புத்தர் ஞானத்தில் கண்டடைந்தது என்ன?
அரசயிலை அரச மரத்தினடியில் அமர்ந்த துறவி கௌதமர் தனது ஒட்டுமொத்த மனவொருமிப்பு ஆற்றலால் தன்னுடலை ஆழ்ந்து உள்முகமாக நோக்கினார். தன்னுடலின் ஒவ்வொரு அணுவையும் முடிவற்றுப் பாயும் பிறப்பு, வாழ்வு, இறப்பு எனும் ஆற்றின் ஒரு துளியாகக் கண்டார். மாறாதவொன்றென எதுவும் அவ்வுடலில் இல்லை என்றும் தனித்ததொரு சுயமென எதுவுமில்லை எனவும் உய்த்தறிந்தார். உடலெனும் ஆற்றில் ஒன்றறக் கலந்தபடி உணர்ச்சிகள் எனும் வெள்ளமும் ஓட, ஒவ்வொரு உணர்ச்சியும் அவ்வாற்றின் ஒரு துளியாக இருப்பதைக் கண்டார். அத்துளிகள் பிறப்பு, வாழ்வு, […]
