Category: திரைப்படக் கலை

எழுத்து

நோய்நோக்கு

த. கண்ணன் · 01.07.23

1 திட்டமின்றி மின்னோடைவெளியில் உலவிக்கொண்டிருந்த ஓர் இரவு, When They See Us (2019) தொடரின் முதல் பகுதியைப் பார்க்கத் தொடங்கினேன். எப்போதோ கோகுல் பிரசாத்தின் பரிந்துரைப் பட்டியலில் கண்டு என் விருப்பப் பட்டியலில் சேர்த்தது. உண்மையிலேயே உலுக்கிவிட்டது. தொலைக்காட்சி வரலாற்றில் மிகச்சிறந்த ஒரு மணி நேரம் என்று பல தொடர்களின் பகுதிகளைக் குறிப்பிடுகிறார்கள். இப்படம் அவ்வரிசையில் எளிதாக இடம்பிடிக்கத் தகுந்தது. சமூக அக்கறையுடன் செயல்படுவதில் கலையின் சாத்தியங்களை விரிவுபடுத்திக் காட்டுகிற தொடராக இதைக் காண்கிறேன். உண்மை […]

எழுத்து

நனைந்த இரவு: லூயிஸ் மாலின் ஃபிரெஞ்சுத் திரைப்படம் ‘தி லவ்வர்ஸ்’

எம்.கே.மணி · 10.10.22

முறை தவறிய உறவுகளைப் பற்றிச் சொல்ல வருகையில் அதில் இருக்கக்கூடிய ‘பிளஷர்’ கண்கூடானது. அதை வைத்து அணுகும்போது எந்தக் கலையிலும் எளிதாகக் கவனம் ஈர்த்துவிடக்கூடிய அனுகூலம் இருக்கிறது. ஒரு சமூகம் எந்த அளவில் ஒழுக்கத்திற்கு முதுகு வளைத்து பாவனை செய்கிறதோ, அந்த அளவில் இவ்விஷயங்கள் பதற்றப்படும். மானக்கேடான விஷயங்களைப் பேசுவதில்லை என்று ஒதுங்கிப் போவதன் குருட்டுத்தனம் எதற்கும் உதவாது என்பதால், இவைகளைப் பேசுவதற்கு அளவற்ற முதிர்ச்சியும் தகுதியும் தேவைப்படுகிறது என்று நினைக்கிறேன். தான் சொல்வதற்குத் தானே பொறுப்பேற்கிற […]

எழுத்து

The White Ribbon: திரைக்கதை (பகுதி 8) – மைக்கேல் ஹனகே

கோ.கமலக்கண்ணன் · 10.10.22

முதல் பகுதி இரண்டாம் பகுதி மூன்றாம் பகுதி நான்காம் பகுதி ஐந்தாம் பகுதி ஆறாம் பகுதி ஏழாம் பகுதி 71. வெளியே / பகல்: பண்ணை வீடு. பண்ணை வீட்டிலிருந்து மிதிவண்டியைத் தள்ளியபடி பள்ளியாசிரியர் வெளியே வருகிறார். ஒரு குற்றேவல்காரியிடம் அவர் விடைபெற்றதும் அவள் வாயிற்கதவை மூடுகிறாள். அவர் செல்லச் செல்லச் சச்சரவு ஒன்றைப் பார்க்க நேரிடுகிறது. மேற்பார்வையாளர் செவிலியை வெளியே தள்ளி அவள் மீது வசைமாரி பொழிகிறார். கதைசொல்லி வெள்ளிக்கிழமை மாலைப்பொழுதில் நான் என் வருங்கால […]

எழுத்து

அகம் சுட்டும் முகம் (பகுதி 12): கே.ஜி.ஜார்ஜின் திரையுலகம்

எம்.கே.மணி · 30.08.22

பல முக்கியமான திரைப்பட ஆக்கங்களில் ஒளிப்பதிவாளராகப் பங்காற்றியவர் வேணு. முன்னறியிப்பு, கார்பன் போன்ற படங்களை இயக்கியவர். அவர் கே.ஜி.ஜார்ஜுடன் இணைந்து பணியாற்றிய காலங்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டு வருகையில், ஒன்றை மிக முக்கியமாகக் குறிப்பிட்டார். படப்பிடிப்பில் ஒரு காட்சி எடுத்து முடித்த பிறகு வேணுவிற்கு அது சம்பந்தப்பட்ட வேறு ஒரு ஷாட் எடுக்கலாம் என்று தோன்றியிருக்கிறது. அதை அவர் ஜார்ஜிடம் சொல்லுகிறார். ஜார்ஜ் சில கணங்கள் யோசித்துவிட்டு, புன்னகையுடன் கைகளை விரித்து ‘எதற்காக?’ என்கிறார். ஆம், எதற்காக! அதை […]

எழுத்து

The White Ribbon: திரைக்கதை (பகுதி 7) – மைக்கேல் ஹனகே

கோ.கமலக்கண்ணன் · 30.08.22

முதல் பகுதி இரண்டாம் பகுதி மூன்றாம் பகுதி நான்காம் பகுதி ஐந்தாம் பகுதி ஆறாம் பகுதி 61. வெளியே / பகல்: விசாலமான வீதி. பள்ளியாசிரியரும் ஏவாவும் குதிரை வண்டியில் செல்கின்றனர். அவர்களுக்குப் பின்னால் இருக்கும் நகரத்தைச் சில கணங்கள் காண்கிறோம். கதைசொல்லி நகரத்தின் ரயில் நிலையத்தில் சந்திக்க முடிவுசெய்திருந்தோம். ஏவா ஊரில் எங்கள் இருவரையும் யாரேனும் பார்த்துவிடுவார்கள் என்பதால் அப்படி ஒரு ஏற்பாடு. அவள் தனது தூரத்து உறவினருடன் வாழ்ந்து வருகிறாள். அவர்கள் அவ்வப்போது அவளது […]

எழுத்து

மிட்டாய் பொறுக்கும் கடவுள்கள் – டிசிகாவின் திரையுலகம்

கோ.கமலக்கண்ணன் · 25.07.22

திரைப்படங்கள் அடிப்படையில் புனைவம்சம் கொண்டவை. வாழ்வின் சலிப்புகளில் இருந்தும் தினசரி சழக்குகளில் இருந்தும் விடுபட்டு திரையில் ஒரு கனவைக் காண மக்கள் அணியமாக இருக்கின்றனர். தம்மைச் சற்றேனும் மறந்தும் இழந்தும் கருவறை முன் ஒரு நல்ல வாழ்க்கை கண்முன் எழாதா என்ற சேவிப்புடன் பார்வையாளர்கள் திரையை நோக்கி அமர்கின்றனர். இருளரங்கில் ஒளிவிழா. ஆயினும் திரைப்படங்கள் ஒருவிதத்தில் வாழ்வின் அடிப்படைத் தேடல்களையும் வலிகளையும் மகிழ்ச்சியையுமே மைய இழையாகக் கொண்டுள்ளது. இரண்டு கூற்றுகளும் ஒன்றுக்கொன்று முரணானவை அன்று, மாறாகத் தொடர்புடையவை. […]

எழுத்து

அகம் சுட்டும் முகம் (பகுதி 11): கே.ஜி.ஜார்ஜின் திரையுலகம்

எம்.கே.மணி · 25.07.22

முறை தவறும் உறவுகளைப் பற்றிக் கதை சொல்லும் போக்கிற்கு எதிர் விளைவுகள் உண்டு. கே.ஜி.ஜார்ஜின் மற்றொராள் (1988) என்கிற படத்தின் தலைப்பேகூட ஒரு விதமான பதற்றத்தை ஏற்படுத்தும். இந்தக் கதை சொல்லப்பட்ட முறையால் சீண்டப்பட்டு வெகுண்டவர்கள் இப்போதும் இருக்கிறார்கள். மறைத்து வைக்கப்பட வேண்டிய, மழுப்பிக்கொண்டு நகர்ந்துவிட வேண்டிய அவலங்களை அவ்வப்போது துணிச்சலாக உரையாடி வந்ததால்தான் அந்தச் சாக்கில் மலையாளப் படங்கள் என்கிற பெயரில் பிட்டுப் படங்கள் எல்லாம் முளைத்து வந்தன. (அந்த இண்டஸ்ட்ரி செயல்பட்டதே சென்னையில் இருந்துதான் […]

எழுத்து

The White Ribbon: திரைக்கதை (பகுதி 6) – மைக்கேல் ஹனகே

கோ.கமலக்கண்ணன் · 25.07.22

முதல் பகுதி இரண்டாம் பகுதி மூன்றாம் பகுதி நான்காம் பகுதி ஐந்தாம் பகுதி 51. உள்ளே / பகல்: மருத்துவரின் இல்லம். மருத்துவர் தன் இருக்கையில் அமர்ந்திருக்க, அவருக்கு எதிரே பார்வையாளரது இருக்கையில் செவிலி அமர்ந்திருக்கிறாள். அவருக்குக் கர மைதுனம் செய்ய முயல்கிறாள். இப்போதும் இருவரும் முழு உடையணிந்த நிலையில் இருக்கின்றனர். தன் உடைக்கு மேல் வெண்ணிறப் புறச்சட்டையையும் மருத்துவர் அணிந்திருக்கிறார். அவள் செய்யும் வேலையைச் சற்று நேரம் உற்று கவனித்த பிறகு வெடுக்கென்று சொல்கிறார். மருத்துவர் […]

எழுத்து

அகவிசும்பும் துளிப்புடவியும்: தியோ ஆஞ்சலோபோலஸின் ‘Borders Trilogy’ படங்களை முன்வைத்து.

கோ.கமலக்கண்ணன் · 25.04.22

கலைஞர்கள் அடிப்படையில் கதை சொல்பவர்கள். அசையாத படிமத்தை மட்டும் உருவாக்கும் ஓவியக் கலைஞர்கள்கூட கதையின் விதையைச் சொல்பவர்கள் எனலாம். அதற்கு மனத்தைக் கருவியாகப் பயன்படுத்தி இளக்கி, அசைவுகள் தந்து, உறைவை உருக்கி, நீட்டி ஒரு கதையைப் பரிசாகப் பெற்றுக்கொள்ள கற்பனை வளமிக்க இரசிகர்களால் இயலும். கவிஞர்கள் பன் திசையில் பெருகச் சாத்தியமுள்ள கதைகளின் உக்கிரமான மையத் தருணத்தை மட்டும் சொல்பவர்கள். சொற்களின் கறார்தன்மையால் தேர்ந்த சொற்களுக்கு மட்டுமே இடமளிக்கும் வடிவம் அது. இறகினால் வருடிக்கொண்டே வந்து கடைசி […]

எழுத்து

அகம் சுட்டும் முகம் (பகுதி 10): கே.ஜி.ஜார்ஜின் திரையுலகம்

எம்.கே.மணி · 25.04.22

நண்பன் ஒருவன் இருந்தான். பெரிய துணிச்சலோ சாகசங்களோ அறியாத ஒருத்தன்தான். பிழைத்துக்கொண்டு சென்று பணத்தில் முழ்கிக் காணாமல் போனவன். நான் சொல்கிற நேரத்தில் டிரைவராக இருந்தான். ஒரு நாள் நள்ளிரவில் எங்களைச் சந்திக்க வந்தான். காரில் ஒரு இளம்பெண் இருந்தாள். ஒளிந்து இருந்தவளின் முகம் பார்த்தோம். போஷாக்கு பார்ட்டி. திக்கு தெரியாமல் ஏர்போர்ட்டில் நின்று முழித்துக்கொண்டிருந்ததாகவும் நைசாகப் பேசி தள்ளிக்கொண்டு வந்துவிட்டதாகவும் பெருமையாகச் சொன்னான். இப்போது நாம் என்ன செய்யப் போகிறோம்? கேங்க் ரேப் செய்துவிட்டு மர்டர் […]

எழுத்து

The White Ribbon: திரைக்கதை (பகுதி 5) – மைக்கேல் ஹனகே

கோ.கமலக்கண்ணன் · 25.04.22

முதல் பகுதி இரண்டாம் பகுதி மூன்றாம் பகுதி நான்காம் பகுதி 41. உள்ளே / இரவு: செவிலியின் இல்லம், கூடம். செவிலியும் மருத்துவரும் கலவி கொள்கின்றனர். இடைமறிப் பலகையைப் பற்றியபடி அவள் சற்று குனிந்து நிற்க பின்புறத்திலிருந்தபடி அவளைப் புணர்கிறார் மருத்துவர். இருவரும் முழுமையாக உடை அணிந்திருந்தனர். அவள் தன் பாவாடையை மட்டும் சற்று உயர்த்திவிட்டிருந்தாள்.  கலவி முடிந்ததும் அவரை நோக்கித் திரும்பியவள் தன் கைகளால் அவரைச் சுற்றி வளைக்கிறாள். அவளைத் தடுக்காமல் இருந்தவர் மெல்லிய புன்னகையுடன் […]

எழுத்து

அகம் சுட்டும் முகம் (பகுதி 9): கே.ஜி.ஜார்ஜின் திரையுலகம்

எம்.கே.மணி · 24.02.22

முழு துஷ்டனாக உருமாறிவிட்ட பேபிச்சாயன் என்கிற பேபியை அவனது உறவினரும், அந்த ஊரின் சர்ச் பாதருமான கோபி, அவனை முழுமையாக வளைத்துவிட முடியும் என்கிற நம்பிக்கையில் இறுதிக் கேள்வியாக ஒன்றைக் கேட்கிறார். “நீ உன் குடும்பத்தின் மீது அன்பாக இருக்கிறாய் அல்லவா?“ பேபி இல்லை என்கிறான். அவர் துணுக்குறுகிறார். மேலே பேசுவதற்கு வழியே இல்லை. பதற்றத்துடன் “ஏன் அப்படி?“ என்கிறார். “என்னிடம் யாரும் அன்பாயில்லை. நானும் இல்லை” என்கிறான் அவன். எப்படிப் பார்த்தாலும் இதுதான் கதையின் மையப்புள்ளி. […]