Category: நாவல் பகுதி

எழுத்து

இல்புறம்

அருண் நரசிம்மன் · 17.01.24

மங்கோலியா. ஒரு காலத்தில் முக்கால்வாசி ஆசியாவைத் தன் ஆளுகையை ஏற்கவைத்திருந்த பழம் பெருமை கொண்ட நாடு. இன்று சுற்றிலும் தலையெடுத்துவிட்ட நாடுகளுக்கிடையே கைகால்கள் விரித்து விசால வெளியென தேமேனென்று அதோ அங்கே மேலே கிடக்கிறது. மங்கோலியாவை எவரும் இன்று பொருட்படுத்துவதில்லை. வர்த்தகம் பேச்சுவார்த்தை நடத்துவதில்லை. விடுமுறையில் சென்று பார்த்துவிட்டு வருவதில்லை. விவேக்கின் தந்தை மனிதருள் மங்கோலியா.  இந்திய விடுதலைக்கு முன்பே பிறந்தவர். இன்றைய இஸ்ரேலைவிட வயதானவர். பாகிஸ்தானைவிடப் பாங்கானவர். நேபாளத்தைவிட நேசமானவர். மாண்டிநீக்ரோ நாட்டைவிட வயதான பேரன் […]

எழுத்து

பேரழகி

கண்மணி குணசேகரன் · 30.01.23

தெருவெல்லாம் மாவிலைத் தோரணங்கள் கட்டி ஊரே விழாக்கோலம் பூண்டிருந்த மாரியம்மன் கோயில் சாகை. முதல் நாள் சாகை ஊற்றி சாமி ஊர்வலம் முடிந்து மறுநாள் தெருக்கூத்து. வாடிக்கையாய் ஆடுகிற வேகாக்கொல்லை சின்னதுரையை விடுத்து மேல்பாதி மாணிக்கம் சமாவிற்குப் பாக்கு வைத்திருந்தார்கள். இந்தப் பக்கத்திற்குப் ‘புது சமா’ என்பதால் சுற்றுப்பட்டு ஊர்களிலிருந்து சனங்கள் கூத்துப் பார்க்க வந்திருந்தார்கள். செயக்கொடி, ஆசைத்தம்பியை இட்டுக்கொண்டு தெய்வீகமும் கிளம்பிவிட்டாள். தெருவில் அரவம் அடங்கி கிழக்கத்திக் காற்றில் கூத்து ஆரம்பித்ததின் அடையாளமாகத் தாள மத்தாளச் […]

எழுத்து

வேங்கை வனம்

எம்.கோபாலகிருஷ்ணன் · 27.12.22

ஜுன், 2003.    கோடையின் கோரத் தாண்டவத்துக்குக் காடு பலியாகியிருந்தது. எங்கும் வறட்சி. பெயருக்குக்கூடப் பச்சையைப் பார்க்க முடியவில்லை. இலைகளின்றி வெறும் கூடுகளைப்போல் காய்ந்த கிளைகளும் சுள்ளிகளுமாய் நின்ற மரங்களைப் பார்க்கச் சகிக்கவில்லை. சோர்வை விதைக்கும் சாம்பல் நிறத்தில் பரிதாபமாய் நின்றது காடு. மழையைக் கண்டு மாதங்கள் பல கடந்துவிட்டன. ரந்தம்பூரின் தடாகங்கள் பலவும் நீரின்றிப் பாளம்பாளமாக வெடித்துக் கிடந்தன. கரையில் நின்ற புற்கள் காய்ந்து மடிந்தன. ஈரமற்ற நிலத்தில் எதுவும் நிலைக்கவில்லை. நூற்றுக்கணக்கான மான்கள் திரிந்திருக்கும் தடாகங்களில் […]

எழுத்து

முறிந்த சிறகுகள் – கலீல் கிப்ரான்

கோ.கமலக்கண்ணன் · 27.12.22

இரவின் கருமையில் ஒரு மனிதன் செய்யும் எந்த ரகசியக் காரியமும் வெண்பகலில் தெள்ளியதாக வெளிப்பட்டுவிடும். தனிமையில் புலம்பிய சொற்கள் யாவும் எதிர்பாராத விதமாகப் பொது உரையாடலின் பேசுபொருளாக ஆகிவிட்டிருக்கும். இன்று நம் அறை மூலைகளில் மறைத்து வைக்கும் ஆவணங்கள் யாவும் நாளை வீதிகளெங்கும் பறைசாற்றப்படும். இப்படித்தான் மதகுரு பூலோஸ் காலிப், ஃபாரிஸ் எஃபாண்டி கராமியுடன் சந்தித்து உரையாடியதை இருண்மையின் வாய்கள் அரற்றின. அக்கம்பக்கத்தினர் தொடர்ந்து பேசிப் பேசி அலர் என் காதை எட்டியது. அந்த இரவு பூலோஸ் […]

எழுத்து

ஓசியானின் பாடல்கள் – கதே

எம்.கோபாலகிருஷ்ணன் · 25.04.22

ஓசியானின் கவிதை (Ossian) கதேயைப் பெரிதும் பாதித்திருப்பதை “The Sorrows of Young Werther” நாவலின் போக்கில் நம்மால் உணரமுடியும். ஓசியான் ஒரு ஐரிஷ் கவிஞர். போர் சாகசங்களையும் வீர மரணங்களையும் குறித்துப் பெருமளவு பாடிய இவர் கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக் கவிஞர் என்று கருதப்படுகிறார். ஸ்காட்லாந்தின் கெய்லிக் என்ற புராதன மொழியில் எழுதப்பட்டிருந்த இவருடைய கவிதைகளைக் கண்டுபிடித்து உலகிற்குத் தந்தவர் ஸ்காட்லாந்தின் பிரபல கவிஞர் ஜேம்ஸ் மக்பெர்சன் (James Macpherson) ஆவார். 1760ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தின் […]

எழுத்து

காதலின் துயரம் – கதே

எம்.கோபாலகிருஷ்ணன் · 24.02.22

இந்தச் சொற்களின் ஆற்றல் அனைத்தும் துக்கமுற்ற அவனது சுயகட்டுப்பாடுகளைத் தகர்த்தெறிந்தது. கதியற்றுப் போனவனாய் அவன் லாதேயின் பாதங்களில் வீழ்ந்தான். அவள் கைகளைப் பற்றினான். கண்களிலும் நெற்றியிலும் வைத்து அழுத்திக்கொண்டான். அதிர்ச்சிகரமான அவனது துயர முடிவைக் குறித்த உள்ளுணர்வு அவளது மனத்தில் பளிச்சிட்டது. அவளது மூளை குழம்பியது. அவனது கைகளை இறுகப் பற்றித் தன் மார்பின் மீது வைத்து அழுத்திக்கொண்டாள். துயரப் பெருமூச்சுடன் அவனைத் தழுவினாள். தகிக்கும் இருவரது கன்னங்களும் உரசின. உலகத்தை மறந்தனர். அவளைக் கைகளால் பின்னித் தன் […]

எழுத்து

சோர்பா என்ற கிரேக்கன் – நீகாஸ் கசந்த்சாகீஸ்

கோ.கமலக்கண்ணன் · 24.02.22

என்னைத் துயில் முற்றாக ஆட்கொண்டிருந்தது. நான் விழித்தெழுந்தபோது சோர்பா வெளியே சென்றிருந்தார். குளிரடித்தது. எழவேண்டும் என்று எனக்குத் துளியும் எண்ணமில்லை. என் தலைக்கு மேல் இருந்த புத்தக அடுக்குகளில் துழாவி, என்னுடன் எடுத்துவந்த நூல்களுள் ஒன்றான, எனக்குப் பிடித்த மாலர்மேவின் கவிதைகளை எடுத்தேன். நான் மெதுவாக மனம் போன போக்கில் பத்திகளைத் தேர்வுசெய்து வாசித்தேன். நூலை மூடினேன். மீண்டும் திறந்தேன். இறுதியாகக் கீழே தூக்கிப் போட்டேன். என் வாழ்விலேயே முதல்முறையாகக் குருதியற்ற, மணமற்ற, மானுட சாரமே இல்லாத […]

எழுத்து

சோதனைக் குடுவை – சில்வியா பிளாத்

மதுமிதா · 24.02.22

சுவாரஸ்யமான சில மருத்துவமனைக் காட்சிகளைக் காட்டு என்று பட்டியைக் கெஞ்சிக்கொண்டே இருந்தேன். அதனால் ஒரு வெள்ளிக்கிழமை அனைத்து வகுப்புகளையும் வெட்டிவிட்டு நீண்ட வார விடுமுறை எடுத்துக்கொண்டேன். அவன் எனக்கான வேலைகளைக் கொடுத்தான். நான்கு பிணங்கள் இருந்த அறையில், வெள்ளைக் கோட்டு ஒன்றை அணிந்துகொண்டு ஒரு உயரமான நாற்காலியில் அமர்ந்துகொண்டேன். பட்டியும் அவனுடைய நண்பர்களும் பிணத்தை அறுத்துக்கொண்டிருந்தனர். அந்தப் பிணங்கள் மனிதத்தன்மை இல்லாத தோற்றம் கொண்டிருந்தாலும், அவை என்னைச் சற்றும் பயப்படுத்தவில்லை. அவை கருமையான ஊதா நிறத்துடன், பதனிட்ட […]

எழுத்து

சோர்பா என்ற கிரேக்கன் – நீகாஸ் கசந்த்சாகீஸ்

கோ.கமலக்கண்ணன் · 30.01.22

நாங்கள் குடிலுக்கு வந்து சேர்ந்ததும் சேராததுமாக மஞ்சத்தில் விழுந்தோம். சோர்பா தன் உள்ளங்கைகளைத் திருப்தியுடன் தேய்த்தார். ’இன்று நல்ல நாளாக அமைந்தது தலைவா. நான் “நல்லது” என்று எதைக் குறிப்பிடுகிறேன் என்று நீங்கள் கேட்க விரும்புவீர்கள். அப்படித்தானே? நான் முழுமையான நாள் என்ற பொருளிலேயே அப்படிக் குறிப்பிடுகிறேன். கொஞ்சம் சிந்தியுங்கள். இன்று காலை பல மைல்கள் தொலைவில் இருக்கும் மடாலயத்தில் மதகுருவிடம் வியாபாரத்தைச் சிறப்பாகச் செய்து முடித்தோம். அவர் நிச்சயம் நம்மைச் சபித்திருப்பார்! அதன்பிறகு கீழிறங்கி நம் […]

எழுத்து

ஈ…

சரவணன் சந்திரன் · 24.12.21

அசோகன் இரண்டு இடங்களில் தொழில் படித்தான். வேலையில்லாமல் வெட்டியாகச் சுற்றிய அசோகனுக்கு அவனுடைய அண்ணன் அர்ஜூனன்தான் படியளக்கிற பெருமாள். அவருடைய பெயரைச் சொல்லித்தான் அசோகன் காக்கா தோப்பிற்குள் ஒரு முக்கிய குறு ரௌடியாகச் சுற்றியலைந்தான். அவ்வப்போது அசோகன் சிறு வியாபாரிகளை மிரட்டிக் காசு பிடுங்கவும் தொடங்கியிருந்தான். அர்ஜூனன் மாமாவிற்கு இது தெரிந்திருந்தாலும், அவரும்கூட இன்னொரு தரப்பிடம் இதையேதான் செய்தார் என்பதால் கண்டுகொள்ளவில்லை. தாத்தாவின் அண்ணன் பையனான அர்ஜூனன் மாமா பனிரெண்டாவது படித்து முடித்ததுமே ரௌடியிசத்தில் இறங்கினார். சாதிக்காக […]

எழுத்து

மழை- கன்னி நாவலிலிருந்து ஒரு பகுதி

ஜெ.பிரான்சிஸ் கிருபா · 28.09.21

அதனைத் தழுவும்போது அதிர்ந்தான் இதுகாறும் அவனை அச்சுறுத்திக்கொண்டிருந்த அந்த வாள் உருவே அவள் வதனமாய்… நெற்றிப்பொட்டிலிருந்து நேர்கீழாய் இரண்டாய் அவனை வகிர்ந்தும் இரண்டாகிவிடாதபடி அந்த வாளின் கைகள்  அவனைப் பிணைத்தபடியுமாய் இருந்தன * கடலை, ஆற்றை அடித்துப் பெய்யும் புயல் மழையைக் கிழித்துக்கொண்டு துளியாகி மறையும் வரை ஓடவேண்டும் போலப் பாண்டியின் மனம் துள்ளிக் குதித்தது. அவனோ வாசல்படியில் நின்றுகொண்டிருந்தான். தெரு நிறைய பெண்கள் கூட்டம் பிதுங்கி வழிந்தது. தேர் பெரியம்மா வீட்டைத் தாண்டி மூன்று வீடு […]

எழுத்து

சாந்தாகுருஸ்

ஜெ.பிரான்சிஸ் கிருபா · 28.09.21

கிருபாவின் அனைத்துக் கவிதைகளும் அடங்கிய முழுத்தொகுப்புக்கு “நிழலன்றி ஏதுமற்றவன்” என்ற தலைப்பையே சூட்ட முயன்றபோது அவர் “சாந்தாகுருஸ்” என்றே அதற்குத் தலைப்பிடச் சொன்னார். அது தமிழ் வாசகர்களுக்குப் புரியாது என்றபோதும் பிடிவாதமாக அதிலேயே உறுதியாக நின்றார். “வாசகர்கள் அதன் அர்த்தத்தைத் தேடிப் படித்துத் தெரிந்துகொள்ளட்டும்” என்று கூறிவிட்டார். அவர் ஏன் அச்சொல்லைத் தேர்ந்தெடுத்தார் என்பதற்கான மூலகாரணம் “கன்னி” நாவலில் இருக்கிறது.  ஜனவரி, 2022-இல் “சாந்தாகுருஸ்” நூல் விலையில்லாத அன்பளிப்புப் பதிப்பாகத் தமிழினியால் வெளியிடப்படும்.  கன்னி நாவலிலுள்ள சாந்தாகுருஸ் பகுதி இது. * கூன் குருடு நொண்டி முடமென இற்றுச் சருகான பெரும் […]