நீச்சல்காரன் – ஜான் சீவெர்
“நேற்று நான் நிரம்பக் குடித்துவிட்டேன்” எனச் சொல்லியபடி எல்லோரும் வட்டமாக அமர்ந்திருக்கிற ஒரு வேனிற்கால ஞாயிறு அது. தேவாலயத்திலிருந்து கிளம்பும் திருச்சபையினர் அவ்வாறு கிசுகிசுப்பதை நீங்கள் கேட்டிருக்கலாம், தனது நீண்ட அங்கியுடன் மல்லுக்கட்டியபடி வருகிற மதகுருவின் உதடுகளிலிருந்தேகூட நீங்கள் அதைக் கேட்டிருக்கலாம், கோல்ஃப் புல்வெளியிலும் டென்னிஸ் மைதானத்திலும் கேட்டிருக்கலாம், தாளமுடியாத தலைச்சுற்றலில் ஆடபான் (Audubon) குழுமத்தின் தலைவர் துடித்துக்கொண்டிருக்கும் வனஉயிரிகள் பாதுகாப்பகத்தில் கேட்டிருக்கலாம். “நான் நிறையக் குடித்துவிட்டேன்” என்றான் டொனால்ட் வெஸ்டர்ஹேஸி. “நாம் எல்லோருமே நிறையக் குடித்துவிட்டோம்” என்றாள் […]