Category: கட்டுரை

கட்டுரை

டால்ஸ்டாயுடன் சில நாட்கள்

மாக்சிம் கார்க்கி · 10.11.26

லியோ டால்ஸ்டாயை நெருங்கியிருந்து கவனித்த மாக்சிம் கார்க்கியின் நினைவுக் குறிப்புகள் இவை. டால்ஸ்டாய், அன்டன் செகாவ், கார்க்கி ஆகியோர் கிரிமியாவில் தங்கியிருந்த 1900 – 1901 காலப்பகுதியில் இவை எழுதப்பட்டதாக ஆங்கிலப் பதிப்பின் மொழிபெயர்ப்பாளர்கள் குறிப்பிடுகின்றனர். டால்ஸ்டாய் நோயில் நலிவுற்று அதன்பின் குணமடைந்த காலம் அது. இலக்கியம், மொழி, மதம், கடவுள், மனித இயல்பு, பெண்கள், விவசாயிகளின் வாழ்க்கை எனப் பலவற்றைப் பற்றிய உரையாடல்களை கார்க்கி எழுதியிருக்கிறார். கார்க்கியின் கதாபாத்திரங்கள் பேசும் விதத்தை டால்ஸ்டாய் விமர்சிக்கும் இடங்கள், […]

கட்டுரை

AI எழுதிய புனைவுகளை வாசகர்கள் விரும்பினால்?

வாஹினி வரா · 09.11.26

பொருளாதார மாற்றங்களும் தொழில்நுட்ப மாற்றங்களும் இலக்கியத்துடனான நமது உறவை முன்பே மாற்றியிருக்கின்றன. மீண்டும் அவ்வாறு நிகழலாம். கடந்த ஓராண்டில், துஹின் சக்ரவர்த்தி என்ற கணினி அறிவியலாளர், செயற்கை நுண்ணறிவைக் கொண்டு சிறந்த எழுத்தை உருவாக்க முயன்றார். அப்போதுதான் அவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை முடித்திருந்தார். நோபல் பரிசு பெற்ற ஹான் காங் உள்ளிட்ட புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளிலிருந்து சில பகுதிகளை Al யிடம்கொடுத்தார். பிறகு, ஒரு காட்சியை விவரித்து, அதை அந்த எழுத்தாளரின் நடையில் […]

கட்டுரை

மனிதனும் இயந்திரமும் மொழியும்

மார்ட்டின் புச்னர் · 27.10.26

செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி மனிதப் படைப்பாற்றல் குறித்துப் புதிய கேள்விகளை எழுப்பியிருக்கிறது. மொழியில் புழங்குவதும் இலக்கியத்தை உருவாக்குவதும் மனிதர்களுக்கு மட்டுமே உரிய திறன்களா? ஒரு படைப்பை எழுதியவர் யார் என்பதைவிட, அது எவ்வாறு வாசிக்கப்படுகிறது என்பது முக்கியமானதா? இலக்கிய ஆய்வாளரும் ஹார்வர்டு பல்கலைக்கழகப் பேராசிரியருமான மார்ட்டின் புச்னர், இந்தக் கேள்விகளை இலக்கியக் கோட்பாடுகள், மேரி ஷெல்லியின் ஃபிரான்கன்ஸ்டைன் நாவல், தனது சொந்த அனுபவங்கள் ஆகியவற்றின் வழியாக ஆராய்கிறார். செயற்கை நுண்ணறிவின் சாதக பாதகங்களை மறுக்காமல், அதை நம் […]

கட்டுரை

நொஸ்டால்ஜியா பொருளாதாரம் (Nostalgia economy) – செயற்கை நுண்ணறிவின் கலாச்சாரப் பரிணாமத்திற்கு நாம் அறியாமலே செய்யும் முதலீடா?

தீபா ஶ்ரீதரன் · 09.10.26

சமீப காலமாக, எந்தவொரு நவீன கஃபேவிற்குள் நுழைந்தாலும், சமூக வலைத்தள பக்கங்களை ஸ்க்ரோல் செய்தாலும், மனிதர்கள் வியக்கத்தக்க வகையில் பின்னோக்கிய நினைவுகளில் பயணிப்பதைக் கவனிக்க முடிகிறது.மில்லினியம் தொடக்கத்தில் மழலையாக இருந்த யுவதிகள், இளைஞர்கள், இன்று இடுப்புக்குக் கீழே கார்கோ பேன்ட்களை அணிந்துகொண்டு, பழைய டிஸ்போசபிள் கேமராக்களில் படமெடுத்து, கிராமஃபோன் இசைத்தட்டுகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில், சில முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஃபிலிப் ஃபோன்களை (Flip phones) மீண்டும் சந்தைக்குக் கொண்டுவருகின்றன. திரைப்படத்துறையோ கடந்த காலத்தின் தொடர்ச்சிகளிலும் (reboots) மறு […]

கட்டுரை

தற்கணம் – ஜென் மனம்

வி.அமலன் ஸ்டேன்லி · 09.10.26

தமிழினி வெளியீடாக வெளிவரவுள்ள, வி.அமலன் ஸ்டேன்லி எழுதிய தற்கணம் – ஜென் மனம் நூலின் பின்னிணைப்பை இங்கே வாசகர்களுக்காகத் தருகிறோம் புத்தத்தின் முப்பள்ளிகளான தேரவாதம், மகாயானம், வஜ்ஜிராயனம் (திபெத்) ஆகியவற்றின் ஒத்த நோக்கை விளக்கும் ‘சிறுபடகு – மாமலை: இயல்கிற மகாமுழுமை குறித்த தேரவாத சிந்தனைகள்’ எனும் அஜான் அமரோ நூலிலிருந்து இந்த இணைப்பு ‘தற்கணம் – ஜென் மனம்’ நூலின் வாசகத் தெளிவுக்காக இங்கே சாரமாகக் கொடுக்கப்படுகிறது.   ‘பல சமயங்களில் ‘ட்சோக்சென்’ (வஜ்ஜிராயனம்) போதனைகளினூடே திளைக்கையில் […]

எழுத்து

தமிழ்ச் சித்தர் நெறி

கால.சுப்ரமணியம் · 17.01.24

உலகளாவிய தத்துவ வரலாற்றையும் அதன் வகைமைகளையும் ஆன்மீக மரபு என்ற அதன் ஒரு கிளைப் பிரிவையும் இந்தியச் சமய தத்துவ மரபையும் தமிழர் தத்துவ மரபையும், உலகளாவிய சித்தர் மரபுகளின் ஊடாட்டங்களையும் தொடர்ச்சிகளையும் இவைகளில் துலங்கி நிற்கும் நமது தமிழ்ச்சித்தர் மரபின் நெறிமுறைகளையும் குறித்த செய்திகளைத் தொகுத்துப் பார்க்கும் நிலையில் எழுதப்பட்ட “இந்தியத் தத்துவத்தில் ஆன்மீக மரபும் தமிழ்ச் சித்தர் நெறியும்” என்ற நெடுங்கட்டுரையின் ஒரு பகுதியான தமிழ்ச் சித்தர் மரபு பற்றி மட்டும் இப்போதைக்கு இங்கே […]

எழுத்து

குதிரைத் தியாகம்

பாலு · 29.09.23

செஸ் உலகக்கோப்பை இறுதிச்சுற்றின் முடிவில் மேக்னஸ் கார்ல்சன் 2.5 – 1.5 என்ற கணக்கில் வெற்றிபெற்று சாம்பியன் ஆனார். அப்போது ஃபேஸ்புக்கில் ஒரு பதிவைப் பார்த்தேன். ‘மேக்னஸ் கார்ல்சன் போன்ற உலகத் தரமான வீரரை அலறவிட்டதே பதினெட்டு வயதுடைய பிரக்ஞானந்தாவுக்குப் பெரிய வெற்றிதான். மேக்னஸ் உயர்மட்ட வகுப்பைச் சேர்ந்தவர். சிறு வயது முதலே அவருக்கு நல்ல பயிற்சியாளர் கிடைத்தார். அவர் செஸ்ஸை ஆழ்ந்து கற்றுக்கொண்டார். அவர் சென்னையில் போலியோ தொற்றால் பாதிக்கப்பட்ட தந்தைக்கும், வீட்டில் இரு பிள்ளைகளைக் […]

எழுத்து

நாவல் எனும் கலை வடிவம் – மிலன் குந்தேரா

மோகன ரவிச்சந்திரன் · 28.09.23

கேள்வி உங்கள் நாவல்களின் அழகியல் பற்றி விவாதிக்க விருப்பம். ஆனால் எங்கிருந்து தொடங்குவது? மிலன் குந்தேரா இந்த வலியுறுத்தலுடன்தான்: எனது நாவல்கள் உளவியல் சார்ந்தவை அல்ல. இன்னும் துல்லியமாக: அவை பொதுவாக உளவியல் என்று அழைக்கப்படுகின்ற நாவலின் அழகியலுக்கு வெளியே இருக்கின்றன. கேள்வி ஆனால் எல்லா நாவல்களும் உளவியல் சார்ந்தவை அல்லவா? அதாவது, ஆன்மாவின் புதிர் சம்பந்தப்பட்டவை, இல்லையா? மிலன் குந்தேரா இன்னும் துல்லியமாகச் சொல்வதென்றால்: எல்லா நாவல்களும், ஒவ்வொரு காலகட்ட நாவல்களும், சுயத்தின் புதிரைப் பற்றியவை. […]

எழுத்து

இயற்கை முன் மண்டியிடும் கடவுள்: சு.வேணுகோபாலின் நுண்வெளி கிரகணங்கள் 

மானசீகன் · 01.07.23

‘நுண்வெளி கிரகணங்கள்’ என்கிற பெயரைக் குமுதத்தின் அட்டையில் பார்த்ததுதான் அந்த நாவல் குறித்த என் முதல் ஞாபகம். இது தொண்ணூறுகளின் இறுதியில் குமுதம் – ஏர் இந்தியா இணைந்து நடத்திய பரிசுப் போட்டிக்காக எழுதப்பட்டது. பலரும் இந்த நாவலை என்னிடம், ‘அறிவியல் புனைவு நாவல்’ என்று சொல்லும்போதெல்லாம் மெல்லச் சிரித்துக்கொள்வேன். கிரகணங்கள் என்பதை அவர்களாகவே தம் மனத்தில் ‘கிரகங்கள்’ என்று உருமாற்றித் தட்டச்சு செய்து நாவல் குறித்து வேறொரு பிம்பத்தை சுஜாதா சாயலில் உருவாக்கிக் கொள்கிறார்கள். ஒரு […]

எழுத்து

ஒரு கதையில் விவரணைகளின் உண்மைத்தன்மை எந்தளவுக்கு முக்கியம்?

ஆர்.அபிலாஷ் · 01.07.23

ஓர் இளம் எழுத்தாளராக நாம் சில நேரம் விவரணைகள், தகவல்களின் உண்மைத்தன்மை ஆகியவற்றுக்காக அதிகம் மெனெக்கெடுவோம். இது போலீஸ்காரராக நடிப்பவர் தன் சீருடை, தோளில் உள்ள நட்சத்திரங்கள், இடுப்புத் துப்பாக்கியிலே அதிகக் கவனம் செலுத்துவதைப் போன்றது. இப்படி இவற்றில் மிகுவிருப்பம் கொண்டு ஒரு கட்டத்தில் இது ஃபேன்ஸி டிரெஸ் போட்டி போல ஆகிவிடும். நடிகரின் கவனம் நடிப்பில் இருந்து விலகிப்போய் அவர் தன் தோற்றத்தின் போதாமை குறித்து மிகுந்த பிரக்ஞையாகி நடிப்பில் திணறலாம். இதுவே எழுத்தாளர்களுக்கும் நடக்கலாம். […]

எழுத்து

தூய அடிபணிவின் மகிழ்ச்சியற்ற தருணங்கள்: மாஜிதாவின் ‘பர்தா’

ஜிஃப்ரி ஹாசன் · 01.07.23

முஸ்லிம் பெண்களின் ஆடை (குறிப்பாக பர்தா, அபாயா போன்ற ஆடைகள்) குறித்த பார்வைகள் முஸ்லிம் சூழலில் தூய அடிபணிவிற்கான மதப் புனித ஆடையாகவே கருதப்பட்டு வருகிறது. அதன் மீது எந்தவொரு மாற்றுப் பார்வையும் ஏற்புடையதல்ல எனும் கருத்துநிலை தீவிரமாக உறைந்துள்ள ஈழத் தமிழ் முஸ்லிம் சமூக அமைப்பிலிருந்து எழுந்த மாஜிதாவின் பர்தா ஒரு புதிய உடைப்பாகக் கவனத்தை ஈர்க்கும் படைப்பு முயற்சியாகத் தோன்றுகிறது. சென்ற வருடம் வெளியான தமிழ் நாவல்களில் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அதிகப் பிரதிகள் […]

எழுத்து

பெண் உகந்த பெரும்பித்தன்

கரு. ஆறுமுகத்தமிழன் · 30.01.23

திருப்பள்ளி எழுச்சி பாடல் 4 இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்; இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்; துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்; தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்; சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்; திருப்பெருந் துறைஉறை சிவபெரு மானே! என்னையும் ஆண்டுகொண்டு இன்அருள் புரியும் எம்பெரு மான்பள்ளி எழுந்துஅரு ளாயே! இறைவரை உறக்கம் நீங்கி எழச் சொல்லித் திருப்பள்ளி எழுச்சி பாடுகிறோமே, முதலில் இறைவருக்கு உறக்கம் உண்டா? அவர் உறங்கினால் அல்லவா அவரை எழுப்புவதற்கு என்று கேள்வி […]