Category: பொது

எழுத்து

தமிழ்ச் சித்தர் நெறி

கால.சுப்ரமணியம் · 17.01.24

உலகளாவிய தத்துவ வரலாற்றையும் அதன் வகைமைகளையும் ஆன்மீக மரபு என்ற அதன் ஒரு கிளைப் பிரிவையும் இந்தியச் சமய தத்துவ மரபையும் தமிழர் தத்துவ மரபையும், உலகளாவிய சித்தர் மரபுகளின் ஊடாட்டங்களையும் தொடர்ச்சிகளையும் இவைகளில் துலங்கி நிற்கும் நமது தமிழ்ச்சித்தர் மரபின் நெறிமுறைகளையும் குறித்த செய்திகளைத் தொகுத்துப் பார்க்கும் நிலையில் எழுதப்பட்ட “இந்தியத் தத்துவத்தில் ஆன்மீக மரபும் தமிழ்ச் சித்தர் நெறியும்” என்ற நெடுங்கட்டுரையின் ஒரு பகுதியான தமிழ்ச் சித்தர் மரபு பற்றி மட்டும் இப்போதைக்கு இங்கே […]

எழுத்து

குதிரைத் தியாகம்

பாலு · 29.09.23

செஸ் உலகக்கோப்பை இறுதிச்சுற்றின் முடிவில் மேக்னஸ் கார்ல்சன் 2.5 – 1.5 என்ற கணக்கில் வெற்றிபெற்று சாம்பியன் ஆனார். அப்போது ஃபேஸ்புக்கில் ஒரு பதிவைப் பார்த்தேன். ‘மேக்னஸ் கார்ல்சன் போன்ற உலகத் தரமான வீரரை அலறவிட்டதே பதினெட்டு வயதுடைய பிரக்ஞானந்தாவுக்குப் பெரிய வெற்றிதான். மேக்னஸ் உயர்மட்ட வகுப்பைச் சேர்ந்தவர். சிறு வயது முதலே அவருக்கு நல்ல பயிற்சியாளர் கிடைத்தார். அவர் செஸ்ஸை ஆழ்ந்து கற்றுக்கொண்டார். அவர் சென்னையில் போலியோ தொற்றால் பாதிக்கப்பட்ட தந்தைக்கும், வீட்டில் இரு பிள்ளைகளைக் […]

எழுத்து

ஒரு கதையில் விவரணைகளின் உண்மைத்தன்மை எந்தளவுக்கு முக்கியம்?

ஆர்.அபிலாஷ் · 01.07.23

ஓர் இளம் எழுத்தாளராக நாம் சில நேரம் விவரணைகள், தகவல்களின் உண்மைத்தன்மை ஆகியவற்றுக்காக அதிகம் மெனெக்கெடுவோம். இது போலீஸ்காரராக நடிப்பவர் தன் சீருடை, தோளில் உள்ள நட்சத்திரங்கள், இடுப்புத் துப்பாக்கியிலே அதிகக் கவனம் செலுத்துவதைப் போன்றது. இப்படி இவற்றில் மிகுவிருப்பம் கொண்டு ஒரு கட்டத்தில் இது ஃபேன்ஸி டிரெஸ் போட்டி போல ஆகிவிடும். நடிகரின் கவனம் நடிப்பில் இருந்து விலகிப்போய் அவர் தன் தோற்றத்தின் போதாமை குறித்து மிகுந்த பிரக்ஞையாகி நடிப்பில் திணறலாம். இதுவே எழுத்தாளர்களுக்கும் நடக்கலாம். […]

எழுத்து

பெண் உகந்த பெரும்பித்தன்

கரு. ஆறுமுகத்தமிழன் · 30.01.23

திருப்பள்ளி எழுச்சி பாடல் 4 இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்; இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்; துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்; தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்; சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்; திருப்பெருந் துறைஉறை சிவபெரு மானே! என்னையும் ஆண்டுகொண்டு இன்அருள் புரியும் எம்பெரு மான்பள்ளி எழுந்துஅரு ளாயே! இறைவரை உறக்கம் நீங்கி எழச் சொல்லித் திருப்பள்ளி எழுச்சி பாடுகிறோமே, முதலில் இறைவருக்கு உறக்கம் உண்டா? அவர் உறங்கினால் அல்லவா அவரை எழுப்புவதற்கு என்று கேள்வி […]

எழுத்து

தமிழினியின் புதிய வெளியீடுகள் 2024

கோகுல் பிரசாத் · 17.01.23

நாவல்கள்: * சிறுகதைத் தொகுப்புகள்: * தன் வரலாறு: * கட்டுரைத் தொகுப்புகள்: * நாடகங்கள்: * கவிதைகள்: * மொழியாக்கங்கள்: * ஆங்கில நூல்கள்:

எழுத்து

வாரிசு அரசியல் ஏன் ஆபத்தானது?

சி.சரவணகார்த்திகேயன் · 27.12.22

(இக்கட்டுரையை ஒரு கட்சிக்கு எதிரான பரப்புரையாகவோ, ஒரு குறிப்பிட்ட அரசியல் தலைவரை உத்தேசித்த‌ எதிர்ப்பாகவோ காணுதல் குறைபார்வை மட்டுமே. கிட்டத்தட்ட இந்தியாவில் இருக்கும் அத்தனை அரசியல் கட்சிகளும் வாரிசு அரசியலைச் சிறிதும் பெரிதுமாக மேற்கொண்டுதான் வருகின்றன. அப்படியான‌ அனைத்துக் கட்சிகளையும் தலைவர்களையும் நோக்கிய ஒரு குரல்தான் இது. ஒருவேளை, உங்கள் கட்சியையோ தலைவர்களையோ இது குறிப்பதாகக் குத்தினால் நிச்சயம் உங்களுக்குமானதே!) * இந்திய அரசியலையும் வாரிசு அரசியலையும் பிரிக்கவே முடியாது. அரசியல் சாசனச் சட்டப்படி இந்தியாவில் நடப்பது […]

எழுத்து

புனைவில் சொல்லடுக்கின் கலை

ஆர்.அபிலாஷ் · 27.12.22

மிக எளிமையாகத் தோன்றும் மொழிக்குச் சொந்தக்காரர் அசோகமித்திரன். ஆனால் அந்த மொழி ஒன்றும் கவனமின்றி வெறுமனே சிக்கனமான சொற்களால் உருவாக்கப்பட்டதல்ல. சிக்கனத்துக்கும் அடங்கின தொனிக்கும் அப்பால் அசோகமித்திரனிடம் தன்னுடைய ஸ்டைல் குறித்த அபாரமான தெளிவு உள்ளது. இந்த ஸ்டைல் வெறும் அழகுக்கானது அல்ல. அதற்குப் பொருள் நோக்கம் உள்ளது. எப்படி கவிதையில் ஒரு சொல்லை எந்த வரிசையில் வைக்க வேண்டும் என்பதற்குக் கவிஞனுக்கு என ஒரு நியதி, புரிதல், இத்யாதி உள்ளதோ, அவ்வாறுதான் புனைவிலும் ஒரு கதைக்கலைஞனுக்கு […]

எழுத்து

இராசேந்திர சோழனுக்கு விளக்கு விருது

எம்.கோபாலகிருஷ்ணன் · 27.12.22

அனைவருக்கும் வணக்கம். விளக்கு அமைப்பின் புதுமைப்பித்தன் விருதை இன்று பெருமைப்படுத்தியிருக்கும் மதிப்பிற்குரிய இராசேந்திர சோழன், வண்ணநிலவன் இருவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ஒவ்வொரு ஆண்டும் இலக்கியத்துக்கும் புனைவு சாராத பிற துறைகளிலும் பெரும் பங்களித்து வரும் எழுத்தாளர்களைத் தொடர்ந்து கௌரவித்து வரும் விளக்கு அமைப்புக்கு பாராட்டுகள். * ‘என் வாழ்க்கையே நான் விடுக்கும் செய்தி’ என்றார் காந்தி. ஒரு மனிதனின் வாழ்வே அவன் இந்தச் சமூகத்துக்கு விட்டுச்செல்லும் செய்தியாக இருக்கமுடியும். ஒரு மனிதன் எழுத்தாளனாக இருந்திருக்கலாம். அரசியல்வாதியாக […]

எழுத்து

தகப்பன் அரூபன்

வி.அமலன் ஸ்டேன்லி · 10.10.22

அரேபியப் பாலைப் பிரதேசத்து அதி உயரமும் கம்பீரமும் கொண்ட தேகமாய் இருந்திருக்க வேண்டும். அசாதாரண நீளமிக்க சமாதி. அண்மைப்பட்டு அமர்கையில் நீண்டு விரிந்து மலையென மண்ணில் அமைந்த கல்லறை. கண்கவர் வண்ண மென் ஜரிகைத் துணியால் போர்த்தப்பட்டு மேலே ரோஜாவும் மல்லிகையுமாய் குவிந்து உதிரிதழ்கள் விரவிக் கிடக்கும் மேடு. சுற்றிலும் அலங்கார மரத்தடுப்பு. அறை பூராவும் ஊடேறும் சுகந்தம்; வாசனைகளின் ஆழ்ந்த கலப்பும் ஈர்ப்பும். உடலிலும் மனத்திலும் செறிவுற்ற ஆழ் மணத்தில் திளைத்து தானாகவே ஒன்றாகி அகத்தில் சுரந்து ஒளியாகி தன்னுணர்வைத் […]

எழுத்து

இசையின் முகங்கள் (பகுதி 11): வாணி ஜெயராம் – அரிதாய் நிகழும் அற்புதம்

ஆத்மார்த்தி · 10.10.22

ஒரு தனிப்பட்ட அந்தரங்கமான அனுபவம் ஒன்றைக் கலையின் ஊடாக ரசிகனுக்குக் கடத்துவது என்பது உண்மையாகவே ஒரு சவால். பெருமளவு கலைஞர்கள் இப்படிப்பட்ட அனுபவச் சாத்தியத்தைப் பெரிதாக எடுத்துக்கொண்டு முயலுவதில்லை. அவர்களது கலைச் செயல்பாட்டின் நோக்கம், ஒரு தேவை அல்லது எதிர்பார்ப்பை நோக்கியதாக அமைவதும்கூட அதற்குக் காரணமாக இருந்துவிட முடியும். விதிவிலக்காக வெகு சில கலைஞர்கள் தங்களது மேதைமை மற்றும் தனித்துவத்தின் வெளிப்பாடாக இப்படிப்பட்ட அனுபவக் கடத்தலைச் சாத்தியம் செய்வார்கள். அப்படியான கலைஞர்தான் வாணி ஜெயராம். எப்போதும் பாடல் […]

எழுத்து

நாவலாசிரியரின் கல்யாண குணங்களும் உடலுறவும்

ஆர்.அபிலாஷ் · 30.08.22

நடையியல் (stylistics) என்றொரு துறை உள்ளது. இது உருவவியல் (படைப்பை மொழியுருவமாகக் கொண்டு அதன் நோக்கம், இயல்புகளை ஆராயும் கோட்பாடு), அமைப்பியல், மொழியியல், உளவியல், புலப்பாட்டு மொழியல் ஆகிய துறைகளில் இருந்து தோன்றி, ஒரு படைப்பின் நடை எப்படி அப்படைப்பு வாசகர்களின் மனதில் வலுவான தாக்கம் செலுத்துகிறது, அதன் மொழியியல், தொடரியல், உளவியல் நுட்பங்கள் என்னவென அலசுகிற ஒரு கோட்பாடாகும். ஜெரமி ஸ்காட் (Jeremy Scott) ஒரு நடையியல்வாதி. அவருடைய ஒரு முக்கியமான நூல் “Creative Writing […]

எழுத்து

இசையின் முகங்கள் (பகுதி 10): ஷங்கர் மகாதேவன் – கடலாழமும் மலையுச்சியும்

ஆத்மார்த்தி · 30.08.22

சீர்காழி கோவிந்தராஜனும் கண்டஸாலாவும் சேர்ந்து பாடினால் ஒரு பாடல் என்ன மாதிரி பரவசத்தை நல்குமோ அப்படி ஒரு குரலாய் ஒலித்தார் ஷங்கர் மகாதேவன். அவர் குரலை 2000ல் ரிதம் படப் பாடலான தனியே தன்னந்தனியே பாடலின் போது கேட்டதற்கும் 1999 ஆம் ஆண்டு களஞ்சியம் இயக்கத்தில் வெளியான நிலவே முகம் காட்டு படத்தில் இடம்பெற்ற சிட்டு பறக்குது குத்தாலத்தில் பாடலின் போது கேட்டதற்கும் பல வித்தியாசங்கள். இளையராஜா அந்தப் பாடலுக்குத் தேர்ந்தெடுத்துக் குழைத்திருந்த இசைவார்ப்பு ஃப்யூஷன் வகைமையிலானது. ஒருமித்த தீர்மானத்தை எப்போதும் ரத்துசெய்துகொண்டே இருக்கவல்லதான ஃப்யூஷன் […]