Category: எழுத்து

எழுத்து

நாயகனின் சாகசம்: ஜோசப் கேம்ப்பெல்

மோகன ரவிச்சந்திரன் · 25.01.21

பில் மோயர்ஸ், தொன்மவியலாளர் ஜோசப் கேம்ப்பெல் ஆகிய இருவரும் இலக்கியத்திலும், நிஜ வாழ்விலும், மேலும் ஸ்டார் வார்ஸ் திரைப்படங்களிலும் நிலையான, தொடர்ச்சியான நாயக வடிவமைப்பு உட்பட செவ்வியல் நாயக சுழற்சியை ஆய்வுசெய்கின்ற, அடிப்படைகளைத் தகர்க்கின்ற முடிவற்ற உரையாடலைத் துவக்கினர். பார்வையாளர்கள் தங்கள் சொந்த வாழ்வின் பகுதிகளை நாயகப் பயணங்களாகக் காணும் போக்கை கேம்ப்பெல் உற்சாகப்படுத்துகிறார். முதல் அத்தியாயத்தின் ஒரு காட்சியில், பார்வையாளர்கள் தங்களை எது கிளர்ச்சியடைச் செய்கிறது என்பதைக் கண்டறியத் தூண்டுவதோடு, தங்கள் சொந்தப் பயணங்களுக்கான அடித்தளத்தை […]

எழுத்து

உமையொருபாகன்

பாலாஜி பிருத்விராஜ் · 25.01.21

“இழுத்து உள்ள விட்றா அவன”. காலுக்குக் கீழே நீரின் கலங்கலாக குரல் ஒலித்தது. எட்டிப் பார்த்தேன். முங்கி எழுந்த பளபளப்பு உடலுடன் எனக்குப் பின்னால் பார்த்து ஜெயராம் அண்ணா கத்திக்கொண்டிருந்தான். முகத்தில் நீர் வழிவுடன் ஒரு சிரிப்பும் இருந்தது.  அப்போதுதான் எங்கிருக்கிறேன் என்கிற உணர்வு வந்தது. கிணற்றுச் சுவரில் அமர்ந்திருந்தேன். சுவரில் என்றால் சுவர் நுனியில். அத்தனை நேரம் எப்படி விழாமல் இருந்தேன் என ஆச்சரியமாக இருந்தது. ஏதொவொன்று என்னைக் கீழே விழாமல் தடுத்திருக்கிறது. பின்னால் திரும்ப […]

எழுத்து

மின்னும் வண்ணப் பூக்களெல்லாம் (பகுதி 6): இளையராஜாவும் எஸ்.பி.பியும் – வரலாற்றில் இருவர்

ஆத்மார்த்தி · 25.01.21

தேவைப்படுகிற துல்லியத்தில் எந்தவொரு பாடலையும் பதிவு செய்வதுதான் இசையமைத்தலின் முக்கியக் கட்டம். ஒவ்வொரு பாடலுக்கும் அதற்கென நிலையான செல்திசைப் பின்னணி ஒன்று அமையும். மேடைக் கச்சேரிகளிலோ நேர்முகப் பேட்டியிலோ இசையுடனோ இன்றியோ பாட முனையும்போது அந்தப் பாடலின் பதிவுக் கணத்திற்குத் திரும்பச் சென்று அங்கே நின்றபடி பாடுவதுதான் துல்லியமான மறுநிகழ்தலை வாய்த்துத் தரும். பாடல்களை அவற்றின் பதிவுத் துல்லியத்தோடு எப்போதும் பாடுவது இயந்திரத்தாலன்றி மனித எத்தனத்தால் முடியாத ஒன்றுதான். முன்பே சொல்கிறாற் போல் எந்தப் பாடலையுமே அதனதன் யதார்த்தப் புள்ளியிலிருந்து […]

எழுத்து

கோபயாஷியின் ‘Rebellion’: ஒரு பெண்ணியக் கிளர்ச்சி

விலாசினி · 25.01.21

மனித நாகரீகத்தின் பழமை வாய்ந்த பண்பாடுகளில் ஒன்றான ஜப்பானிய சாமுராய் பண்பாடு அச்சமூகத்தின் கலை இலக்கியப் படைப்புகளில் பண்டைய காலம் முதல் நவீன காலம்வரை பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து தாக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் ஒன்று. குறிப்பாக சாமுராய் பண்பாட்டை மையமாகக் கொண்டு வெளிவந்த திரைப்படங்கள் எண்ணற்றவை. அவற்றை விரிவாக மூன்று வகைமைகளின் கீழ் பிரிக்கலாம்- அப்பாண்பாட்டின் மேன்மைகளை எடுத்துரைக்கும் படைப்புகள், அதை உள்ளது உள்ளபடி பதிவுசெய்பவை, அதன் போதாமைகளையும் போலிப் பெருமைகளையும் கேள்விக்குட்படுத்தும் அல்லது விமர்சிக்கும் படைப்புகள்.   என்றாலும், ஒரு […]

எழுத்து

குகைவாய் கழுகு

ப.தெய்வீகன் · 25.01.21

சுபத்ரா நிறைய இடங்களில் தடுமாறியிருக்கிறாள். முடிவெடுக்கும் திசை தெரியாமல் குழம்பியிருக்கிறாள். ஆனால், ஒருபோதும் வாழ்வை நினைத்து அச்சப்பட்டதில்லை. அடுத்த கணத்தை எண்ணி பீதியடைந்ததில்லை. இன்று மிருதுளா விடயத்தில்தான் பாம்பொன்றின் தொண்டைக்குள் அகப்பட்டிருப்பதுபோல அவள் உணர்ந்தாள். வருணின் மிருதங்க அரங்கேற்றம் நடைபெற்றுக்கொண்டிருந்த மண்டபத்திற்குள், உருட்டிச்செல்லும் வேகத்தில் வாகனத்தை மெதுவாக ஓட்டியபடியிருந்தாள். தரிப்பிடமொன்றினைத் தனது பதற்றம் மிகுந்த விழிகளினால் துழாவித் தேடினாள். வசதியான இடத்தைக் கண்டுபிடித்து, அதில் வாகனத்தை நிறுத்தும்போது, மெல்பேர்ன் “ரோஹினி ஸ்பைஸஸ்” உரிமையாளரும் மனைவியும் சுபத்ராவுக்கு கை […]

எழுத்து

சமகால அரசியல் சமூகப் பிரச்சனைகளை இலக்கியமாக்க முடியுமா? – Submission நாவலை முன்வைத்து

ஆர்.அபிலாஷ் · 25.01.21

மிஷல் வெய்ல்பெக் (Michel Houellebecq) தற்கால ஃபிரெஞ்சு நாவலாசிரியர்களில் முக்கியமானவராக கருதப்படுகிறவர். அவரை மகத்தான ஃபிரெஞ்சு நாவலாசிரியர் எனக் கருதுகிறவர்களும் உண்டு. அது உண்மையா என்பதற்கு பின்னால் வருவோம். வெய்ல்பெக்கின் Submission நாவல் பற்றி ஸிஸெக் ஓரிடத்தில் குறிப்பிட, அது ஏற்படுத்திய ஆர்வத்தில் நான் உடனே வாங்கிப் படித்தேன். இதையடுத்து வெய்ல்பெக்கின் வேறு சில நாவல்களையும் படித்தேன். இந்தக் குறிப்பை நான் எழுதுவதற்குக் காரணம் வெய்ல்பெக் எழுதுவது போன்ற நாவல்களின் சாத்தியங்களை நாம் தமிழில் பரிசீலிப்பது இல்லை […]

எழுத்து

கதை சொல்கிற இதயம் – எட்கர் ஆலன் போ

இல. சுபத்ரா · 25.01.21

அது உண்மைதான்! ஆமாம், நான் நோயுற்றிருக்கிறேன், மிக மோசமாக. ஆனால் நான் மனம் பிறழ்ந்துவிட்டேன் என்று ஏன் சொல்கிறீர்கள்? நான் பைத்தியம் என்று ஏன் சொல்கிறீர்கள்? நான் புத்திசுவாதீனத்துடன் இருப்பதை உங்களால் காண முடியவில்லையா? நான் பைத்தியமில்லை என்பது தெளிவாகத் தெரியவில்லையா? உண்மையைச் சொல்வதானால், நோய்மையே என் புத்தியையும் உணர்வுகளையும் புலன்களையும் கூர்மையாக்கி பலப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, எனது செவியுணர்வு மிகுந்த பலம் பெற்றிருக்கிறது. இதற்கு முன் கேட்டேயிராத சப்தங்களை என்னால் கேட்க முடிந்தது. சொர்க்கத்திலும் நரகத்திலும் ஒலிக்கிற […]

எழுத்து

முருகிற் சிவந்த கழுநீரும் முதிரா இளைஞர் ஆருயிரும் திருகிச் செருகும் குழல்மடவீர்

வி.அமலன் ஸ்டேன்லி · 25.01.21

உற்ற நண்பனிடம்கூடப் பகிர முடியாமல் போன அக்காதலை என்னவென்று சொல்ல? அக்கா என்றே அவளை அழைத்து வந்தேன். கிஞ்சித்தும் அப்படியொரு கெடுசிந்தை ஆரம்பத்திலில்லை. சத்தியமாக. பரிதாபத்தில் தொடங்கி பரிதவிப்பில் முடிந்தது. தேவி பத்மாவதி கணக்குப் பாடத்தில் முழுதாய் நூறு எடுப்பவள். என் கணக்கு நோட்டைப் படித்துப் பார்க்கிறேன் என்று எடுத்து வைத்துக்கொண்டதன் அர்த்தம் முழுதாய்ப் புரிய இரண்டு மூன்று மாதங்களாயின. என்னை ஆங்கில இலக்கணம் கற்றுக்கொடுக்கப் பணித்தாள். தொன் போஸ்கோ பள்ளியில் பாதிரிமார்கள் ஆங்கில இலக்கணம் நன்றாகச் சொல்லித் […]

எழுத்து

பூசல் தரும் புன்கணீர்: ஃபாஸ்பைண்டரின் திரையுலகம்

கோ.கமலக்கண்ணன் · 25.01.21

உலகெங்கிலும் கலைஞர்களில் செயல்வீரர்கள் இருந்திருக்கிறார்கள். தொய்வே இன்றி கலையின் மடியில் எரிந்து மடிந்தவர்கள். அத்தகையவர்களுக்கு கலையே தவணையில் அடையும் வீடுபேறு. கலையே உயிர் தளிர்க்கும் விடம். கலையே வாழ்வின் இருப்பிற்கான குரல் அல்லது எதிரொலி. கிழக்கிலும் மேற்கிலும் அவ்வாறு கலைக்கென வாழ்ந்து மறைந்த மேதைகள் உண்டு. வாழ்ந்த கணக்கின் தீர்வு ஒன்றுதான் எனினும் வாழ்முறையின் படிநிலைகள் தலைகீழ் விகிதத்தில் வெவ்வேறாக இருந்திருக்கிறது. கிழக்கின் ஞானம் தனக்குச் சொந்தமான எதையும் ஒவ்வொன்றாக கைவிட்டு இலகுவாகி விசும்பில் பறக்கும் பறவையின் பண்புடைத்தது. […]

எழுத்து

க.மோகனரங்கன் கவிதைகள்

க. மோகனரங்கன் · 25.01.21

கண்ணேறு கழித்தல் சிறு இலையெனமுளைவிடத் தொடங்கியஎனது இச்சைகள்,இனியும் வேலிகட்டிமூடி வைக்க முடியாதபடிக்குநெடிதோங்கி நிமிர்ந்து வளர்ந்துவிட,உறக்கத்தின் பாதியில்ஒசையெழாதுஒன்றன் பின்னொன்றாய்இறகசைத்தபடிஎழுந்து வருகின்றஎண்ணிறந்த வெட்டுக்கிளிகளைகனவில் கண்டுபதறியெழுந்தவன்,பயம் தெளிந்துபதற்றம் குறைந்த பின்பரிகாரமாய்நினைவின் நிரலொழுங்கைப் புரட்டி,அதனொரு இருள் மூலையில்மறைந்திருந்தபடிஎந்நேரமும்இமையாது வெறிக்குமந்தஇரு விழிகளையும்எச்சில் தொட்டு மிச்சமின்றி அழிக்கத் தொடங்கினேன். எண்ணும் எழுத்தும் சொல்லில் சுருக்கிட்டுநாள் கணக்கில் காத்திருந்துநான் பிடிக்கின்ற முயலுக்கெப்போதும்மூன்றே கால்;இதைப் படிக்கும் நீங்கள்இருக்காதென மறுத்துஎப்படியது சாத்தியமெனஎண்ணத் தலைப்படுவீர்களானால்அப்போது,அச்சிட்ட இக்காகிதத்தை விட்டுஅடுத்திருக்கும் கானகத்துள்ஓடி மறையுமதற்குஒருக்கால்நாமெல்லோரும் நம்பும்படியாகநான்கு கால் இருக்கலாம். திரவியம் மனம் மறுகி நான் நின்ற பொழுதுகளில்தனதேயான அருவ விரல்களால்எனது அகத்தின் சுருக்கங்களைவருடிப் போக்கியஉனது […]

எழுத்து

பச்சைப்பட்டு

சுஷில் குமார் · 25.01.21

“மக்ளே, முகூர்த்தப்பட்டு பச்சக் கலர்தான?” “ஆமா பெரிப்பா.” “செரி, அதையும் ஒனக்க பட்டு வேட்டி சட்டையையும் ஒரு தாம்பாளத்துல எடுக்கணும், மறந்துறாத.” “செரி, பெரிப்பா.” “சம்பங்கியும் ரோசும் நல்லா கனமா போட்டு கெட்டச் சொல்லு, என்னா? மொத்தம் ரெண்டு பெரிய மாலை, நாலடியோ அஞ்சடியோ இருக்கமாரி பாத்துக்கோ. பொறவு, பிச்சிப்பூ சரம் ரெண்டு பந்து, கிரேந்தி மாலை சின்னது ஒரு அஞ்சு, உதிரிப்பூ நெறைய வாங்கிக்கோ.” குதப்பிய வெற்றிலையைத் துப்புவதற்காக எழுந்து சென்றார் பெரியப்பா.  ஆச்சியின் குழி […]

எழுத்து

கார்த்திக் நேத்தா கவிதைகள்

கார்த்திக் நேத்தா · 25.01.21

யானைக் கதை அரூபமான யானையைநினைத்துக்கொள். நினைத்துக்கொண்டாயா? இப்போது யானையைமுழுவதும் மறந்துவிடு. மறந்துவிட்டாயா? நல்லது, இப்போதுஅரூபத்தையும் மறந்துவிடு. ஆகாசப் பால் குடிசையின் வெளியில்கன்னங்கரிய கல்லுரலில் அமர்ந்துபிள்ளைக்கு முலையூட்டுகிறாள் தாய். பக்கத்தில் வந்து நின்றுகொண்டதுபிள்ளைச் சிறு பூனை. முலையுண்டபடிபூனைக்குட்டியைப் பார்த்ததுமனிதக்குட்டி. வாலை அடித்துக்கொண்டதுபூனைக்குட்டிவெடுக்கென்று வாயை இழுத்துக்கொண்டது மனிதக்குட்டி. பிள்ளையைத் தோளில் ஆட்டிக்கொண்டேகாம்பில் கட்டிநின்ற துளிப்பாலைபூனைக்குட்டியின் வாயில் வழித்துவிட்டாள்.சப்புக்கொட்டி சப்புக்கொட்டிமேலே பார்த்தது பூனைக்குட்டிமயங்கி மயங்கி வந்ததுகருணைப் பெரும் ஆகாசம். மூட மேதைமை முன்னறிவதை ஒரு பெருந்திறமைஎன்று பீற்றிக்கொள்ளாதே நண்பனே! உன்னருமை மனைவிஉன்னை […]