Category: எழுத்து

எழுத்து

மயங்குகிறாள் ஒரு மாது – சி.சரவணகார்த்திகேயன்

சி.சரவணகார்த்திகேயன் · 16.05.20

கடந்த காலங்களில் ரமணிசந்திரன் எழுத்துகள் பற்றி நான் சமூக வலைதளங்களில் விமர்சன‌க் கருத்துகள் சொல்லி கடுமையான எதிர்ப்புகளைச் சந்தித்து இருக்கிறேன். அவரது வாசக பலம் அப்படி. கிட்டத்தட்ட ஒரு தற்கொலைப் படை மாதிரியான விசுவாசமான வாசகிகள் திரள். நான் முன்வைத்த கருத்துகள் பெரும்பான்மை பகடியானவை என்பதால் இது பற்றிய என் எண்ணங்களைக் கொஞ்சம் சீரியஸாக எழுதிப் பார்க்கலாம் எனத் தோன்றியது. அவ்வகையில் இது ஒரு சுயபரிசீலனை. ரமணிசந்திரன் 1970லிருந்து எழுதிக் கொண்டிருக்கிறார். படைப்புலகில் அவருக்கு இது பொன்விழா […]

எழுத்து

ரோசா மாமி

மானசீகன் · 16.05.20

‘ஒங்க ரோசா மாமி செஞ்ச காரியத்தை கேள்விப்பட்டீங்களா?’ நஜ்மா துணி மடித்துக் கொண்டிருந்தாள்.. நான் அப்போது தான் ஷூவை சுழற்றிக் கொண்டிருந்தேன். யாசிர் ஏற்கனவே ஃபோன் பண்ணியிருந்தான். எனக்கு ஏற்பட்டது அதிர்ச்சியெல்லாம் இல்லை. மனதின் இன்னொரு திறப்புதான். ஒவ்வொரு கதவாகத் திறந்து திறந்து கடைசியில் கதவே இல்லாத வெட்டவெளிக்குக் போய் நிற்பதுதானே வாழ்க்கை? ‘ம்…’ ‘என்ன அசால்டா ‘ம்’ ங்றீங்க.. எனக்கு கை காலெல்லாம் நடுங்கிருச்சு. அல்லா..! இந்த வயசுலயா? அப்படி என்ன உடம்பு சுகம் கேக்குது? […]

எழுத்து

பார்ஸி இடுகாட்டின் கழுகுகள் – அலி இமாம் நக்வி

கோ.கமலக்கண்ணன் · 16.05.20

எல்லாம் எதிர்பாராததாய் இருந்தது. அவர்கள் திகைப்படைந்தனர். அவர்கள் வெடுக்கென பாடையைக் கீழே வைத்துவிட்டு, சடலத்தை வெறித்துப் பார்த்தனர், பிறகு, கலங்கிய விழிகளால் இலட்சம் கேள்விகளுடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அவர்களது விழிமணிகள், கொஞ்ச நேரத்திற்குத் தங்கள் குழிகளுக்குள் அர்த்தமின்றி அங்குமிங்கும் நகர்ந்தன, அவை நின்ற பிறகு இருவரும் தமது புரிதலின்மையை வெளிப்படுத்தும் விதமாக தோள்பட்டையை குலுக்கிக் கொண்டனர். பிறகு, ஒரே சமயத்தில், தங்களது கழுத்துகளுக்கு வலியேற்படும் அளவிற்கு முகப்பழிப்புச் செய்து கொண்டே, தமது பார்வையை பார்ஸி இடுகாட்டில் […]

எழுத்து

போரும் காமமும்: அனோஜன் பாலகிருஷ்ணன் கதைகள்

எம்.கோபாலகிருஷ்ணன் · 16.05.20

மண்ணுக்கும் பெண்ணுக்குமான இச்சையே மனித வாழ்வைச் செலுத்தும் இரு புள்ளிகள். பிற உயிர்களைப் போல இயற்கையின் ஒரு பகுதியாக இருந்த மனிதன் தன்னைக் கட்டுப்படுத்திய எல்லைகளை அறிவின் திறத்தால் கடந்து வெகுதூரம் வந்துவிட்ட போதிலும் ஆதாரமான அந்த இரண்டு விசைகளில் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடவில்லை. உண்மையில் அவ்விரு விசைகளே இத்தனை தொலைவு அவனைச் செலுத்திக்கொண்டு வந்துள்ளன. இன்றைய மனித வாழ்வின் அனைத்து சாதனைகளையும் முன்னேற்றங்களையும் நவீன அடையாளங்களையும் பகுத்துக்கொண்டே சென்றால் அவற்றின் ஆழத்தில் எஞ்சி நிற்பது இந்த […]

English

Incognito – Theivigan Panchalingam – Translated by G. Kamalakannan

ப.தெய்வீகன் · 16.05.20

1 Churches in Australia had requested the people to pray for the consolance of his soul, tolling at evening six, on the day of passing his Death penalty for Arulkumaran. 2 Thavaranjani was hitting the doors of the jailhouse hard, crying. Although, permitted duration for visiting Arulkumaran had ceased, she kept hollering with deafening voice […]

எழுத்து

தோற்றப்பிழை – குமாரநந்தன்

குமாரநந்தன் · 16.05.20

விழிப்பின் போது அவனுக்கு ‘தான்’ என்பது நினைவுக்கு வந்துவிட்டது. கண் விழித்தல் என்ற செயலைத் தொடர்ந்து தன் உடல் படுக்கையில் கிடப்பதைப் புரிந்துகொண்டான். அப்போது அவன் தன்னுடைய பெயர் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றி யோசிக்கவில்லை. அவன் கைகளில் சலைன் இறங்கிக் கொண்டிருந்தது. சுற்றியிருந்த சுவர்கள் மெல்லிய வயலட் நிறத்தில் பளிச்சென்றிருந்தன. முன்னால் இருந்த சுவற்றில் ஒரு டிவி தொங்கிக் கொண்டிருந்தது. மனம் துடைத்து வைத்ததைப் போல எந்த நினைவுகளும் இன்றி இருந்தது. சூனியத்திற்கு நடுவே அந்த […]

எழுத்து

கற்பித்தல் முறையில் மாற்றங்கள் சாத்தியமா? – மார்க் ப்ரென்ஸ்கியின் கோட்பாட்டின் அடிப்படையில் ஒரு பார்வை

இல. சுபத்ரா · 16.05.20

கிருஷ்ணா கல்லூரி மாணவர்களுடன் ஆளுமைத்திறன் சார்ந்து உரையாற்றிய பின் கேள்வி நேரத்தில், “தற்கால மாணவர்களாகிய எங்களுக்கு பொறுப்பு இல்லையென்பது பிரதான குற்றச்சாட்டாக இருக்கிறது. அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று ஒரு மாணவர் கேட்டார். ”இந்தக்கால மாணவர்களாகிய உங்களது பெரும்பான்மையான நேரம் செல்பேசியிலும் இணையத்திலும் செலவழிக்கப்படுவதால் நீங்கள் எல்லாவற்றையும் மிக எளிதானதெனக் கருதிக் கொள்கிறீர்கள். எங்களது காலத்தில் அறிவு சார்ந்த ஒரே போக்கிடமாக ஆசிரியர்கள் இருந்தார்கள். ஆனால் உங்களுக்கு ஒரே நொடியில் எது குறித்த தகவல்களையும் […]

எழுத்து

துயிலாத ஊழ்: சமகால ஈழச் சிறுகதைகள் தீட்டும் கோட்டுச் சித்திரம்

கார்த்திக் பாலசுப்ரமணியன் · 16.05.20

இன்றைய தமிழ் இலக்கியப் பரப்பில் தமிழகத்திலிருந்து வெளிவரும் படைப்புகளுக்கு நிகராக தமிழகத்துக்கு வெளியேயிருந்தும் படைப்புகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதுவரை இல்லாத அளவுக்கு அப்படைப்புகளின் மீது வாசக கவனமும் குவிய ஆரம்பித்துள்ளது. இதற்கு அச்சு நூல்களின் நவீனமயமாக்கம், இணையப் பரவலாக்கம், சமூக ஊடகங்கள் மற்றும் அமேசான் கிண்டில் வழி மின்நூல்களின் வருகை எனப் பல்வேறு காரணங்களைக் கூறவியலும். இவ்வாறு தமிழகத்துக்கு வெளியேயிருந்து வரும் படைப்புகளில் மற்ற நாடுகளிலிருந்து வெளிவரும் படைப்புகளை ஒப்பிட ஈழப் படைப்புகள் ஒரு தனித்த […]

எழுத்து

தராசு

ப.தெய்வீகன் · 14.04.20

நாடு முழுவதும் ஒரு நாளில் சுமார் ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகும் ஆஸ்திரேலியாவின் “த ஏஜ்” பத்திரிகையின் முதல் பக்கத்தில் அன்று அந்தச் செய்தி வெளியாகியிருந்தது. இடமிருந்து வலமாக நீளமாக போடப்பட்ட பெரிய தலைப்பின் கீழ் கட்டம் கட்டப்பட்ட அந்தச் செய்தி தலைப்புச் செய்திக்கு இணையான முக்கியத்துவத்துடன் பிரசுரமாகியிருந்தது. ‘தும்பளை’ ஆறுமுகசாமி ஜட்டி போடாததற்கு எதிரான வழக்கு விசாரணை ஐந்து நாட்களாக மெல்பேர்ன் நீதிமன்றத்தில் நடைபெற்று முடிந்து அன்று தீர்ப்பு வெளியிடப்படவிருந்தது. யாழ்ப்பாணத்தின் ஈசான மூலையில் […]

எழுத்து

ஆனை கோடாலி – தர்மு பிரசாத்

தர்மு பிரசாத் · 14.04.20

எலுங்கப் பாறை முகட்டில் இருவர் தயங்கி நிற்பது தெரிந்தது. தயக்கம் எதிர்பார்த்தது தான். மழை நீர் அரித்து, வழுக்குப் பாசியோடியிருக்கும் அபாயமான செங்குத்துச் சரிவு குறுக்கிட்டதில் ஏற்பட்ட தயக்கம். இருவரும் பட்ட அசைவுகள முகில் மடிப்புகளினுள் தெரிந்தாலும், அவர்களுடைய கண்களில் கனலக்கூடிய அச்சத்தை மலையின் கீழ் இருந்தே என்னால் உணர முடிகிறது. கற்பனையில். கால் இடறினால், கீழே ஆழத்தில் ஆற்றின் குறுக்காக கட்டப்பட்டிருக்கும் கல் அணையின் மடிப்பில் உடல் கிடைக்கும். சிவந்த தசைக் கூழாக. எங்கள் முறிக்கு […]

எழுத்து

பொலான்யோவின் ‘2666’, அல்லது சீரணிக்க முடியாததைச் சீரணித்தல்

நம்பி கிருஷ்ணன் · 14.04.20

எடுத்ததும் இயக்குனர் பியர் பாவோலோ பஸோலினி தான் (Pier Paolo Pasolini) நினைவுக்கு வருகிறார். குறிப்பாக, அவரது ‘சாலோ’. இதுவரை எடுக்கப்பட்ட திரைப்படங்களில் மிகவும் குரூரமானதும் அருவெறுக்கச் செய்யுமளவு நேர்மையானதுமான திரைப்படம் அது, உங்களுக்கு நினைவிருக்கிறதா தெரியவில்லை. மார்கீடுசாதின் (Marquis de Sade) ‘120 டேஸ் ஆஃப் சாடம்’ என்ற நூலின் திரைவடிவம், இது துல்லியமான புவி மற்றும் வரலாற்றுப் பின்புலங்கள் சேர்த்து சாதின் அழகியலை சமகாலத்துக்குரியதாக்குகிறது. சீரணிக்க முடியாத மிகைநுகர்வுகளை விவரிக்கும் சாதின் நாவலில், சமூகத் […]

எழுத்து

இலட்சாதிபதி மாடல் – ஆஸ்கர் வைல்ட்

எஸ்.கயல் · 14.04.20

பணம் இல்லாத ஒருவன் அழகனாக இருந்து எந்தப் பயனும் இல்லை. காதல், பணக்காரர்களின் பிறப்புரிமையே தவிர வேலைவெட்டி அற்றவர்களின் தொழில் அல்ல. ஏழைகள் யதார்த்தவாதிகளாகவும் கற்பனைத் திறன் அற்றவர்களாகவும் இருக்க வேண்டும். அத்துடன் கவர்ச்சி மிகுந்த அதிகமான வருமானத்தை விட நிலையான வருமானம் மேலானது.  இவையெல்லாமே ஹுகி எர்கினால் எப்போதும் புரிந்து கொள்ளப்படாத நவீன வாழ்வின் பெரும் உண்மைகள். பாவப்பட்ட ஹுகி ஒன்றும் அவ்வளவு அறிவாளி இல்லை என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அறிவுப்பூர்வமாகவோ கீழ்த்தரமாகவோ […]