Category: மொழிபெயர்ப்பு

எழுத்து

புத்தர் ஞானத்தில் கண்டடைந்தது என்ன?

வி.அமலன் ஸ்டேன்லி · 24.08.20

அரசயிலை அரச மரத்தினடியில் அமர்ந்த துறவி கௌதமர் தனது ஒட்டுமொத்த மனவொருமிப்பு ஆற்றலால் தன்னுடலை ஆழ்ந்து உள்முகமாக நோக்கினார். தன்னுடலின் ஒவ்வொரு அணுவையும் முடிவற்றுப் பாயும் பிறப்பு, வாழ்வு, இறப்பு எனும் ஆற்றின் ஒரு துளியாகக் கண்டார். மாறாதவொன்றென எதுவும் அவ்வுடலில் இல்லை என்றும் தனித்ததொரு சுயமென எதுவுமில்லை எனவும் உய்த்தறிந்தார். உடலெனும் ஆற்றில் ஒன்றறக் கலந்தபடி உணர்ச்சிகள் எனும் வெள்ளமும் ஓட, ஒவ்வொரு உணர்ச்சியும் அவ்வாற்றின் ஒரு துளியாக இருப்பதைக் கண்டார். அத்துளிகள் பிறப்பு, வாழ்வு, […]

எழுத்து

இரட்டையர்களில் ஒருவர் – அம்ப்ரோஸ் பியர்ஸ் – தமிழில்: கார்குழலி

கார்குழலி · 24.08.20

மறைந்த மார்டிமர் பர்ரின் காகிதங்களுக்கிடையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கடிதம். இரட்டையர்களில் ஒருவராக இருந்த அனுபவத்தால், நமக்கு அறிமுகமான இயற்கையின் விதிகளால் விவரிக்கப்பட முடியாத ஏதேனும் ஒன்றைப் பார்த்திருக்கிறேனா என்று என்னைக் கேட்கிறீர்கள். நம் எல்லோருக்கும் ஒரேவிதமான இயற்கை விதிகளைப் பற்றித் தெரிந்திருக்க முடியாதல்லவா? தீர்ப்பை நீங்கள்தான் சொல்லவேண்டும். எனக்குத் தெரியாதவை சில உங்களுக்குத் தெரிந்திருக்கலாம், விதிகளுக்கு உட்படாதவை என்று நான் நினைப்பவை உங்களுக்குத் தெளிவாகப் புரியலாம். என் சகோதரன் ஜானை உங்களுக்குத் தெரியும் – அதாவது, நான் […]

எழுத்து

அலெஹந்த்ரா பிஸார்நிக்: உரையாடலும் கவிதைகளும் – தமிழாக்கம்: மோகன ரவிச்சந்திரன்

மோகன ரவிச்சந்திரன் · 24.08.20

கேள்வி: குறியீடுகள் என நான் கருதும் வார்த்தைகள் உங்கள் கவிதைகளில் அதிகமாக இருக்கின்றன. அவை உங்கள் கவிதைகளை தனிமை நிரம்பியவையாக, குழந்தைப் பருவ ஈர்ப்புகள் போன்ற, கவிதை போன்ற, அன்பு போன்ற, மரணம் போன்ற பொருத்தமற்ற களங்களாக உருவாக்குவதற்கான பங்களிப்பைச் செய்கின்றன. தோட்டம், வனம், சொல், மெளனம், அலைதல், காற்று, உடைந்து போதல், இரவு போன்ற வார்த்தைகள் குறிகளும் குறியீடுகளும்தான் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா? அலெஹந்த்ரா பிஸார்நிக்: எனது கவிதைகளில் திரும்பத் திரும்பத் தொடர்ச்சியாக, சமரசமில்லாமல், இரக்கமில்லாமல் கூறும் […]

எழுத்து

மனதின் பாடல் – ஜே.கிருஷ்ணமூர்த்தி – தமிழாக்கம்: கால.சுப்ரமணியம்

கால.சுப்ரமணியம் · 24.08.20

அறிதல் என்பது ஒரு கொள்கையின் பலனாய் ஏற்படும். அனுபவம் என்பது வேறு. இந்த வித்தியாசத்தை அறிந்துகொள்ள வேண்டும். அனுபவிப்பதற்கு, கொள்கையைப் பற்றிக்கொண்டு நிற்பது ஒரு தடை என்பது தெளிவானது. ஒன்றின் உண்மையைக் கண்டுபிடிக்க கொள்கையினால் இயலாது. நேரடியான அனுபவத்தால்தான் முடியும். பல்வேறு வல்லுநர்கள் தத்தம் சிந்தனைகளே சரியானவை என்று அறைகூவும் இவ்வுலகிலே, முரண்பாடுகள் நிறைந்த உலகிலே, – கொள்கை தேவையில்லை. நேரடியான அனுபவமே மிக்க அவசியம். இவ்வளவு குழப்பத்துக்கும் இவ்வளவு துன்பத்துக்கும் அடிப்படையான உண்மை எது என்பதை […]

எழுத்து

எலீனா ஃபெர்ராண்டேவின் பேட்டி – சாண்ட்ரோ ஃபெர்ரி, சாண்ட்ரா ஃபெர்ரி

கோ.கமலக்கண்ணன் · 20.07.20

கடந்த பத்தாண்டுகளாக எலீனா ஃபெர்ராண்டேவின் (Elena Ferrante) (Troubling Love, The Days of Abandonment, The Lost Daughter & First three of Neapolitan Novels ஆகியவை உள்ளிட்ட) நாவல்கள் தொடர்ந்து ஆங்கிலத்திற்கு வந்தபடி இருக்கின்றன. அது அவர்களுக்கான தீவிர வாசகப் பரப்பை சொந்த நாடான இத்தாலியைக் கடந்தும் ஏற்படுத்தித் தந்திருக்கிறது. நியாபொலிடன் நாவல் வரிசையின் நான்காவது நாவலாகிய, The Story of the Lost Child -ம் இந்த இலையுதிர்காலத்தில் ஆங்கிலத்தில் வெளியாகிறது. […]

எழுத்து

ஒரு பீப்பாய் நிறைய அமோண்டில்லாடோ – எட்கர் ஆலன் போ – தமிழில்: கார்குழலி

கார்குழலி · 20.07.20

ஃபார்ச்சுனேட்டோ எனக்கு இழைத்த ஆயிரம் காயத்தையும் இயன்றவரை நன்றாகவே பொறுத்துக் கொண்டேன். ஆனால் அவன் என்னை அவமானப்படுத்திய போது அவனைப் பழிதீர்க்க சபதம் எடுத்தேன். என் ஆன்மாவின் இயல்பைப் பற்றி நன்றாக அறிந்த உனக்கு இந்த அச்சுறுத்தலை நான் வெளிப்படையாகச் சொல்லவில்லை என்பதும் தெரியும். எத்தனை காலம் ஆனாலும் நிச்சயம் எனக்கு நியாயம் கிடைத்தே தீரும். தீர்வு கிடைக்கும் என்ற உறுதியான நிலைப்பாடே அது நடக்காமல் போகலாம் என்ற நிச்சயமின்மையைத் தள்ளி வைத்தது. தண்டிக்க மட்டும் மாட்டேன், […]

எழுத்து

துயரில் அமிழ்ந்த சிறுமலர் – இஸபெல் அயாந்தே – தமிழில்: லதா அருணாச்சலம்

லதா அருணாச்சலம் · 20.07.20

சேற்றுக் குழியிலிருந்து வெளியே துருத்திக் கொண்டிருந்த அந்தச் சிறுபெண்ணின் முகத்தையும் தன் கண்களை அகல விரித்தபடி ஓசையின்றி அவள் குரல் கொடுத்துக் கொண்டிருந்ததையும் அவர்கள் கண்டுபிடித்தனர். சமய வழிபாட்டுச் சடங்குகளோடு அவளுக்கு இடப்பட்ட முதல் பெயர் அஸூசேனா. அதன் பொருள் லில்லி மலர். கல்லறைத் தோட்டம் போல இருந்த அவ்விடத்தின்  மரண வாசம் உயரப் பறந்து கொண்டிருக்கும் வல்லூறுகளின் கவனத்தை ஏற்கெனவே கவர்ந்து கொண்டிருந்தது. அனாதையாகிப் போன குழந்தைகளின் அழுகுரலும் காயமடைந்தவர்களின் ஓலமும் காற்றை நிரப்பிக் கொண்டிருக்கையில் […]

எழுத்து

ஒரு வாழ்க்கையும் சில சிதறல்களும் – ஷரிஃபா அல்-ஷம்லான்

ஜான்ஸி ராணி · 20.07.20

முதல் சிதறல்: நான் இருபது வயதானவள். நான் உறுதியாக அறிவேன். எனக்குப் பத்து வயதிருக்கும் போது என்னுடைய தாய் இறந்து போனார். எனது பதினேழு வயதில் நான் இங்கு அழைத்து வரப்பட்டேன். என்னால் என் வயதை சரியாகக் கணிக்க முடியும். ஏனெனில் என்னுடைய ஒவ்வொரு பிறந்தநாளின் போதும், எங்கள் தோட்டத்தில் ஒரு பேரீச்சை மரம் நடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். நான் இங்கு மூன்று வருட காலமாக இருக்கின்றேன். என் தந்தையுடைய வருகையின் எண்ணிக்கையை வைத்து அதை நான் […]

எழுத்து

கனவு இல்லம் – லிடியா டேவிஸ்

எஸ்.கயல் · 16.06.20

மலையின் பக்கவாட்டில் இருந்த சாலையிலிருந்து அந்த நிலம் எனக்குக் காண்பிக்கப்பட்டது. பார்த்த உடனே அதை நான் வாங்க விரும்பினேன். நில விற்பனை முகவர் அதிலிருக்கும் குறைபாடுகளாக  எதைச் சொல்லியிருந்தாலும் அந்த நேரத்தில் எனக்குக் கேட்டிருக்காது. பருவம் தப்பிய கோடை மழையால் பாதி வெள்ளம் சூழ்ந்த இரத்தச் சிகப்பு நிறத்து திராட்சைத் தோட்டங்கள் பரவிக் கிடந்த நீண்ட பள்ளத்தாக்கு, களைகளும் முட்செடிகளில் மலர்ந்துள்ள பூக்களும் நிரம்பி வழிந்த மஞ்சள் வயல்களின் பின்னிருந்த குன்றை மறைக்கும் செழித்த காடுகள், பள்ளத்தாக்கின் […]

எழுத்து

மனவழுத்தம் கொண்டவர் – டேவிட் ஃபாஸ்டர் வாலஸ் – தமிழில்: கார்குழலி

கார்குழலி · 16.06.20

மனவழுத்தம் கொண்டவர் பயங்கரமானதும் முடிவேயில்லாததுமான உணர்வுப்பூர்வமான வலியில் இருந்தார். அதுகுறித்து எவரிடமும் பகிர்ந்துகொள்ளவோ விவரித்தோ கூறமுடியாத அடிப்படையான பேரச்சமே வலியின் ஒரு கூறாகவும் அது நிகழக்கூடிய ஒரு காரணியாகவும் இருந்தது. உணர்வுப்பூர்வமான வலியை விவரிப்பதே மனக்கசப்பூட்டுவதாக இருந்தாலும் அது நிகழும் சூழல் குறித்தாவது சொல்லலாம் — அதன் வடிவம், இழையமைப்பு ஆகியவை பற்றி உள்ளது உள்ளபடியே சொல்வது மூலம் அதன் காரணவியலுடன் தொடர்புடைய சூழ்நிலையைப் பற்றி விவரிக்கலாம் என்று நம்பிக்கை கொண்டிருந்தார் மனவழுத்தம் கொண்டவர். எடுத்துக்காட்டாக, மனவழுத்தம் […]

எழுத்து

இறப்பின் நடனம் – குஸ்தாவ ஃப்ளாபெ

எஸ்.கயல் · 16.06.20

முன்குறிப்பு: இறைவன் தனக்களித்திருக்கிற கருணையற்ற பணியைப் பற்றி ‘இறப்பு’ புலம்புவதாக எழுதப்பட்ட கதை. இறப்பு முதலில் சாத்தானிடம் உரையாடி, பிறகு சாத்தானின் முதல் காதலனான நீரோவிடம் பேசத் துவங்குகிறது. தன்னையும் சாத்தானையும் ஒப்பிட்டால் தங்கள் இருவரில் தவிர்க்க முடியாத சக்தி சாத்தானே என்றும் தன் வேலை ஒரு நாள் முடிவுற்ற பிறகு ஓய்வு பெற்றுவிடுவேன் என்றும் கூறுகிறது. குஸ்தாவ ஃப்ளாபெ (Gustave Flaubert) இதனை எழுதிய போது அவருடைய கவனத்தைப் பெரிதும் கவர்ந்திருந்த ரொமாண்டிஸிஸமே வனப்பும் அலங்கார […]

எழுத்து

நானொரு குதிரைக்குட்டி – லேலா பாலபக்கி

ஜான்ஸி ராணி · 16.06.20

இன்னமும் என்னுடைய உடல் தளர்ந்துதான் இருந்தது. என் கழுத்தின் மீது விரல்களை ஓட்டினேன். துருத்திய பச்சை நரம்புகளின் துடிப்பையுணர்ந்தேன். மேலாடையை  நெஞ்சுப் பகுதியைச் சுற்றி இழுத்துவிட்டுக் கொண்டு, கண்களை மூடி, அறையின் மேற்கூரையை நோக்கி என் முகத்தை உயர்த்தினேன். மறுபடியும் என்னுடைய கால்மூட்டுகளின் மேல், ஆடையின் கனத்தை உணரத் துவங்கினேன். என் தோள்களை அணைத்தபடி தலையைத் தாழ்த்தி, என் முகவாயை ஆடைக்குள் புதைத்துக் கொண்டேன். பின்பகுதியில் உடை ஒட்டிக்கொண்டது. திடீரென ஒரு குறிப்பிட்ட வாசனையை நுகர்ந்தேன். பின்பு […]