Category: எழுத்து

எழுத்து

அகம் சுட்டும் முகம் (பகுதி 7): கே.ஜி.ஜார்ஜின் திரையுலகம்

எம்.கே.மணி · 24.12.21

ஒரு திரைப்படம் பார்த்து நிறைகிற திருப்தியை கே.ஜி.ஜார்ஜின் பெரும்பாலான படங்கள் நமக்குக் கொடுக்காது. ஏற்கனவே பலமுறை நினைவு செய்துகொண்டபடி அவர் நம்முடைய நிம்மதியைப் பிடுங்கிக்கொள்பவர். “ஆதாமின் விலா எலும்பு” (Adaminte Vaariyellu, 1983) நான் கூறுவதைக் காட்டிலும் தீவிரமானது. படத்தில் எங்கேனும் ஆசுவாசத்தின் வெளிச்சப் புள்ளி தட்டுப்படுவதேயில்லை. தற்போது வந்த இந்தியன் கிச்சன் படத்துக்கான உத்வேகம் இங்கிருந்து தொடங்கியிருக்கலாம். முன்பு பலமுறை பார்த்து இருந்ததுதான், படம் தொடங்கின அடுத்த கணம் சுகாசினி, ஸ்ரீவித்யா ஆகியோரின் முகங்களின் வழியே படம் […]

எழுத்து

‘என் போராட்டத்தை’ எழுதுதல்: கருத்துப் பரிமாற்றம் – கார்ல் ஊவ் கினௌஸ்கார்ட்

தாமரை கண்ணன் · 24.12.21

தி நியூயார்க்கர் இதழின் இலக்கிய விமர்சகரான ஜேம்ஸ் வுட், நாவலாசிரியர் கார்ல் ஊவ் கினௌஸ்கார்ட் (Karl Ove Knausgård, Karl Oov K’Nouse-gaard அல்லது Karl Oov Kin-owss-gourd என உச்சரிக்க வேண்டும்) உடன் பொதுமக்கள் முன்னிலையிலான உரையாடலைக் கடந்த செப்டம்பர் மாதம் ஒஸ்லோ நகரில் நிகழ்த்தினார். மூன்றாவது வருடாந்திர நோர்வே அமெரிக்கன் இலக்கிய விழாவின் பகுதியாக இது நடைபெற்றது. அரச மாளிகைக்கு எதிரிலிருந்த ஒஸ்லோ இலக்கிய மையத்தின் பிரதான அரங்கில் இந்த உடையாடல் நிகழ்ந்தது. அரங்கின் […]

எழுத்து

மேலும் சில சொற்கள்

நாஞ்சில் நாடன் · 24.12.21

வேற்று மொழிச் சொற்கள் வேறெந்த மொழிக்குள்ளும் தன்னியல்பாகவோ, கண்ணியத்துடனோ, வல்லந்தமாகவோ நுழையும் காலை, அந்தந்த மொழிக்கான ஒலி வடிவம் எடுக்கும். திருவல்லிக்கேணி Triplicane ஆனதும் திருச்சிராப்பள்ளி Trichy ஆனதும் தூத்துக்குடி Tuticorin ஆனதும் அவ்விதம்தான். தமிழில் இன்று புழங்கும் இருபதினாயிரத்துக்கும் மிகையான சொற்களுக்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இலக்கண வரம்புகள் சமைத்திருக்கிறார் தொல்காப்பியர். அறிய விரும்புவோர், இதுவரை தொல்காப்பியத்துக்கு வந்துள்ள 138 பதிப்புகளில் ஏதேனுமொன்றைக் காண்க. தொல்காப்பியத்துக்கு 2000-க்கும் அதிகமான சுவடி வேறுபாடுகள் உண்டு. என்றாலும் இளம்பூரணர், […]

எழுத்து

The White Ribbon: திரைக்கதை (பகுதி 2) – மைக்கேல் ஹனகே

கோ.கமலக்கண்ணன் · 24.12.21

முதல் பகுதி 11. உள்ளே / பகல்: மர அறுப்பு ஆலை. உழவனின் மூத்த மகன் ஃபிரான்ஸ் தன் தாயின் மரணம் தொடர்பான தடயம் ஏதும் கிடைக்குமா என்று தேடுகிறான். அவனுடன் 16 வயது மதிக்கத்தக்க அண்டை வீட்டுக்காரரின் மகன் மாட்டியும் துணை இருக்கிறான். மர அறுப்பு ஆலை ஆற்றினருகே இடிந்துவிழும் நிலையில் இருந்த ஒரு கட்டடம்.  விபத்து நிகழ்ந்தபோது அங்கிருந்த ஃபிரான்ஸிடம் அந்த இடத்தைச் சுட்டிக் காட்டுகிறான் மாட்டி. மாட்டி இந்த இடம்தான். கவனமாக நட. […]

எழுத்து

எம்.வி.வெங்கட்ராமின் நெகிடித் தீ

கால.சுப்ரமணியம் · 24.12.21

ராஜமய்யர், அ.மாதவையா, புதுமைப்பித்தன், மௌனி, கு.ப.ராஜகோபாலன், சி.சு.செல்லப்பா, க.நா.சுப்ரமண்யம், தி.ஜானகிராமன், லா.ச.ராமாமிருதம், கு.அழகிரிசாமி, சுந்தர ராமசாமி, கி.ராஜநாராயணன், கிருத்திகா, பிரமிள், ஜெயமோகன், சு.வேணுகோபால் என்ற வகையில் ஒரு புனைகதை எழுத்தாளர் குழு முன்னணியில் வைக்கப்படுவதுண்டு. இவர்களது பெரும்பாலான படைப்புகளை உயர்நிலையில் வைத்து மதிப்பிடுவார்கள்.  நகுலன், ப.சிங்காரம், ஜி.நாகராஜன், சம்பத், தஞ்சை பிரகாஷ், சாரு நிவேதிதா என்ற வரிசையையும் உண்டாக்கலாம். இவர்கள் மீறலும் ஒதுக்குதலும் மிகைப்படுத்தலும் பெற்றவர்கள். சங்கரராம், ந.பிச்சமூர்த்தி, ந.சிதம்பரசுப்ரமணியன், ஆர்.ஷண்முகசுந்தரம், ரகுநாதன், ஜெயகாந்தன், கரிச்சான்குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம், […]

எழுத்து

சோதியே! சுடரே! சூழொளி விளக்கே!

கார்த்திக் நேத்தா · 24.12.21

தீந்தெரிவை அகக் கனல் தணிந்த ஞாயிறு தண்ணொளி உமிழும் அந்தியில் அம்மணமாகக் கண்ட உனது ஆகம் எனது காமத்தைக் காட்டித்தந்த காளாமணி விளக்கு. முலைகளில் ஓடிய பைந்தடங்கள் எனது பிறவி ஊன்றிநிற்கும் வேர்க்கோடுகள். உனது செவ்விளமுலையின் இரு கண்களுக்கு  முப்போதும் எப்போதும்  நான் துதி பாடும் கவிஞன். போதுமடி இதுவே நின் மடி துயில தீந்தெரிவையே! * வீமப் பேரொளி விசும்பில்  பிளவற்ற ஒளிச்சுழல்வு. ஒளிப்பெருங்காட்சியில் தனியே காட்சி இல்லை. புள்ளி இடைவெளி விடாது நிறைந்து நிற்கும் […]

எழுத்து

தமிழ்ச் சிறுகதை இன்று (பகுதி 11): துலா முள்ளின் அசைவுகள் – பா.திருச்செந்தாழையின் கதைகள்

எம்.கோபாலகிருஷ்ணன் · 24.12.21

ஒழுங்கான கோடுகள் கொண்ட ஒரு பக்கத்தில் சற்றே கோணலாக வளைந்திருக்கும் கோடு உடனடியாக எல்லோரது கவனத்தையும் கவரும். ஒருவழிப்பாதையில் எதிரில் வரும் ஒழுங்கு மீறிய வாகனம் அனைவரையும் பதற்றத்துக்கு உள்ளாக்கும். மீறல்கள் உருவாக்குகிற சமன்குலைவை முதன்மைப்படுத்தும் கதைகளுக்கென்று இலக்கியத்தில் தனித்த செல்வாக்கு எப்போதுமே உண்டு. ஒருவகையில் இலக்கியத்தின் பணி அத்தகைய மீறல்களையும் அதற்கான காரணங்களையும் அவற்றின் விளைவுகளையும் யோசிக்கச் செய்வதுதான்.  ‘உலகமே ஒரு நாடக மேடை’ என்ற சொற்றொடருக்கு நிகரான செல்வாக்கு கொண்ட இன்னொரு கூற்று ‘எல்லாவற்றுக்கும் ஒரு […]

எழுத்து

தமிழ் இலக்கிய வரலாற்று வரைவியல்

முனைவர் இரா.சீனிவாசன் · 24.12.21

தமிழில் உள்ள பல நூல்கள் சமஸ்கிருதத்திலிருந்து தழுவலாகவோ மொழிபெயர்ப்பாகவோ ஆக்கப்பட்டவை என்று சிலர் கூறி வருகின்றனர். ஒரு மொழியில் ஒரு காலச்சூழலில் தோன்றி வேறு மொழியில் வேறு ஒரு காலச்சூழலில் இயற்றப்பட்ட ஆக்கங்களுக்கு இது பொருந்தும். பாரதம், இராமாயணம் ஆகியவை இவ்வாறு தோன்றியவை. வட இந்தியாவில் கி.மு. கி.பி நூற்றாண்டுகளில் தோன்றிய இந்த இதிகாசங்கள் சில நூற்றாண்டுகள் கழித்துத் தமிழில் இயற்றப்பட்டுள்ளன. இவற்றில் உள்ள நிலப்பரப்பு வட இந்தியவில் உள்ளது. பாத்திரங்கள், இடங்கள், சூழல், பண்பாடு முதலியவை வட […]

எழுத்து

பேட்மேன் + ஜோக்கர் – இணைந்த கைகள்: முரண்களின் கூட்டணி!

கிங் விஸ்வா · 24.12.21

கதை உருவான கதை: டிசி காமிக்சின் தலைமை நிர்வாகியான ஜிம் லீ, 2004ல் ஓர் இத்தாலியப் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவர் ஐரோப்பாவின் 4 முக்கிய நகரங்களைக் குறியீடாக வைத்து, அந்த நான்கு நகரங்களிலும் கதை நடப்பதாகத் திட்டமிட்டு, இத்தாலியின் தலைசிறந்த நான்கு காமிக்ஸ் ஓவியர்கள் வரையும் ஒரு காமிக்ஸ் தொடரைக் கொண்டுவர முயன்றார். ஆனால், அது கைகூடவில்லை. பின்னர், 2011ல் இதே தொடர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், வெளியாகாமல் நின்றது. பின்னர் 2015 டிசம்பரில் 4 […]

எழுத்து

மலரும் மணமும்: மலர்க்காணிக்கை – ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை

தாமரை கண்ணன் · 24.12.21

இயற்கையில் அவ்வளவு அழகு நிரம்பியதாக, தூய இதயத்தின் குறியீடாக, களங்கமற்றதாக, அன்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துவதாக, ஒரு சின்னஞ்சிறிய மலரைவிட வேறு எது இருந்திட முடியும்? மகத்தான தெய்வீக அழகை, அன்பை, இசைவை எளிய ஒரு மலர்ப்படுகையை விட வேறு எது பிரதிபலிக்கும்? மலர்களின் புத்தொளிர்வும், சீர்மையும், மென்மையும் எப்படி மனிதர்களின் ஆழத்தை ஈர்க்கின்றன, எவ்வாறு உயிர்ப்பை அளிக்கின்றன! அத்தகைய மலர் கிழக்குலகைக் கவர்ந்ததில் ஏதும் வியப்புண்டா? இதற்கு இங்கு அளிக்கப்படும் இடம் எவ்விதத்திலும் மிகையானதன்று. மலர்கள் இங்குள்ளவனின் […]

Editor's Picks

Editor’s Picks

கோகுல் பிரசாத் · 26.11.21

The People vs. O.J.Simpson ஓ.ஜே.சிம்ப்சன் அமெரிக்காவின் புகழ்பெற்ற கால்பந்தாட்டக்காரர். கறுப்பினத்தவர். தன்னுடைய முன்னாள் மனைவியையும் அவருடைய காதலனையும் கொலை செய்ததற்கான வலுவான முகாந்திரங்கள் இருந்ததன் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். நீண்ட காலம் இழுத்தடிக்கப்பட்ட இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு The People vs. OJ. Simpson என்ற பெயரில் தொலைக்காட்சித் தொடரும் வெளியானது. ஓ.ஜே.சிம்ப்ஸன் வழக்கே அதீத பரபரப்புடன்தான் தொடங்குகிறது. கொலை நிகழ்ந்த வீட்டிலிருந்து அவரைக் காவல்துறையினர் துரத்த, அவர் காரில் ஏறித் தப்பியோடும் காட்சி […]

எழுத்து

நிரபராதம்

மயிலன் ஜி சின்னப்பன் · 26.11.21

அதை மற்றுமொரு சாதாரணப் பயணம் என்றுதான் நம்பியிருந்தேன். விமானி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டதும் எல்லோரும் சற்று நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். டெல்லி சென்றடைய எவ்வளவு நேரம் ஆகும், தலைநகரின் அன்றைய உஷ்ணநிலை எப்படி இருக்கிறது என்பதையெல்லாம் அவள் சொல்லிக்கொண்டிருந்தாள். பெண் எனினும் குரல் சற்று கரகரப்பாக இருந்தது. ஆண்களே செய்துவந்த பணிகளில் நுழையும் பெண்கள் இப்படியாக குரலை வலிந்து திரிக்கிறார்களோவென எனக்கோர் ஐயப்பாடு.  ஒலிப்பெருக்கிக்குரல் ஓய்வதற்காகவே காத்திருந்ததைப் போல, நானும் பக்கத்து இருக்கைப் பெண்ணும் ஒருவரையொருவரைப் பார்த்து முறுவலித்துக்கொண்டோம். மிதமிஞ்சிய […]