Category: எழுத்து

Editor's Picks

Editor’s Picks

கோகுல் பிரசாத் · 24.08.20

எது நல்ல படம் என்பதற்கான அடிப்படை அளவுகோலாக ஒரு குறிப்பிட்ட படத்தின் திரைமொழியை முன்வைத்தே உரையாட முடியும். திரைமொழி என்றால் என்ன? எளிமையாகச் சொல்லவேண்டுமெனில் திரைப்படம் என்பது காட்சி ஊடகம். எதையும் வசனமாகச் ‘சொல்லாமல்’ பார்வையாளர்களுக்கு உணர்த்த விரும்புவதைக் ‘காட்ட’ வேண்டும். இதன் அர்த்தம், குறைவான வசனங்கள் உள்ளவையே நல்ல படங்கள் என்பதல்ல. கதாபாத்திரங்களின் உணர்ச்சிகள், மெல்லிய உருமாற்றங்கள், உளவியல், சம்பவங்களின் பின்னணி, அதன் பாதிப்புகள் என எல்லாவற்றையும் உரையாடல் வழியே ஒப்புவித்துச் செல்லக்கூடாது. செறிவான காட்சிப்படிமங்களின் […]

எழுத்து

ஊழ்த்துணை

மயிலன் ஜி சின்னப்பன் · 24.08.20

1 இப்படி வந்து உட்கார்ந்திருக்க நேருமென்று சண்மு எதிர்பார்த்திருக்கவில்லை. மற்றுமொரு வெற்றுநாள் என்பதாகத்தான் புறப்பட்டிருந்தான். கடைசியில் இப்படி கொண்டு வந்து விட்டிருக்கிறது. அடர்த்தியாக இருட்டிவிட்டிருந்தாலும், எந்தவோர் அமானுஷ்ய அறிகுறிகளும் இல்லாமல்தான் அந்த இடம் இருந்தது. முன்னிரவிற்கான சம்பிரதாய சப்தங்கள் தாண்டிய சிலவும் கேட்டுக்கொண்டிருந்தன. அடுத்த வளைவிலிருந்த டீக்கடைகளிலிருந்து மனநிலைக்குத் துளியும் ஒவ்வாத பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தன. அவை இல்லாவிடினும் அவ்விடத்தில் தனிமையில் உட்கார்ந்திருக்க முடியாதுதான். தனித்துவிடப்பட்டதன் துயரத்தை, உயிரற்றுக் கிடந்த அலைபேசி பெரிதாக்குவதாக தெரிந்தது. ‘இந்தா வந்துர்றேன்’ என்று […]

எழுத்து

புலரியில் மறைந்த மஞ்சள் கடல்

ப.தெய்வீகன் · 24.08.20

மயானத்துக்குப் பின்னாலிருந்த மஞ்சள்நிற கடுகு வயலிலிருந்து வந்த காற்று கருங்கல் மதிலின் மேலால் பாய்ந்து உள்ளே நுழைந்தது. அந்தியின் சூரியக்கதிர்களில் அசைந்துகொண்டிருந்த பெருமரங்களில் மோதியது. படர்ந்துநின்ற கொரம்பியா மரங்கள் சின்னதொரு ஆட்டத்தோடு அசைவை நிறுத்திக்கொண்டன. கல்லறைகளுக்கு அருகில் வரிசையாக நின்ற எப்கரிஸ் பூக்கள் தங்கள் இதழ்களை தரையில் சொரிந்தன. பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த சித்திர வட்டக்கற்களுக்கு கீழே பிறப்பும் இறப்பும் இரங்கற் கவிதைகளும் பதித்த கல்லறைகளின் மீது சில இலைகள் பறந்துசென்று விழுந்தன. நான் அந்த மயானத்தின் தென்கிழக்கு […]

எழுத்து

என் மனைவியின் கனி – ஹான் காங் – தமிழில்: சசிகலா பாபு

சசிகலா பாபு · 24.08.20

1 மே மாதத்தின் பிற்பகுதியில்தான் என் மனைவியின் உடலில் இருந்த அந்தக் காயங்களை முதன்முதலாகக் கண்டேன். வாயிற்காப்பாளரின் அறையினருகே இருந்த இளஞ்சிவப்பு வண்ண லிலாக் மலர்ப்படுகையில் இருந்து துண்டிக்கப்பட்ட நாக்குகள் போலப் பூவிதழ்கள் கொட்டிக்கிடந்த நாளொன்றில், மூத்த குடிமக்கள் மையத்தின் வாயிலில் போடப்பட்டிருந்த நடைபாதைப் பலகங்களின் மீது நடந்துசெல்வோரின் காலடிகளில் நசுங்கி வெண்ணிற மலர்கள் அழுகிப்போயிருந்த நாளொன்றில்தான் அவளுடைய காயங்களை நான் கண்டேன். அச்சமயம் சூரியன் உச்சத்தில் இருந்தது. எண்ணிறந்த அளவில் தூசுத்துளிகளையும் மகரந்தத்துகள்களையும் அள்ளி இறைத்தபடியே, […]

எழுத்து

எஞ்சுமா இந்தியப் பத்திரிகைகள்? – செல்வேந்திரன்

செல்வேந்திரன் · 24.08.20

ஜேம்ஸ் அகதஸ்தஸ் ஹிக்கி துவங்கிய பெங்கால் கெஸட்தான் இந்தியாவின் அதிகாரப்பூர்வமான முதல் பத்திரிகை. வாரன் ஹேஸ்டிங்க்ஸ் ‘கவர்னர் ஜெனரல்’ பதவியில் இருந்துகொண்டு எவ்வளவு லவட்டுகிறார் என்பதை அம்பலப்படுத்தியமைக்காக ஜேம்ஸ் சிறையில் அடைக்கப்பட்டார். மூன்றாண்டுகள் தண்டனை. விடுதலைக்குப் பின் அவரது மொத்த வாழ்வும் தேய்ந்தழிந்து அடையாளம் தெரியாமல் இறந்து போனார் ஜேம்ஸ். சுமார் 240 வருடங்கள் ஓடிவிட்டன. இன்னமும் இந்தத் தேசத்தில் அச்சு ஊடகங்களின் வாழ்க்கை ஜேம்ஸ் அகதஸ்தஸினுடையது போல அலங்கோலமாகத்தான் நீடிக்கிறது. இன்று இந்தியாவில் முறையாகப் பதிவு […]

எழுத்து

கேண்மை

கார்த்திக் பாலசுப்ரமணியன் · 24.08.20

தமிழில் வெளிவந்துகொண்டிருக்கும் கலை இலக்கிய மாத இதழ் ஒன்றுக்காக நேர்காணல் வேண்டுமென்று அழைத்திருந்தார்கள். அழைத்தவர் தமிழின் முக்கியமான கவி. பக்கத்து மாநிலம் ஒன்றில் வசிக்கிறார். நேர்காணலுக்காக மாநிலம்விட்டு மாநிலம் வரவேண்டும். சிரமப்பட வேண்டாம் என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் விடாப்பிடியாக வருவதாகக் கூறிவிட்டார். முந்தைய சந்திப்பில் அவர் குறிப்பிட்டுப் பேசிய புத்தகம் ஒன்றை அவருக்கு அளிப்பதற்காக புத்தக அடுக்கில் தேடிக்கொண்டிருந்தேன். தடித் தடியான புத்தகங்களை எடுத்து இடம் மாற்றி வைப்பதே அயர்ச்சியாக இருக்கிறது. கவனமாகக் கையாள வேண்டியிருக்கிறது. […]

எழுத்து

மின்னும் வண்ணப் பூக்களெல்லாம் (பகுதி 3): வழித்தடங்களும் வரைபடங்களும்

ஆத்மார்த்தி · 24.08.20

எம்.ஜி.ஆர் – சிவாஜி இரு துருவப் போட்டி ஒரு பக்கம். இயக்குநர்கள் ஸ்ரீதர், கே.பாலச்சந்தர் இருவருக்கும் தனித்த இரசிகர்கள் இருந்தார்கள். ஏ.சி.திருலோக்சந்தர், பி.மாதவன், எஸ்.பி.முத்துராமன், தேவராஜ் மோகன், சிவி.ராஜேந்திரன், கே.ஷங்கர், கே.விஜயன் எனப் பல கமர்சியல் இயக்குநர்களுக்கென்று தொடர்ந்த பட வரத்துகள் இருந்தன. எழுபதுகளின் மத்தியில் இந்திய சினிமாவில் நிகழ்ந்த மாபெரும் ஆளுமை உருவாக்கங்கள் என்று இளையராஜா, பாரதிராஜா, பாலுமகேந்திரா, ஜே.மகேந்திரன் ஆகிய நால்வரைச் சொல்லலாம். தமிழ் சினிமாவின் அடுத்தகட்டப் பாய்ச்சலைக் கரமேற்று களம் கண்டவர்கள் இவர்களாகவும் […]

எழுத்து

புதிய கல்விக் கொள்கை – அழகேச பாண்டியன்

அழகேச பாண்டியன் · 24.08.20

மோடி அரசின் “மகத்தான” சாதனைகளில் முதன்மையானது, அடுக்குமொழியில் கவர்ச்சிகரமான, அலங்கார வார்த்தைகளையும், முழக்கங்களையும் உருவாக்கியதேயாகும். 2014 வரை மோடி மட்டுமே பிரயோகித்து வந்த சொற்றொடர்கள் – பின்னாளில் அமைச்சர்கள், அதிகாரிகள் எனப் பரந்து விரிந்து தற்சமயம் அரசின் முக்கிய அங்கமாகிவிட்டன. தொழிற்முறை விளம்பர நிபுணர்கள் வழியே புதுப்புது வாசகங்கள், முழக்கங்கள், பிரகடனங்கள் போன்றவை நாள்தோறும் உருவாக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அடுக்குமொழி அரசை அதன்வழியிலேயே புரிந்துகொள்வதே பொருத்தமாக இருக்கும். அந்த வகையில் இந்த அரசை ‘3D சர்க்கார்’ என்கிறார் […]

எழுத்து

புழுதிவீணைமீட்டல்: Rectify நெடுந்தொடரை முன்வைத்து

கோ.கமலக்கண்ணன் · 24.08.20

வாட்கூர்மையின் பதத்தினை தொடுவுணர்வின் மூலம் அறியலாம். அதற்கும் முன்பே அது ஒளியைத் தாள்போல இரண்டாய்க் கிழித்து நம் விழியைக் கூசவைக்கும் எனில் தொட்டாயும் தேவையே இல்லை. அத்தன்மை கொண்ட புனைவுகளே இலக்கியத் தரத்தின் பீடங்களுக்கு இலாயக்கானவை. துய்த்து முடித்ததுமே சுடர்களை அணைத்துக்கொண்ட கனமும் பனிவீழலில் கால்புதைந்த உணர்வின்மையும் ஒன்றாய்ப் பொங்கும் நிலை. அத்தகைய மகோன்னத இலக்கியப் படைப்புகளுக்கு இயல்பாகவே சில பண்புகள் உண்டு. அரிதாய் நிகழ்வது, நிகர்வாழ்வுத் தருணங்களால் நிறைந்திருப்பது, போலியற்றிருப்பது. வாசகர் மனதில் நீண்டகாலத் தாக்கத்தினை […]

எழுத்து

அரோமா

லோகேஷ் ரகுராமன் · 24.08.20

பொறியியல் கலந்தாய்வை முடித்துவிட்டு நானும் என் தந்தையும் கிண்டியில் இருந்து தஞ்சாவூர் பஸ் ஏறியிருந்தோம். அன்று முழுதும் அயர்ச்சியாக இருந்தது. நான் சற்று நேரத்திலேயே உறங்கிவிட்டேன். நள்ளிரவில்தான் முழிப்பு தட்டியது. காற்றுக்காக பேருந்தின் கண்ணாடி ஜன்னலை இன்னும் கொஞ்சம் தாராளமாக திறந்து வைத்தேன். காற்று சட்டென என் முகத்தில் பட்டு அறைந்தது. இரவு நேரத்தின் குளிர் எனக்கு சற்று ஆசுவாசத்தினை ஏற்படுத்தியது. நான் தூங்காமல் விழித்துக்கொண்டிருந்தேன். அது வரைக்கும் நான் எண்ணியிராத சிந்தனை அப்போது என்னில் எழுந்தது. […]

எழுத்து

நிலவின் மகள்கள் – இடாலோ கால்வினோ

எஸ்.கயல் · 24.08.20

காற்றின் மேற்படலம் பாதுகாப்புக் கவசமாகச் செயலாற்ற மறுத்து வந்ததால் ஆதியில் இருந்தே விண்கற்களின் தொடர் தாக்குதல்களுக்கும் சூரியக் கதிர்களின் சிதைக்கவல்ல செயல்களுக்கும் உள்ளாகி வந்திருக்கிறது நிலா. கோர்ணல் பல்கலையின் தாமஸ் கோல்டைப் பொருத்தவரை விண்கற்களின் தொடர் தாக்குதல்களால் நிலவின் மேற்பரப்பில் இருந்த பாறைகள் பொடிப் பொடியாகிவிட்டன. நிலவின் வெப்பம் நிறைந்த பாறைக் குழம்பில் இருந்து வெளியேறிய வாயுக்கள் செயற்கைக்கோளுக்கு ஒரு ஒளியை, நுண்துளைகள் கொண்ட பியூமிஸ் கல்லின் திண்மையைத் தந்திருக்கலாம் என்பது சிகாகோ பல்கலைக்கழகத்தின் ஜெரார்ட் கியூப்பரின் […]

எழுத்து

சிறிய உலகின் பெரிய விஷயங்கள்: சாரா ஜோசஃபின் ‘ஆலாஹாவின் பெண்மக்கள்’

கே.என்.செந்தில் · 24.08.20

“முகத்தை வெளியே காட்டாமல் பாயைத் தொங்கவிடும் கொடியின் கீழே இருட்டில் மெல்ல மெல்ல கரைந்து போய்க்கொண்டிருக்கும் பெரிய அத்தை, எங்கே இருக்கிறார்களெனத் தெரியாமல் அலைந்து திரியும் நோனு அத்தையும் பேபியும், மெளனமாகிப் போன அம்மா, சிரிக்காத சின்னம்மா, இரண்டாயிரம் ரூபாய் சீதனத்தைத் தராததைக் காரணம்காட்டி குஞ்ஞிப்பாலுவால் பிறந்த வீட்டிற்கு வர அனுமதி மறுக்கப்பட்ட சிய்யம்மா, தொடர்ந்து வேதனைகளைப் பார்த்துப் பார்த்தே வயதாகிப் போன பாட்டி, ஆன்னியிடம் கூட மகிழ்ச்சியாக உரையாடாத குட்டிப் பாப்பன். எழுதியதை மாய்த்து விடலாம், […]