Category: எழுத்து

எழுத்து

ஜூடோ

ப.தெய்வீகன் · 17.01.24

அமெரிக்காவின் அரிசோனா சிறை வளாகத்தில் கைதிகளுக்கான கிறிஸ்துமஸ் நிகழ்வுகள் ஏற்பாடாயிருந்தன. அன்றைய தினம்தான் போதைப்பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்ட ஈழத்தமிழ் கைதியான ரொக்ஸி சிறைக்குக் கொண்டுவரப்பட்டான். அதிகாரிகளின் கட்டளைப்படி கிறிஸ்துமஸ் உணவுக்கான வரிசையில் நின்றான். பல வகையான உணவுகள் பரிமாறப்பட்ட மேசைக்கு அருகில் சென்றபோது, ரொக்ஸிக்கு முன்னால் சென்றவன் கடதாசித் தட்டை எடுத்துக் கொடுத்தான். வறுத்த சோற்றையும் அதற்கு மேல் வார்க்கப்பட்ட குழம்பையும் எடுத்துக்கொண்டு, அவன் பின்னாலேயே ரொக்ஸியும் நடந்தான். வேறு கைதிகள் இல்லாத இடத்தில் இருவரும் குந்தினார்கள். […]

எழுத்து

அலகிலா விளையாட்டு

செந்தில் ஜெகன்நாதன் · 17.01.24

காரைகள் உதிர்ந்து எலும்பும் தோலுமாய்த் தளர்ந்து நிற்கும் முதியவரைப் போல உடம்பிலிருக்கும் செங்கற்கள் தெரியப் பரிதாபமாக நின்றுகொண்டிருந்தது எங்கள் தெருவை நோக்கியபடி இருக்கும் பாலமுருகன் ஆலயத்தின் சதுர வடிவ சுற்றுச்சுவர். சுவரை ஒட்டியிருந்த நந்தியாவட்டை மரங்களின் துணைகொண்டு மதில்மீது ஏறி அமர்ந்து, துவார பாலகர்களென இணையாக நின்றிருந்த இரண்டு கல்தூண்களில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குத் தாவி மதிலைச் சுற்றி சதுரமிடுவதுதான் எங்களின் அன்றாட விளையாட்டுகளில் பிரதானமானது. மதில் மேலே ஆங்காங்கே ஏற்பட்டிருக்கும் பொக்கைகள் பட்டு, பின்பக்கத்தில் கால் சட்டைகள் […]

எழுத்து

தைபிலியும் அவளுடைய பூதமும் – ஐசக் பாஷவிஸ் சிங்கர்

கோ.கமலக்கண்ணன் · 17.01.24

லுப்லினுக்கு அருகில் இருந்த லாஷ்னிக் நகரில் சயீம் நோசன், தைபிலி இணையர் வாழ்ந்தனர். அவர்களுக்கு வாரிசு இல்லை. மலட்டுத்தன்மை காரணமில்லை. தைபிலி கணவருக்காக ஒரு மகன், இரு மகள்களை ஈன்றளித்திருந்தாள். மூன்றுமே பரிபோயின: ஒன்று கக்குவான் இருமலுக்கும், ஒன்று விஷக்காய்ச்சலுக்கும், ஒன்று தொண்டை அடைப்பானுக்கும். அதன்பிறகு தைபிலியின் கருப்பை கண் மூடியது. பிரார்த்தனை, மந்திரம், கஷாயம் எதற்கும் பலன் இல்லை. துயரம் சயீம் நோசனை உலக வாழ்வில் இருந்து ஒதுக்கியது. மனைவியிடமிருந்து விலகினான். புலால் மறுத்தான். இரவிலும் […]

எழுத்து

சு.வேணுகோபாலின் வலசை: உபரி வலிகளின் கதை

கடலூர் சீனு · 17.01.24

1 மானுடப் பண்பாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்தவை இரண்டு. முதலாவது விவசாயம். அடுத்தது நிலத்தடி எண்ணெய்கள் வழியே உருவான இயந்திரத் தொழிற்சாலை யுக எழுச்சி. தவிர்க்கவே இயலாத இந்த இரண்டும், திரும்ப மீள இயலாத சிக்கல்களில் மானுடத்தை நிரந்தமாகக் கொண்டு நிறுத்திய இரண்டு என்று சமூக மானுடவியல் சிந்தனையாளர்கள் சொல்கிறார்கள். விவசாயம் இன்றிலிருந்து 6000 ஆண்டுகள் முன்பே புழக்கத்தில் வந்துவிட்டது. அது புழக்கத்தில் வந்த நாள் தொட்டே உபரி மதிப்பீட்டு விதிகளின்படி, ‘எழுதப்பட்ட’ மானுட வரலாறும் தொடங்கிவிடுகிறது. […]

எழுத்து

தமிழ்ச் சித்தர் நெறி

கால.சுப்ரமணியம் · 17.01.24

உலகளாவிய தத்துவ வரலாற்றையும் அதன் வகைமைகளையும் ஆன்மீக மரபு என்ற அதன் ஒரு கிளைப் பிரிவையும் இந்தியச் சமய தத்துவ மரபையும் தமிழர் தத்துவ மரபையும், உலகளாவிய சித்தர் மரபுகளின் ஊடாட்டங்களையும் தொடர்ச்சிகளையும் இவைகளில் துலங்கி நிற்கும் நமது தமிழ்ச்சித்தர் மரபின் நெறிமுறைகளையும் குறித்த செய்திகளைத் தொகுத்துப் பார்க்கும் நிலையில் எழுதப்பட்ட “இந்தியத் தத்துவத்தில் ஆன்மீக மரபும் தமிழ்ச் சித்தர் நெறியும்” என்ற நெடுங்கட்டுரையின் ஒரு பகுதியான தமிழ்ச் சித்தர் மரபு பற்றி மட்டும் இப்போதைக்கு இங்கே […]

எழுத்து

ஒரு குடும்பத்தின் வீழ்ச்சி – எட்கர் ஆலன் போ

எஸ்.கயல் · 17.01.24

ஆண்டின் இருண்ட, ஒலியற்ற ஒரு நாளின் இறுதிப்பொழுது; மேகங்கள் சொர்க்கத்தின் நுனியில் தவழ்ந்துகொண்டிருந்தன. மிகக்குறைந்த ஜீவனும் அழகும் கொண்ட நகரைப் பகல் முழுதும் குதிரையில் அமர்ந்தபடி சவாரி செய்த பின் அஷரின் இந்த வீட்டை அந்தியில்தான் கண்டடைய முடிந்தது. அது எப்படி இருந்தது என்று சரியாகச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் முதல் பார்வையிலேயே அது என் ஆன்மாவைத் துயரத்தால் நிறைத்தது. அந்த வீடு, அதைச் சுற்றியுள்ள நிலம், குளுமை பரவிய கட்டிடச் சுவர்கள், விழிகளின் வடிவத்திலிருந்த வெறுமையான […]

எழுத்து

மெய்ப்பசி

கார்த்திக் நேத்தா · 17.01.24

பேருரு பறவையெலாம்  விசும்பின் அணிகலன். பாறையெலாம்  போகப்போதின்  பூரித்த மாமுலை. நாரையெலாம்  விண்ணை மண்ணில்  விரித்து வைக்கும் வெண்கருணை. ஒளியெலாம்  அன்பின் விந்து. இருளெலாம் சக்தியின் உறக்கம். துலக்கமெலாம்  தூய நற்செய்தி. கரந்தவை காலாதீதக் கல்வி. நரையும் திரையும்  உயிர்ப்பறியா உதிர்இலைகள். துயரெலாம்  இலை கழுவும் மழைக்கரம். மகிழ்வெலாம் மாநிலையின் மெய்ம்முகம். மேவும் மெய்ப்பாடுகள் உள்ளத்து வினைகள். இசையெலாம்  இக்கணத்தின் எழுச்சியலை. மௌனமெலாம் நிறைவின் வளர்பிறை. பேரண்டம்  பிறைக்கணங்களின் உயிர்த்திரள். நானெலாம் நானெலாம் நானிலத்தின் ஓருரு மானுடத்தின் […]

எழுத்து

இல்புறம்

அருண் நரசிம்மன் · 17.01.24

மங்கோலியா. ஒரு காலத்தில் முக்கால்வாசி ஆசியாவைத் தன் ஆளுகையை ஏற்கவைத்திருந்த பழம் பெருமை கொண்ட நாடு. இன்று சுற்றிலும் தலையெடுத்துவிட்ட நாடுகளுக்கிடையே கைகால்கள் விரித்து விசால வெளியென தேமேனென்று அதோ அங்கே மேலே கிடக்கிறது. மங்கோலியாவை எவரும் இன்று பொருட்படுத்துவதில்லை. வர்த்தகம் பேச்சுவார்த்தை நடத்துவதில்லை. விடுமுறையில் சென்று பார்த்துவிட்டு வருவதில்லை. விவேக்கின் தந்தை மனிதருள் மங்கோலியா.  இந்திய விடுதலைக்கு முன்பே பிறந்தவர். இன்றைய இஸ்ரேலைவிட வயதானவர். பாகிஸ்தானைவிடப் பாங்கானவர். நேபாளத்தைவிட நேசமானவர். மாண்டிநீக்ரோ நாட்டைவிட வயதான பேரன் […]

எழுத்து

அமீபாவின் காதல்

அழகுநிலா · 17.01.24

கைப்பிடி தானியத்துக்கு நூறாக வந்தமர்கின்றன சிட்டுக்குருவிகள். ஓ… நூறும் ஆயிரமும் எண்ணக் கூடியவைதாம். பிடிக்குள் இருப்பதுதான் மிரளச் செய்கிறது. * விழாக்களுக்காகத் தங்களை அலங்கரித்துக்கொள்பவர்களால் ஒவ்வொரு கணத்தின் மலர்ச்சிக்காகவும் சிலிர்த்துக்கொள்ள முடிகிறதா… ஒப்பனை நேர்த்தி எக்கணம் வரை… * தனது பட்டத்தைத் தனது வானத்தில் பறக்கவிடுகிறாள் குழந்தை. காற்று அலைக்கழித்தாலும் கைகொட்டிச் சிரிக்கிறாள். வாலறுந்து கிழிந்து கிளையில் சிக்கிக் கிடந்தாலும் துளியும் கவலையில்லை. பட்டத்தின் பட்டம் நூறாயிரம் அவளிடம். செய்யச் செய்யக் கிழியட்டும் என்கிறாள் கிழியக் கிழியக் […]

எழுத்து

இருதயம்: மனம் சார்ந்த நம்பிக்கை பற்றி – ஷிஞ்சின் நோ மீ

வி.அமலன் ஸ்டேன்லி · 17.01.24

மகத்தான பாதை கடினமானதல்ல தன் விருப்பற்ற எவர்க்கும்.  ஏக்கம் வெறுப்பு இரண்டும் இல்லாமல் போனால் எவ்வொன்றும் தெளிவோடும் வேடமற்றும் இருக்கும். ஆகச்சிறிய பற்றைப் பிடித்துக்கொண்டால்கூட சுவர்க்கமும் பூமியும் எல்லையற்றுப் பிரிந்து போகும். மெய்மையைக் காண நீங்கள் விரும்பினால் எந்தக் கருத்தையும் ஏற்றோ மறுத்தோ பற்றிக்கொள்ளாதீர்கள் ஒருவர் எதை விரும்புகிறார், எதை வெறுக்கிறார் என்கிற போராட்டம் மனதின் ஒருவித நோயாகும். ஒன்றின் உள்ளார்ந்த அர்த்தத்தைப் புரிந்துகொள்ளாதபோது மனதின் அடிப்படையான அமைதி குலைவுற்றுப் போகும். அப்பாதையோ பரந்த வெளியாய்ப் பூரணப்பட்டு […]

எழுத்து

புத்தன் போதனைகளில் இல்லை! – ஹெர்மன் ஹெஸ்ஸேயின்  சித்தார்த்தன்

வி.அமலன் ஸ்டேன்லி · 29.09.23

தான் கற்றறிந்த கீழைத்தேய ஞானமார்க்கங்களில் ஒருபகுதியை ஹெர்மன் ஹெஸ்ஸே புனைகதையாக்கிப் பார்க்க முயன்றிருக்கிறார். ஒரு நாவலில் விவரிக்கப்படும் நிகழ்வுகளிலிருந்துதான் ஆசிரியன் உணர்த்த விழையும் ஒரு மெய்மை அல்லது வாழ்நோக்கு சாரமெனத் திரண்டெழ வேண்டும். ஹெஸ்ஸேவின் புரிந்துணர்வுக்குட்பட்ட எளிய ஆரம்பக்கட்டப் பயிற்சிகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட கதாமாந்தரும், மேலோட்டமான நிகழ்வுகளுமாக மெய்யியல் தேட்டத்தில் அவர்கொண்ட முன்கருதுகோள்களுக்கு மானுட வடிவம் தரும் முயற்சியாக இந்நாவல் எஞ்சி நிற்கிறது. எனினும் சித்தார்த்தன் நாவலில் உணர்த்தப்பட்ட மெய்-வாழ்வியல் கூறுகளும் விளக்கங்களும் மகத்தானவை. அதேநேரம் அப்பாதையில் […]

எழுத்து

குதிரைத் தியாகம்

பாலு · 29.09.23

செஸ் உலகக்கோப்பை இறுதிச்சுற்றின் முடிவில் மேக்னஸ் கார்ல்சன் 2.5 – 1.5 என்ற கணக்கில் வெற்றிபெற்று சாம்பியன் ஆனார். அப்போது ஃபேஸ்புக்கில் ஒரு பதிவைப் பார்த்தேன். ‘மேக்னஸ் கார்ல்சன் போன்ற உலகத் தரமான வீரரை அலறவிட்டதே பதினெட்டு வயதுடைய பிரக்ஞானந்தாவுக்குப் பெரிய வெற்றிதான். மேக்னஸ் உயர்மட்ட வகுப்பைச் சேர்ந்தவர். சிறு வயது முதலே அவருக்கு நல்ல பயிற்சியாளர் கிடைத்தார். அவர் செஸ்ஸை ஆழ்ந்து கற்றுக்கொண்டார். அவர் சென்னையில் போலியோ தொற்றால் பாதிக்கப்பட்ட தந்தைக்கும், வீட்டில் இரு பிள்ளைகளைக் […]