Tag: கதே

தமிழ்

ஓசியானின் பாடல்கள் – கதே

எம்.கோபாலகிருஷ்ணன் · April 25, 2022

ஓசியானின் கவிதை (Ossian) கதேயைப் பெரிதும் பாதித்திருப்பதை “The Sorrows of Young Werther” நாவலின் போக்கில் நம்மால் உணரமுடியும். ஓசியான் ஒரு ஐரிஷ் கவிஞர். போர் சாகசங்களையும் வீர மரணங்களையும் குறித்துப் பெருமளவு பாடிய இவர் கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக் கவிஞர் என்று கருதப்படுகிறார். ஸ்காட்லாந்தின் கெய்லிக் என்ற புராதன மொழியில் எழுதப்பட்டிருந்த இவருடைய கவிதைகளைக் கண்டுபிடித்து உலகிற்குத் தந்தவர் ஸ்காட்லாந்தின் பிரபல கவிஞர் ஜேம்ஸ் மக்பெர்சன் (James Macpherson) ஆவார். 1760ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தின் […]

தமிழ்

காதலின் துயரம் – கதே

எம்.கோபாலகிருஷ்ணன் · February 24, 2022

இந்தச் சொற்களின் ஆற்றல் அனைத்தும் துக்கமுற்ற அவனது சுயகட்டுப்பாடுகளைத் தகர்த்தெறிந்தது. கதியற்றுப் போனவனாய் அவன் லாதேயின் பாதங்களில் வீழ்ந்தான். அவள் கைகளைப் பற்றினான். கண்களிலும் நெற்றியிலும் வைத்து அழுத்திக்கொண்டான். அதிர்ச்சிகரமான அவனது துயர முடிவைக் குறித்த உள்ளுணர்வு அவளது மனத்தில் பளிச்சிட்டது. அவளது மூளை குழம்பியது. அவனது கைகளை இறுகப் பற்றித் தன் மார்பின் மீது வைத்து அழுத்திக்கொண்டாள். துயரப் பெருமூச்சுடன் அவனைத் தழுவினாள். தகிக்கும் இருவரது கன்னங்களும் உரசின. உலகத்தை மறந்தனர். அவளைக் கைகளால் பின்னித் தன் […]

கட்டுரை

கதே: முழுமையான வாழ்வின் இலக்கியம்

இரா. குப்புசாமி · January 30, 2022

ஒவ்வொரு மொழியும் தன்னை அழியாப் புகழில் ஏற்றும் மகா காப்பியத்தைப் படைக்கும் ஆற்றல் கொண்ட தன் தலைமகனுக்காகத் தவமிருக்கிறது. அவன் பிறக்கும்வரை அது தன்னை மலடியாகவே கருதுகிறது. அப்படிப்பட்ட காப்பியம் பிறந்த பிறகு தாய்மையால் பூரிக்கிறது. தனக்கு இனி என்றுமே அழிவில்லை என்று இறுமாந்து கொள்கிறது. அந்தக் காப்பியம்தான் அந்த மொழிக்கும் அம்மொழி பேசும் மக்களுக்கும் அந்தத் தேசத்தையே உரிமையாக்கும் சாசனமாக அன்று முதல் மாறுகிறது. ஹீப்ரு மொழிக்கு ஒரு மோஸஸ், கிரேக்க மொழிக்கு ஒரு ஹோமர், […]

Editor's Picks

Editor’s Picks

கோகுல் பிரசாத் · August 29, 2021

நித்யவெளியில் துயருறும் ஆன்மா- ஃபௌஸ்ட் தொன்மம் I ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் கைவசமாயிருக்கும் விருப்புகளையும் வெறுப்புகளையும் வகையறுக்கும் விதத்திலேயே தொன்மக் கதைகள் உருவாக்கப்படுகின்றன. அதனாலேயே அவற்றிற்கு வயதாவதில்லை. அவை காலத்தால் பழையதாகி தாழக்குதியிடுவதில்லை. என்றும் புதியவை போலிருக்கின்றன. எல்லாக் காலத்திற்கும் பொருந்திப் போகின்றன. எல்லோருக்கும் ஒரே விதமாய்ச் சம்பவிப்பதைப் போன்று உயிரோடிருக்கின்ற அனைவருக்கும் ஆகாயத்தைக் காட்டுகின்றன. அதில் கடந்துசெல்கிற பறவையின் செய்தியை எல்லோரிடமும் பாகுபாடின்றிக் கொண்டு சேர்க்கின்றன. நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்குமான பிரயாசைகளை நித்யகாலமாக அறியச் செய்கின்றன. நீதிக்கும் அக்கிரமத்துக்கும் இடையேயான சமரில் […]

கட்டுரை

உலக மகாகவி: கதே – பகுதி 2

இரா. குப்புசாமி · August 13, 2018

‘தத்துவம் என்பது என்ன?’ ஒரு வரியில் கூறும் ஓர் உள்ளொளியை சுமார் ஆயிரம் பக்க நூலில் தர்க்க வாதங்களுடன் நிரூபிப்பது. இது வீண்வேலை; கால விரயம். “அந்த நேரத்தில், அந்த ஆற்றலுடன் இன்னும் மேற்கொண்டு இயற்கையின் விதிகளைப் பற்றிய, வாழ்வின் விதிகளைப் பற்றிய உள்ளொளிகளைக் கண்டறியலாமே?” இது கதேயின் வாதம். இவரை மீண்டும் மீண்டும் வாசித்த எமர்சன் மற்றும் கியர்கேகார்டு போன்ற சிந்தனையாளர்கள் ‘பெரும் தத்துவக் கட்டிடங்களை எழுப்புவதை எதிர்த்தனர். விளைவாக, ‘இருத்தலியம்’ என்ற ‘தீவிரமாக வாழ்தல் […]

கட்டுரை

உலக மகாகவி: கதே

இரா. குப்புசாமி · July 9, 2018

என் வாழ்க்கைப் பாதையில் வழிகாட்டிகளாக, வெளிச்சத்தை வீசிய ஒளிவிளக்குகளாகத் திகழ்ந்த என் ஆசான்கள் அனைவருக்கும் நன்றிக்கடனைத் திருப்பிச் செலுத்துவது எனது வழக்கம்; பேச்சாலோ எழுத்தாலோ செயலாலோ. எனது 28ஆவது வயதில் என் முதல் மகன் பிறந்தான். அவனுக்கு நான் இட்ட பெயர்: கதே. ஏன்? ஒவ்வொரு முறை அவனைப் பார்க்கும்பொழுதும், அவனது பெயரைச் சொல்லி அழைக்கின்ற பொழுதும் என் இலட்சியத்தை நான் நினைவுகூர வேண்டும் என்று விரும்பினேன். அந்த இலட்சியப் பாதையிலிருந்து நான் விலகலாகாது என்ற விழிப்பு […]