Category: எழுத்து

எழுத்து

நிகழ முடியாத திரைப்பட விழாவின் கதை: கொலம்பியா- கொரோனா – பயணக்குறிப்புகள் – லீனா மணிமேகலை

லீனா மணிமேகலை · 14.04.20

1986-ம் ஆண்டு. இலத்தீன் அமெரிக்காவின் விடுதலையாளர் சைமன் பொலிவரை மையப்படுத்திய “The General in His Labyrinth” நாவலை எழுதிக் கொண்டே ஆறு திரைக்கதைகளையும் எழுதினார் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ். அமோரஸ் டிஃபிசில்ஸ் (Amores Dificiles) என்று ஸ்பானிஷிலும், டேஞ்சரஸ் லவ்ஸ் (Dangerous Loves) என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்படட அந்தப் படங்கள் மார்க்வெஸால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரேசில் – கொலம்பியா – கியூபா, மெக்சிகோ – ஸ்பெயின் – வெனிசுவேலா நாடுகளைச் சார்ந்த […]

எழுத்து

இராட்டினத்தின் பயணத்தொலைவு சுழியம்: எலியா கஸானின் திரையுலம்

கோ.கமலக்கண்ணன் · 14.04.20

செய்தி என்ற வடிவத்திற்கு ஒரு பண்பு உண்டு. அது ‘இந்தப் பேரிடரில் இத்தனை ஆயிரம் பேர் இறந்தார்கள்’ என்றோ ‘பல்லாயிரக்கணக்கானோர் இந்தத் திருவிழாவில் கலந்து கொண்டார்கள்’ என்றோ குறிப்பிடுவதோடு நிறுத்திக் கொள்ளும், விரைந்து அடுத்த செய்திகளுக்கும் தாவிவிடவும் செய்யும். அது உணர்வு மயமாக்குதலுக்கு அப்பாற்பட்டது. அது உண்மையின் தொகுப்பு என்பதே அது அப்படி இருந்தாக வேண்டும் என்று நிர்பந்திக்கிறது. மாறாக ஒரு புனைவிற்கு தடுப்பும் முடிவும் பற்றிய இடங்களை அதுவாக தேர்ந்தெடுத்துக் கொள்ளும் பாக்கியம் இருக்கிறது. அது […]

எழுத்து

விட்டோரியோ டி சிகாவின் நேர்காணல் – தமிழில்: எஸ். ஆனந்த்

எஸ்.ஆனந்த் · 14.04.20

ரோம் நகரில் 1973 ஜூலை மாதம் விட்டோரியோ டி சிகா அளித்த நேர்காணல். கார்டில்லோ: உங்களுடைய நியோ ரியலிசப் படங்கள் அனைத்தும் கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டவை. பிறகு வண்ணப்படங்களும் எடுத்திருக்கிறீர்கள். வண்ணத்தில் படமெடுப்பது உங்களுக்குப் பிடிக்குமா? டி சிகா: இல்லை. பார்வையாளர்கள் வண்ணத்தை விரும்பினாலும் என்னைப் பொறுத்தவரை அது கவனத்தைத் திருப்பக் கூடியது. யதார்த்தம் என்பது கருப்பு வெள்ளையுடன் அந்த இரண்டுக்கும் இடைப்பட்ட சாம்பல் வண்ண அடர்வுகள் சார்ந்தது. வண்ணம் மேலோட்டமானது; அதன் மீது எனக்கு அதிக […]

எழுத்து

தமிழ்ச் சிறுகதை – இன்று: கலையும் வண்ணங்களும் மறையும் காட்சிகளும் – கிருஷ்ணமூர்த்தியின் கதைகள்

எம்.கோபாலகிருஷ்ணன் · 14.04.20

தூயனின் சிறுகதைகள் குறித்த முதல் பகுதியையும், சுரேஷ் பிரதீப்பின் சிறுகதைகளைக் குறித்த இரண்டாவது பகுதியையும் சித்துராஜ் பொன்ராஜ் கதைகள் பற்றின மூன்றாவது பகுதியையும் ராம் தங்கம் சிறுகதைகளைக் குறித்த நான்காவது பகுதியையும் தொடர்ந்து ஐந்தாவதாக இப்பகுதி கிருஷ்ணமூர்த்தியின் கதைகளைக் குறித்தது. இந்த வரிசை தகுதியின் அடிப்படையிலானது அல்ல என்பதை வலியுறுத்திச் சொல்ல வேண்டும். தொகுப்புகளை வாசித்த பின் எழுதிய குறிப்புகளின் அடிப்படையில் அவ்வப்போது எழுதப்பட்டவை. அவ்வளவே. * நூற்று இருபது ஆண்டுகளைக் கடந்துவிட்ட தமிழ்ச் சிறுகதையில் இனியும் புதிதாய் சொல்ல […]

எழுத்து

கு. அழகிரிசாமியின் அன்பளிப்பு

விக்னேஷ்வரி சுரேஷ் · 14.04.20

இன்றளவும் குழந்தைகளின் அக – புற உலகை கு.அழகிரிசாமி போல யதார்த்ததிலிருந்து நூலிழை கூட விலகாமல் யாரும் கதை எழுதியதில்லை என்றே நினைக்கிறேன். அனேக இலக்கியத்தில் குழந்தைகள் என்றால், கடவுள்கள். மிச்சத்தில் அவை சாத்தான்கள். ஆனால், அழகிரிசாமி கதைகளில் மட்டும் அவை கவித்துவ வர்ணனைகளின் சுமையின்றி குழந்தைகளாகவே திரிகின்றன. என் பாலர் பள்ளி ஆசிரியை அனுபவத்தில், நம்மை விட கூடுதல் கருணை, ஈகோ, சாந்தம், குரோதம், மகிழ்ச்சி என்பதாக உணர்வென்னும் கோப்பை தளும்ப நடமாடும் குழந்தைகளைக் காண்கிறேன். […]

எழுத்து

ஃபயஸ் அகமது ஃபயஸ் கவிதைகள்

எஸ்.கயல் · 14.04.20

பேசு! ஏனெனில் உன்னிரு உதடுகள் சுதந்திரமாயுள்ளன. பேசு! உன் நாக்கு இன்னும் உன்னுடையதே. இந்த நிமிர்ந்த உடல் இன்னும் உன்னுடையது தான். உன் வாழ்க்கை இன்னும் உன்னுடையதே. கொல்லனின் சுடுகலனில் தழல் உயர்ந்தெழ இரும்பு சிவந்து ஒளிர பூட்டுகள் தங்கள் தாடையை அகலத் திறக்க, ஒவ்வொரு சங்கிலியும் எப்படி விடுதலையைத் தழுவுகிறது என்று பார். * அடர்வனத்துள் வசந்தத்தின் ரகசிய வருகையாக, பாலை மணற்துகளில் மென் தென்றலின் அடிச்சுவடுகளாக, நோய்மை ஒருவருக்கு எப்படியாகிலும் தரும் மன அமைதியைப் […]

எழுத்து

ஐ-பில்

மயிலன் ஜி சின்னப்பன் · 24.02.20

டாக்ஸிக்கான செயலியில் ஓட்டுநரின் அலைபேசி எண் அறிவிக்கப்பட்டது. இன்னும் எட்டு நிமிடங்களுக்குள் வாகனம் வந்துவிடும் என்பது உப தகவல். தூரத்தில் தெரியும் சிவப்பு சிக்னல் வரை, தான் நிற்குமிடத்திலிருந்து நீண்டிருக்கும் கார்களும் பேருந்துகளும் அநாவசியமாக ஒலி பெருக்கிக்கொண்டிருந்தன. மனப்புழுக்கம் காதுகளை அடைத்திருந்ததால் பாரதியின் கவனத்தை அவை இம்மியளவும் கோரவில்லை. உடலில் ஆங்காங்கே இன்னதென்று வகைப்படுத்த முடியாத புதுப் புது தினவுகள். டிசம்பர் இரவிற்குப் பொருத்தமற்ற வெப்பம், ஆடை மறைத்திருக்கும் சருமப் பகுதிகளில் ஊர்ந்து கொண்டிருந்தது. சம்பந்தமேயில்லாமல் அவளுக்கு […]

எழுத்து

நல்லவனைக் காண்பது அரிது: A Good Man is Hard to Find – Flannery O’Connor

எஸ்.கயல் · 24.02.20

தன் ஒரே மகன் பெய்லியுடன் வாழ்ந்து வரும் பாட்டியம்மாளுக்கு ஊருக்குச் செல்ல விருப்பமே இல்லை. டென்னஸியில் இருக்கும் தனக்குத் தெரிந்த சிலரைச் சந்திக்கவே அவள் விரும்பினாள். பெய்லியின் மனதை மாற்றுவதற்காக எல்லா வழிகளிலும் முயற்சி செய்து பார்த்தாள். நாற்காலியின் நுனியில் அமர்ந்து மேசையின் மேலே செய்தித்தாளில் விளையாட்டுப் பகுதியை மும்முரமாகப் பார்த்துக் கொண்டிருந்தவன் அருகே சென்று தன் இடுப்பின் மீது ஒரு கையை வைத்தபடி இன்னொரு கையில் வைத்திருந்த சுருட்டப்பட்டிருந்த செய்தித்தாளால் அவனுடைய வழுக்கைத் தலையின் மீது […]

எழுத்து

அன்னையிட்டத் தீ! – க. மோகனரங்கன்

க. மோகனரங்கன் · 24.02.20

ஆசி வேண்டிப் பணிந்த வேந்தனை நோக்கிப் புன்னகைத்த துறவி சொல்கிறார்: “முதலில் உன் தந்தை இறப்பார்; பிறகு நீயும் சாவாய்; இறுதியாய் உன் மகன் மரிப்பான்.” கேட்டதும் குழம்பித் திகைத்த மன்னனை உடன்வந்த அமைச்சர் ஆற்றுப்படுத்துகிறார். “இப்புவியிலேயே பெரிய சோகம் புத்திர சோகம் தான். அது தங்கள் வம்சத்திற்கு நிகழாது என்றே அவர் வாழ்த்தியுள்ளார்.” மனம் தெளிந்த மன்னன் மறுபடியும் ஒருமுறை அவரை வணங்கிச் செல்கிறான். பழுத்த இலை உதிரும் போது இயற்கையின் நியதி இதுவெனத் தேற்றிக் […]

எழுத்து

இவர்கள் எங்களைக் கொன்று விட்டார்கள் காந்தி! – மானசீகன்

மானசீகன் · 24.02.20

பாரதிய ஜனதா பிடுங்குகிற எல்லாமே தேவையில்லாத ஆணி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த முறை பிடுங்கியிருப்பது ஆணியல்ல. நெடுநாட்களாய் அடைத்து வைக்கப்பட்டிருந்த மிக நீண்ட துளையை! அதன் வழியாய் நடந்து வரப்போவது டயனோசராகக் கூட இருக்கலாம். யார் கண்டது? பாஜக இப்போது மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கிறது. முதல் தடவை வாஜ்பாய் ஆட்சி நடத்திய போது அது சர்க்கஸ் புலியாகத் தான் நடந்து கொண்டது. அவ்வப்போது உறுமும்‌. முறைத்துப் பார்க்கும். பிறகு மாட்டுக்கறிக்கும் சங்கிலிக்கும் கட்டுப்பட்டு […]

எழுத்து

உழைக்கும் சிறுவர்களின் துயர உலகம் : ‘திருக்கார்த்தியல்’ – ராம் தங்கம்

எம்.கோபாலகிருஷ்ணன் · 24.02.20

குழந்தைகளின் வசீகரமான உலகை எழுதிப் பார்க்கும் ஆர்வம் எல்லா படைப்பாளிகளிடமும் உண்டு. புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், அசோகமித்திரன், கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமி என தமிழின் சிறுகதை முன்னோடிகள் பலரும் குழந்தைகளின் உலகை கதைகளில் எழுதிக் காட்டியுள்ளனர். அதிலும் கு.அழகிரிசாமியின் கதைகள் நமக்குக் காட்டும் சிறுவர்களின் உலகம் உயிர்ப்புமிக்கது. ‘உழைக்கும் சிறுவர்கள்’ தமிழ் இலக்கியத்துக்கு புதியவர்கள் இல்லை. தி.ஜாவின் ‘சிலிர்ப்பு’ கதையின் காமாட்சியையும், ‘சாப்பாடு போட்டு பத்து ரூபாய்’ கதையின் அக்கணாகுட்டியையும் உதாரணமாகச் சொல்லலாம். இதன் தொடர்ச்சியாக அண்மையில் நம்பிக்கை […]

எழுத்து

தாமரைக்குள ஞாபகங்கள்

ப.தெய்வீகன் · 24.02.20

சிவபெருமான் வீட்டுச் சிக்கல் கயிலாயத்துக்கு போன வாரம் போய் வந்தது அருமையானதொரு அனுபவமாக அமைந்தது. சிவபெருமான் தனது வீட்டில் நிற்கவேணும் என்று போன தடவை கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த முறை இரண்டு நாட்கள் அவர் வீட்டிலேயே தங்கிக் கொண்டேன். பயங்கர பிஸியான ஆளென்றாலும் வீட்டுச் சாப்பாடு தான் உடம்புக்கு நல்லது என்று உமாதேவி அக்காவை இருத்தி எழுப்புறார். “லண்டன் – கனடா பக்கமிருக்கிற பெண்ணியவாதிகள் இதையெல்லாம் கண்டால் உங்களை துலைச்சுப்போடுவினம் தெரியுமோ?” – என்று கேட்க அவர் […]