Tag: இதழ் 35

Editor's Picks

Editor’s Picks

கோகுல் பிரசாத் · November 26, 2021

The People vs. O.J.Simpson ஓ.ஜே.சிம்ப்சன் அமெரிக்காவின் புகழ்பெற்ற கால்பந்தாட்டக்காரர். கறுப்பினத்தவர். தன்னுடைய முன்னாள் மனைவியையும் அவருடைய காதலனையும் கொலை செய்ததற்கான வலுவான முகாந்திரங்கள் இருந்ததன் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். நீண்ட காலம் இழுத்தடிக்கப்பட்ட இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு The People vs. OJ. Simpson என்ற பெயரில் தொலைக்காட்சித் தொடரும் வெளியானது. ஓ.ஜே.சிம்ப்ஸன் வழக்கே அதீத பரபரப்புடன்தான் தொடங்குகிறது. கொலை நிகழ்ந்த வீட்டிலிருந்து அவரைக் காவல்துறையினர் துரத்த, அவர் காரில் ஏறித் தப்பியோடும் காட்சி […]

எழுத்து

நிரபராதம்

மயிலன் ஜி சின்னப்பன் · November 26, 2021

அதை மற்றுமொரு சாதாரணப் பயணம் என்றுதான் நம்பியிருந்தேன். விமானி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டதும் எல்லோரும் சற்று நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். டெல்லி சென்றடைய எவ்வளவு நேரம் ஆகும், தலைநகரின் அன்றைய உஷ்ணநிலை எப்படி இருக்கிறது என்பதையெல்லாம் அவள் சொல்லிக்கொண்டிருந்தாள். பெண் எனினும் குரல் சற்று கரகரப்பாக இருந்தது. ஆண்களே செய்துவந்த பணிகளில் நுழையும் பெண்கள் இப்படியாக குரலை வலிந்து திரிக்கிறார்களோவென எனக்கோர் ஐயப்பாடு.  ஒலிப்பெருக்கிக்குரல் ஓய்வதற்காகவே காத்திருந்ததைப் போல, நானும் பக்கத்து இருக்கைப் பெண்ணும் ஒருவரையொருவரைப் பார்த்து முறுவலித்துக்கொண்டோம். மிதமிஞ்சிய […]

எழுத்து

நீர்மேல் ஆடிய வேட்டை நாடகம்: ஹெர்மன் மெல்வில்லின் “Moby Dick”

பாலசுப்ரமணியன் பொன்ராஜ் · November 26, 2021

ஹெர்மன் மெல்வில் (1819-1891), அவருடைய முப்பத்தியிரண்டாம் வயதில், அமெரிக்க இலக்கியத்தின் மூலப்படைப்புகளுள் ஒன்று எனச் சொல்லப்படும், மோபி-டிக் அல்லது திமிங்கலம் எனும் அவரது மூன்றாவது நாவலை அவர் பிறந்த நூற்றாண்டின் நடு ஆண்டில் எழுதிப் பதிப்பித்தார். இந்நாவலை இப்போது எல்லோருமே, அதன் கவித்துவம் ததும்பும் பக்கங்களில் ஒன்றைக்கூட வாசித்திராதவர்களும்கூட, ஒரு செவ்வியல் படைப்பு என்று ஏற்கிறார்கள்.  மோபி-டிக் எனும் திமிங்கலத்தால் தனது ஒரு காலை இழந்துவிட்ட திமிங்கல வேட்டைக்காரனான ஏஹாப், அதனைப் பழிவாங்கச் சென்று தனது உயிரையும் […]

எழுத்து

பதக்கம்

பாலாஜி பிருத்விராஜ் · November 26, 2021

இம்முறை நாற்காலி கிரீச்சிடும் ஒலி எஸ்.ஐ. அறையிலிருந்து பலமாகக் கேட்டது. நான் திரும்பி ஹெட் கான்ஸ்டபிள் நடராஜனைப் பார்த்தேன். “கொட்ட வீங்குன நாய் மாதிரியாக்கும் இப்ப அவரு நெலம. ஒரு இடத்துல உக்கார விடாது பாத்துக்க” என்றார். காற்று உப்பிய பலூன் போல சுருக்கங்கள் மறைந்து முகம் சிரித்துத் தெளிவடைந்தது. கண்முன்னே மேலதிகாரி சிக்கலில் மாட்டித் தவிக்கும் தருணம் அவரின் நாற்பதாண்டு கால அனுபவத்தில் அதிகம் வாய்த்திருக்காது. வெறும் ஆறு மாத காலப் பணியிலேயே அதன் அருமை […]

எழுத்து

மடையான்

எம்.கோபாலகிருஷ்ணன் · November 26, 2021

விடிகாலையில் கடப்பாரைச் சத்தம் கேட்ட பின்பு போர்வையைப் போர்த்தியபடி ராசப்பன் டீ கடைக்கு வந்துசேர்ந்தவர்கள் இன்னும் உருமாலையைக் கழற்றாமல் நான்காவது டீயைக் குடித்துக்கொண்டிருந்தார்கள். புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை. மொண்டிபாளையம் பெருமாள் கோயிலுக்குப் போகும் கூட்டம் விறுவிறுவெனப் பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்துகொண்டிருந்தது. அப்போதுதான் தேர்ப்பெட்டிக்கார சம்முவம் அடுத்தவாரம் திங்கட்கிழமை காலையில் மடையானுக்குக் கோயமுத்தூரில் பெண் பார்க்கப் போகிறார்கள் என்ற தகவலைச் சொன்னார்.  “நெசமாவா சம்முவம். இந்தப் பயலுக்குக் கோயமுத்தூருல பொண்ணு வாச்சிருக்கா? பரவால்லயே..” ராசப்பன் டீ தம்ளர்களைக் […]

எழுத்து

அல்லேலூயாவும் எளிய தமிழ்ப்பிள்ளைகளும்

ஷாலின் மரியா லாரன்ஸ்  · November 26, 2021

அது தாத்தா இறந்திருந்த நேரம். அம்மாவின் அப்பா. திடீரென்று ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டார். காரியம் எல்லாம் முடிந்த கையோடு அம்மாவின் அம்மா சோகத்தில் இருந்து தன்னைத் தேற்றிக்கொள்ள என்னுடைய மிலிட்டரி தாய்மாமாவோடு சிக்கிம் மாநிலத்திற்குச் சென்றுவிட்டார். திடீரென்று அந்த வீடு காலியானது. அப்பாவுக்கு மின்சார வாரியத்தில் வேலை. அந்த மாதம் முழுவதும் அவருக்கு இரவுப் பணி. அம்மா பயமற்றவள். அவளுக்கு வீட்டில் இரவில் தனியாக இருப்பது என்பது ஒரு பெரிய விஷயமே அல்ல. அவருடன் ஆறு வயது […]

எழுத்து

தேவருக்காக வேய்ந்த கூரை – வில்லியம் ஃபாக்னர்

கார்குழலி · November 26, 2021

விடிவதற்கு ஒரு மணி நேரம் முன்னரே எழுந்து கோவேறு கழுதையில் ஏறி வெட்டுக்கத்தியையும் சுத்தியலையும் கடன்வாங்குவதற்காக கில்லேக்ரூவின் வீட்டுக்குப் போனார் அப்பா. நாற்பது நிமிடங்களுக்குள் திரும்பி வந்திருக்க வேண்டும். ஆனால் சூரியன் மேலே எழுந்து, நான் பாலைக் கறந்து தீனி வைத்துவிட்டுக் காலை உணவைச் சாப்பிடும் போதுதான் திரும்பி வந்தார். கோவேறு கழுதை வாயில் நுரை தள்ளியதோடு அதன் விலா எலும்புக்கருகே விக்கல் எடுப்பதைப் போலத் துடித்தது. “நரி வேட்டையாம் நரி வேட்டை. எழுபது வயது முதியவர். […]

எழுத்து

தாயின் மணிக்கொடி!

எம்.கே.மணி · November 25, 2021

“நான் உன்னைக் கூட்டிட்டுப் போறேன்!“ என்று கொஞ்சலாகச் சொல்லுகிறாள் லல்லி. மேலே போட்டிருந்த முந்தானை சர்வ அலட்சியமாக விலகிக் கிடந்தது.  அவளுடைய அம்மா வத்சலா அதைக் கவனிக்காதது போல இருப்பதை நான் பார்த்தேன். நான் பார்ப்பதைக் கவனித்ததும் அவள் என்னை நோக்கி வந்தாள். அக்காவின் தோழி. நான் இப்போது வேறு வேலையில் இருந்தாலும், முன்பு அறிமுகமாகி இருந்த ஜிகேவின் இந்த செண்டரில் லல்லியை ஒப்படைத்துவிட்டுப் போக வந்திருக்கிறார்கள். ஒருநாள் விடுமுறை எடுத்துக்கொண்டு அவர்களுக்கு உதவிசெய்ய வந்திருக்கிறேன். ஆனால் […]

எழுத்து

நன்மக்கள் – ஃப்ளானரி ஓ கானர்

எஸ்.கயல் · November 25, 2021

தனிமையில் இருக்கையில் சலனமற்ற ஒரு முன்னோக்கு முகபாவனை, ஆட்களைக் கையாளும்போது பயன்படுத்துவதற்கென அப்படியே நேர்மாறான ஒன்று என இரு வேறுவிதமான முகபாவனைகளைத் திருமதி ஃப்ரீமேன் தன் கைவசம் வைத்திருந்தாள். அவளுடைய முன்னோக்கு முகபாவனை, நிதானமாக அதே சமயம் வேகமாக முன்னேறிச் செல்லும் ஒரு கனரக வகை டிரக் போன்றது. அவளுடைய கண்கள் இடமோ வலமோ திரும்பாமல் இருந்தாலும் வாசித்துக்கொண்டிருக்கும் சிறுகதையின் இடையில் ஒரு மஞ்சள்நிற அடிக்கோடிட்ட வாசகத்தைக் கண்டதும் நம் கவனம் அதன் மீது திரும்புவதைப் போலத் திரும்பக் […]

எழுத்து

தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் (பகுதி 6): கு.அழகிரிசாமியின் கதைகளில் பெண்கள்

மானசீகன் · November 25, 2021

மகத்தான படைப்பாளிகள் அனைவரும் பெண் பாத்திரங்களைச் சித்திரிப்பதில் வல்லவர்கள். ஆண்கள் குறிப்பிட்ட சட்டகங்களுக்குள் அடங்கிவிடுவார்கள். பெண்கள் அப்படியல்ல. மலை உச்சியில் உருவெடுக்கும் சிறு நீர்க்கசிவு முதல் விரிந்து பெருகும் கடல் வரை விதவிதமான வடிவங்கள் காட்டும் நீரோட்டத்தைப் போன்றவள் பெண். கசிந்து, பெருகி, குதித்து, இறங்கி, சீறி, நடந்து, நெளிந்து, பிரிந்து, புணர்ந்து சங்கமமாகிற வரை நீர்கொள்ளும் அத்தனை பாவனைகளையும் பெண்ணிடமும் காண முடியும். ஆணின் இயல்புகள் புறச்சூழல்களால் தீர்மானிக்கப்பட்டு விடுகின்றன. பெண் அந்த நிமிடத்து உணர்வில் […]

எழுத்து

வசீலி கிராஸ்மேன்: இருபதாம் நூற்றாண்டின் தல்ஸ்தோய் – ஆரோன் லேக் ஸ்மித்

கோ.கமலக்கண்ணன் · November 25, 2021

சோவியத் ஒன்றியம் உதிரி எழுத்தாளர்களாலும் இதழாசிரியர்களாலும் நிறுவப்பட்ட அரசாங்கம் என்றே நினைவுகூரப்பட வேண்டும். வேறு சொல்லில் அதைக் கொடுங்கனவு என்றும் குறிப்பிடலாம். துண்டுப் பிரசுரர்கள், தன்னிச்சையான கொள்கையாளர்கள், விமர்சகர்கள், சிறு பத்திரிகை வெளியீட்டாளர்கள், கவன ஈர்ப்புக்காகக் கருத்திடுபவர்கள், திருட்டுக் கலைஞர்கள், தம்மைத் தாமே தொழிலாளர் ஒருங்கிணைப்பாளர்கள் என்று அழைத்துக்கொண்ட தோல்வியடைந்த கவிஞர்கள் – ஒருவரோடு ஒருவர் உரசி நித்தியமாகப் போரிட்டபடி இருக்கும் முழு முற்றான இலக்கியவாதிகள் ஆகியோர் அதன் பங்களிப்பாளர்கள்.  தொடக்க கால சோவியத் ஒன்றியத்தை நாம் […]

எழுத்து

தஸ்தாயேவ்ஸ்கியின் கலைத்தன்மை – பி.கே.பாலகிருஷ்ணன்

அழகிய மணவாளன் · November 25, 2021

தஸ்தாயேவ்ஸ்கியின் நான்கு மாஸ்டர்பீஸ் நாவல்களான குற்றமும் தண்டனையும், அசடன், டெவில்ஸ் (The Devils), கரமசோவ் சகோதரர்கள் போன்றவற்றின் சிறப்பம்சம் அந்த நாவல்களில் உள்ள கடவுளின் இருப்பு சார்ந்த தேடல்கள்தான். இந்த நாவல்களில் உள்ள கடவுளின் இருப்பு சார்ந்த தேடல்கள் தஸ்தாயேவ்ஸ்கியின் உள்ளார்ந்த தொந்தரவைப் பிரதிபலிக்கின்றன, அதிலுள்ள கதாபாத்திரங்கள் அந்தத் தேடலை விவாதப்பொருளாக ஆக்குகின்றன. அது மட்டுமல்ல, அவரது நான்கு முக்கிய நாவல்களுமே கடவுளின் இருப்பு சார்ந்த கேள்வியின் உள்ளார்ந்த வலியிலிருந்துதான் உருவானவை, அந்த ஒரு கேள்வியின் தீவிரத்தால்தான் […]