Tag: கண்மணி குணசேகரன்

தமிழ்

பேரழகி

கண்மணி குணசேகரன் · January 30, 2023

தெருவெல்லாம் மாவிலைத் தோரணங்கள் கட்டி ஊரே விழாக்கோலம் பூண்டிருந்த மாரியம்மன் கோயில் சாகை. முதல் நாள் சாகை ஊற்றி சாமி ஊர்வலம் முடிந்து மறுநாள் தெருக்கூத்து. வாடிக்கையாய் ஆடுகிற வேகாக்கொல்லை சின்னதுரையை விடுத்து மேல்பாதி மாணிக்கம் சமாவிற்குப் பாக்கு வைத்திருந்தார்கள். இந்தப் பக்கத்திற்குப் ‘புது சமா’ என்பதால் சுற்றுப்பட்டு ஊர்களிலிருந்து சனங்கள் கூத்துப் பார்க்க வந்திருந்தார்கள். செயக்கொடி, ஆசைத்தம்பியை இட்டுக்கொண்டு தெய்வீகமும் கிளம்பிவிட்டாள். தெருவில் அரவம் அடங்கி கிழக்கத்திக் காற்றில் கூத்து ஆரம்பித்ததின் அடையாளமாகத் தாள மத்தாளச் […]

தமிழ்

நெடுஞ்சாலை

கண்மணி குணசேகரன் · December 22, 2020

அப்பன் பரதனிடம் சொல்லி அவர் ஓனர் செட்டியிடம் இட்டுக்கொண்டு போனார். உள்ளே நுழையும்போது செட்டில் மேனேஜர் இருந்தார். கம்பெனியின் பாதிக் கணக்குவழக்கு ரகசியங்கள் எல்லாம் அவருக்கு அத்துபடி. அரை முதலாளிதான் மேனேஜர். “உள்ள பெரியவரு இருக்காரா?” உச்சந்தலையை சொட்டையாக வட்டமிட்டுக்காட்டி சைகையால் பரதன் கேட்டார். “இருக்கறாரு…” ஊமையாய் தலையை மட்டும் ஆட்டி  ஆமோதித்தபடி, பரதனுடன் வந்த தமிழரசனை மேலும்கீழுமாய்ப் பார்வையை ஓட்டி அளவெடுத்துக்கொண்டிருந்தார் மேனேஜர். உள்ளே பெருஞ்சத்தமாகக் கேட்டது. கதவைத் திறந்ததும் சத்தம் இன்னும் கூடுதலாக பளீரென்று அறைந்தது. […]

சிறுகதை

புழுதி

கண்மணி குணசேகரன் · September 25, 2020

விஜயா பதிப்பக வாசகர் வட்டமும் சக்தி மசாலா நிறுவனமும் இணைந்து வழங்கும் ‘கி.ரா. விருது’ பெற்ற கண்மணி குணசேகரனுக்கு வாழ்த்துகள். * செம்மேகமாய் திரண்டு வந்தது மேலைக்காற்று. மூச்சு வாங்கக்கூட இடைவெளி கொடுக்காமல் நிறைமுக்காடாய் போர்த்திதான் பார்த்தாள், கருவறைக்குள் முடங்கிக்கிடந்த அங்காளம்மை. ஆனால் போர்வையைத் தூக்கி எறிந்துவிட்டு படுதாவைப் போல் படிந்தது மேற்கே மலையாகக் குவித்து வைக்கப்பட்டிருந்த மண்மேட்டின் புழுதி. மூக்கைப் பொத்துவதற்குள், நாசியில் நுழைந்து நடுமண்டைக்கும் ஏறிவிட்டது. அங்காளம்மைக்கு நெஞ்சை அடைக்கிற மாதிரியிருந்தது. மூக்கினுள் நாவராஞ்சி […]

சிறுகதை

வாளி

கண்மணி குணசேகரன் · April 20, 2019

முடிவு தெரிந்த இரண்டு நாளாய் செவுடிக்கு வாயைத் திறந்தாலே குச்சித்திரம் குச்சித்தரமாய் நர வார்த்தைகள் தான். குப்பப் படையாட்சியால் தாங்க முடியவில்லை. கேட்டுக் கேட்டு காது புளித்துப் போய்விட்டது. கடந்து வாசாங்காய் விட்டுத் தள்ளிய ஒரு கணத்தில் ஓங்கி அவளின் குறளியில் குத்தி விட வேண்டுமென அவருக்குக் கைகள் பரபரத்தன. ஆனாலும் ரொம்பவும் சிரமப்பட்டு கோபத்தை அடக்கியபடி பேசாமல் குந்திக் கொண்டிருந்தார். வேறு வழி. இதுவேறு படாத இடத்தில் பட்டு ஒன்று கிடக்க ஒன்று ஆகிவிட்டால் வவுத்துக் […]

சிறுகதை

வாடாமல்லி

கண்மணி குணசேகரன் · January 13, 2019

“அழகிய கண்ணே… உறவுகள் நீயே…” கொன்றை மர இலைகளின் மேல் பறந்து போகிற பொன் வண்டைப் போல் மனசை வருடிச் செல்கிற பாடல். தோட்டத்தின் தூரத்து சனிமூலை குடிமுந்திரியில் தலையில் முந்தானையை போட்டபடி சொரட்டுக் கழியோடு முந்திரிக் கொட்டை பொறுக்கிக் கொண்டிருந்த மல்லிகாவிற்கு கிணற்றுக்குள் கேட்பது போல் காதில் விழவும் திரும்பி வீட்டுப்பக்கம் பார்த்தாள். “போன் அடிச்சிகிட்டு கெடக்கு. அப்பா எங்கடா போச்சி…” பூண்டியாங்குப்பத்து தேரைப் போல் சன்னபின்னலாய் காய்த்துத் தள்ளியிருக்கும் முந்திரியின் தொங்கலில் கொட்டை பொறுக்கிக் […]

சிறுகதை

வெட்டுக்காடு

கண்மணி குணசேகரன் · December 15, 2018

வெயிலில் வதங்கிக் கொண்டிருக்கும் கிழக்கு வெளியின் ஒற்றையடிப் பாதை, பூமாறி நிற்கும் கொன்றை மரத்தின் காலடியால் குள்ளச்சி ஓடையில் இறங்கியது. ஓட்டமும் பெருநடையுமாக வெறிகொண்டவளைப் போல ஓடிவந்த அந்த சடசடப்பிலும் மணிமேகலை, ஒருசரிவில் கால்கள் சறுக்கி விடாதவாறு தாங்கலாய்தான் இறங்கினாள். அப்படியும் ஓடையின் கல்ச்சி மணலில் விழுந்து கிடந்த காய்ந்து பனங்கொட்டை ஒன்று இடது பாதத்தில் இடறவும் மீண்டும் மக்கிளித்துக் கொண்டதாய் கண்ணில் தெறிக்கிற வலி. பல்லைக் கடித்துக்கொண்டு ஓரத்து நாணாச் சிம்புகளைப் பிடித்து எதுமேட்டில் மெல்ல […]

சிறுகதை

தப்புக்கொட்டை

கண்மணி குணசேகரன் · November 14, 2018

”பெத்த வவுறு பத்தி எரியுதுடா கொலகாரப் பாவி! நீனும் இப்பிடி பண்ணிட்டியடா. ஓடன ஓங் காலுல கட்ட மொளைக்கோ… ஒனக்கு ஒசன சொல்லிக் குடுத்தவ குடும்பம் அழியோ… அவ மண்ணாப் பூடோ…” ஊரை இரண்டாய்க் கிழித்த மூக்காயியின் கூப்பாட்டை, ஒப்பாரியை மேற்கிலிருந்து பொட்டமண்ணை அள்ளிக் கொண்டு வந்த காற்று சுதி மாறாமல் வாரிக் கொண்டுபோய், ஊருக்கும் கிழக்குப்புறமாய் இருக்கும் முந்திரிக்காட்டில் தப்புக்கொட்டை பொறுக்கிக்கொண்டிருந்த சனங்களின் காதுகளில் போட்டது. சருவைச் சீய்ச்சிக் கொண்டிருந்த குச்சியைப் போட்டுவிட்டு, கூண்டுக்குள்ளிருந்து வெளியவரும் […]