Category: எழுத்து

எழுத்து

நாம் எதனால் வாசிப்பதில்லை?

செல்வேந்திரன் · 24.06.21

வாசிப்பதன் பயன்களைப் பற்றி பள்ளியிலும் கல்லூரியிலும் தொடர்ச்சியாக அறிவுரைகள் வழங்கப்பட்டாலும் நம்மால் ஏன் வாசிக்க முடியவில்லை? விரிவான ஆய்வுகள் வாசிப்பைத் தடை செய்யும் சில காரணிகளைப் பட்டியலிடுகின்றன. குடும்பச் சூழல் – உண்மையில் பல குடும்பங்களில் வாசிப்பதற்கான சூழலே இருப்பதில்லை. வறுமை அல்லது எந்நேரமும் பூசலிடுவது அல்லது குடும்பத் தொழில் காரணமாக வாசிப்பதற்கான உளநிலைகள் அமையாமல் இருப்பது. தமிழகத்தில் இருபது சதவீத மாணவர்கள் கல்லூரிக்கு வருவதே கடுமையான வறுமைக்கு மத்தியில்தான். சில மாணவர்கள் பகுதி நேரமாக வேலை […]

எழுத்து

மரண விளையாட்டு

குமாரநந்தன் · 24.06.21

நீர்நிலைக்கு அருகில் இருப்பதைப் போல அறை குளிர்ச்சியாக இருந்தது. புயல் சின்னம் காரணமாக இரண்டு நாட்களாய் சூரியன் தென்படவில்லை. நேற்றிரவு முழுவதும் தூறல் விழுந்துகொண்டிருந்தது. அதிகாலையில் மழை நின்றபின் கோடை காலத்திற்கு சம்பந்தமில்லாத ஒரு குளிர்ந்த நாளாக அது மாறிவிட்டிருந்தது.  மனோகரன் கண் விழித்தபோது ஜில்லென்ற நாள் அவனைத் தழுவிக்கொண்டிருந்தது. இன்று விடுமுறை என்ற நினைவு மேலும் அவனை இலேசாக்கியது. ஓய்ந்திருக்க முடியாத இயந்திரத்தில் இட்டுப் பிழியும் தன்மைகொண்ட வேலை என்ற பூதத்திடம் இருந்து விலகி இருப்பது அவன் மகிழ்ச்சியடைய […]

எழுத்து

ஒரு குழந்தையும் கவிதையின் குழந்தைமையும்: மகிழ் ஆதனின் கவிதைகள்

பாலசுப்ரமணியன் பொன்ராஜ் · 24.06.21

மகிழ் ஆதன், ஒன்பது வயதில், தனது முதல் கவிதைத் தொகுப்பை – அவனது தந்தையால் கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு – வெளியிட்டிருக்கிறான். நான் அறிந்த வரையில் தமிழில் ஒரு குழந்தையால் எழுதப்பட்ட கவிதைத் தொகுப்பு இதுவாகத்தான் இருக்கும். வள்ளலார் குழந்தையாக இருக்கும்போதே முருகனின் மீது பாடல் இயற்றியதாகச் சொல்வார்கள். குழந்தை மேதைகளுக்கு நம்மிடையே ஒரு தொடர்ச்சி இருக்கிறது. ஞானசம்பந்தர், இராமானுஜர், வள்ளலார், பாரதியார் என மத்திய காலத்திலிருந்து நவீன காலகட்டம் வரை மகிழ் ஆதனுக்கு இவர்களே மூதாதைகள். கவிதையின் […]

எழுத்து

எழுத்தாளர் சிமாமந்த ங்கோஸி அடிச்சே மீதான சர்ச்சை

எஸ்.கயல் · 24.06.21

நைஜீரிய நாவலாசிரியர் சிமாமந்த ங்கோஸி அடிச்சே (Chimamanda Ngozi Adichie), இணையத்தில் வெளியிட்ட கட்டுரையில் தன் மாணவர் ஒருவரின் மீதான தனிப்பட்ட பகையைப் பொதுவெளியில் பகிர்ந்ததால் சர்ச்சை எழுந்திருக்கிறது. சிமாமந்த ங்கோஸி அடிச்சே கடந்த பத்து வருடங்களுக்கு மேலாகத் தான் நடத்தும் படைப்பாற்றல் பயிலரங்குகள் மூலமாகப் பல ஆப்பிரிக்க எழுத்தாளர்களுக்குப் பயிற்சியாளராகவும் நெறிப்படுத்துபவராகவும் இருக்கிறார்.  நைஜீரியாவில் உள்ள லாகோ, அவ்கா ஆகிய இடங்களில் நடைபெற்ற இந்தப் பயிலரங்குகளில் இருநூறுக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கலந்துகொண்டனர். “Stay with me” எனும் […]

எழுத்து

அரச விரலும் குழந்தைக் குரலும்

ஜான் சுந்தர் · 02.06.21

மாரியம்மன் கோவிலில் கம்பம் சுத்தி ஆடுகிற அரைக்கால் சட்டைப் பையன்கள் நாங்கள். மேளச்சத்தம் எதுவும் கேட்டுவிட்டால், கூச்சலிட்டபடியே வீட்டுக்குள்ளிருந்து தெருவுக்கு ஓடி வருகிறவர்கள். சாவு வீடுகளில் நாக்கை மடித்துக்கொண்டு அடவு கட்டும் நரைமீசைக் கிழவர்களின் மாணவ மணிகள். ’இளமையில் வறுமை’ குழுவைச் சேர்ந்த எங்களை, இப்படி ’இளமையின் இனிமை’ என்று நினைத்துப் பார்க்க வைப்பதில் ஒலிவடிவாக பெரும்பங்கைச் செலுத்தியவர் அய்யா ’திரையிசை’ அவர்கள்தான். அவர்தான் கல்யாண வீடுகளிலும் கோவில் திருவிழாக்களிலும் கட்டும் கூம்பொலிப் பெருக்கிகள் வழியாகவும் வானொலிகள் வழியாகவும் […]

எழுத்து

எந்நாளும் தீராமழை

ஆத்மார்த்தி · 02.06.21

எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்றதும் நினைவுக்கு வருகிற முதல் விஷயம் அவரது கனத்த சரீரம். அத்தனை பெரிய உருவத்தில் ஒரு புல்நுனிப் பனியளவு கர்வத்தைக்கூடக் காணவே முடியாது. தன் இயல்பிலிருந்தே அகந்தை விலக்கம் செய்துகொண்டு தன் சுயத்தைப் பணிவின் மலர்களால் அலங்கரித்துக்கொண்டவர் பாலு. இந்தக் கட்டுரை முழுவதும் அவரைப் பாலு என்றே குறிக்க விருப்பம். பாலு ஒரு குழந்தை என்பதுதான் அவருடன் நெருங்கிப் பழகிய எல்லோரும் சொல்கிற முதற்சொல். ஒரே ஒரு தடவை அவரைச் சற்றே தள்ளியிருந்து மட்டும் பார்த்த […]

எழுத்து

மதுவின் அருவி

தென்றல் சிவகுமார் · 02.06.21

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் எங்கள் கல்லூரியின் கலைவிழாவுக்குச் சிறப்பு அழைப்பாளராக வந்தபோதுதான், நான் அவரை முதல்முறை நேரில் பார்த்தேன். பார்த்துக்கொண்டே இருக்கையில், “ஏய்ய் அப்படியே பஞ்சு மிட்டாய் மாதிரியே இருக்காருய்யா” என்று எங்கள் தோழியொருத்தி கத்தினாள், “இல்லல்ல டெடி பியர்” என்றது இன்னொரு குரல். கண்ணறியாமல் பெருக்கெடுக்கும் அன்புக்குக் கண்ணுக்குத் தெரியும் எதோ ஒரு பொருளைச் சுட்டிப் பெயர் சூட்டும் முயற்சிதான் அவை யாவும், அபத்தம் என்றாலும் அழகுதான். நாம் சொல்ல நினைத்த எதைத்தான் அந்தக் குரல் சொன்னதில்லை? […]

Editor's Picks

Editor’s Picks

கோகுல் பிரசாத் · 25.04.21

கரையில் திமிறும் மீன் – 3 Days In Quiberon “You must not quote to me what I once said. I am wiser now.” – Romy Schneider உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்களில் அக்குறிப்பிட்ட சம்பவங்களின் பின்னணி ஆராயப்பட்டிருக்கும். அச்சம்பவம் நிகழ்வதற்குக் காரணமாக அமைந்துவிட்ட உந்து சக்திகள் மீது கவனம் குவிக்கப்படும். விதியின் கரங்கள் வாரி அணைத்த மனிதர்களின் அவலமும் அதன் விளைவுகளும் ஒற்றைச் சரடில் கச்சிதமாகக் கோர்க்கப்பட்டு வாழ்வு […]

எழுத்து

வைரம் பாய்தல்

சரவணன் சந்திரன் · 25.04.21

ஒரு பணம் கண்ட திருட்டுப் பயலைப் போல, அடிக்கடி உள்ளங்கையை முகர்ந்து பார்க்கக் கூடாதெனத் தனக்குள் சொல்லிக்கொண்டான் வளன். ஆச்சி அந்தக் கதையை அவனுடைய சின்ன வயதிலிருந்து அடிக்கடி சொல்லிக்கொண்டிருக்கும். எதற்காக அவனிடம் அதைச் சொல்கிறது என யோசித்தும் இருக்கிறான். புதுத் திருடன் ஒருத்தன் கொள்ளையடிக்கப் போனானாம். ஒட்டடைக் குச்சியையொத்த தேகம் கொண்டவன், அரும்பாடுபட்டு ஓட்டைப் பிரித்து இறங்கியதில் ஒரேயொரு மூட்டை மட்டும் சிக்கியிருக்கிறது. வீட்டிற்கு வந்தவன் காடா விளக்கொளியில் அதை விரித்துப் பார்த்த போது, அதில் […]

எழுத்து

விலாஸம்

பா.திருச்செந்தாழை · 25.04.21

அப்பா தனது சட்டைக்காலரை ஒருமுறை தூக்கிவிட்டபடி ‘உஸ்ஸ்ஸ்’ என்றார். பளீரிட்ட வெண்மையான வேட்டி சட்டைக்குள் அவரது உடலும் முகமும் வழக்கமான துருத்தலோடிருந்தன. இயல்பாகச் செய்வதைப் போல, கழுத்திலிருந்த தங்கச்சங்கிலியை சட்டை விளிம்புகளுக்குள்ளும், விரலிலிருந்த நவரத்தினக்கல் மோதிரத்தின் முகப்பை உள்ளங்கைக்குள் திரும்பியிருக்கும்படியும் மாற்றிக்கொண்டார். முகத்தில் அவர் கொண்டுவர நினைத்திருந்த சாதாரணத்தன்மை மெல்ல மெல்லப் பரவுவதை உணர்ந்தேன். கையிலிருந்த பொன்னிறச் சதுரமிட்ட வரவேற்பு அழைப்பிதழ்களின் பெயர்களைச் சரிபார்த்தேன். நேரம் போய்க்கொண்டிருந்தது. “போலாம். சர்க்யூட் ஹவுஸ்ல ஜெகநாதன்கிட்ட சொல்லிருக்கேன். முன்னபின்னனாலும் சர்க்யூட் […]

எழுத்து

துயரம் என்னும் புதிர்: தஸ்தாயேவ்ஸ்கியின் கதாபாத்திரங்கள் உணர்த்தும் தத்துவம் – எலிசபெத் ஜெ. ஈவா

இல. சுபத்ரா · 25.04.21

முன்னுரை தஸ்தாயேவ்ஸ்கியின் நாவல்களில் சில கூறுகள் திரும்பத் திரும்பக் கையாளப்பட்டிருப்பதை கவனம் மிக்க ஒரு வாசகரால் மிக எளிதாக அடையாளம் கண்டுவிட முடியும். நாவல்களின் மையக் கருத்துகளிலும் பேசுபொருள்களிலும் இந்தப் பண்பு இருப்பது உண்மையாகினும் நான் சொல்ல வருவது அவற்றைப் பற்றியல்ல. அமைதிப்படுத்தவியலாத இருண்மை சார்ந்த நுணுக்கமான விவரணைகள் அதைவிட அதிகமாக இடம்பெற்றிருக்கின்றன. தாங்கவொண்ணாத் துயரம் நிறைந்த ஒரே வகைக் கதைகளையே (பத்திரிக்கைச் செய்திகளில் வரும் வழக்குகள் உள்ளிட்ட வரலாற்று நிகழ்வுகள்) அவர் பல்வேறு படைப்புகளில் திரும்பத் […]

எழுத்து

காந்தியெனும் இதழாளர்

த. கண்ணன் · 25.04.21

காந்தி என்ற அகிம்சாவாதியை, தலைவரை, பொருளியற் சிந்தனையாளரை, புரட்சியாளரை, கல்வியாளரைப் பற்றி நிறைய எழுதப்பட்டுள்ளது. அவரது பல்வேறு பரிமாணங்களில் அதிகம் பேசப்படாத ஒன்று அவரது இதழியல் பணி. அவரது நீண்ட இதழியல் வாழ்வின் சில தருணங்களை இக்கட்டுரையில் காணலாம். பொதுவாழ்வில் காந்தி நுழைந்ததே பத்திரிக்கை மூலமாகத்தான் எனலாம். தென்னாப்பிரிக்க வாழ்க்கையில் நிற வேற்றுமையின் காரணமான ஒடுக்குமுறையே அவரைப் பொதுவாழ்வில் ஈடுபடச் செய்தது என்பது பொதுவான புரிதல். உண்மையில் சைவ உணவுப் பழக்கமே அவரை முதலில் இதழாளராக்கியது. அவர் […]