Tag: இதழ் 34

கவிதை

என்னை மயில் கொத்தியது

யூமா வாசுகி · September 28, 2021

அமரர் ஓ.வி.விஜயனின் “கசாக்கின் இதிகாசம்” நாவலில் வரும் காட்சி. ஒரு சிறுமி தன் ஆசிரியருக்குச் சாப்பாடு எடுத்துக்கொண்டு வன வழியே செல்கிறாள். அவளை மயில் கூட்டம் சூழ்கிறது. அவள் மனம் மயங்கி அப்பதைப் பிய்த்து இரை போடுகிறாள். தின்று முடித்த மயிலொன்று பின்னரும் கேட்டுத் தொடர்ந்துவந்து அவளைக் கொத்திவிடுகிறது. அவளுக்கு வலிக்கிறது. ஆயினும் அவள் தன் நண்பர்களிடம் மிகப் பெருமையாகச் சொல்லிக்கொள்கிறாள். “என்னை மயில் கொத்தியது!” உலகின் நிறமெலாம் கொண்ட பிரபஞ்சப் பெருமயில் பிரான்சிஸின் ஆன்மாவை மிக விழைகிறது. அது கவர்ந்ததால் ஏற்பட்ட காயங்கள் அவரில் […]

கட்டுரை

ஜெ.பிரான்சிஸ் கிருபா: பரிசுத்தத்தைத் தேடியலைந்த நவயுகப் பாணன்

விஜயராகவன் · September 28, 2021

ஆகஸ்ட் 8ம் தேதி, 2008ம் ஆண்டு ஈரோடு புத்தகக் கண்காட்சியில் வசந்தகுமார் அண்ணாச்சி சொன்னதால், “கன்னி” நாவலை வாங்கிச்சென்று அன்றிரவே படிக்க ஆரம்பித்தேன். ஏலான் ஆசாரியின் மரணத்தைச் சத்ராதிகள் செய்தனவா அல்லது அறிவியல் தர்க்கமுறைப்படி இதய அடைப்பால் ஏற்பட்டதா எனத் தீர்மானமாக முடிவெடுக்க முடியாதவாறு இரு பக்கங்களையும் திறந்து வைத்திருந்த எழுத்து உத்தி என்னை உள்ளீர்த்தது. அதன்பின் சித்தப்பிரமை அடைந்துள்ள பாண்டி, கடலை ஒரு பெரும் படிமமாகவும் தேவமைந்தனை ஒரு ஆட்டிடைக் கிழவனாகவும் பார்த்த விவரிப்பு, மனக்கிலேசமடைந்தவனின் […]

கட்டுரை

ஆகாயத்துப் பட்சி

சுதாகர் · September 28, 2021

கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் எப்போதெல்லாம் நான் கவிதை குறித்து நண்பர்களுடன் உரையாட நேர்ந்திருக்கிறதோ அப்போதெல்லாம் பிரான்சிஸ் கிருபாவின் கவிதைகளைக் குறிப்பிட்டுச் சிலாகித்துப் பேசாமல் இருந்ததில்லை. எனக்குப் பேசுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்ட சில கவியரங்க நிகழ்வுகளிலும் கிருபாவின் கவிதைகளையே தேர்வுசெய்து, எனது இதயத்தில் பசுமையாகப் பதிந்திருக்கும் அந்தக் கவிதைகளை இரசித்துக் கூறி மகிழ்ச்சியடைந்திருக்கிறேன். பல சமயங்களில் இரவின் தனிமையில் கிருபாவின் கவிதைகளைப் படிக்கும் போது அன்பினால், கருணையினால், பச்சாதப உணர்வினால் ஆட்கொள்ளப்பட்டு கண்ணீர் மல்கி இருக்கிறேன். அடுத்தநாள் கிருபாவைத் தேடி அவரது நண்பர்களின் […]

கட்டுரை

பிரான்சிஸ் கிருபாவின் மும்பை நகரத்து வாழ்க்கை

இறை.ச.இராசேந்திரன் · September 28, 2021

எண்பதுகளின் முற்பகுதியில் மும்பையிலிருந்து ‘காரை.பிரான்சிஸ்’ என்ற பெயரில் புதுக்கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றை இங்குள்ள இதழ்களில் எழுதிவந்தார். 1991ம் ஆண்டு கவிஞர் ஆறாவயல் பெரியய்யா அவர்கள் பிரான்சிஸை என் வீட்டுக்கு அழைத்துவந்து அறிமுகப்படுத்தினார்கள். அன்றிலிருந்துதான் பிரான்சிஸுக்கும் எனக்குமான நட்பு ஆரம்பமானது. அவர் பிறந்த ஊர் திருநெல்வேலியில் இருந்து நாகர்கோயில் போகும் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் மூன்றடைப்பு என்ற ஊருக்குக் கிழக்கே ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பத்தினிபாறை. அவர் அம்மா பிறந்தது எனது ஊர்ப்பக்கம் (இறைப்புவாரி) இருக்கும் காராங்காடு. […]

தமிழ்

எலனாரின் இல்லம் – வில்லா கேதர்

இல. சுபத்ரா · September 28, 2021

”அடுத்ததாக நீங்கள் ஃபார்ச்சூனிற்குச் செல்கிறீர்களா?” எனத் தொடங்கினாள் ஹாரியட். பதிலாக, தோட்டத்தின் ஒரு மூலையில் நீரூற்றின் அடிக்கிண்ணத்தில் இருந்த கசிவினை ஆய்ந்துகொண்டிருந்த ராபர்ட் வெஸ்ட்ஃபீல்டையும் ஹரால்டையும் நோக்கி அதிர்ச்சியான ஒரு பார்வையை வீசினாள் அப்பெண். அவ்வளவு நேரடியாக அப்படிக் கேட்டது குறித்து வருந்தினாள் ஹாரியட். ஏதெல் அதற்குப் பதில் கூறியபோது அது வார்த்தையாக அன்றி வெறும் காற்றாகவே வெளிப்பட்டது.  ”நாங்கள் பிறகு போய்க்கொள்ளலாம் என நினைக்கிறேன். அங்கே அவனுக்கு மிகச் சிரமமாய் இருக்கும், உங்களுக்குத் தெரியும்தானே? அங்கே அவன் சென்று […]

தமிழ்

இளம் பெண்ணொருத்தியின் ஒப்புதல் வாக்குமூலம் – மார்சல் ப்ரூஸ்ட்

எஸ்.கயல் · September 28, 2021

“உணர்வுகள் இங்குமங்குமாக நம்மை அலைக்கழிக்கின்றன. ஆனால் அந்தத் தருணம் முடிந்ததும் நம்மிடம் என்ன மிஞ்சியிருக்கிறது? கழிவிரக்கமும் ஆன்மீகத்தில் வீணாய்க் கழிந்த நேரமும்தான். களிப்புடன் கிளம்பிச் செல்லும் நாம் பெரும்பாலும் சோகத்துடனேயே திரும்புகிறோம். அந்தியின் மகிழ்ச்சி விடியலின் மீது ஒரு இருளைப் பூசியது போலாகிவிடுகிறது. ஆக, உணர்ச்சிகளால் எழும் களிப்பு முதலில் நம்மைத் தற்பெருமை கொள்ள வைத்தாலும் இறுதியில் அது நம்மைக் காயப்படுத்திக் கொன்றுபோட்டுவிடும்.” -தாமஸ் ஏ கெம்பிஸ்: இமிடேஷன் ஆஃப் தி க்ரைஸ்ட், நூல் 1, அத்தியாயம் 18. “சுயநினைவற்ற நிலையில் பொய்யான […]

தமிழ்

முற்றத்துக்குள் நுழைந்த கோவேறு கழுதை – வில்லியம் ஃபாக்னர்

கார்குழலி · September 28, 2021

ஜனவரி மாத இறுதியில் ஒரு சாம்பல்நிற நாள் அது. மூடுபனியாக இருந்ததால் குளிர் தெரியவில்லை. ஏழைகளுக்காக அரசாங்கம் நடத்திய தங்கும் விடுதியில் இருந்து வெளியே வந்தாள் முதியவள் ஹெட். உரத்த குரலில் மகிழ்ச்சி ததும்பப் பேசிக்கொண்டே கூடத்தின் வழியாகச் சமையலறைக்கு ஓடினாள். எழுபது வயதிருக்கலாம். என்றாலும் ஊரில் உள்ள மணமுடிக்கும் வயதான பெண்கள் முதல் கிழவிகள் வரையில் எல்லோரையும் பிறந்தது முதல் நான்தான் வளர்த்தெடுத்தேன் என்னும் அவளுடைய கணக்குப்படி பார்த்தால் நூறு வயதிருக்கும், கூடவே ஒரே பிரசவத்தில் […]

சிறுகதை

நல்லாற்றின் நின்ற துணை

ஹரீஷ் கணபதி · September 28, 2021

“நீ என்ன பெரிய மயிருன்னு மனசுல நெனப்பாடா? என் பொண்ணு இன்னும் வாழணும்னு சொல்றாளேங்கற ஒரே காரணத்துக்காகத்தான் உங்கிட்ட பொறுமையா பேசிட்ருக்கேன். இல்லன்னா ஊர் சைடுல ஆள் சொல்லிவிட்டு தூக்கறதுக்கு ரொம்ப நேரமாவாது. மினிமம் கைய காலையாவது ஒடச்சு வீட்ல படுக்க வச்சிருவேன். பாக்கறியா?” திரைப்படங்களில் பார்த்தும் கதைகளில் படித்தும் மட்டுமே பழகியிருந்த இதுபோன்ற வார்த்தைகள் என்னை நோக்கிச் சொல்லப்படுவதன், அதுவும் இந்த மாதிரி வார்த்தைகளோடு என்னால் எந்தச் சந்தர்ப்பத்திலும் தொடர்புபடுத்திப் பார்க்க முடியாத சராசரி மென்மையான […]

கட்டுரை

இசையின் முகங்கள் (பகுதி 3): ஷ்யாம்

ஆத்மார்த்தி · September 28, 2021

19.03.1937 அன்று சென்னையில் அவதரித்த சாமுவேல் ஜோசப் என்கிற இயற்பெயரைக் கொண்ட ஷ்யாமுக்கு அந்தப் பெயரை வழங்கு பெயராக்கியவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. தக்ஷிணாமூர்த்தி, சலீல் சவுத்ரி, ஆர்.டி.பர்மன், டி.ஜி.லிங்கப்பா, ராஜேஸ்வர ராவ், பெண்டியால நாகேஸ்வர ராவ், சலபதி ராவ் போன்ற இசையமைப்பாளர்களிடம் உதவியாளராகப் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர் சியாம். எம்.பி.சீனிவாசன், ஆர்.பார்த்தசாரதி, தக்ஷிணாமூர்த்தி, எஸ்.எம்.சுப்பையா, விஸ்வநாதன் ராமமூர்த்தி எனப் பல புகழ்வாய்ந்த இசையமைப்பாளர்களிடம் வயலின் கலைஞராக வேலை பார்த்த அனுபவம் மிக்கவர். முதல் படம் மாடர்ன் […]

கட்டுரை

இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி: மாண்டேக் சிங் அலுவாலியாவின் “Backstage”

பாலசுப்பிரமணியம் முத்துசாமி · September 28, 2021

பெரும்பாலான சமயங்களில், வரலாறு நிகழும்போது, அதைச் சமூகம் உணர்ந்து கொண்டாடுவதில்லை. காலம் கடந்து பின்னோக்கிப் பார்க்கையில்தான், அது புரிபடுகிறது. கடந்த 40 ஆண்டுகளாக நிகழ்ந்த இந்தியப் பொருளாதார வளர்ச்சி அப்படிச் சமகாலத்தில் கொண்டாடப்படாத வரலாறு. ஆங்கிலேயர் வருவதற்கு முன்னால், இந்தியா உலகின் மிக வலுவான பொருளாதாரங்களுள் ஒன்றாக இருந்தது. வேளாண்மை, கைவினைத் தொழில், ஜவுளி போன்ற துறைகளில் மிக முன்னேறிய நாடாக இருந்தது.  உலகப் பொருளாதாரத்தில், இந்தியாவின் பங்கு 24% ஆக இருந்தது. ஆனால், பல நூறு […]

தமிழ்

அகம் சுட்டும் முகம் (பகுதி 5): கே.ஜி.ஜார்ஜின் திரையுலகம்

எம்.கே.மணி · September 28, 2021

தீமை எங்கிருந்து புறப்படுகிறது? உலகில் மனிதராக வாழ வேண்டியிருக்கிற யாருக்குமே எப்போதேனும் ஒரு கட்டத்தில் இந்த வியப்பு எழாமலிருக்க வாய்ப்பில்லை. அது ஒருவேளை தன்னைக் குறித்தாக இருக்கலாம் அல்லது நேரடியாகப் பாதிக்கப்பட்ட மூச்சுமுட்டலில் மனம் விதும்பும்போது, அல்லது அநீதிகளால் பிதுக்கப்படும்போது “என்ன இது, இப்படி” என்கிற ஆயாசம் உண்டாகலாம். ஒரு காரணமும் சொல்லாமல் தம்மைப் பார்த்து நிற்கிற எவ்வளவோ விரோதங்களைப் பலரும் தினம் தினம் எதிர்கொள்கிறார்கள். காந்தியைக் கொன்றவனின் மனம் என்ன என்பதை நம்மில் பலரும் உணரவே […]

கட்டுரை

தன் நீர்மை

வி.அமலன் ஸ்டேன்லி · September 28, 2021

மனவிழிப்புநிலை தியான ஆசிரியருக்கான இரண்டரை ஆண்டுப் பயிற்சியில் சமூகத்தின் பன்முகத்தன்மை, சமத்துவம், யாவரையும் உள்ளடக்கல், யாவருக்குமான வளப் பயன்பாடு எனச் சில கூடுதல் பயிற்சிகள் வகுப்புகளில் கற்றுக் கொடுக்கப்பட்டன. அமெரிக்காவில் இனப்பாகுபாட்டின் உச்ச இழிவுகளைப் பற்றியும் அதே போன்று இந்தியாவில் சாதி சார்ந்த கீழ்மைகளையும் அணுகுவது பற்றிய வகுப்புகள்.   தியானப் பயிற்சிக்காக வரும் மாணவர்கள் பல திறத்தவராய் இருப்பார்கள். முற்றான மெய்யறிவுத் தேடல் தாண்டி அவர்களது அன்றாட உடல், மனம் சார்ந்த அகப் புறப் பிரச்சினைகள் பெரும் தடைகளாக இருக்கக்கூடும். அவற்றுடன் […]