Category: எழுத்து

எழுத்து

தாய்ப்பாசத்தின் கற்பிதமும் உண்மையும் – ஏங்கல்ஸும் ஹைடெக்கரும்

ஆர்.அபிலாஷ் · 24.06.21

தமிழ்நாடு அம்மா பாசத்துக்குப் பெயர் போனது – ஒப்பிடுகையில் தாயைப் போற்றும் காட்சிகள் பழைய இந்திப் படங்களில் உண்டு. மலையாளத்திலும் உண்டு. ஆனால் தமிழ் சினிமாவிலே நீண்ட காலமாக அம்மா செண்டிமெண்ட் ஒரு தவிர்க்க முடியாத அம்சமாக இருந்து வருகிறது. அம்மா செண்டிமெண்ட் பாடல்கள் அனேகமாக ஹிட்தான். மலையாளத்திலும் இந்தியிலும் நான் பார்த்தவரையில் அம்மா பாடல்களைவிட தாலாட்டுப் பாடல்கள் அதிகம். தந்தை-மகன் / மகள் உறவு அங்கு தாய்-மகன் உறவைவிட அதிகமாக அங்கு கொண்டாடப்படுகிறது. ராஜ்கிரண் “என் […]

எழுத்து

அகம் சுட்டும் முகம் (பகுதி 2) : கே.ஜி.ஜார்ஜின் திரையுலகம்

எம்.கே.மணி · 24.06.21

ஸ்வப்னாடனம் படத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அதற்கு அப்புறம் ஜார்ஜ் சில படங்களைச் செய்தார். மண்ணு (1978) போன்ற படங்களைப் பார்த்திருக்கிறேன். எனினும், தற்போதைய ஒரு வசதிக்காக உள்கடல் (1979) என்கிற படத்தில் இருந்து கட்டுரையைக் கொண்டுசெல்லலாம் என்று படுகிறது. எந்தத் திக்கில் இருந்து பார்த்தாலும் உள்கடல் மிக முக்கியமான படம். அது நல்ல ஆரம்பமாக இருக்கும் என்று நினைப்பது அதனால்தான். மற்றும் ஜார்ஜை அறியாதவர்களுக்கு இந்தப் படத்தின் மூலம் அவருடைய முகம் தெளிந்து வந்துவிடும். உள்கடல் என்கிற […]

எழுத்து

மழைக்கண்

செந்தில் ஜெகன்நாதன் · 24.06.21

அன்று காலை நாங்கள் கும்பகோணம் பேருந்து நிலையத்தை அடையும்போது மணி ஆறு முப்பது ஆகியிருந்தது. நான்கு மணிக்கே எழுந்ததன் பலனால் அவ்வளவு சீக்கிரம் செல்ல முடிந்தது. பேருந்தைவிட்டு இறங்கும்போது அம்மாவுக்குக் கால்கள் மரத்துப் போய்விட்டதாகச் சொன்னாள். நீரின் மீது நடப்பதைப் போல கவனமெடுத்து ஓரொரு அடியாய் வைத்தாள். பேருந்து நிலையத்திலேயே இருந்த டீக்கடையில் எங்கள் இருவருக்கும் காபி வாங்கிக் கொடுத்துவிட்டு அப்பா டீ குடித்தார். காபியை வட்டாவில் ஊற்றிக் குடித்தவுடனே அம்மா புடவைக்குப் பின்னே இடதுகரத்தை வளைத்து அடிமுதுகில் […]

எழுத்து

பழங்குடிகளைப் புரிந்துகொள்வது எப்படி?

மருதன் · 24.06.21

ஒருமுறை கள ஆய்வுக்காக இமயமலை சென்றிருந்தபோது, பழங்குடி கிராமமொன்றில் சில முதியோர்களைக் கண்டேன். உங்களை ஒரு படம் எடுத்துக்கொள்ளட்டுமா என்று கேட்டபோது அவர்கள் மறுத்துவிட்டார்கள். இவர்கள் மட்டுமல்ல, உலகளவில் பலர் இப்படித்தான் இருக்கிறார்கள் என்கிறார் டெல்லி பல்கலைக்கழகத்தில் மானுடவியல் துறை பேராசிரியராகப் பணியாற்றிய சுபத்ரா மித்ரா சன்னா. தன்னுடைய புதிய நூலில் (Anthropological Perspectives on Indian Tribes, 2020) இந்தப் புகைப்பட அச்சத்துக்குப் பின்னாலுள்ள மானுடவியல் காரணங்களை அவர் விவாதிக்கிறார். என்னை நீங்கள் படம் எடுக்கும்போது […]

எழுத்து

சோற்று ஜாதி

ஷாலின் மரியா லாரன்ஸ்  · 24.06.21

அன்றைய ஆபிஸ் மீட்டிங் பூமர் சூயிங்கத்தைப் போல் இழுத்துக்கொண்டே போக, ஒரு வழியாக ஆறரை மணிக்கு மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு வீட்டிற்குக் கிளம்பினேன். அரைமணி நேரம் லேட். வீட்டிற்குக் கூட்டிச்செல்லும் ஆட்டோக்கார சுரேஷ் அண்ணா கீழே காத்துக்கொண்டிருந்தார். வீடு திரும்ப வேண்டும் என்கிற அவசரத்திலும்கூட லிஃப்டை நோக்கி நடந்துகொண்டே மொபைலில் ஹவுஸ் ஆப் மார்லி ஹெட்போனைச் சொருகி என்னுடைய விருப்பப் பாடல்கள் லிஸ்டை ஓடவிட்டேன். லிஃப்ட் வந்தது. உள்ளே நுழைந்தேன். காதில் “ஊத்திக்குனு கடிச்சிக்கவா, கடிச்சிக்குனு ஊத்திக்கவா” […]

எழுத்து

ஒன்பது கடிதங்களில் ஒரு புதினம் – ஃபியோதர் தஸ்தாயேவ்ஸ்கி

இல. சுபத்ரா · 24.06.21

I (ஃப்யோதர் இவானீச்சிடமிருந்து  இவான் பெத்ரோவிச்சிற்கு) மரியாதைக்குரியவரும் மதிப்புமிக்க நண்பருமாகிய இவான் பெத்ரோவிச், நண்பரே, ஒரு முக்கியமான விஷயம் குறித்துப் பேசுவதற்காக கடந்த இரண்டு நாட்களாக உங்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன். ஆனால் உங்களை எங்கேயுமே காண முடியவில்லை. நேற்று நாங்கள் சீமியோன் அலெக்ஸியிச்சின் வீட்டில் இருந்த போது என் மனைவி உங்களைப் பற்றி ஒரு அருமையான நகைச்சுவையைக் கூறினாள். நீங்களும் டத்யானா பெத்ரோவ்னாவும் எப்போதும் பறந்துகொண்டே இருக்கக்கூடிய ஜோடிப் பறவைகளாகிவிட்டீர்கள். உங்கள் இருவருக்கும் திருமணமாகி இன்னும் மூன்று மாதங்கள்கூட […]

எழுத்து

தமிழ்ச் சிறுகதை இன்று (பகுதி 9): அகத்தின் ஆழம் தேடி… – மயிலன் ஜி. சின்னப்பனின் கதைகள்

எம்.கோபாலகிருஷ்ணன் · 24.06.21

2019 ஜூன் மாதத்தில் ஒரு நாள் சாலை விபத்தொன்றில் சிக்கிய மோகன் சிகிச்சைக்காக கோவை கங்கா மருத்துவமனையில் ஒரு வாரம் தங்கியிருந்தார். அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து வெளியே வந்த இரண்டாம் நாள் படிப்பதற்கு ஏதாவது புத்தகம் வேண்டுமெனக் கேட்டார். கூடவே, ஆனந்த விகடனில் வந்திருக்கும் கதையைப் பற்றி சிலர் முகநூலில் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்ற தகவலையும் சொன்னார். இரண்டொரு புத்தகங்களுடன் ஆனந்த விகடனை வாங்கிச் சென்றேன். அதில் வெளியாகியிருந்த ‘அன்நோன்’ கதையைப் பற்றி அறிந்திருந்தவர், ‘இந்தக் கதையை இப்போது […]

எழுத்து

கடல் கசந்தது

லோகேஷ் ரகுராமன் · 24.06.21

இன்று மாலை முதலில் கிளம்பும் அலுவலகப் பேருந்திலேயே ஏறிவிட்டிருந்தேன். நீண்ட நாள் கழித்து இன்றுதான் அலுவலகத்தில் மீண்டும் சேர்ந்தேன். ஆனால் இருப்பு கொள்ளவில்லை. உடனே கிளம்ப வேண்டும் என்றிருந்தது.  அடிவயிற்றில் குமட்டிக்கொண்டு வந்தது போல என்னை இந்நிலத்தில் நிலைகொள்ள விடாமல் எதுவோ செய்தது. நகர்ந்துவிட வேண்டும். நகர்ந்து நகர்ந்து எங்கோ செல்ல வேண்டும். எங்கே செல்ல? நகர்ந்துகொண்டே இருக்க வேண்டும், அவ்வளவுதான். கிளம்பினேன். பேருந்தில் ஏறிக்கொண்டேன். இந்திரா நகரில்தான் என் வீடு. அங்குதான் எனக்கான நிறுத்தம். பேருந்து நீலாங்கரையை […]

எழுத்து

காவி – கார்ப்பரேட் பிடியில் சித்த மருத்துவம்

பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு · 24.06.21

2016ல் மத்திய அரசின் சுகாதாரத் துறை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவிலுள்ள ஒவ்வொரு குடும்பமும் மருத்துவத்திற்காகச் செய்யும் செலவில் 100 ரூபாயில் 52 ரூபாய் மருந்துகளுக்காகவே செலவிடுகின்றனர். உலக வங்கியின் அறிக்கையின்படி இந்தியர்களின் மருத்துவச் செலவீனங்களில் 30 சதவிகிதம் மட்டுமே அரசின் பங்களிப்பு உள்ளது. அதாவது மக்களின் மருத்துவச் செலவில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாக மட்டுமே அரசின் பங்களிப்பு உள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆப்கானிஸ்தான், நேபாளம் போன்ற நாடுகள்கூட மருத்துவச் சேவைகளுக்காக இந்தியாவைவிடக் கூடுதல் நிதிப் பங்களிப்பு […]

எழுத்து

தீ மூட்டுதல் – வில்லியம் ஃபாக்னர்

எஸ்.கயல் · 24.06.21

நீதிபதியின் அறை பாலாடைக்கட்டி வாசனையால் மணந்தது. கூட்டமாக இருந்த அறையின் பின்புறத்தில் பீப்பாயின் மீது சாய்ந்தபடி அமர்ந்திருந்த சிறுவன் தன் உடலின் மீது பாலாடையின் வாசம் வீசுவதை உணர்ந்தான். அலமாரிகளில் வரிசைப்படி நெருக்கி அடுக்கி வைக்கப்பட்டிருந்த விதவிதமான வடிவங்கள் கொண்ட குடுவைகளின் மீதிருந்த ஒரு எழுத்துகூட அவனுக்குப் புரியவில்லை. ஆனால் கருஞ்சிவப்பு நிறப் பூதங்களும் வெள்ளி வண்ண மீன்களும் கொண்ட லேபிள்களை அவன் கண்களைவிட அவனுடைய வயிறால் அடையாளம் காண முடிந்தது. தன் மீதிருந்து வந்த பாலாடைக் […]

எழுத்து

தூளி

பாலாஜி பிருத்விராஜ் · 24.06.21

“சர்ஜரி முடிஞ்சு ரெண்டு நாள்தான ஆகுது? அந்த ஷாக் இருக்கும். மெல்ல மெல்ல மீண்டு வந்துருவாரு.” கையில் வைத்திருந்த ரிப்போர்ட்டிலிருந்து கண்களை எடுக்காமல் என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார். எங்களின் பதற்றம் அவருக்குப் புரியவில்லை. மற்ற நோயாளிகளைப் போல இல்லை என் முதலாளியின் நிலை. நான் நிலைமையை விளக்க முயன்றேன். “இல்ல டாக்டர். வலியில் எதாவது முனங்குனாக்கூட பரவாயில்லை. அவர்கிட்ட இருந்து சத்தமே வரலை. முதலாளி எப்பவுமே அப்படித்தான். கடையில இருக்கும் போதுகூட முகத்துல பெருசா காமிச்சுக்க மாட்டாரு. ஒரு […]

எழுத்து

கேவல்களின் பேரிகை: கெஞ்ஜி மிசோகுச்சியின் திரையுலகம்

கோ.கமலக்கண்ணன் · 24.06.21

1 மரணம் அருளப்படாத பறவையைப் போன்றவன் மாகலைஞன். அவன் தன் இறப்பின்மையின் முன்னறிவால் தகிக்கிறான். கட்டின்மை தரும் வாய்ப்புகளால் வானை அளக்க முற்படுகிறான். சுவடுகள் பதிக்காமலேயே தன்னிருப்பை நிகழ்த்தும் கலையில் திளைக்கும் பறவை. சுவடுகள் புறத்தே வீழும் முத்திரை மட்டுமே. அகத்தில் விரியும் பிரபஞ்சத்திற்கு இறக்கைகளின் அசைவுகளும் பாறைகளின் தீவெடிப்பும் ஒன்றே. புறத்தை ஒரு மனித அகவைக் கணக்கு தனித்தனியே அளக்கிறது. ஆனால் அகத்தின் வழியே தொடரும் ஒரு நீண்ட கயிறின் திரிபு மூலம் பல்லாண்டு பல்லாண்டு […]