Category: எழுத்து

எழுத்து

அந்த நீர்தான், அதே நீரன்று: வி.அமலன் ஸ்டேன்லியின் ‘வெறும் தானாய் நிலைநின்ற தற்பரம்’ 

மானசீகன் · 25.04.21

நவீன மனிதனின் மெய்யியல் தேடல்களை விவரிக்கும் நாவல்கள் தமிழில் பெரிய அளவில் இல்லை. சிலர் உடனே ‘ பொய்த்தேவில்’ வரும் சோமு முதலியைத் தூக்கிக்கொண்டு வருவார்கள். லௌகீகத்தின் தோல்வியை எதிர்கொள்ள முடியாமல் ஓடும் துறவையோ அல்லது அதற்கு நிகரான காவி வேஷத்தையோதான் தமிழின் பல நாவல்கள் ஆன்மீகம் என்ற பெயரில் பேசியிருக்கின்றன. ஜெயகாந்தன் காவியை உடுத்தியவுடனே ஒருவனைச் சகலமும் அறிந்த ஞானியாக்கி விடுவார். அந்தச் சாமியாரின்/ பைத்தியக்காரனின் ஆணவம் நிரம்பிய அலட்டலான சவுக்கடிக்கு முன் சாதாரண மனிதன் ஒடுங்கி […]

எழுத்து

சம்பத் ஏன் மரணத்தை ஒரு ‘இடைவெளி’ என்கிறார்?

ஆர்.அபிலாஷ் · 25.04.21

சம்பத்தின் “இடைவெளி” நாவல் குறித்த நிறைய விமர்சனங்கள், மதிப்புரைகள், பாராட்டுரைகளைப் படித்துள்ளேன். அவற்றில் நாவலின் போக்கை, கதைக்களனை விவரிக்கிறார்கள், நாவல் அளிக்கும் வியப்புணர்வை வர்ணிக்கிறார்கள். ஆனால் இந்நாவலின் மையப் பாத்திரமான தினகரன் ஏன் மரணத்தை ஒரு இடைவெளி எனச் சொல்கிறார் என்பதை யாரும் வினவுவதில்லை. ஜெயமோகன் “இடைவெளியை” ஒரு இருத்தலிய நாவல் எனத் தவறாக வாசித்து அக்காரணத்தாலேயே இதுவொரு குறிப்பிட்ட காலகட்டத்தின் மனச்சோர்வை சித்தரிக்கும் நாவல் என அடையாளப்படுத்தி நிராகரிக்கிறார் (“சம்பத்தின் ‘இடைவெளி’ பற்றி”, அக்டோபர் 12, […]

எழுத்து

வாசனை

எம்.கோபாலகிருஷ்ணன் · 25.04.21

கதவைத் திறந்ததும் புழுங்கலான வாடையுடன் காற்று வெளியேறியது. சிக்குப்பிடித்த எண்ணெயும் கெட்டுப்போன உணவுப் பண்டமும் அழுக்கும் சேர்ந்த நாற்றம். சோர்வுடன் கண்களை மூடியபடி தலையை அப்படியே சுவரில் சாய்த்து நின்றான். யாருமற்ற வீட்டின் நிச்சலனமும் வெறுமையும் எதிரில் இருளென நின்றிருந்தது. மூலையிலிருந்த ஸ்விட்சை எட்டிப் போட்டான். வெளிச்சம் பரவிய நொடியில் தரையில் கரப்பான்கள் வெருண்டோடின. அங்கும் இங்குமாய்ப் பதுங்க இடம் தேடி விரைந்தன. எச்சரிக்கையுடன் கால்வைத்து உள்ளறைக்கு வந்து விளக்கைப் போட்டான். கூடவே மின்விசிறியையும். சுழலத் தொடங்கிய […]

எழுத்து

மின்னும் வண்ணப் பூக்களெல்லாம் (பகுதி 9): ராஜாவின் பாடகர்கள்

ஆத்மார்த்தி · 25.04.21

தொழில்முறைப் பாடகர்களைப் பாட வைப்பதன் பின்னே இரகசிய விநோதங்கள் பல உண்டு. பாடுவதற்கான செயல்முறை ஒவ்வொருவருக்கும் வேறுபடும். உதாரணமாகச் சொல்வதானால் ஒரு பாடகர் புதிய பாடலொன்றைப் பாடுவதற்கான முன்தயாரிப்புக் காலம், அதாவது ஒத்திகைக் காலம் எத்தகையது என்பதைப் பொறுத்து அவருக்குப் பாடக் கிடைக்கிற பாடல்களின் எண்ணிக்கை அமையும். சிலருக்கு அரிதான, வனப்பான குரல்வாகு அமைந்திருக்கும். ஆனால் ஒரு பாடலை முழுவதுமாகப் பாடுவதற்கு அவர்கள் எடுத்துக்கொள்கிற நேரம் மிக மிக அதிகமாக இருக்கலாம். இன்னும் சிலருக்கு வேறொரு பிரச்சினை […]

எழுத்து

தோடுடையாள்

சுஷில் குமார் · 25.04.21

“அப்பா, அப்பா, நீங்களும் நம்ம கோயில் நம்பூதிரி மாதி பூணூல் போட்ருக்கியோ, ஆனா, ஏன் கோயில்ல பூஜைல்லாம் பண்ண மாட்டுக்கியோ?” அய்யண்ணனின் தோள் மீது சாய்ந்தவாறு கேட்டாள் சுபத்திரை. அவளது கருங்கூந்தல் நீண்டு பூச்சூடிய பின்னலாக ஆடியாடி அவரது பெரிய தொப்பையின் மீது விழுவதும் போவதுமாக இருந்தது. ஒரு கணம் கண்மூடி அவளது மெல்லிய கைகளைத் தன் கழுத்தோடு இழுத்துப் பிடித்து முத்தமிட்டார் அய்யண்ணன். “அந்த பூணூல் வேற, இது வேற மக்ளே. அப்பால்லாம் பூஜ பண்ண […]

எழுத்து

தந்தையைக் கொன்ற தனயன்: ஃபிராய்டிய உளப்பகுப்பாய்வியல் பார்வையில் தஸ்தாயேவ்ஸ்கி

டாக்டர் ஜி.ராமானுஜம் · 25.04.21

இலக்கியத்திற்கும் உளவியலுக்கும் உள்ள நெருக்கமான தொடர்பு பற்றி புதிதாகச் சொல்லத் தேவையில்லை. கலைகள், குறிப்பாக இலக்கியம், மனித மனதின் எண்ணங்களுடைய சிக்கல்களை, உணர்ச்சிகளின் கொந்தளிப்பை, இவற்றின் விளைவாக அவனது நடவடிக்கைகளில் ஏற்படும் மாறுபாடுகளைப் புனைவாகவும் கவிதையாகவும் வடிக்கின்றன. மனிதனின் எண்ணம், உணர்ச்சிகள், செயல்பாடு ஆகிய மூன்றின் சமநிலைச் சீர்குலைவையே (Disorder) மனநலமும் அறிவியல்பூர்வமாக விளக்கி விடைகாண முயல்கிறது. மனம் என்பது வெறுமனே மூளையின் மின்னோட்ட இரசாயன மாற்றங்கள் மட்டுமல்ல. அதில் ஒவ்வொரு மனிதனின் தனிப்பட்ட ஆளுமை, சமூகம் எனப் பல்வேறு […]

எழுத்து

விஷாத யோகம்

சுநீல் கிருஷ்ணன் · 25.04.21

சென்ற ஆண்டு கொரோனா தொற்று பரவி வீடடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன், நோயாளிகளையும் அவர்களுடன் தொடர்புடையவர்களையும் துப்பறிவாளர்களாக அரசு தேடித் தேடிப் பரிசோதித்துக்கொண்டிருந்த காலத்தில், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் நோயாளிகள் மருத்துவமனையில் இடமின்றி, செயற்கை சுவாசக் கருவியின்றி, சாலையில் மரித்துக்கொண்டிருந்த போது, இங்கோ காரைக்குடியில் சின்ன முத்துமாரியம்மனுக்கு மாசி மாதக் காப்புகட்டும் திருவிழா நடந்துகொண்டிருந்தது. சோதனையோட்டமாக அறிவிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமை வீடடங்கிற்கு நான்கு நாட்கள் முன்னர் முத்துமாரியம்மனுக்கு இலட்சக்கணக்கான மக்கள் பால்குடமும், அக்கினிச் சட்டியும், காவடியும், வேலும் சுமந்துகொண்டு, […]

எழுத்து

அபத்தமானவனின் கனவு – ஃபியோதர் தஸ்தாயேவ்ஸ்கி

கோ.கமலக்கண்ணன் · 25.04.21

1 நான் அபத்தமானவன். இப்போது என்னைப் பைத்தியம் என்றும் அவர்கள் அழைத்து வருகிறார்கள். முன்பிருந்ததைப் போலவே அவர்கள் கண்களுக்கு நான் தெரிந்துகொண்டிருந்தால் பதவி உயர்வின்மை என்றாகிவிடுகிறது அல்லவா? என்னைப் பற்றிப் பேசிக் கேலிசெய்து சிரிக்கையிலும்கூட, எல்லோரும் என்னை அன்புக்குரியவனாக வைத்திருக்கிறார்கள்! சொல்லப்போனால் என்னை நகைப்புப் பொருளாக்கும் போதுதான் என் மீது அதீத அன்பு காட்டுகிறார்கள். என்னாலும் அவர்களோடு சேர்ந்து சிரித்துக்கொள்ள முடிகிறது. அதற்கு என்னை நானே கேலிசெய்து கொள்வதாகப் பொருளில்லை. இப்போதெல்லாம் அது குறித்து நான் ஆத்திரம் அடைவதில்லை. […]

எழுத்து

அகம் சுட்டும் முகம் (பகுதி 1): கே.ஜி.ஜார்ஜின் திரையுலகம்

எம்.கே.மணி · 25.04.21

தபலா அய்யப்பனுக்குள் இருப்பது என்னவாக இருக்கும் என்கிற யோசனை விட்டபாடில்லை. நான் முதன்முதலில் பார்த்த கே.ஜி.ஜார்ஜின் படம், ‘யவனிகா’தான். பரத் கோபி வருவார், போவார், யாருடனும் இணக்கமில்லை. முறைப்பும் உறுமலுமாக அவரை எங்கேயும் இருக்கவிடாமல் செய்து, குடி தினங்களால் தன்னையே விரட்டிக்கொண்டிருக்கிற அவன் யார்? ஒரு முறை பார்த்த படம், அடுத்த முறை பார்த்து இன்னும் சற்று விளங்கிக்கொள்ளும் வரையில் எனக்குள் ஒரு தழும்பு போலவே கிடந்தது. ஜார்ஜ் நல்ல படம் எடுப்பவர் அல்ல, யாரையும் பாதிக்கிற […]

எழுத்து

உறக்கமில்லாக் குருதி

ப.தெய்வீகன் · 25.04.21

[1] திரவத்தகடுகள் போல மினுங்கியபடி புரளும் யாரா நதியின் அசைவுகளைப் பார்த்தவாறு கார்த்திகேசு புற்தரையில் அமர்ந்திருந்தார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவறாமல் ரயிலேறி மெல்பேர்ன் நகருக்கு வந்துவிடுகின்ற கார்த்திகேசுவுக்கு, இந்தப் புற்தரை சிநேகமாகி மூன்று மாதங்களாகின்றன. பூப்பையைத் தன் பக்கத்திலேயே பத்திரமாய் வைத்திருந்தார். வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்னரே நீர் தெளித்து கவனமாக எடுத்துவந்த பூக்கள். வீட்டில் பூக்கள் கிடைப்பது கடினம் என்று, மெல்பேர்ன் சிவா விஷ்ணு கோவிலில் சொல்லி எடுத்த பூக்கள் இவை. வெயில் ஏறிக்கொண்டுபோக, நீள் காற்சட்டையைக் கொஞ்சம் […]

எழுத்து

கணக்கு வாத்தியார்களும் கரப்பான் பூச்சிகளும்: தஸ்தாயேவ்ஸ்கியின் ‘நிலவறைக் குறிப்புகளில்’ இருத்தலியலின் நெருக்கடி

சித்துராஜ் பொன்ராஜ் · 25.04.21

ரஷ்ய எழுத்தாளர் ஃபியோதர் தஸ்தாயேவ்ஸ்கியின் படைப்புகளைத் தேதிவாரியாக வாசிப்பவர்கள் ஓர் உண்மையை உணரக்கூடும். 1864க்கு முன்பாகத் தஸ்தாயேவ்ஸ்கி தன்னை மகத்தான எழுத்தாளர் என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எதையும் எழுதவில்லை. 1844ல் வெளிவந்த அவருடைய ‘ஏழைகள்’ என்ற நாவலும் 1862ல் அவர் சிறைக்குச் சென்றுவந்த பின் எழுதிய ‘மரண வீடும்’ விளிம்புநிலை மக்கள் படும் துயரங்களை எடுத்துச்சொல்லும் வகையில் ரஷ்ய இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க மைல்கற்களாக அமைந்தன. இந்த இரண்டு நாவல்களிலும் – குறிப்பாக ‘மரண வீட்டில்’ – தஸ்தாயேவ்ஸ்கியின் பாத்திரப் […]

எழுத்து

தலித்துகளின் வாழ்வு முக்கியம் என்று கருதும் நிலை இந்தியக் கல்வி நிறுவனங்களில் எப்போது உருவாகும்? – தீபக் மல்கான்

மைதிலி · 25.04.21

ஆசிரியர், மாணவர் அமைப்புகளில் பன்முகத்தன்மையைக் கொண்டுவர வேண்டும் என்பது குறித்த வாதங்களை பிரின்சிடன் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கிறார்கள். ஆனால், இந்திய உயர்கல்வி நிலையங்கள், தமது நிறுவனங்களில் பிராமண மேலாதிக்கம் நிலவுவதைத் தொடர்ந்து மறுத்துவருகின்றன.  தனது பொது, பன்னாட்டு விவகாரங்கள் பள்ளியிலிருந்து உட்ரோ வில்சனின் பெயரை நீக்குவதாக பிரின்சிடன் பல்கலைக்கழகம் கடந்த ஆண்டில் அறிவித்தது. வில்சன் பள்ளியின் முன்னாள் மாணவன் என்ற முறையில் இதை நான் ஆமோதிக்கிறேன். சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு. 2015ஆம் ஆண்டு உட்ரோ வில்சனின் பெயரை நீக்குமாறு […]