Category: எழுத்து

எழுத்து

தமிழ்ச் சிறுகதையின் திருமூலர்: கு.அழகிரிசாமி படைப்புகளில் காமம் (பகுதி 2)

மானசீகன் · 22.12.20

காமம் குறித்து நுட்பமாக எழுதியவராக கு.அழகிரிசாமியைக் குறித்து பல விமர்சகர்களுக்குத் தோன்றாமலிருப்பதற்கு மிக முக்கியமான காரணம் ஒன்றுண்டு. அவர், தான் முனைந்து உருவாக்கிய டார்ச் கொண்டு எந்தக் கதாபாத்திரத்தின் மீதும் அடித்து, அவர்களின் காமத்தைப் பகிரங்கமாகச் சொல்ல வைத்தவர் அல்ல. சொல்லப்போனால், அவரே அது குறித்து விரிவாகப் பேசுவதில்லை. சம்பவங்களுக்கும் உரையாடல்களுக்கும் இடையிலான நுண்இடைவெளியில் நாமே கண்டறிய வேண்டிய மறைபொருளாகவே காமம் குறித்த அவரது பார்வை ஒளிந்திருக்கிறது. இதையும்கூட கண்ணி வெடியாக நினைத்து சம்பவங்களுக்குள் அவர் புதைத்து […]

எழுத்து

‘Rotten crazy bastards’: டிசிகாவின் ‘Two Women’

எம்.கே.மணி · 22.12.20

டிசிகாவின் படங்களைப் பார்ப்பதென்பது உலகை விரிவான பார்வையில் பார்க்கிற ஒரு நல்ல மனிதருடன் உட்கார்ந்து பேசுவது போல.  இயக்குநரைப் பற்றின அறிமுகம் எதுவுமில்லாமல் நான் முதன்முறையாக படம் பார்த்துத் திகைக்கும்போது, பை சைக்கிள் தீவ்சில் போர்வையை அடகுவைக்கிற காட்சியை ஒருபோதும் மறக்க முடியாதபடிக்கு தனியாக எடுத்துக்கொண்டு வந்தேன். அந்தப் போர்வையை கடையிலிருக்கும் ஆள் ஒரு அடுக்கில் வைக்கப்போகும் போது, பிரம்மாண்டமான அக்கடையின் எல்லா அடுக்குகளிலும் போர்வைகளாக குவிந்திருக்கும். இது தன்னுடைய கதாபாத்திரமான ஒரு தனி ஆளுக்குச் சூழ்ந்த துயர் […]

எழுத்து

தீர்த்த யாத்திரை

எம்.கோபாலகிருஷ்ணன் · 22.12.20

வியாழக்கிழமை கண்விழித்தபோதே பயம் தலைகாட்டத் தொடங்கியிருந்தது. சுப்ரபாதம் சன்னமாக ஒலித்திருந்தது. அம்மா வழக்கம்போல விடிகாலையிலேயே தலைகுளித்து, கோலமிட்டு, பூஜையில் உட்கார்ந்திருந்தாள். கையில் விளக்குடன் நின்ற சின்னக்காவைக் கண்டதும் படபடப்பு கூடியது. சங்கரி கிளம்பியிருப்பாளா?    ஒரு மாதமாய்ப் பேசி, விவாதித்து, சண்டைபோட்டு, இரண்டு நாட்களுக்கு முன்பு முடிவான திட்டம். காலையில் பத்து மணிக்கெல்லாம் சிவன்மலை அடிவாரத்தில் சந்திப்பதாக ஏற்பாடு. அங்கிருந்து மலையேறி கோயிலுக்குப் போவது, மாலை மாற்றி தாலி கட்டிக்கொள்வது என்றும் முடிவு. அதன்பிறகு கரூர் வரைக்கும் பேருந்துப் […]

எழுத்து

சூழ்வின் இருள்

இளங்கோவன் முத்தையா · 22.12.20

காலையில் வேலைக்குக் கிளம்பும் அவசரத்திலிருந்தாள் அமுதவல்லி. கண்ணாடி பார்த்து ஸ்டிக்கர் பொட்டை ஒட்டும்போதுதான் அதைக் கவனித்தாள். ஒரு சந்தேகத்தில் முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்துக்கொண்டு ஜன்னலின் அருகே நின்று வெளிச்சத்தில் வைத்துப்பார்த்த போது உறுதியாகத் தெரிந்தது… அது நரை முடிதான். முன்னெற்றியின் புருவத்திற்கு அருகே அந்த ஒற்றை நரைமுடி அழகாகச் சுருண்டுவிழாமல் இருந்திருந்தால், தனக்கு நரைக்க ஆரம்பித்திருப்பதே அவளுக்குத் தெரிந்திருக்காது. வேறு எங்கும் நரைத்திருக்கிறதா என்று விரல்களால் முன் தலையில் இருந்த முடிக்கற்றைகளை இலேசாக ஒதுக்கிப் பார்த்தாள். […]

எழுத்து

கதைநிலத்தின் விதைநெல்: இராசேந்திர சோழன் சிறுகதைகள்

குணா கந்தசாமி · 22.12.20

இராசேந்திர சோழனுடைய எழுபத்து ஏழு சிறுகதைகள் தமிழினி பதிப்பகத்தால் ஏறத்தாழ ஆயிரம் பக்கத் தொகைநூலாகத் தொகுக்கப்பட்டு டிசம்பர் 2014-இல் வெளியாகியிருக்கிறது. அஸ்வகோஷ் என்ற புனைப்பெயரிலும் அவர் எழுதியிருக்கிறார் என்ற தகவல் இலக்கிய வாசகர்கள் ஏற்கெனவே அறிந்ததுதான். தன்னுடைய இலக்கிய – அரசியல் செயற்பாட்டின் நெடிய அனுபவத் திரட்சியோடு இந்தத் தொகைநூலுக்கு அவர் எழுதியிருக்கும் பின்னுரை குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது. தொகுப்பை வாசித்து முடித்தபின் அவருடைய கதைகளைக் குறித்து எனக்குள் திரண்ட கருத்துகளும் தன் கதைகளைக் குறித்து அவரே சொல்லும் […]

எழுத்து

கலை வேட்கையின் நெருக்கடிகளும் தொலையும் யதார்த்தமும் 

அத்தியா · 22.12.20

கடந்த வருட சென்னைத் திரைப்பட விழாவில் மிகவும் ஈர்த்த திரைப்படங்களுள் Sibyl (2019) பிரதானமானது. குறிப்பாக, படைப்பாளியாகவிருப்பவர்கள் பாலின வேறுபாடின்றி தன் படைப்பை வழங்குவதற்காக, இயன்றவரை மேற்கொள்ளும் முயற்சிகளும் படைப்பு நெருக்கடிகளும் சுரண்டல்களும் விமர்சிக்கப்படுகின்ற அதேவேளையில், தனிப்பட்ட வாழ்க்கையில் குணப்படுத்த முடியாத காயங்கள், ஒரு படைப்பை உருவாக்குவதன் மூலம் அதைக் கடக்க முயலுதல், தன் அடையாளத்தை நோக்கிய தேடலின்பால் முன்னகர்தல் என்றவாறு திரைப்படத்தின் பார்வைகள் விரிந்துசெல்கின்றன. திரைப்படம் பெண்மையப் புனைவின் வழி நகர்ந்து, முழுக்க முழுக்க படைப்புசார் சுயவிமர்சனப் […]

எழுத்து

ஓசைகள்

கே.ஜே.அசோக்குமார் · 22.12.20

அதிகாலையில் ஒலிக்கப்படும் இசையில் குளிர் இருக்கிறது. மென்குளிரில் நீர்நிலையில் மேல் ஏற்படும் சிறு அதிர்வை ஒத்திருக்கிறது. காதுகளுக்குள் நுழையும்போது இதமான குளிருடன் நுழைகிறது. அந்தக் குளிர், பனிபடர்ந்த உயரத்திலும் அந்தரத்திலும் உடலைத் தூக்கிச் செல்கிறது. இனிய மதுவை முகர்ந்து பார்க்கும் சிலிர்ப்பு, சிறுதுளியாக உதடுகளில் விழுந்து வயிறை அடையும் பிரம்மாண்ட தருணம் இசையின் தொடக்கம். மேலேறும் வயலினின் ஓட்டத்தை இடைநுழைந்து அலகுகளாகப் பிரிக்கும் பியானோவின் இசை, இவற்றை குதிரை ஓட்டத்தோடு பின்தொடர்கிறது தபலா.  எங்கே நிற்கிறேன்? என்னை […]

எழுத்து

தல்ஸ்தோய் மானுட நேயரா?

ஜெயமோகன் · 18.11.20

பகுதி 1: மானுடவாதம் எனும் சிந்தனை இலக்கிய வாசகனின் பரிணாமம் ஒன்றை உருவகிக்க முடிகிறது. அவன் இளமையில் கற்பனையுலகு ஒன்றில் வாழும்பொருட்டு வாசிக்கிறான். பின்னர் உயர்ந்த இலட்சியக் கனவுகளுக்காக வாசிக்கிறான். அதன்பின் வாழ்க்கையின் தருணங்களைக் கண்டறிவதற்காக வாசிக்கிறான். மேலும் முதிர்ந்து வாழ்க்கையின் புதிய நுட்பங்களைக் கண்டடைவதற்காக வாசிக்கிறான். அதன்பின் இலக்கிய வாசகன் என்ற அடையாளத்தை அடைந்ததும் புதிய வகையான கூறுமுறைகளுக்காக வாசிக்கிறான். அங்கேயே நின்றுவிடுபவன் இரக்கத்திற்குரியவன். வழிதவறி பாலைநிலத்துக்குச் சென்றுவிட்டவன். அங்கே சென்றதுமே திரும்பி மீண்டும் வாழ்க்கையின் […]

எழுத்து

தல்ஸ்தோய் – கலைஞன், போதகன், துறவி! (பகுதி 1)

போகன் சங்கர் · 18.11.20

(தல்ஸ்தோயை உளவியல் ரீதியாக அணுகும் இந்தக் கட்டுரைக்கு முதல் தலைப்பாக பாவியும் ஞானியும் என்று இருந்தது. அதுவே சரியான தலைப்பாகவும் சில நேரங்களில் தோன்றுகிறது) இந்தியப் புலத்தில் தல்ஸ்தோய் அளவுக்கு உச்சரிக்கப்பட்ட பெயராக வேறு எந்த இலக்கியவாதியின் பெயரும் இருக்க முடியுமா என்று தெரியவில்லை. இலக்கியம் தங்கள் வாழ்வின் முக்கியமான ஒரு பகுதியாக இல்லாதவர்கள் வாழ்விலும் அவர் முக்கியமான பாதிப்பைச் செலுத்தியிருக்கிறார். உதாரணம், காந்தி. இதற்கு தல்ஸ்தோயின் இலக்கியமல்லாத பிற்கால எழுத்துகள் காரணம் என்றாலும் தல்ஸ்தோய் இலக்கியத்தின் மூலமாகவே அவருடைய […]

எழுத்து

எழுத்தில் விரியும் வியனுலகம்: தல்ஸ்தோயும் காந்தியும் – The Kingdom of God is Within You நூலை முன்வைத்து

த. கண்ணன் · 18.11.20

(1) என்னை மிகவும் கவர்ந்த, என்மீது தாக்கம் செலுத்திய ரஷ்ய ஆக்கங்கள் பலவுள்ளன. ஆனால் என்னைக் கலைத்துப்போட்டவை இரண்டு. முதலாவது, தஸ்தாயெவ்ஸ்கியின் நாவலான நிலவறைக் குறிப்புகள். அது வெறுமையான வாழ்க்கைச் சுழலில் சிக்கியிருந்த ஒரு சாதாரண அலுவலனின் கீழ்மைகளையும் கசப்புகளையும் குவித்து இருத்தலியற் பின்புலத்தில் முன்வைத்த நாவல். நானும் முன்பு ஒரு நிறுவனத்தில் பணிசெய்துகொண்டு அப்படியான ஒரு நச்சுச்சுழலில் இருந்தபோது அதன் முதல்பகுதியின் பாதியைக்கூடக் கடக்க முடியாதவாறு என்னைச் சுட்டெரித்தது. அச்சுழலில் இருந்து விடுபட்டு வாழ்க்கைக்குப் புதிய […]

எழுத்து

நூறு ரூபிள்கள்

மயிலன் ஜி சின்னப்பன் · 18.11.20

1 “எங்கள் சிப்பாய்களில் எவனும் உன்னைக் காதலித்து ஏமாற்றிவிட்டானா?” என் குரலிலிருந்த பரிகசிக்கும் தொனிக்கும் அவளது திடுக்கிடும் பாவத்திற்கும் துளியும் பொருந்திப் போகவில்லை. படுக்கை விரிப்பின் மறுமுனையில் கிடந்த எனது இடுப்புவாரைக் கையிலிடுத்து வினோதமாக உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பவளின் கவனத்தைக் கோரவே அக்கேள்வியைக் கேட்டிருந்தேன். “என்ன கேட்டீர்கள்?” ஏற்கனவே சிவந்திருந்த கன்னத்தில் புது இரத்தம் பாய்ந்திருந்தது. “ஒன்றுமில்லை.. என்னவோ குறிப்பற்று சொன்னேன்”. அறைக்குள் நான் நுழைந்ததிலிருந்து அவளது பார்வையில் அத்தனை ஆழம் இருக்கவில்லை. சிமிட்டாத இமைகள் அவள் அந்தப் […]

எழுத்து

தல்ஸ்தோயின் க்ராய்ட்சர் சொனாடா அல்லது நரி முள்ளெலி டூயட்

நம்பி கிருஷ்ணன் · 18.11.20

ஒரு இலக்கியப் படைப்பு ரயில் பயணத்தின் எல்லைக்குட்படுத்தப்படுவது ஏதோ ஒரு விதத்தில் நம் மனதைத் தொடுகிறது. சொல்லப்படுவதற்காக அதற்கு அளிக்கப்பட்டிருக்கும் நேரம் அதை உடனழைத்துச் செல்லும் பயணத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. அதைச் செவிமடு்ப்பவர்கள் அதில் பாத்திரம் வேடம் தரித்துக்கொண்டாலும், அவரவர் நிறுத்தங்களில் ரயிலையும் அதையும் விட்டு, தங்கள் அன்றாடத்தைத் தொடரப் போய்விடுகிறார்கள். பயணம் முடிகையில் அது தனித்து நிற்கிறது, அதன் வருங்கால வாசகப்-பயணியை எதிர்பார்த்து.  சாகியின் கதைசொல்லி என்று தலைப்பிடப்பட்ட கதைதான் இவ்வகைமையில் எனக்கு மிகவும் பிடித்தமான கதை. அதில் […]