தாயின் மணிக்கொடி!
“நான் உன்னைக் கூட்டிட்டுப் போறேன்!“ என்று கொஞ்சலாகச் சொல்லுகிறாள் லல்லி. மேலே போட்டிருந்த முந்தானை சர்வ அலட்சியமாக விலகிக் கிடந்தது. அவளுடைய அம்மா வத்சலா அதைக் கவனிக்காதது போல இருப்பதை நான் பார்த்தேன். நான் பார்ப்பதைக் கவனித்ததும் அவள் என்னை நோக்கி வந்தாள். அக்காவின் தோழி. நான் இப்போது வேறு வேலையில் இருந்தாலும், முன்பு அறிமுகமாகி இருந்த ஜிகேவின் இந்த செண்டரில் லல்லியை ஒப்படைத்துவிட்டுப் போக வந்திருக்கிறார்கள். ஒருநாள் விடுமுறை எடுத்துக்கொண்டு அவர்களுக்கு உதவிசெய்ய வந்திருக்கிறேன். ஆனால் […]