ஜிம்பல் எனும் முட்டாள் – ஐசக் பாஷவிஸ் சிங்கர்
1 நான் ஜிம்பல் என்கிற முட்டாள். நான் என்னை முட்டாள் என்று நினைக்கவில்லை. ஆனால் மற்றவர்கள் அப்படித்தான் என்னை அழைக்கிறார்கள். நான் பள்ளியில் இருந்த காலத்திலேயே அந்தப் பெயர் என்னை வந்தடைந்தது. மொத்தமாக எனக்கு ஏழு பெயர்கள் இருந்தன: அறிவற்றவன், கழுதை, ஆளித் தலையன், மடையன், சிடுமூஞ்சி, மூடன், அப்புறம் முட்டாள். இதில் கடைசிப் பெயர் நிலைத்துவிட்டது. என் முட்டாள்தனத்தில் என்னவெல்லாம் அடங்கியிருந்தது? என்னை எளிதாக ஏமாற்றிவிட முடியும். அவர்கள், “ஜிம்பல் உனக்குத் தெரியுமா? மத குருவின் […]
