Category: மொழிபெயர்ப்பு

எழுத்து

இரண்டு திருமணங்களும் ஒரு விவாகரத்தும் – ஐசக் பாஷவிஸ் சிங்கர்

எஸ்.கயல் · 27.02.21

செருப்பு தைக்கிறவனிடம் எடுபிடி வேலை செய்துகொண்டிருந்த ஒருவனுக்கு ஒரு சமையல்காரியோடு திருமணம் நிச்சயம் ஆகியிருந்தது. ஆனால் அவளோ மனைவியை இழந்த ஒருவனைத் திருமணம் செய்துகொண்டாள். இந்த துரோகத்தால் மனமுடைந்த அவன் இலையுதிர் கால நாளொன்றில் க்ரோச்மல்ணா சாலையில் தற்கொலை செய்துகொண்டான். க்ரோச்மல்ணா சாலை முழுதும் இதே பேச்சாக இருந்தது. யூதச்சமய மக்கள்கூட ராட்ஜிமினர் பாடசாலையில் இது குறித்து விவாதித்தனர். ஒவ்வொரு மாதத்திலும் இரு வாரங்களுக்கு இயல்பான மனநிலையிலும் மீதமுள்ள இரு வாரங்களுக்கு மனம் பிறழ்ந்தும் காணப்படும் திருநங்கையான மெயர், ட்ரகோமா […]

எழுத்து

பூடபெஸ்டை அடைதல் – நோவயலட் புலவாயோ

சசிகலா பாபு · 27.02.21

நாங்கள் பூடபெஸ்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம் – பாஸ்டர்ட், சிபோ, காட்நோஸ், ஸ்போ, ஸ்டினா, நான். மிட்சிலிகாஸி சாலையைக் கடக்க எங்களுக்கு அனுமதி கிடையாது, பாஸ்டர்ட் தனது குட்டித்தங்கை பிராக்‌ஷனை கவனித்துக்கொள்ள வேண்டியிருந்தது, நாங்கள் செல்வது தெரிந்தால் என் தாய் என்னைக் கொன்றேவிடுவார், இவற்றையெல்லாம் மீறி நாங்கள் பூடபெஸ்ட் செல்கிறோம். அங்கு சென்றே தீருவோம். நாங்கள் திருடி உண்ண பூடபெஸ்டில் நிறைய கொய்யாக்கள் உள்ளன. இப்போதைக்கு அந்த கொய்யாக்களுக்காக என் உயிரைக் கொடுக்கவும் நான் தயாராக இருக்கிறேன். காலையில் […]

எழுத்து

தலைமைக் காவலரின் மனைவி – பால்சாக்

இல. சுபத்ரா · 27.02.21

அர்மனாக்கின் தலைமைக் காவலதிகாரி தான் விரும்பியது போன்ற வளமான எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளும் பொருட்டு கோமாட்டி ‘பான்’-ஐ மணம் முடித்தார். அப்பெண்ணோ, அதற்கு முன்பே, மன்னர் ஆறாம் சார்லஸின் அரண்மனை காரியஸ்தருடைய மகனாகிய இளைய சர்வஸியிடம் தன் மனதைப் பறிகொடுத்திருந்தார். தீரமிக்கப் போர்வீரனான தலைமைக் காவலதிகாரி அழகற்றவராகவும் கடுமையானவராகவும் அடர் தாடியுடனும் எப்போது பார்த்தாலும் சினத்தில் வார்த்தைகளை உமிழ்பவராகவும் தூக்கிலிடுவதையே தொழிலாய்க் கொண்டிருப்பவராகவும் போர்க்களச் சிந்தையிலோ அல்லது காதல் தவிர்த்த பிற விஷயங்களிலோ மூழ்கியிருப்பவராகவும் இருந்தார். திருமண வாழ்வின் இனிமையை […]

எழுத்து

மார்கு வீதி கொலைகள் – எட்கர் ஆலன் போ

கோ.கமலக்கண்ணன் · 27.02.21

பகுப்பாய்விற்கு உகந்த உளவியல் கருவிகள் என்று அறியப்படுபன அனைத்தும் சற்று பகுப்பாய்விற்கு உட்படுத்த வேண்டியவையே. விளைவுகளை வைத்தே அவற்றை நாம் புரிந்துகொள்கிறோம். பகுப்பாய்வாளர்கள் அர்ப்பணிப்புடன் அப்பணியால் ஆட்கொள்ளப்படுகையில் பெருமகிழ்வில் இருப்பதாக உணர்கின்றனர். உடல்வலிமை மிக்கோர் கடும் உடற்பயிற்சிகளைச் செய்துகாட்டி தசையாற்றலின் வல்லமையைப் பிரகடனப்படுத்திக்கொள்வதைப் போல சிக்கல்களை அவிழ்க்கும் தார்மீகச் செயல்பாட்டைச் செய்து காண்பிப்பதில் பகுப்பாய்வாளர்கள் அளவற்ற பெருமிதமடைகிறார்கள். அற்பமான செய்திகளைக்கூட கவனித்து தனது ஆய்விற்குப் பயன்படுத்திக்கொள்வதன் வழியாக அவர் பேருவகை கொள்கிறார். இயற்கைக்கு மீறியவை என்று கருதப்படும் […]

எழுத்து

இந்திய எண்ணெய் வித்துகள் உற்பத்தி: தன்னிறைவைத் தாரைவார்த்த கதை – பி.எம். வியாஸ், மனு கௌஷிக்

பாலசுப்பிரமணியம் முத்துசாமி · 27.02.21

கோவிட்-19 ஏற்படுத்தியிருக்கும் சூழல் உலகமயமாதலுக்குக் குந்தகமாக அமைந்து பாதுகாப்புக்கான கூக்குரல் எழக் காரணமாக இருக்கிறது. இந்தியாவின் தேசிய வியூகமும் இந்தப் போக்கிலேயே எழுந்து, “சுயசார்பு”, “உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிப்போம்” என முழக்கங்கள் எழுகின்றன. விடுதலை பெறுவதற்கு முன்பு இந்தியா சமையல் எண்ணெயை ஏற்றுமதி செய்துவந்தது. விடுதலைக்குப் பின் அது சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு பெற்றது. 1970களின் தொடக்கம்வரை இந்த நிலை தொடர்ந்தது. 70களிலும் 80களிலும் ஏற்பட்ட தடுமாற்றங்களிலிருந்து மீண்டு 90களின் தொடக்கத்தில் மீண்டும் தன்னிறைவு பெற்றது […]

எழுத்து

நாயகனின் சாகசம்: ஜோசப் கேம்ப்பெல்

மோகன ரவிச்சந்திரன் · 25.01.21

பில் மோயர்ஸ், தொன்மவியலாளர் ஜோசப் கேம்ப்பெல் ஆகிய இருவரும் இலக்கியத்திலும், நிஜ வாழ்விலும், மேலும் ஸ்டார் வார்ஸ் திரைப்படங்களிலும் நிலையான, தொடர்ச்சியான நாயக வடிவமைப்பு உட்பட செவ்வியல் நாயக சுழற்சியை ஆய்வுசெய்கின்ற, அடிப்படைகளைத் தகர்க்கின்ற முடிவற்ற உரையாடலைத் துவக்கினர். பார்வையாளர்கள் தங்கள் சொந்த வாழ்வின் பகுதிகளை நாயகப் பயணங்களாகக் காணும் போக்கை கேம்ப்பெல் உற்சாகப்படுத்துகிறார். முதல் அத்தியாயத்தின் ஒரு காட்சியில், பார்வையாளர்கள் தங்களை எது கிளர்ச்சியடைச் செய்கிறது என்பதைக் கண்டறியத் தூண்டுவதோடு, தங்கள் சொந்தப் பயணங்களுக்கான அடித்தளத்தை […]

எழுத்து

கதை சொல்கிற இதயம் – எட்கர் ஆலன் போ

இல. சுபத்ரா · 25.01.21

அது உண்மைதான்! ஆமாம், நான் நோயுற்றிருக்கிறேன், மிக மோசமாக. ஆனால் நான் மனம் பிறழ்ந்துவிட்டேன் என்று ஏன் சொல்கிறீர்கள்? நான் பைத்தியம் என்று ஏன் சொல்கிறீர்கள்? நான் புத்திசுவாதீனத்துடன் இருப்பதை உங்களால் காண முடியவில்லையா? நான் பைத்தியமில்லை என்பது தெளிவாகத் தெரியவில்லையா? உண்மையைச் சொல்வதானால், நோய்மையே என் புத்தியையும் உணர்வுகளையும் புலன்களையும் கூர்மையாக்கி பலப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, எனது செவியுணர்வு மிகுந்த பலம் பெற்றிருக்கிறது. இதற்கு முன் கேட்டேயிராத சப்தங்களை என்னால் கேட்க முடிந்தது. சொர்க்கத்திலும் நரகத்திலும் ஒலிக்கிற […]

எழுத்து

ஷோஷா – ஐசக் பாஷவிஸ் சிங்கர்

கோ.கமலக்கண்ணன் · 25.01.21

என் பாத அடிகளின் எதிரொலியை நானே கேட்கும் வண்ணம் வார்சா கடும் மெளனத்தில் இருந்தது. மெழுகுகள் இன்னும் சாளரங்களில் எரிந்தன. லெஸ்னோ தெருவில் இருந்த வீட்டின் வாயிற்கதவு மூடப்பட்டிருந்தது. நான் விரைவிலேயே மீண்டும் கிளம்பும் நோக்கத்துடன் இருந்ததை அறிந்திருந்தவர் போல காவலாளி முனகலுடன் குறைபட்டுக்கொண்டே மெல்ல அதைத் திறக்கும் பொருட்டு நடந்து வந்தார். என்னிடம் தூக்கிக்கான சாவிகள் இருந்தபோதும், இருண்ட படிக்கட்டுகளில் நடந்தேன். நான் வசிப்பிடத்தின் கதவைத் தட்டியதும் டெக்லா அதைத் திறந்தாள். ’இன்று உங்களுக்காக நூறு […]

எழுத்து

நகரத்தில் ஒரு விருந்து – மார்சல் ப்ரூஸ்ட்

கோ.கமலக்கண்ணன் · 22.12.20

“ஆனால் ஃபாண்டானிஸ், அந்த உணவின் மகிழ்ச்சியை உன்னுடன் பகிர்ந்துகொண்டவர் யார்? நான் தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.”(ஹொரேஸி) 1 ஹொனோயே தாமதமாக வந்தார். நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கும் தானறிந்த அதிதிகளுக்கும் முகமன் கூறியபின், பிறருக்கும் அறிமுகப்படுத்தப்பட்டார். தனது மேசை நோக்கிச் சென்று அமர்ந்தவரிடம், சிறிது நேரம் சென்றபின், அருகிலிருந்த இளைஞன் விருந்தினர்களின் பெயர்களைச் சொல்லச் சொல்லி கேட்டான். தொடர்ந்து அவர்களைப் பற்றி ஏதோ சிலவற்றைச் சொன்னான். ஹொனோயே அவனை இதுவரை குழுமத்தில் பார்த்ததில்லை. அவன் மிகவும் அழகாயிருந்தான். தொகுப்பாளர் அவனைத் […]

எழுத்து

கட்டுரை எனும் கலை: ஜான் மாரிஸ் நேர்காணல்

நம்பி கிருஷ்ணன் · 22.12.20

ஒரு சில வாரங்களுக்கு முன், ஜான் மாரிஸ் தன் கனிந்த 94வது வயதில் வாழ்வின் அக்கரைக்குப் பயணப்பட்டார். அவர் அந்த அடைமொழியை வெறுத்தார் என்றாலும், என்னளவில் ஜான் மாரிஸ் உலகின் தலைசிறந்த “பயண எழுத்தாளர்களில்” ஒருவர், எக்காலத்திலும்.  அவரைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் ‘கிளர்ந்தெழும்’ என்ற சொல் என் மனதில் தோன்றுகிறது, காலத்தையும் இடத்தையும் அவை கிளர்ந்தெழச் செய்வதால். அவர் எழுதிய நூல்களில் நான் வாசித்த முதல் நூல்கள், பாக்ஸ் பிரிட்டானிகா (Pax Britannica) முந்நூல் தொகை (ஆணாக […]

எழுத்து

ஷேக்ஸ்பியர் படைப்புகள் மீதான தல்ஸ்தோயின் விமர்சனம்

கோ.கமலக்கண்ணன் · 18.11.20

ஷேக்ஸ்பியர் பற்றி நன்கு பிரஸ்தாபிக்கப்பட்ட கருதுகைகள் மீதான எனது மறுப்பென்பது தற்செயலான மனநிலையில் இருந்து விளைந்ததோ, அக்கருதுகை மீது மேலோட்டமாக நான் கொண்ட பார்வையோ அன்று. மாறாக ஆண்டாண்டுகளாக ஷேக்ஸ்பியர் பற்றி ஏற்கனவே கிறித்துவ உலகின் புத்தியில் நிறுவப்பட்டிருக்கும் அனைத்தின் மீதும் எனது சொந்த புலமையைத் தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டும் அதை மீண்டும் மீண்டும் நான் செப்பனிட்டுக்கொண்டும் இருந்து வருவதன் வெளிப்பாடே.  நான் முதன்முதலாய் ஷேக்ஸ்பியரை வாசித்த போது அடைந்த திகைப்பை நினைவில் வைத்திருக்கிறேன். ஒரு ஆற்றல் மிக்க […]

எழுத்து

எடுப்பார் கைப்பிள்ளை – லேவ் தல்ஸ்தோய்

எஸ்.கயல் · 18.11.20

ஒருமுறை, அல்யோஷாவின் அம்மா, பால் நிறைந்த பானை ஒன்றை மத குருவின் மனைவியிடம் தரச் சொல்லி அவனிடம் கொடுத்து அனுப்பிய போது அவன் எதிலோ இடறி விழுந்து அதை உடைத்துவிட்டான். இதனால் அவனுடைய அம்மாவிடம் இருந்து அவனுக்கு நல்ல அடி கிட்டியதோடு கிராமத்திலிருந்த சிறுவர்கள் அவனை, “பானை! பானை!” என்று கிண்டலடிக்கத் துவங்கினர். இப்படித்தான் இந்தச் “செல்லப் பெயர்” அவனை வந்தடைந்தது. அல்யோஷா, ஒடிசலான உடலும், பறவைகளின் சிறகுகளைப் போல வெளியே நீட்டிக்கொண்டு தனியாகத் தொங்கும் காதுகளும், […]