Category: தலையங்கம்

எழுத்து

அஞ்சலி – அஞ்சுகச் செல்வன்

கரு. ஆறுமுகத்தமிழன் · 13.08.18

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கலைஞர் கருணாநிதி காலமாகிவிட்டார். மிக எளிய பின்புலத்தினர்; சமூக, அரசியல் இயக்கங்களில் பலன் சார்ந்து அல்லாமல் உணர்வு சார்ந்து தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். அவற்றாலேயே தன்னைக் கூடுதலாகவும் கூர் தீட்டிக் கொண்டவர். போராட அஞ்சாதவர். மூலபலம் காக்கப் பின்வாங்கத் தயங்காதவர். இராக் கொத்திக் கூகையைப் பகல் வெல்லும் காக்கை போலக் காலம் கருதிக் காத்திருக்கத் தெரிந்த அறிவினர். எப்போதும் ஒற்றைமையே பேசுகிற இந்தியத் தேசியத்துக்கு மாற்றாகத் திராவிடத் தேசியம் பேசி மற்றைமை […]

தலையங்கம்

பாரத மாலைகள்

கரு. ஆறுமுகத்தமிழன் · 09.07.18

130 கோடி நபர்களோடு  மக்கள் தொகையில் உலகத்தின் இரண்டாவது பெரிய நாடாக இருக்கும் இந்தியா தான் பெண்கள் பாதுகாப்பில் உலகத்திலேயே மிகவும் அடிமட்டத்தில் இருக்கும் நாடு என்று இராய்ட்டர்சு அறிக்கை அறிவிக்கிறது. போரால் அடியுண்டு கிடக்கும் ஆப்கானிசுத்தானமும் சிரியாவும் அடுத்தடுத்த இடங்களைப் பெறுகின்றனவாம். அறிக்கை வெளிவந்த பிறகு, ‘அது ஒன்றும் ஆதாரத் தகவல்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட அறிக்கையில்லை; மேம்போக்கான கருத்துக் கணிப்புதான்; ஆகவே செல்லாது செல்லாது’ என்று பதறுகிறது நடுவண் அரசு. 2007இலிருந்து 2016க்குள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் […]