பல்தஸாரே ஸில்வாண்டேவின் மரணம் – மார்சல் ப்ரூஸ்ட்
“அட்மீடஸின் சுற்றத்தினரை அப்பல்லோ இரட்சித்ததாகக் கவிஞர்கள் கூறுகிறார்கள். போலவே, உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் முட்டாள் வேடம் தரித்திருக்கும் கடவுள்தான்” — ரால்ஃப் வால்டோ எமர்ஸன். 1 “அப்படி அழவேண்டாம் அலெக்ஸிஸ். ஸில்வானியாவின் மதிப்பிற்குரிய பிரபு உனக்கு ஒரு குதிரை தருவாராய் இருக்கும்.” “பெரிய குதிரையா பெப்போ, அல்லது சிறியதா?” “திரு கார்டினியோவினுடையதைப் போல பெரியதாய்த்தான் இருக்கும். சரி, இப்படி அழாதீர்கள்…. அதுவும் உங்களது பதிமூன்றாவது பிறந்த தினத்தில்!” ஒரு குதிரை கிடைக்கப்போகிறது என்கிற நம்பிக்கையும் தனக்குப் […]
