Category: எழுத்து

எழுத்து

அலங்காரத்தம்மாள் வந்தாள்

பாலசுப்ரமணியன் பொன்ராஜ் · 27.07.21

In most of the cases adultery is purely accidental. அதன் பின்விளைவுகளும் விபத்தைப் போலவே நிரந்தரமாக ஒரு வலியாகவோ, ஊனமாகவோ எஞ்சிவிடுகின்றன. ஒரு தனிமனிதனின் ஆன்மாவில் அல்ல, நம்பிக்கைகுரிய ஓர் உறவின் ஆன்மாவில் ஏற்படும் உடைவே அடல்ட்ரி. ஒரு பெண், எங்காவது ஓர் ஆணை மிஞ்சிவிட முடியுமென்றால், அடல்ட்ரியின் வழியாக அவனை வீழ்த்துவதின் மூலமாகவே சாத்தியம். இந்த வீழ்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாத ஆண்கள் வன்முறையைக் கையாள்கிறார்கள். அதே சமயம் ஓர் ஆண் வகிக்கும் பாத்திரங்களிலேயே ஆகப் பரிதாபகரமானது அவன் ஒரு Cuckold-ஆக […]

எழுத்து

இருதலை மணியன்

செல்வேந்திரன் · 27.07.21

அதிகாலையிலேயே அருகிலிருக்கும் பாலைவனத் தேசியப் பூங்காவில் கிரேட் இந்தியன் பஸ்டார்ட் எனும் கானமயில்களைக் காண வேண்டுமென்பது எங்களின் விருப்பமாக இருந்தது. இரவிரவாகப் பெய்த மழையில் எங்கள் கார் ஒன்றின் கதவு திறக்காமல் போய்விட்டது. ஏற்பாடு செய்திருந்த வாடகை ஜீப்பும் ஈரமணலில் சக்கரம் சிக்கிக்கொள்ளும் என வர மறுத்தனர். விடிய விடிய பெய்த மழையில் நிலமெல்லாம் ஊறிக்கிடந்தது. பாலைவனத்தைப் பிரிக்கும் கனத்த தார்சாலை கறுத்த மலைப்பாம்பைப் போல நீண்டிருந்தது. சிலர் ஜீப்புகளைத் தலைதெறிக்கும் வேகத்தில் கத்தியபடியே ஓட்டிச் சென்றனர். […]

எழுத்து

உப்பு மலையின் நுனி

தென்றல் சிவகுமார் · 27.07.21

“காஃபி தாகம் எடுக்குது” என்பாள் எனதொரு தங்கை. அயர்ச்சியை இதைவிட அழகாகச் சொல்ல முடியாதென்று தோன்றும் எனக்கு. பால்யத்திலிருந்து பதினுக்கு, பதினிலிருந்து உலகுக்கு என்று பகுதிப் பகுதியாக நிகழ வேண்டியது மனித வாழ்வின் நகர்வு. இதனைச் சிதைத்து, வரம்புகளை அழித்து, வாழ்க்கை ஆனந்தை அவன் பால்யத்திலிருந்து நேராக உலகுக்குள் தள்ளிவிடுகிறது. உலகின் ஒளியிலிருந்து விலகி, தனக்கு விதிக்கப்பட்ட இருளுக்குள் சென்றவன், மீண்டு உலகுக்குள் திரும்பும்போது இருளடைத்த மங்கல் ஒளியே அவனுக்கு எஞ்சுகிறது. ஒருவனது மொத்த வாழ்க்கையில் ஒரு […]

எழுத்து

அகமத் சாதவி உருவாக்கும் ஈராக்கிய ஃப்ரான்க்கென்ஸ்டைன்: Frankenstein in Baghdad

மோகன ரவிச்சந்திரன் · 27.07.21

அரேபியப் புனைகதைக்கான பன்னாட்டு விருதுக்கு 2014-ஆம் ஆண்டின் பட்டியலில் ஈராக் நாவலாசிரியர் அகமத் சாதவி இடம்பெற்றது ஆச்சரியப்படக் கூடியது அல்ல. இளைய ஈராக் நாவலாசிரியர் அவருடைய மூன்றாவது நாவலான Frankenstein in Baghdad (2013) வெளியீட்டுக்குப் பின் திடீரென புகழின் உச்சிக்குச் சென்றுவிட்டார். அந்த நாவல் எலும்பும் தோலுமான ஒரு மனிதனின் கதையைச் சற்று நடுங்க வைக்கும் அச்சுறுத்தலோடு கூறுகிறது. அவன் 2005-ல் குடிமை யுத்தத்தால் நைந்து போன பாக்தாத் வீதிகளில் அலைந்து, ஒரு மனிதனின் சடலத்தை […]

எழுத்து

பெண் என்று சொல்லிடிலோ!

இராசேந்திர சோழன் · 27.07.21

‘த புள்ள… பில்லுக்கட்டு எப்டி…’ குரல் கேட்டுத் தலையைத் திருப்பி நின்றாள் மங்காத்தா. வயசுப் புள்ள. மாஞ்செவுலு. மடிசார் கட்டுப் புடவை. நெஞ்சைப் போர்த்தி பிடரி வழியாய் தலைக்கு ஏறிய முந்தானை சிம்மாடு. மேலே புல்லுக்கட்டு. இலேசான ஈரத்தலை. ஓரங்களில் கொஞ்சம் கொஞ்சம் சேற்றுத் திப்பிகள். தண்ணி தொட்டு கழுவிய முகம் மட்டும் பளிச்சென்று தெரிகிறது. காதில் மூக்கில் தொடப்பக் குச்சிகள். கழுத்தில் மஞ்சளாயிருந்து அழுக்கேறி கறுத்துப்போன தாலிக்கயிறு. மேலே கட்டை வலது கையால் எத்தாகப் பிடித்து, ‘முக்கா ரூபா…’ […]

எழுத்து

சமஸ்: A De-professionalized Intellectual

முகம்மது ரியாஸ் · 30.06.21

I சமஸுக்காக ‘இந்து தமிழ்’ நாளிதழை வாங்கத் தொடங்கியவர்களில் நானும் ஒருவன். 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம், பொள்ளாச்சியில் நான் படித்த பி.ஏ. பொறியியல் கல்லூரியின் நூலகத்தில்தான் முதன்முதலாக ‘தி இந்து’ தமிழ் நாளிதழைப் பார்த்தேன். தமிழில் அதுவரை பார்த்திராத வகையில் அதன் வடிவமைப்பு இருந்தது. குறிப்பாக, அதன் எழுத்துரு. ஏனைய பக்கங்களைவிடவும் நடுப்பக்கம் கூடுதல் கவனத்தை ஈர்த்தது. முதல் நாள் ஜெயமோகன் கட்டுரை எழுதியிருந்தார். ‘இவ்வளவு செய்திகள் எதற்கு?’ பத்திரிகை வெளிவரும் முதல் நாளே செய்திகள் அதிகம் தேவையில்லை என்று ஒரு கட்டுரை. அடுத்த சில தினங்களில் அருந்ததி ராயின் கட்டுரை ஒன்று […]

Editor's Picks

Editor’s Picks

கோகுல் பிரசாத் · 24.06.21

The Disciple (2020), Chaitanya Tamhane நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமையுடைய இவ்வுலகில் நித்ய காலமும் நீடித்து வாழ்வதற்கான சிறிய வாய்ப்பைக் கலை வழங்குகிறது. அது சாளரத்தைத் திறந்து வைப்பதில்லை. மன விரிவின் விழைவுக்கேற்ப ஆகாசத்தில் பறக்க விடுவதில்லை. வெளியேறுவதற்கான வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டுவிட்ட வீட்டில் ஒரு எலிப்பொந்தைக் காட்டுகிறது. நமது தனித்தன்மைகள், பலவீனங்கள், உணர்வெழுச்சிகள், பரவசங்கள், தயக்கங்கள் அத்தனையையும் குறுக்கிக்கொண்டு அதனுள் உட்புகத் தயாராக இருக்க வேண்டும். பல்லாண்டுகள் தேவைப்பட்டாலும் பொந்தின் சுவரைச் சுரண்டிச் […]

எழுத்து

ஹோட்டல் கே

சரவணன் சந்திரன் · 24.06.21

ஒருமணி நேரத்தில் திரும்பவும் அழைக்கிறேன் எனப் புதிய எண்ணொன்றில் இருந்து முகுந்த் நாராயணி சொன்ன போது, அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து துள்ளினேன். அப்படி எழுந்த போது, விமானம் தரையிலிருந்து எழும்புவதற்கு முன்பு சப்தமிடுவதைப் போல, ஹ்ஹஹக் என எல்லோருக்கும் கேட்கும்படியான உறுமல் கேட்டதாகப் பிற்பாடு அலுவலக நண்பன் ஒருத்தன் சொன்னான். அவனிடமிருந்து அழைப்பு என்றதுமே ஆர்வ மிகுதியில் நானே அப்படிச் சப்தமிட்டிருக்கிறேன் போல. நெஞ்சளவு கேபின் இருக்கிற என்னுடைய அலுவலகத்தில் ஏதோ துக்கச் செய்தி வந்துவிட்டது என […]

எழுத்து

துடி

பா.திருச்செந்தாழை · 24.06.21

“ப்பா..” என்றவாறே சின்னவன் கைகளை விரித்து, தத்தியபடி இன்னாசியின் கால்களைக் கட்டிக்கொள்ள வந்தான். அவனது அரைஞாண் கயிற்றில் முடிச்சிடப்பட்டிருந்த சேலையின் இன்னொருமுனை ஜன்னல் கம்பியில் கட்டப்பட்டிருந்தது. அம்மணமான கரிய நிறப் பிஞ்சு உடலில் வயிற்றிலும் முட்டியிலும் குறுமணல்கள் ஆபரணத்துகள்கள் போல ஒட்டியிருந்தன. இன்னாசி ..ர்ர்ரப்பென அவனது முகத்தில் அறைந்தான். “ஒழி சனியனே..” இன்னாசியின் ஆடை முழுக்கக் கட்டிப்புரண்டு சண்டை போட்ட புழுதிக் கறைகள். கைலி தாறுமாறாகப் பதற்றத்தில் கட்டப்பட்டிருக்க சட்டையின் முதுகுப் பகுதியில் கூர்மையான ஏதோவொன்றால் தாக்கப்பட்டதன் […]

எழுத்து

மின்னும் வண்ணப் பூக்களெல்லாம் (பகுதி 10): தனியாவர்த்தன மின்னல்கள்

ஆத்மார்த்தி · 24.06.21

“Music is the language of the spirit. It opens the secret of life bringing peace, abolishing strife.” – Kahlil Gibran சகஜமும் அந்தரங்கமும் பொங்கிப் பெருக்கெடுக்கும் குரல் உமா ரமணனுடையது. புதிய குரல்களின் தேவைக்கும் வருகைக்கும் இடையிலான தொடர்பு கவனிக்கத்தக்கது. எப்போதெல்லாம் கவன மாற்று ஒன்று அவசியமாகிறதோ அது வரையில் பெரும் செல்வாக்கு பெற்ற குரல்களே போதுமானதாக இருந்துவரும். திடீரென்று ஒரு பாடலின் சூழல் அந்தக் குறிப்பிட்ட பாடலை யாருக்கு […]

எழுத்து

அ.மாதவையா: நவீனத்தின் முதல் குரல்

மானசீகன் · 24.06.21

1 காப்பியக் காலத்தில் நாம் மதம், மொழி, இனம் வழியாகப் பல மையங்களைக் கட்டமைத்தோம். அதற்குப் பிறகு ‘கதை’ என்கிற விஷயம் பெரிய அளவில் வேறு வடிவம் எடுக்கவில்லை. சொல்லப்போனால், சிற்றிலக்கியங்கள், தனிப்பாடல்கள் என்கிற பெயரில் வர்ணனைகள், கேலிகள், ஆபாசம் என்கிற அளவிலேயே நம் மொழியும் கவித்துவமும் இலட்சியவாதம் கொண்ட பெருங்கற்பனைகளும் சுருங்கிப் போய்விட்டன. இன்னொரு புறத்தில் பௌராணிகர்கள் ‘கதையை’ பக்திக்கான கச்சாப்பொருளாக எடுத்துக்கொண்டு புராணங்களிலிருந்து உருவியதைச் சொந்தச் சரக்குகளோடு சேர்த்து மக்கள் கூட்டத்தை வாய்மொழியால் புளகாங்கிதம் அடையச் […]

எழுத்து

அரசியின் கழுத்தணி – இடாலோ கால்வினோ

கோ.கமலக்கண்ணன் · 24.06.21

பியத்ரோவும் தொமோசோவும் வாதிட்டபடியே இருந்தனர். விடியற்காலையில் சூனியமாக காட்சிதரும் தெருவில், அவ்விருவரது பழைய மிதிவண்டிகளின் கீச்சொலியும் குரல்களும் மட்டுமே கேட்டன. பியத்ரோவின் குரல் நாசித்தன்மை கொண்டது, அவ்வப்போது குரலின் இடையில் வெறுங்காற்றும் வெளிப்படும். கரகரப்பான, இரகசியம் பேசுவது போன்ற குரல் தொமோசோவினுடையது. இருவரும் தாம் பணியாற்றும் தொழிற்சாலைக்கு ஒன்றாக செல்கின்றனர். நசுங்கிய முரல்வென ஒலிக்கும் பணிமனை சங்கொலி காற்றில் ஒவ்வொரு இல்லமாகச் சென்று தொழிற்சாலை திறக்கும் நேரத்தை அறிவித்தது. நகரமும் நாட்டுப்புறமும் ஒன்றாகும் புறநகர் பகுதியின் இறுதியெல்லையை […]