Tag: இதழ் 37

தமிழ்

அகம் சுட்டும் முகம் (பகுதி 8): கே.ஜி.ஜார்ஜின் திரையுலகம்

எம்.கே.மணி · January 30, 2022

அரசியல் ஒரு சாக்கடை என்பதெல்லாம் போதாது. ஆயிரமாயிரம் இடுக்குகளும் சிடுக்குகளும் உள்ள மனித வாழ்க்கை என்கிற பிரம்மாண்டமான சக்கரத்துக்கு முன்னால் அது ஒன்றுமேயில்லை. எங்குமே யாராவது யாரையாவது சுரண்டித் தின்னுகிறார்கள், பிடுங்கித் தின்னுகிறார்கள், காலில் விழுந்தோ கழுத்தைப் பிடித்தோ தின்று முடிக்கிறார்கள். அது ஒரு துறை. அதற்குள் நல்லது செய்துவிடலாம் என்று நினைத்து விடுகிறவன் புகுந்துவிட முடியாது. அவன் விரட்டப்படுவான். இவைகளையெல்லாம் உலகின் ஒரு பக்க நியதி, இப்படி நடக்கத்தான் செய்யும் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். வீராப்பு […]

கட்டுரை

முஃமின் புறாக்கள்

வி.அமலன் ஸ்டேன்லி · January 30, 2022

செடிகளும் புதர்களும் மண்டிக்கிடந்தன தர்காவின் சுற்றுப்புறத்தில். பின்பக்கமாய் பக்கிங்காம் கால்வாய்க்குக் குறுக்கே பறக்கும் ரயில்தடம் பாய்ந்து சென்றது. சுமார் முன்னூறு வருட தர்கா. தஸ்தகீர் பாபா சாகிப் ஜீவசமாதியான இடம். துருக்கியரான தஸ்தகீர் பிஜப்பூரின் அடில் ஷாஹி அரச வம்சாவழி. பதினேழாம் நூற்றாண்டில் தனது உடலின் இறுதிச்சடங்கை எந்த இமாமும் செய்ய வேண்டாமென்றபடி பின்னர் தானே தன்னுடலுக்கான ஜனாசா ஈமக்கிரியைகளைச் செய்ததாகக் கூறப்படுகிறது. வாயில் வளைவு கடந்து உள்ளே நடந்துசெல்ல மிக உயர்ந்த இரண்டு மினாராக்கள் நின்றன. சுற்றுப்புறமெங்கிலும் நிறைய இஸ்லாமியர் […]

தமிழ்

திருமதி. ஃப்ரோலாவும் அவரது மருமகன் திரு. போன்ஸாவும் – லூயிஜி பிராண்டெல்லோ

விலாசினி · January 30, 2022

கடவுளே! உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா? திருமதி. ப்ரோலாவா அல்லது திரு. போன்ஸாவா – இந்த இருவரில் யார் பைத்தியம் என்று கண்டுபிடிக்க முயல்வது உண்மையில் நம்மைத்தான் பைத்தியக்காரர்களாக்கும். அனைத்துவிதப் பைத்தியக்காரத்தனமும் கொண்ட அந்நியர்களுக்கு மெக்காவாக மாறியிருக்கும் இந்தத் துரதிர்ஷ்ட நகரமான வால்டானாவில் மட்டும்தான் இவ்வாறெல்லாம் நடக்கும்! ஒன்று, மாமியார் பைத்தியம் அல்லது மருமகன். இதில் நடுநிலை கிடையாது. அவர்களில் ஒருவர் நிச்சயமாகப் பைத்தியமாகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் நமக்கிருக்கும் பிரச்சினை எந்த வகையிலும் இதற்குக் குறைவில்லை… […]

கட்டுரை

கதே: முழுமையான வாழ்வின் இலக்கியம்

இரா. குப்புசாமி · January 30, 2022

ஒவ்வொரு மொழியும் தன்னை அழியாப் புகழில் ஏற்றும் மகா காப்பியத்தைப் படைக்கும் ஆற்றல் கொண்ட தன் தலைமகனுக்காகத் தவமிருக்கிறது. அவன் பிறக்கும்வரை அது தன்னை மலடியாகவே கருதுகிறது. அப்படிப்பட்ட காப்பியம் பிறந்த பிறகு தாய்மையால் பூரிக்கிறது. தனக்கு இனி என்றுமே அழிவில்லை என்று இறுமாந்து கொள்கிறது. அந்தக் காப்பியம்தான் அந்த மொழிக்கும் அம்மொழி பேசும் மக்களுக்கும் அந்தத் தேசத்தையே உரிமையாக்கும் சாசனமாக அன்று முதல் மாறுகிறது. ஹீப்ரு மொழிக்கு ஒரு மோஸஸ், கிரேக்க மொழிக்கு ஒரு ஹோமர், […]

தமிழ்

சோர்பா என்ற கிரேக்கன் – நீகாஸ் கசந்த்சாகீஸ்

கோ.கமலக்கண்ணன் · January 30, 2022

நாங்கள் குடிலுக்கு வந்து சேர்ந்ததும் சேராததுமாக மஞ்சத்தில் விழுந்தோம். சோர்பா தன் உள்ளங்கைகளைத் திருப்தியுடன் தேய்த்தார். ’இன்று நல்ல நாளாக அமைந்தது தலைவா. நான் “நல்லது” என்று எதைக் குறிப்பிடுகிறேன் என்று நீங்கள் கேட்க விரும்புவீர்கள். அப்படித்தானே? நான் முழுமையான நாள் என்ற பொருளிலேயே அப்படிக் குறிப்பிடுகிறேன். கொஞ்சம் சிந்தியுங்கள். இன்று காலை பல மைல்கள் தொலைவில் இருக்கும் மடாலயத்தில் மதகுருவிடம் வியாபாரத்தைச் சிறப்பாகச் செய்து முடித்தோம். அவர் நிச்சயம் நம்மைச் சபித்திருப்பார்! அதன்பிறகு கீழிறங்கி நம் […]

சிறுகதை

காற்றில் எழுதிய ஓலை

எம்.கோபாலகிருஷ்ணன் · January 30, 2022

வெங்கி என்னைவிட நான்கு வயது இளையவன். அவன் குழந்தையாய் இருந்த காலத்தை நினைக்க முயலும்போது, அம்மாவின் மடியில் கிடந்த ஒரு காட்சி மட்டும்தான் நினைவுக்கு வருகிறது. பேறுகாலத்தின் வாசனையுடன் இருந்த அம்மாவிடம் போகப் பிடிக்காமல் அப்பாவின் அருகிலிருந்து அவனை நான் பார்த்திருந்தேன். வெங்கியை நான் என் தம்பியாக உணர்ந்தது அவன் பள்ளிக்குச் செல்லத் தொடங்கிய பிறகுதான். அவனுக்கு மூன்று வயது இருக்கும்போது ஒரு நாள் உடம்பு இலேசாகச் சுட சோர்ந்து படுத்திருந்தான். தறிக்குழியருகே விளையாட வரும் பேரனைக் […]

கட்டுரை

கந்து வட்டியும் சூப்பர் ஹீரோக்களும்!

கிங் விஸ்வா · January 30, 2022

கதை உருவான கதை: 2015ல் அமெரிக்காவில் இரண்டு விஷயங்கள் பெரிதாகப் பேசப்பட்டன. ஒன்று, வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு, அதைத் திரும்பக் கட்ட முடியாதவர்களிடம் இருந்து வசூலிக்கும் முறைகள். இரண்டாவது விஷயம், விக்கிலீக்ஸ். இந்த இரண்டையும் வைத்து, இளைய தலைமுறை காமிக்ஸ் படைப்பாளிகளான டோனியும் ஷாவும் ஒரு காமிக்ஸை உருவாக்க நினைத்தார்கள். அதே சமயம் சூப்பர் ஹீரோ காமிக்ஸ்களில் இருக்கும் சில விஷயங்களையும் பகடி செய்து உருவாக்கியதே இந்தக் காமிக்ஸ் தொடர்.  தலைப்பு: The Paybacks கதாசிரியர்: டோனி […]

கட்டுரை

இரு வகையான வழக்குகள்

ஆர்.அபிலாஷ் · January 30, 2022

தமிழில் சமூக வலைதளங்கள் வேர்கொண்டு கிளைவிட்டு தழைத்தபோது தோன்றிய ஒரு இயல்பு பேச்சுவழக்கில் நிலைத்தகவல்களை எழுதுவது. பேஸ்புக்கில் குறிப்பாக, ஆங்கிலம், கொச்சையான சொற்கள் கலந்து நேரடியாக ஒரு விசயத்தைச் சொல்லத் தலைப்படும் எழுத்துக்கு இங்கு ஒரு மதிப்பு ஏற்பட்டது. அதே நேரம் வட்டார வழக்குக்குப் பெரிய மதிப்பு இருந்ததில்லை. நீங்கள் எந்தப் பதிவர்களைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து இது மாறும் என்றாலும் பேச்சுவழக்கு என்னதான் எதார்த்தமாகவும் பாசாங்கற்றதாகவும் இருந்தாலும், பொதுவழக்கே பொதுவாகக் கோலோச்சுகிறது. இந்தப் பொதுவழக்கைப் […]

தமிழ்

The White Ribbon: திரைக்கதை (பகுதி 3) – மைக்கேல் ஹனகே

கோ.கமலக்கண்ணன் · January 30, 2022

முதல் பகுதி இரண்டாம் பகுதி 21. வெளியே / பகல்: பண்ணை வீட்டுத் திடல் விருந்து தடபுடலாக நிகழ்கிறது. மக்கள் உரக்க ஆடிப் பாடி மகிழ்கின்றனர். சிறுவர்கள் அங்குமிங்கும் ஓடி ஆடுகின்றனர். இளைஞர்கள் அரிவையர் முன்பு தம்மை மிடுக்காகக் காட்டிக்கொள்கின்றனர்; சண்டையிட்டும் கொள்கின்றனர். மங்கையர் குழுக்களாகச் சேர்ந்து அலர் பேசுகின்றனர். சில உழவர்கள் நிலக்கிழாரைச் சுற்றி நட்புணர்வுடன் பேசுகின்றனர். அவர்கள் பேசுவது நமக்குக் கேட்கவில்லை.  நரம்புத் தளர்ச்சிகொண்ட சீமானது மனைவி இந்தக் கும்பல்களைக் கடந்து எதையோ பார்க்கிறாள். […]

English

The Bliss We are Blessed With: Selections from Thiruvempavai of Manickavasakar

த. கண்ணன் · January 30, 2022

Thiruvempavai by Manickavasagar (9th century CE) and Thirupavai by Andal (7/8th century) are special hymns sung during the month of Markazhi (December-January). This year, our daughter chose to sing and record all the songs from Thiruvempavai. While she was preparing for singing, I drew inspiration from her and translated some of the songs.  In these songs, […]

கட்டுரை

அறிந்துணர்வில் யாவும் உள: ஜென் துறவி திக் நாட் ஹஞ்ச் நினைவுக்குறிப்பு

வி.அமலன் ஸ்டேன்லி · January 30, 2022

‘டீச்சிங்ஸ் ஆஃப் லவ்’ எனும் நூலில் தன் மேலிருந்த பெருவெறுப்பால் வியட்நாம் அரசு ‘தே இறந்துவிட்டார்’ எனப் புரளி கிளப்பியதைப் பற்றி திக் நாட் ஹஞ்ச் எழுதுகிறார். ‘சில வருடங்களுக்கு முன்பு, அரசுச் சார்புக் குழுவொன்று நான் மாரடைப்பால் இறந்துவிட்டதாக ஹோசிமின் நகரத்தில் வதந்தி பரப்பிற்று. நாடே நம்ப முடியாமல் குழம்பியது. பிற்பாடு பெளத்தப் பிக்குணி ஒருத்தி எனக்கொரு கடிதம் அனுப்பியிருந்தாள். எனது மரணச் செய்தியைக் கேட்டபோது துறவுக்கான ஆரம்ப வகுப்புகளைத் தனது பெளத்தப் பள்ளியில் நடத்திக்கொண்டிருந்தாளாம். துறவு மாணவருள் ஒருத்தி துக்கம் […]

கவிதை

முத்தங்கள் பூக்கும் மரம்: கண்ணகன் கவிதைகள்

கண்ணகன் · January 30, 2022

குறுக்கும் நெடுக்கும் இழைகளாக உடல்களைப் பின்னி அமைந்திருக்கும் பெருவலையின் மையத்தில் பாம்புகளின் சிரசுகள் எல்லாம் ஒன்றிணைந்து ஒரு சிலந்தியைப்போலாகிக் காத்துக்கிடக்கின்றன. சலித்துவிட்ட நிலமும் நீரும் விலகி பறப்பதற்குப் பழகிக்கொண்டிருக்கும் பச்சைத் தவளைகளுக்குச் சிறகுகள் முளைக்கத் தொடங்கியிருப்பதற்கும் முன்னதாகவே. * பகல் நதியில் நீர்க்கோழிக் குஞ்சுகளின் விளையாட்டுச் சுவடுகள் அப்போதைக்கப்போதே அழிந்துகொண்டிருந்தன விலக்கப்பட்டவனின் கனவுகளைப்போல. நுணாப்பூ வாசம்கொண்ட வெளிச்சம் வெளியெங்கும் பொழிந்துகொண்டிருக்க இரவு நதியில் பௌர்ணமிக்குள் மிதக்கிறது பாசி. வேளியில் தழைத்திருக்கும் பசுங்கொடியின் நெற்றுக்குள்ளிருந்து வெடித்து விழும் குன்றிமணியின் […]