Category: எழுத்து

Editor's Picks

Editor’s Picks

கோகுல் பிரசாத் · 27.02.21

மௌனத்திற்குத் திரும்புதல் – Everlasting Moments (2008) சுவீடன் தேசத்து இயக்குநர் யான் ட்ரோவெலுக்கு (Jan Troell) வாழ்வு சாசுவதமானது எனும் நம்பிக்கையின் மீது அதீத பற்று உண்டு. ஆகாசத்திற்கு விரையும் ஊஞ்சல் ஆடி ஓயும் கணத்திற்காக காத்திருப்பவர். வண்டி எதிர்நோக்கிச் செல்லும் பாதையைப் போலவே அது சேறில் பதித்துச்சென்ற தடங்களும் அவருக்கு அத்தியாவசியமானவை. சாதாரண மனிதர்களின் சாகசமற்ற வாழ்க்கையைத் துழாவி காவியப் பரிமாணங்களைக் கண்டடைபவர். தீர்மானமாக ஒன்றைக் காட்டிவிட வேண்டும் என்ற கட்டுப்பெட்டித்தனமான எண்ணம் ஏதும் […]

எழுத்து

தமிழினியின் புதிய வெளியீடுகள் 2021

கோகுல் பிரசாத் · 27.02.21

இந்நூல்கள் அனைத்தும் சென்னைப் புத்தகத் திருவிழாவில் கிடைக்கும். தமிழினி பதிப்பகத்தின் அரங்கு எண்கள் 156-157, 483. நாவல்கள்: சிறுகதைகள்: மொழியாக்கங்கள்: கட்டுரைத் தொகுப்புகள்: கவிதைகள்: பொது: சுயசரிதை: * தொடர்புடைய பதிவுகள்: தமிழினியின் புதிய வெளியீடுகள் 2020

எழுத்து

சாந்தாரம்

மயிலன் ஜி சின்னப்பன் · 27.02.21

[1] நானே வலியச்சென்று அந்தப் பணியை ஏற்றுக்கொண்டதற்கு முதற்முக்கிய காரணம், வந்திருப்பவர் ஷிவ்குமார் சார் என்பதுதான். கூடுதல் காரணமாக அந்தக் குட்டிப்பெண்ணையும் சேர்த்துக்கொள்ளலாம். அதோடு அவர் பயணிக்க விரும்பியதாய்ச் சொன்ன ஸ்தலங்களும் அத்தனை அலைச்சலைக் கோராதவை. பெரும்பாலான பேராசிரியர்களைப் போல அவர் தனக்கு இன்ன வாகனம் ஏற்பாடு செய்யப்பட வேண்டுமெனவும் எங்களைச் சிரமப்படுத்தவில்லை. ஊரிலிருந்து தன்னுடைய காரிலேயே வந்திருந்தார். உடன் சென்றுவிட்டு வந்தால் மட்டும் போதும். தமிழகத்தின் இரண்டு முக்கிய நகரங்களை இணைக்கும் சாலைகளில் கும்பகோணத்திற்கும் தஞ்சாவூருக்கும் […]

எழுத்து

அது நீ

லோகேஷ் ரகுராமன் · 27.02.21

“நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான். அவன் உள்ளும் புறமும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.” –யோவான் 10:9 “ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன். அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன்” –யோவான் 10:18 [1] “ஜூடாயா பாலைவனத்திலுள்ள ஒரு பழங்குடி இடையர் இனத்தின் எச்சில்களை உனக்காக சேகரித்து வைத்திருக்கிறேன். கிளம்பி வா” என்று ஜியாத் […]

எழுத்து

இரண்டு திருமணங்களும் ஒரு விவாகரத்தும் – ஐசக் பாஷவிஸ் சிங்கர்

எஸ்.கயல் · 27.02.21

செருப்பு தைக்கிறவனிடம் எடுபிடி வேலை செய்துகொண்டிருந்த ஒருவனுக்கு ஒரு சமையல்காரியோடு திருமணம் நிச்சயம் ஆகியிருந்தது. ஆனால் அவளோ மனைவியை இழந்த ஒருவனைத் திருமணம் செய்துகொண்டாள். இந்த துரோகத்தால் மனமுடைந்த அவன் இலையுதிர் கால நாளொன்றில் க்ரோச்மல்ணா சாலையில் தற்கொலை செய்துகொண்டான். க்ரோச்மல்ணா சாலை முழுதும் இதே பேச்சாக இருந்தது. யூதச்சமய மக்கள்கூட ராட்ஜிமினர் பாடசாலையில் இது குறித்து விவாதித்தனர். ஒவ்வொரு மாதத்திலும் இரு வாரங்களுக்கு இயல்பான மனநிலையிலும் மீதமுள்ள இரு வாரங்களுக்கு மனம் பிறழ்ந்தும் காணப்படும் திருநங்கையான மெயர், ட்ரகோமா […]

எழுத்து

தமிழ்ச் சிறுகதையின் திருமூலர்: கு.அழகிரிசாமி படைப்புகளில் காமம் (பகுதி 3)

மானசீகன் · 27.02.21

கு.அழகிரிசாமி காமத்தை அதிகம் சித்தரித்தவரில்லை என்று பொது வாசக மனம் நம்பியதற்கு சில காரணங்கள் உண்டு. அவர் காமம் சார்ந்து மனித மனங்களின் மீதான அறுவை சிகிச்சையில் ஈடுபடுவதில்லை. காமத்தின் விசித்திரங்களைச் சுட்டிக்காட்டி அதிலிருந்து கடந்துவர துறவியைப் போல் வழிகாட்டுவதில்லை. காமத்தை சாக்காக வைத்துக்கொண்டு கடவுள், தத்துவம் என்று உபதேசம் செய்வதில்லை. காமம் சார்ந்த உணர்ச்சிகரமான சித்தரிப்புகளையோ நாடகீயமான தருணங்களையோ வலிந்து உருவாக்குவதில்லை. காமத்தின் இயக்கம் பெரிய அளவில் காட்சிச் சித்தரிப்பாகக்கூட நிகழ அனுமதிப்பதில்லை. காமத்தைப் பேசுகிற பாவனையில் […]

எழுத்து

பூடபெஸ்டை அடைதல் – நோவயலட் புலவாயோ

சசிகலா பாபு · 27.02.21

நாங்கள் பூடபெஸ்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம் – பாஸ்டர்ட், சிபோ, காட்நோஸ், ஸ்போ, ஸ்டினா, நான். மிட்சிலிகாஸி சாலையைக் கடக்க எங்களுக்கு அனுமதி கிடையாது, பாஸ்டர்ட் தனது குட்டித்தங்கை பிராக்‌ஷனை கவனித்துக்கொள்ள வேண்டியிருந்தது, நாங்கள் செல்வது தெரிந்தால் என் தாய் என்னைக் கொன்றேவிடுவார், இவற்றையெல்லாம் மீறி நாங்கள் பூடபெஸ்ட் செல்கிறோம். அங்கு சென்றே தீருவோம். நாங்கள் திருடி உண்ண பூடபெஸ்டில் நிறைய கொய்யாக்கள் உள்ளன. இப்போதைக்கு அந்த கொய்யாக்களுக்காக என் உயிரைக் கொடுக்கவும் நான் தயாராக இருக்கிறேன். காலையில் […]

எழுத்து

மின்னும் வண்ணப் பூக்களெல்லாம் (பகுதி 7): ராஜாவின் பாடல்கள்

ஆத்மார்த்தி · 27.02.21

இசை என்பது தன் வடிவம், உள்ளடக்கம், வாத்தியத் தேர்வு, வழங்குமுறை, நகர்திசை, புறச்சப்தங்களின் பங்களிப்பு, அகவுணர்வுகளைப் பிறப்பிப்பதற்கான முன்னுரிமை, இருப்பு மற்றும் நீக்கம் ஆகிய இரட்டைத் தன்மைக்குள் குரல்களின் இயங்குமுறை எனப் பல கூறுகளை அடிப்படையாகக் கொண்டு காலத்திற்கேற்ப மாறிவருகிறது. இளையராஜாவுக்கு முன்னும் பின்னுமாய்த் திரை இசையை இரண்டாய்ப் பகுத்துப்பார்க்கும் போது அவருடைய முதலிசைக் காலமாக 1990ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தைச் சொல்லமுடியும். அதன் பின்னர் இளையராஜாவின் அடுத்தகால இசையை நோக்கிய தேடல் காலமாகக் கொள்ளலாம். அந்த […]

எழுத்து

தலைமைக் காவலரின் மனைவி – பால்சாக்

இல. சுபத்ரா · 27.02.21

அர்மனாக்கின் தலைமைக் காவலதிகாரி தான் விரும்பியது போன்ற வளமான எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளும் பொருட்டு கோமாட்டி ‘பான்’-ஐ மணம் முடித்தார். அப்பெண்ணோ, அதற்கு முன்பே, மன்னர் ஆறாம் சார்லஸின் அரண்மனை காரியஸ்தருடைய மகனாகிய இளைய சர்வஸியிடம் தன் மனதைப் பறிகொடுத்திருந்தார். தீரமிக்கப் போர்வீரனான தலைமைக் காவலதிகாரி அழகற்றவராகவும் கடுமையானவராகவும் அடர் தாடியுடனும் எப்போது பார்த்தாலும் சினத்தில் வார்த்தைகளை உமிழ்பவராகவும் தூக்கிலிடுவதையே தொழிலாய்க் கொண்டிருப்பவராகவும் போர்க்களச் சிந்தையிலோ அல்லது காதல் தவிர்த்த பிற விஷயங்களிலோ மூழ்கியிருப்பவராகவும் இருந்தார். திருமண வாழ்வின் இனிமையை […]

எழுத்து

திரிபுகால ஞானி

போகன் சங்கர் · 27.02.21

தவறாகக் கால் வைத்துவிட்டோமோ என்று பதறி ஒரு கட்டம் பின்வாங்குகிறேன் நான். “சிப்பாய்க்கு பின்வாங்கல் அனுமதி கிடையாது” என்று நகைக்கிறாள் ராணி. * ஆம் என்றால் ஆம் என்றும் இல்லை என்றால் இல்லை என்றும் பொருள் தரும் ஒரு உறவில் இருந்த வரை இரவுக்குப் பிறகு பகல் வந்தது. கடிகாரத்தின் முகம் வட்டமாய் இருந்தது. இப்போது எல்லாம் குழப்பம். எவ்வளவு பேசியும் எதையும் பேசவில்லை என்ற உணர்வு. எதையும் பேசாவிட்டாலும் எதையோ சொல்லிவிட்டாற்போல் ஒரு களிப்பு. நிலவென்றோ […]

எழுத்து

யானை போம் வழியில் வாலும் போம்!

நாஞ்சில் நாடன் · 27.02.21

எம் மூத்த எழுத்தாளர் ஹெப்சிபா ஜேசுதாசன் அவர்களின் ‘புத்தம் வீடு’ நாவல் வாசித்துக்கொண்டிருந்த என் பாண்டிச்சேரி நண்பர் அமரநாதன் திடீரென அலைபேசியில் கேட்டார்- ஓர்மை எனும் சொல்லுக்கு என்ன பொருள் என்று. அவர் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். கணிதம் பயிற்றியவர். எல்லா அர்த்தத்திலும் பாண்டிச்சேரியில் எமக்கொரு சரணாலயம். செம்மூதாய் கி.ரா., ஃபிரெஞ்சுப் பேராசிரியர் மொழிபெயர்ப்பாளர் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயக்கர், நாகரத்தினம் கிருஷ்ணா, இதழாளர் பி.என்.எஸ்.பாண்டியன், பேராசிரியர் க.பஞ்சாங்கம், ஈரோடு மருத்துவர் ஜீவானந்தம் ஆகியோரது நண்பர். சிறந்த நவீன […]

எழுத்து

டீ-ஷர்ட்

பா.திருச்செந்தாழை · 27.02.21

அவன் எதிர்பாராத வினாடியில் அவர்கள் மூவரும் அவனை மறித்து நிறுத்தியபோது, அவனது கையில் ஒரு கறுப்பு கேரிபேக்கில் சுற்றப்பட்ட நாப்கினும் பிரெட் பாக்கெட்டும் இருந்தன. சடுதியில் அவன் சுதாரித்து நழுவ முயலுகையில் தங்கவேலு ஓங்கி ஓர் அறைவிட்டார். அதிகாலை பஜாரின் ஆட்கள் சட்டென கவனிக்க ஆரம்பிப்பதை உணர்ந்தபடி, தங்கவேலுவின் கைகள் தன்னிச்சையாக பின்பக்க பெல்ட்டில் சொருகி வைக்கப்பட்ட வாக்கி-டாக்கியின் பட்டனை ஆன் செய்தது. வாக்கி டாக்கியின் இரைச்சலும் அதிகாரமுமிக்க ஆணியால் கிறுக்குவதைப் போன்ற ஒலிக்குறிப்புகள் அங்கே நின்று […]