவன் தனக்களித்திருக்கிற கருணையற்ற பணியைப் பற்றி ‘இறப்பு’ புலம்புவதாக எழுதப்பட்ட கதை. இறப்பு முதலில் சாத்தானிடம் உரையாடி, பிறகு சாத்தானின் முதல் காதலனான நீரோவிடம் பேசத் துவங்குகிறது. தன்னையும் சாத்தானையும் ஒப்பிட்டால் தங்கள் இருவரில் தவிர்க்க முடியாத சக்தி சாத்தானே என்றும் தன் வேலை ஒரு நாள் முடிவுற்ற பிறகு ஓய்வு பெற்றுவிடுவேன் என்றும் கூறுகிறது. குஸ்தாவ ஃப்ளாபெ (Gustave Flaubert) இதனை எழுதிய போது அவருடைய கவனத்தைப் பெரிதும் கவர்ந்திருந்த ரொமாண்டிஸிஸமே வனப்பும் அலங்கார […]

எழுத்து

உரத்த கனவு – மாற்கு

மாற்கு · June 16, 2020

அப்போது காலை ஒன்பது மணி. இதமான தென்றல். இளவெப்பக் கதிர்கள். தாழ்ந்து தவழ்ந்த வெண்மேகங்கள். உடன் பயணித்த நிழல்கள். நிரம்பிய குளங்கள். மெல்லிய அலைகள். மகிழ்வில் துள்ளிய கெண்டை மீன்கள். கரையில் பழ மரங்கள். கிளைகளில் தொங்கிய தொட்டில்கள். உறங்கும் குழந்தைகளின் மெல்லிய குறட்டை. குயில்களின் தாலாட்டு. மைனாக்களின் எக்காளம். கிளிகளின் மழலை. அணில்களின் சாகசம். வாய்க்கால் நீரின் சலசலப்பு. பாத்திகளில் அதைத் திருப்பும் விவசாயிகளின் சூட்சுமம்; களையெடுக்கும் பெண்களின் கலகலப்பு. களைப்பைக் களிப்பாக்கும் பாடல்களின் இனிமை. […]