Category: எழுத்து

எழுத்து

பால்வண்ணம் பிள்ளை ஏன் கந்தசாமிப் பிள்ளையாக இல்லை?

ஆர்.அபிலாஷ் · 25.11.21

அரிஸ்டாட்டில் (கி.மு 384-324) பண்டைய கிரேக்கத் தத்துவ ஞானிகளில் முக்கியமானவர். தத்துவம், தர்க்கம் மட்டுமன்றி உயிரியல் உள்ளிட்ட அறிவியல் துறைகளிலும் ஆய்வுசெய்து எழுதியவர். அவருடைய ஆசான் பிளேட்டோ ஒரு கருத்துமுதல்வாதி (எல்லா இருப்புகளுக்கும் ஆதியந்தம் ஒரு தூய கருத்தே என நம்புபவர்). ஆனால் இவரோ ஒரு “லோகாயவாதி” அல்லது நடைமுறைக்கு அதிக மதிப்பளிக்கும் தத்துவவாதி, பொருட்களுக்கும் சாரம் என ஒன்று இருக்கக்கூடும் என நம்பாதவர். அரிஸ்டாட்டில் ஒரு உருவவியல்வாதியும்கூட (formalist) – அதாவது வடிவமே ஒன்றின் தற்காலிகமான […]

எழுத்து

எல்.கே.ஜி

சுஷில் குமார் · 25.11.21

“ஒழுக்கம்தான் சார் ஃபர்ஸ்ட்டு, ஒழுக்கமில்லாத பசங்க இந்த ஸ்கூலுக்குத் தேவையில்ல, நீங்க ஒங்க பையன கூட்டிட்டுப் போயிருங்க சார். இவன வச்சிட்டு எங்களால முடியல,” தலைமை ஆசிரியரின் கோபத் தெறிப்பு அவரது அறையையும் தாண்டி வெளிவந்தது.  தொடர்ந்து அந்தத் தகப்பனின் கெஞ்சல்களும் தலைமை ஆசிரியரின் கறாரான பதிலுமெனச் சில நிமிடங்கள் சென்றன. சலிப்பும் வருத்தமுமாகத் அந்தத் தகப்பன் வெளியேற அவரைப் பின்தொடர்ந்து தலையைக் குனிந்தபடி வந்தான் ஒரு சிறுவன். என்ன, ஒரு பத்து வயது இருக்கும். இந்த […]

எழுத்து

அகம் சுட்டும் முகம் (பகுதி 6): கே.ஜி.ஜார்ஜின் திரையுலகம்

எம்.கே.மணி · 25.11.21

“சார், சினிமாவில் சினிமாவா?“ என்றொரு முகச்சுழிப்பு உண்டு. என்ன பிரச்சினை என்று கேட்கப்போனால் முதலில் ராசி இல்லை என்ற பதில் வரும். எந்தப் படங்களும் ஓடியதில்லை என்று ஒரே வீச்சு. அப்படி இல்லையே என்று துவங்கி நாம் இருவர், சர்வர் சுந்தரம், சினிமாப் பைத்தியம், ஏணிப்படிகள், நட்சத்திரம் என்று பட்டியல் போட முற்பட்டால், இறுகின முகத்துடன் சினிமாவில் சினிமா வேண்டாம் என்று காரணம் கூறாமல் மறுத்துவிடுவார்கள். ராசியில்லை போன்ற இன்ன பிற சொல்லாடல்கள் பற்றி என்ன சொல்லுவது? […]

எழுத்து

உயிர்த்தெழுதலின் சங்கீதங்கள்: ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள்

க. மோகனரங்கன் · 25.11.21

‘உங்கள் வாழ்வை எதிர்கொள்வதற்கு இரண்டு வழிகளே உள்ளன. ஒன்று, எதுவுமே பொருட்டில்லை என்பது போல கடந்து செல்வது. மற்றது, ஒவ்வொன்றுமே அதிசயம் என்பது போல வியந்து பார்ப்பது.’ -ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மொழியில்லாமல் மற்ற விலங்குகளைப் போல உள்ளுணர்வின் துணையோடு சைகைகளால் மாத்திரம் பேசிக்கொண்டு மனிதர்கள் வாழ்ந்த காலமும் இருந்திருக்கும். மகிழ்ச்சி, அச்சம், வலி , வியப்பு போன்ற உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் இருந்துதான், அவற்றைச் சக மனிதர்களோடு பகிர்ந்துகொள்ளும் பொருட்டு மொழி பிறந்திருக்க வேண்டும். எல்லா மொழிகளிலுமே அவற்றின் […]

எழுத்து

தமிழ்ச் சிறுகதை இன்று (பகுதி 10): கதை சொல்லாத கதைகள் – கமல தேவியின் கதைகளை முன்வைத்து

எம்.கோபாலகிருஷ்ணன் · 25.11.21

இன்று எழுதிக்கொண்டிருக்கும் பெண் சிறுகதையாளர்களைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தபோது கமலதேவியின் பெயரை சுனில் கிருஷ்ணன்தான் பரிந்துரைத்தார். அதுவரை நான் கேள்விப்பட்டிராத பெயர். பதாகையில் வெளிவந்திருந்த ‘அலைவு’ கதையை வாசித்தேன். அதைத் தொடர்ந்து ‘ஜீவனம்’. அந்த இரண்டு கதைகளும் உடனடியாக வசீகரிக்கவில்லை. ஆனால், கிராமம் சார்ந்த சில நுட்பங்களும் இயல்பான அனுபவத்திலிருந்து வெளிப்படும் சொல்முறையும் கவனத்தைக் கவரும் வகையில் அமைந்திருந்தன.  கதை என்பதே ஒரு சம்பவத்தைச் சொல்வதுதான். நடந்தது நடந்தபடியோ அல்லது கூட்டிக் குறைத்தோ அது விவரிக்கப்படும். சிறுகதையின் பொதுவான, […]

எழுத்து

கற்றாழை

ஐ. கிருத்திகா · 25.11.21

உள்ளாடை நனைந்ததில் திக்கென்றிருந்தது. இப்படித்தான் அடிக்கடி நனைந்துபோகும். தெரிந்ததுதான். இருந்தும் மனசு அவசர அவசரமாய் கணக்கு போட்டுப் பார்த்தது. இருபத்தியிரண்டு நாட்களாகியிருந்தன. இருபத்தியிரண்டில் வருவதற்கு வாய்ப்பேயில்லை. இருபத்தைந்திலிருந்து எதிர்பார்க்கலாம். இருபத்தியெட்டிற்குள் கட்டாயம் வந்துவிடும். நிறம் மாறியிருந்தால் பிரச்சினையில்லை. சிவப்பு அச்சம் தரும் நிறம். வெள்ளை சமாதானம். மனதைச் சமப்படுத்தும். இருந்தும் அதுவும் கசகசப்புதான். வடித்த கஞ்சி போல, சில சமயம் பாலேடு போல… நடக்க நடக்க உடலோடு உராயும் உள்ளாடையின் கொழகொழப்பு எதிராளியின் புருவங்களை உயர்த்த வைக்கும். முகத்தின் சுருக்கங்கள் அவர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தும். ஒரு கப் நீரூற்றிக்கொண்டால் தேவலாமென்றிருந்தது. அடித்து ஊற்றிக்கொள்ள வேண்டும். […]

எழுத்து

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்

பாலா கருப்பசாமி · 25.11.21

ஜெ.பிரான்சிஸ் கிருபாவின் கன்னி தமிழின் ஆகச்சிறந்த நாவல்களுள் ஒன்று. இது பல எழுத்தாளர்களும் வாசகர்களும் ஏற்கெனவே ஏற்றுக்கொண்ட விஷயம்தான். பல்வேறு நேர்காணல்களில் கன்னி நாவல் தனது சொந்த அனுபவம் என்றே கிருபா குறிப்பிட்டுள்ளார். அவரது இயற்பெயர் பிரான்சிஸ். கிருபா என்பது அவர் பம்பாயில் இருந்தபோது நெருங்கிய நண்பனாக இருந்தவரது பெயர். அவர் சிறுவயதிலேயே இறந்துவிட்டதாகவும் அவர் நினைவாக இந்தப் பெயரைப் பின்னொட்டாக வைத்துக்கொண்டதாகவும் கூறியுள்ளார். ஏற்கெனவே முகநூலில் முதன்முதலாகக் கன்னி நாவல் வாசித்தபோது ஏற்பட்ட பரவசத்தில் ஒரு […]

எழுத்து

செல்சுடர் வேளை

கார்த்திக் நேத்தா · 25.11.21

கொல்லிப் பாவை காமம் என்பது ஆதியெனில் அது  அகந்தையோ? கன்மமோ? மாயையோ? பதிமை அறியாப் பசுவோ? பசுவில் கனக்கும் பாழோ? அழிபசியோ? ஆனா நோயோ? இரக்கம் மறந்த  மூர்க்கமோ? மிச்சம் நிற்கும்  அச்சமோ? ஒளிக்கும் முந்தைய  குருடோ? இருளின் நித்திய  விரிவோ? காமம் என்பது ஆதியெனில் உதற முடியாத ஊழோ? உள் சுரக்கும் நஞ்சோ? உட்செறிந்த தீங்கோ? ஆதியில் வந்தது காமமெனில் நான் அற்பன் ஆனதில் பிழையுளதோ? * அங்கதம் பொறாமையுறும் முகத்தில்தான்  என்னவொரு பிரகாசம்! என்னவொரு […]

எழுத்து

The White Ribbon: திரைக்கதை (பகுதி 1) – மைக்கேல் ஹனகே

கோ.கமலக்கண்ணன் · 25.11.21

1. உள்ளே / பகல் : பண்ணை நிலத்தில் இருக்கும் குதிரைவித்தைப் பள்ளி : அண்மை ஷாட்களின் மாண்டேஜ்கள்.  ஒருவன் வித்தைக் குதிரையை ஓட்டுகிறான். நம்மால் அவனது முகத்தைக் காண முடியவில்லை. அவனது சப்பாத்துகள், தார்க்குச்சி, சாட்டை, விரைத்த கடிவாளம், நுரைதோன்றும் குதிரையின் வாய், அவ்விலங்கினை முன்னகர்த்தும் இயக்கம் ஆகியவற்றை மட்டுமே காண முடிகிறது. செவியில் குளம்படிகளின் மெல்லிய சப்தமும் வேகமாக உச்சரிக்கப்படும் குதிரையோட்டியின் ஆணைகளும் நம் செவியில் விழுகின்றன. அதன் பின்னர் நாம் ஒரு மென்குரலைக் […]

எழுத்து

கண்ணொடு கண்இணை நோக்கின் – ஆனந்த குமாரசாமி

தாமரை கண்ணன் · 25.11.21

சில உருவச்சித்திரங்களில் (portrait) கண்கள் பார்வையாளரை நேருக்குநேர் பார்த்துக்கொண்டிருப்பது போலத் தோன்றும். அவர் ஓவியத்திற்கு நேராக இருந்தாலும், வலது அல்லது இடமாக நகர்ந்தாலும்கூட அவ்வாறே தெரியும். கிறிஸ்துவின் பல சித்திரங்களில் அவருடைய நோக்கு பார்வையாளர் எந்த இடத்திலிருந்தாலும் அவரைத் தொடுவது போலவும், எங்கு நகர்ந்தாலும் உடனே அவரைப் பின்தொடர்வது போலவும் தோன்றும். இதற்கு நல்ல உதாரணமாக குவெண்டின் மாட்ஸிஸ் (Quentin Matsys) வரைந்து ஆண்ட்வெர்ப் (Antwerp) நகரில் வைக்கப்பட்டிருக்கும் கிறிஸ்துவின் முகத்தைக் (Christus Salvador Mundi) குறிப்பிடலாம். […]

எழுத்து

பெருந்தொற்றிலிருந்து நீளும் இடக்கை

ஆசை · 25.11.21

மூத்திரத் திசை மெதுவாக நடந்துசெல்லும்எண்பதுகளின் தொடக்கத்தில் இருக்கும்முதிய ஜோடி கிழவருக்கு அவசரம்தன் மனைவியிடம் சொல்லிவிட்டுசாலையோரம் சென்றுநின்றபடியேஒன்றுக்கிருக்க ஆரம்பிக்கிறார் அவருக்கு முதுகு காட்டிக்கொண்டுநிற்கும் கிழவிக்குவெட்கப் புன்னகை கிழவரின் மூத்திரத்துக்கும்கிழவியின் வெட்கப் புன்னகைக்கும்எதிரெதிர் திசை எனினும்ஈறில்லாத் தொலைவில்ஒன்றையொன்று சந்தித்துக்கொள்ளும் அது மறுபடியும் ஒருநிழற்சாலையாகத்தான் இருக்கும். * முதியவளின் மூத்திரம் வெட்கமறியாது கண்ணகிச் சிலைக்குஎதிர்ப்புற நடைபாதைஓரத்தில் தடுப்புக் கம்பியைப்பிடித்துக்கொண்டுஅந்த முதிய பெண்மணி புடவையிலும்கைப்பையிலும்சற்றுப் பணக்காரத் தோற்றம் புடவைக்குக் கீழேநடைபாதையில்சாலையை நோக்கிக்கோடுபோட்டுச் செல்லும்மூத்திரம் முதியவளின் மூத்திரத்துக்கெதிராய்ப்பூட்டு போட்டுக்கொண்டஒரு நகரத்தின் மேனியில்மெல்லப் படரவிடுகிறாள்அந்தப் பெண்மணி […]

Editor's Picks

Editor’s Picks

கோகுல் பிரசாத் · 28.09.21

மகாத்மா காந்தி: இருபதாம் நூற்றாண்டின் தீர்க்கதரிசி (1940), ஏ.கே.செட்டியார் பல நாட்களாகத் தேடிக்கொண்டிருந்த ஆவணப்படம். காந்திய இலக்கியச் சங்கத்தால் தற்போது வெளியிடப்பட்டு குறுந்தகடு வடிவில் விற்பனையில் உள்ளது. கிட்டத்தட்ட நூறு ஒளிப்பதிவாளர்களால் பல்வேறு சமயங்களில் வெவ்வேறு நாடுகளில் படமாக்கப்பட்ட காந்தியின் வாழ்வை நமது வரலாற்று அக்கறையின்மையினால் பாதுகாக்க மறந்து தொலைத்துவிட்டோம். எஞ்சியதை கண்டடைந்து மீட்கப்பட்டதைத் தொகுத்து காட்சிப் பிரதியை மேம்படுத்தி இருக்கிறார்கள். காந்தி குறித்து ஏராளமாக வாசித்திருந்தாலும் அவரை மையமாகவோ துணைக் கதாபாத்திரமாகவோ கொண்டு எடுக்கப்பட்ட படங்களை […]