சு.வேணுகோபாலின் வலசை: உபரி வலிகளின் கதை
1 மானுடப் பண்பாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்தவை இரண்டு. முதலாவது விவசாயம். அடுத்தது நிலத்தடி எண்ணெய்கள் வழியே உருவான இயந்திரத் தொழிற்சாலை யுக எழுச்சி. தவிர்க்கவே இயலாத இந்த இரண்டும், திரும்ப மீள இயலாத சிக்கல்களில் மானுடத்தை நிரந்தமாகக் கொண்டு நிறுத்திய இரண்டு என்று சமூக மானுடவியல் சிந்தனையாளர்கள் சொல்கிறார்கள். விவசாயம் இன்றிலிருந்து 6000 ஆண்டுகள் முன்பே புழக்கத்தில் வந்துவிட்டது. அது புழக்கத்தில் வந்த நாள் தொட்டே உபரி மதிப்பீட்டு விதிகளின்படி, ‘எழுதப்பட்ட’ மானுட வரலாறும் தொடங்கிவிடுகிறது. […]
