Tag: இதழ் 22

கட்டுரை

தமிழ்ச் சிறுகதை இன்று: புனைவெழுத்தின் புதிய சாத்தியங்கள் – சுனில் கிருஷ்ணனின் சிறுகதைகள்

எம்.கோபாலகிருஷ்ணன் · July 20, 2020

‘தமிழ்ச் சிறுகதை இன்று’ கட்டுரைத் தொடரின் எட்டாவது பகுதி இது. * சுனில் கிருஷ்ணன் ஒரு சிறுகதையாளராக அல்லாமல் ‘இன்றைய காந்தி’ தளத்தின் வழியாக இளம் காந்தியராக அறிமுகமானவர் என்பதால் அவருடைய கதைகளை முதலில் கவனிக்கவில்லை. ‘அம்புப் படுக்கை’ தொகுப்பும் சாகித்ய அகாதமியின் ‘யுவ புரஷ்கார்’ விருதும் அவர் மீது குவித்த வெளிச்சத்தின் பிறகே கதைகளை வாசிக்கலானேன். முதன்முதலாக நான் வாசித்த, கணையாழி போட்டியொன்றில் பரிசு வென்ற ‘பேசும் பூனை’ பெரும் ஆச்சரியத்தைத் தந்தது. அந்த வியப்பே […]

சிறுகதை

மய்யத்தாங்கரையில் ஒரு மரிக்கொழுந்து

மானசீகன் · July 20, 2020

‘ரஹ்மானு.. மனச திடப்படுத்திக்க, அம்மா வஃபாத் ஆகிட்டாங்க.’ தாவூத் மாமாவின் அதே கீச்சுக்குரல் தான்.. ஆனால் ஒரு குரல் பெரும் பாறாங்கல்லை தன்னந்தனியாய் இழுத்து வந்து ஒருத்தன் தலையில் எப்படிப் போட முடியும்? வஃபாத் ஆயிட்டாங்க.. வஃபாத் ஆயிட்டாங்க.. இந்தக் குரல் மீண்டும் மீண்டும் எதிரொலித்தது. அதை சொன்னது தாவூத் மாமா இல்லை. யார் யாரோ வந்து காதுகளில் சொன்னார்கள். தெரிந்த குரல், தெரியாத குரல் எல்லாமே. யாரோ சிலர் சிரித்துக் கொண்டே வேறு சொல்கிறார்களே? ‘ரஹ்மான்..’ […]

சிறுகதை

நீரோசை – கலைச்செல்வி

கலைச்செல்வி · July 20, 2020

ஆதவனின் மென்னொளியில் மின்னிக் கொண்டிருந்தது நதி. கங்கையின் பரப்பை கிழித்துக் கொண்டு படகு கரையிலிருந்து விலகி நீருக்குள் செல்லத் தொடங்கியது. நதியில் ததும்பிய நீர் சீரான தாளத்தில் க்ளக்.. க்ளக்.. எனப் படகை அறைந்து எதையோ சொல்லிக் கொண்டே வந்தது. பரிசல்களும் சுற்றுலாப் படகுகளும் சோம்பேறித்தனமாக நகர, நான் அமர்ந்திருந்த பயணியர் படகு இரைச்சலையும் புகையையும் கக்கியபடி வேகமாக முன்னேறியது. முன்னேற்றம் என்பதே இலக்கு என்ற ஒன்றிருக்கும் போது தான் அர்த்தப்படும். அதுவும் ஒரேமாதிரியான இலக்கு. பரிசலில் […]

கட்டுரை

சின்னச் சின்ன அசைவுகளின் கதைகள்: கத்திக்காரன் சிறுகதைத் தொகுப்பு

ரா.கிரிதரன் · July 20, 2020

யாவரும் பதிப்பகம் வெளியிட்டிருகும் ஶ்ரீதர் நாராயணன் எழுதிய கத்திக்காரன் கதைத் தொகுப்பில் மிக அநாயசமான பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கும் கதை என ‘புதிய நிலம்’ கதையைச் சொல்ல முடியும். சிறு காதல் கதையாகத் தொடங்கிய கதை, மனிதன் நிலத்தைக் கொண்டு நினைவினூடாக செல்லும் அகப்பயணங்களைச் சீராக நம்முன்னே நிகழ்கிறது. சவிதா எனும் இந்தியப்பெண் அவளது அமெரிக்க நண்பர்களுடன் கழிக்கும் ஓரிரு மணிநேரங்களில் நிகழும் கதை என்றாலும் மாறும் நிலம் வழியே வரலாறு நெடுக மனிதர்கள் அடையக்கூடிய புது மாற்றங்களை […]

தமிழ்

விபஸ்ஸனா

வி.அமலன் ஸ்டேன்லி · July 20, 2020

அமலன் ஸ்டேன்லியின் ‘வெறும் தானாய் நிலைநின்ற தற்பரம்’ நாவலிலிருந்து ஓர் அத்தியாயம் * பல்லாவரம் வழியே தோல் தொழிற்பேட்டை செல்லும் சாலையில் கைனடிக் ஸ்கூட்டர் ஓடியது. அப்போதுதான் மழைபெய்து ஓய்திருந்தது. கடும் மழையால் பள்ளங்கள் நீரால் முடியிருக்க மிக கவனம் காட்ட வேண்டியிருந்தது. ஓடுபாதையில் அப்பகுதிக்கே உரித்தான தோல் பதனிடும் தொழிற்சாலைகளின் தோலும் வேதிப்பொருளும் கலந்த மணம். ஏறத்தாழ ஒரு குடிசைத் தொழில் மாதிரி இப்பகுதியில் தோல் பதனிடுதல் நடைபெற்று வருகிறது. ஓரிரு மாட்டுத்தோல்கள் தொங்க விடப்பட்டிருந்தன […]

சிறுகதை

களியாற்றுப் படலம் – ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன்

ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன் · July 20, 2020

எழுத எழுத அழிந்து கொண்டே இருக்கும் அந்தக் கதை குழப்பமாக இருந்தது அவளுக்கு. காற்றின் திசைக்கு இழுபடும் கூந்தலின் வேகமும், பனியடர்ந்த இரவில் பற்றியெரியும் சிதையின் வெம்மையும் மிக மோசமான பயத்தை உருவாக்கிக் கொண்டிருந்தன. இதற்குமுன் எழுத முயன்ற கதைகள் எழுதப்படும் முன்னரே அழிக்கப்பட்டதால் அவை குறித்தெழும் கவலையில், தன் சிந்தனைகளைத்தொலைக்க விரும்பியதில்லை. ஆனால், இந்தக் கதை அப்படியில்லை. இதுவரை நிகழப் பெற்றிராத, எழுதப்பட்டிராத தர்க்கங்களின் முடிவுகளாக உருப்பெறும் ஒன்று. அற்புதக் கணம் ஒன்றினை கருக்கொண்டதன் சாட்சியாக்கம் […]

தமிழ்

ஒரு வாழ்க்கையும் சில சிதறல்களும் – ஷரிஃபா அல்-ஷம்லான்

ஜான்ஸி ராணி · July 20, 2020

முதல் சிதறல்: நான் இருபது வயதானவள். நான் உறுதியாக அறிவேன். எனக்குப் பத்து வயதிருக்கும் போது என்னுடைய தாய் இறந்து போனார். எனது பதினேழு வயதில் நான் இங்கு அழைத்து வரப்பட்டேன். என்னால் என் வயதை சரியாகக் கணிக்க முடியும். ஏனெனில் என்னுடைய ஒவ்வொரு பிறந்தநாளின் போதும், எங்கள் தோட்டத்தில் ஒரு பேரீச்சை மரம் நடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். நான் இங்கு மூன்று வருட காலமாக இருக்கின்றேன். என் தந்தையுடைய வருகையின் எண்ணிக்கையை வைத்து அதை நான் […]