Tag: கோ.கமலக்கண்ணன்

எழுத்து

தாமஸ் மன் ஏன் எழுதினார்? – செஸில் C.H. கலேந்தர்

கோ.கமலக்கண்ணன் · July 27, 2021

1875ல் பிறந்த தாமஸ் மன் (Thomas Mann), இருபதாம் நூற்றாண்டின் தவப்புகழ்பெற்ற ஜெர்மன் எழுத்தாசிரியர். 1929ல் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. வெனிஸ் மரணம் (Death in Venice) குறுநாவல், மாயமலை (The Magic Mountain) நாவல் ஆகிய இரு படைப்புகளின் மூலமாக அமேரிக்காவில் நன்கு அறியப்பட்டவர். மன் பற்றி எழுதப்பட்ட வாழ்க்கை வரலாற்று நூல், அதன் ஆசிரியர் பீட்டர் டி மெண்டிலோசனின் (Peter de Mendelssohn) மரணத்தால், 1982ல் முழுமை பெறவில்லை. அவரது இறப்பிற்குப் பிறகு மன்னுடைய […]

எழுத்து

அரசியின் கழுத்தணி – இடாலோ கால்வினோ

கோ.கமலக்கண்ணன் · June 24, 2021

பியத்ரோவும் தொமோசோவும் வாதிட்டபடியே இருந்தனர். விடியற்காலையில் சூனியமாக காட்சிதரும் தெருவில், அவ்விருவரது பழைய மிதிவண்டிகளின் கீச்சொலியும் குரல்களும் மட்டுமே கேட்டன. பியத்ரோவின் குரல் நாசித்தன்மை கொண்டது, அவ்வப்போது குரலின் இடையில் வெறுங்காற்றும் வெளிப்படும். கரகரப்பான, இரகசியம் பேசுவது போன்ற குரல் தொமோசோவினுடையது. இருவரும் தாம் பணியாற்றும் தொழிற்சாலைக்கு ஒன்றாக செல்கின்றனர். நசுங்கிய முரல்வென ஒலிக்கும் பணிமனை சங்கொலி காற்றில் ஒவ்வொரு இல்லமாகச் சென்று தொழிற்சாலை திறக்கும் நேரத்தை அறிவித்தது. நகரமும் நாட்டுப்புறமும் ஒன்றாகும் புறநகர் பகுதியின் இறுதியெல்லையை […]

எழுத்து

கேவல்களின் பேரிகை: கெஞ்ஜி மிசோகுச்சியின் திரையுலகம்

கோ.கமலக்கண்ணன் · June 24, 2021

1 மரணம் அருளப்படாத பறவையைப் போன்றவன் மாகலைஞன். அவன் தன் இறப்பின்மையின் முன்னறிவால் தகிக்கிறான். கட்டின்மை தரும் வாய்ப்புகளால் வானை அளக்க முற்படுகிறான். சுவடுகள் பதிக்காமலேயே தன்னிருப்பை நிகழ்த்தும் கலையில் திளைக்கும் பறவை. சுவடுகள் புறத்தே வீழும் முத்திரை மட்டுமே. அகத்தில் விரியும் பிரபஞ்சத்திற்கு இறக்கைகளின் அசைவுகளும் பாறைகளின் தீவெடிப்பும் ஒன்றே. புறத்தை ஒரு மனித அகவைக் கணக்கு தனித்தனியே அளக்கிறது. ஆனால் அகத்தின் வழியே தொடரும் ஒரு நீண்ட கயிறின் திரிபு மூலம் பல்லாண்டு பல்லாண்டு […]

எழுத்து

அபத்தமானவனின் கனவு – ஃபியோதர் தஸ்தாயேவ்ஸ்கி

கோ.கமலக்கண்ணன் · April 25, 2021

1 நான் அபத்தமானவன். இப்போது என்னைப் பைத்தியம் என்றும் அவர்கள் அழைத்து வருகிறார்கள். முன்பிருந்ததைப் போலவே அவர்கள் கண்களுக்கு நான் தெரிந்துகொண்டிருந்தால் பதவி உயர்வின்மை என்றாகிவிடுகிறது அல்லவா? என்னைப் பற்றிப் பேசிக் கேலிசெய்து சிரிக்கையிலும்கூட, எல்லோரும் என்னை அன்புக்குரியவனாக வைத்திருக்கிறார்கள்! சொல்லப்போனால் என்னை நகைப்புப் பொருளாக்கும் போதுதான் என் மீது அதீத அன்பு காட்டுகிறார்கள். என்னாலும் அவர்களோடு சேர்ந்து சிரித்துக்கொள்ள முடிகிறது. அதற்கு என்னை நானே கேலிசெய்து கொள்வதாகப் பொருளில்லை. இப்போதெல்லாம் அது குறித்து நான் ஆத்திரம் அடைவதில்லை. […]

எழுத்து

மார்கு வீதி கொலைகள் – எட்கர் ஆலன் போ

கோ.கமலக்கண்ணன் · February 27, 2021

பகுப்பாய்விற்கு உகந்த உளவியல் கருவிகள் என்று அறியப்படுபன அனைத்தும் சற்று பகுப்பாய்விற்கு உட்படுத்த வேண்டியவையே. விளைவுகளை வைத்தே அவற்றை நாம் புரிந்துகொள்கிறோம். பகுப்பாய்வாளர்கள் அர்ப்பணிப்புடன் அப்பணியால் ஆட்கொள்ளப்படுகையில் பெருமகிழ்வில் இருப்பதாக உணர்கின்றனர். உடல்வலிமை மிக்கோர் கடும் உடற்பயிற்சிகளைச் செய்துகாட்டி தசையாற்றலின் வல்லமையைப் பிரகடனப்படுத்திக்கொள்வதைப் போல சிக்கல்களை அவிழ்க்கும் தார்மீகச் செயல்பாட்டைச் செய்து காண்பிப்பதில் பகுப்பாய்வாளர்கள் அளவற்ற பெருமிதமடைகிறார்கள். அற்பமான செய்திகளைக்கூட கவனித்து தனது ஆய்விற்குப் பயன்படுத்திக்கொள்வதன் வழியாக அவர் பேருவகை கொள்கிறார். இயற்கைக்கு மீறியவை என்று கருதப்படும் […]

எழுத்து

பூசல் தரும் புன்கணீர்: ஃபாஸ்பைண்டரின் திரையுலகம்

கோ.கமலக்கண்ணன் · January 25, 2021

உலகெங்கிலும் கலைஞர்களில் செயல்வீரர்கள் இருந்திருக்கிறார்கள். தொய்வே இன்றி கலையின் மடியில் எரிந்து மடிந்தவர்கள். அத்தகையவர்களுக்கு கலையே தவணையில் அடையும் வீடுபேறு. கலையே உயிர் தளிர்க்கும் விடம். கலையே வாழ்வின் இருப்பிற்கான குரல் அல்லது எதிரொலி. கிழக்கிலும் மேற்கிலும் அவ்வாறு கலைக்கென வாழ்ந்து மறைந்த மேதைகள் உண்டு. வாழ்ந்த கணக்கின் தீர்வு ஒன்றுதான் எனினும் வாழ்முறையின் படிநிலைகள் தலைகீழ் விகிதத்தில் வெவ்வேறாக இருந்திருக்கிறது. கிழக்கின் ஞானம் தனக்குச் சொந்தமான எதையும் ஒவ்வொன்றாக கைவிட்டு இலகுவாகி விசும்பில் பறக்கும் பறவையின் பண்புடைத்தது. […]

எழுத்து

நகரத்தில் ஒரு விருந்து – மார்சல் ப்ரூஸ்ட்

கோ.கமலக்கண்ணன் · December 22, 2020

“ஆனால் ஃபாண்டானிஸ், அந்த உணவின் மகிழ்ச்சியை உன்னுடன் பகிர்ந்துகொண்டவர் யார்? நான் தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.”(ஹொரேஸி) 1 ஹொனோயே தாமதமாக வந்தார். நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கும் தானறிந்த அதிதிகளுக்கும் முகமன் கூறியபின், பிறருக்கும் அறிமுகப்படுத்தப்பட்டார். தனது மேசை நோக்கிச் சென்று அமர்ந்தவரிடம், சிறிது நேரம் சென்றபின், அருகிலிருந்த இளைஞன் விருந்தினர்களின் பெயர்களைச் சொல்லச் சொல்லி கேட்டான். தொடர்ந்து அவர்களைப் பற்றி ஏதோ சிலவற்றைச் சொன்னான். ஹொனோயே அவனை இதுவரை குழுமத்தில் பார்த்ததில்லை. அவன் மிகவும் அழகாயிருந்தான். தொகுப்பாளர் அவனைத் […]

எழுத்து

ஷேக்ஸ்பியர் படைப்புகள் மீதான தல்ஸ்தோயின் விமர்சனம்

கோ.கமலக்கண்ணன் · November 18, 2020

ஷேக்ஸ்பியர் பற்றி நன்கு பிரஸ்தாபிக்கப்பட்ட கருதுகைகள் மீதான எனது மறுப்பென்பது தற்செயலான மனநிலையில் இருந்து விளைந்ததோ, அக்கருதுகை மீது மேலோட்டமாக நான் கொண்ட பார்வையோ அன்று. மாறாக ஆண்டாண்டுகளாக ஷேக்ஸ்பியர் பற்றி ஏற்கனவே கிறித்துவ உலகின் புத்தியில் நிறுவப்பட்டிருக்கும் அனைத்தின் மீதும் எனது சொந்த புலமையைத் தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டும் அதை மீண்டும் மீண்டும் நான் செப்பனிட்டுக்கொண்டும் இருந்து வருவதன் வெளிப்பாடே.  நான் முதன்முதலாய் ஷேக்ஸ்பியரை வாசித்த போது அடைந்த திகைப்பை நினைவில் வைத்திருக்கிறேன். ஒரு ஆற்றல் மிக்க […]

எழுத்து

கருணையின் பெயரால் கைவிடப்படுதல்: சார்லி காஃப்மேனின் திரைப்படங்கள்

கோ.கமலக்கண்ணன் · September 25, 2020

நான் என்பதன் அடிப்படைதான் என்ன? அது வெறும் எண்ணத்திரளா அல்லது இருப்பா? அவ்வாறாயின் நித்தியத்துடன் ஒப்பீடு செய்து பார்க்கப்படுவதாலேயே அது இருப்பென்று உணரப்படுகிறதா அல்லது நித்தியத்தின் ஒரு துகள் என்பதாலேயே நான் என்று உணர்கிறேனா? அநித்தியத்தின் அங்கமா அல்லது அதன் மீதான எதிர்ப்பா? நான் இல்லாமலே என் வாழ்வு சங்கிலித் தொடர்ச்சி பெறும் என்பதை ஒரு படைப்பாளியால், ஒரு மதலை பெற்றெடுத்தவனால் நம்ப முடிகிறதே! அரூப வடிவில் தோன்றிப் பெருகும் எண்ணங்கள் அனைத்துமே பரு வடிவில் நிகழ்ந்தே […]

எழுத்து

புழுதிவீணைமீட்டல்: Rectify நெடுந்தொடரை முன்வைத்து

கோ.கமலக்கண்ணன் · August 24, 2020

வாட்கூர்மையின் பதத்தினை தொடுவுணர்வின் மூலம் அறியலாம். அதற்கும் முன்பே அது ஒளியைத் தாள்போல இரண்டாய்க் கிழித்து நம் விழியைக் கூசவைக்கும் எனில் தொட்டாயும் தேவையே இல்லை. அத்தன்மை கொண்ட புனைவுகளே இலக்கியத் தரத்தின் பீடங்களுக்கு இலாயக்கானவை. துய்த்து முடித்ததுமே சுடர்களை அணைத்துக்கொண்ட கனமும் பனிவீழலில் கால்புதைந்த உணர்வின்மையும் ஒன்றாய்ப் பொங்கும் நிலை. அத்தகைய மகோன்னத இலக்கியப் படைப்புகளுக்கு இயல்பாகவே சில பண்புகள் உண்டு. அரிதாய் நிகழ்வது, நிகர்வாழ்வுத் தருணங்களால் நிறைந்திருப்பது, போலியற்றிருப்பது. வாசகர் மனதில் நீண்டகாலத் தாக்கத்தினை […]

எழுத்து

எலீனா ஃபெர்ராண்டேவின் பேட்டி – சாண்ட்ரோ ஃபெர்ரி, சாண்ட்ரா ஃபெர்ரி

கோ.கமலக்கண்ணன் · July 20, 2020

கடந்த பத்தாண்டுகளாக எலீனா ஃபெர்ராண்டேவின் (Elena Ferrante) (Troubling Love, The Days of Abandonment, The Lost Daughter & First three of Neapolitan Novels ஆகியவை உள்ளிட்ட) நாவல்கள் தொடர்ந்து ஆங்கிலத்திற்கு வந்தபடி இருக்கின்றன. அது அவர்களுக்கான தீவிர வாசகப் பரப்பை சொந்த நாடான இத்தாலியைக் கடந்தும் ஏற்படுத்தித் தந்திருக்கிறது. நியாபொலிடன் நாவல் வரிசையின் நான்காவது நாவலாகிய, The Story of the Lost Child -ம் இந்த இலையுதிர்காலத்தில் ஆங்கிலத்தில் வெளியாகிறது. […]

எழுத்து

நெடுநீர், புனையின்றி நீந்துதல்: The Painted Bird (2019)

கோ.கமலக்கண்ணன் · June 16, 2020

கருப்பு வெள்ளைக்குள் எல்லா நிறங்களும் நிறமின்மைகளும் ஒளிந்து கொள்கின்றன. நிறமற்ற குமிழுக்குள், தான் உடையும் கணத்திற்கும் முன் பல நிறங்களையும் பிரித்து, பிரதிபலித்துப் பார்த்துவிட வேண்டும் என்ற உந்தம் இருப்பதும், வளி வழியே அது மேலெழும்பிப் பறப்பதும் இயற்கையின் சாகசக் கவிதைகளுள் ஒன்று. நீளாயிரம் ஆண்டுகளாய் தங்கள் முகங்களையே மாற்றி மாற்றிப் பார்த்து சலித்துவிட்ட ஐம்பூதங்களும் புவியில் உயிர்களைப் பரப்பி நாற்களமாடி இரசித்தன. அவ்விளையாட்டின் மேம்பட்ட வடிவமாய், இன்று மானுட இனத்தின் நாடகங்களை இரசித்துக் கொண்டிருக்கின்றனவோ என்ற […]