மகாலட்சுமி
1938ஆம் ஆண்டு புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்தபோது அந்நகரத்திலேயும் அரசாங்கத்திலேயும் அதிக செல்வாக்குப் பெற்றவராக இருந்தார் சிவஞானம் பிள்ளை. நிலப்பிரபு வேறு. எந்தவிதக் கவலையும் கிடையாது. பெயருக்கேற்றாற் போலவே அவர் பக்திமான் என்பது புதுச்சேரி மக்களுக்கெல்லாம் தெரிந்த விஷயம். ஆனாலும் அவருக்குள் இடைவிடாது துன்புறுத்திக்கொண்டிருக்கும் பெரிய கவலையும் ஒன்று உண்டு. அது அவர் மகள் மகாலட்சுமியைப் பற்றியது. அம்மா இல்லாமல் வளர்கிறவள். இந்தக் கவலை மற்றவர்களுக்குத் தெரியாது. மகாலட்சுமிக்கு வயது பதினெட்டுக்குள்தான் இருக்கும். நல்ல சிகப்பு, கனிவான […]
