1. உள்ளே / பகல் : பண்ணை நிலத்தில் இருக்கும் குதிரைவித்தைப் பள்ளி : அண்மை ஷாட்களின் மாண்டேஜ்கள்.
ஒருவன் வித்தைக் குதிரையை ஓட்டுகிறான். நம்மால் அவனது முகத்தைக் காண முடிய
கதைசொல்லி
(திரைக்கு வெளியே – தி.வெ.)
நான் உங்களிடம் சொல்ல விரும்புகிற கதை, ஒவ்வொரு விவரணையிலும் தன்னகத்தே உண்மையைக் கொண்டிருக்கிறதா என்பதை அறியேன். அதில் பலவும் நான் செவிவழி்யாக அறிந்ததே. பல செய்திகள் எனக்கு இன்னும் தெளிவற்றவையாகத்
குதிரையேற்ற தொழுவங்
குதிரையோட்டி, கிராமத்தின் மருத்துவர். தனது அறுபது
கதைசொல்லி
(தி.வெ.- தொடர்ச்சி)
என் நினைவு சரியென்றால், எல்லாமே தொடங்கியது மருத்துவருக்கு ஏற்பட்ட குதிரையோட்ட விபத்திலிருந்து
2. வெளியே / பகல்: மருத்துவரின் வசிப்பிடம்.
நாட்டுபுறத்தின் சமநிலத்தில் இருந்த வயல்களும் புல்வெளிகளும் நேரே தோட்டத்தில் சென்று முடிந்தன. காயம்பட்ட புரவியின் அருகே மருத்துவர் விழுந்து கிடக்கிறார். அவரது புஜம் விசித்திர
சில நிமிடங்
அவள் செய்வதறியாது தளர்ந்தசைகிறாள். அவர் மீண்டும் எதையோ அவளிடம் சொல்லி கத்த, அவள் அங்கிருந்து ஓடுகிறாள். நாம், இவை அனைத்தையுமே வெகு தொலைவில் இருந்தே கேட்கிறோம், ஏனெனில், இந்த மொத்தக் காட்சியின் போதும் கதைசொல்லி தனது விதப்பைத் தொடர்ந்தபடி இருக்
கதைசொல்லி
(தி.வெ.- தொடர்ச்சி)
…அவர் நேரடியாக தனது இல்லத்தை நோக்கிச் சென்றார். அவரது நிலத்திற்குள் வந்ததும், இரண்டு மரங்களிடையே இறுக்கி கட்டப்பட்டிருந்த விழிக்குப் புலப்படாத கம்பியில் தடுக்கி குதிரை கீழே விழுந்தது. மருத்துவரின் 14 வயது மகள் இவ்விபத்தைச் சாளரத்திலிருந்து பார்த்து, தனது அண்டை வீட்டுப் பெண்ணிடம் தெரிவித்தாள். அவள் மூலமாக இவ்விசயம் பண்ணை வீட்டிற்குத் தெரிவிக்கப்
3. வெளியே / பகல் : கிராமத்தின் தெரு – பள்ளிக்கூடம்.
நகர்வு ஷாட் : ஒல்லியான உடல்வாகுடைய, நல்ல பணிவான தோரணையில் உடையணிந்திருந்த, எமிலி வேக்னர் என்ற முப்பது வயது மதிக்கத்தக்கப் பெண்மனி தெருவினூடே விரைகிறாள்.
கதைசொல்லி
(தி.வெ.- தொடர்ச்சி)
… தனது நாற்பது
சில குழந்தைகள் எமிலியைக் கடந்து செல்கையில் முகமன் செய்கின்றனர். பின்னர் அவள் பள்ளியை அடைகிறாள். கதவு திறந்திருக்
நாம் ஆசிரியரைப் பார்க்கிறோம். எளிமை
மார்டின்
நீங்கள் செனியா வீட்டில் இருந்தீர்களா?
அவனை மேரி இடைமறிக்கிறாள். கண்ணிய
மேரி
உன்னால் ஒரு வணக்கம் சொல்ல முடியாதா? மதிய வணக்கம், திருமதி. வேக்னர் அவர்
செவிலி
வணக்கம், மேரி.
மேரி
நாங்கள் மிகவும் கவலையுற்றிருந்தோம். அதனால்
செவிலி
அது பரவாயில்லை.
மேரி
மருத்துவர் எப்படி இருக்
செவிலி
சுகமாக இல்லை
மேரி
அவர் மருத்துவமனையிலேயே இருக்க வேண்டிய நிலையா?
செவிலி
எனக்குத் தெரிய
முடிவற்று நீளும் மேரியின் வயதிற்கு மிஞ்சிய கேள்விகள் செவிலிக்குக் களைப்பைத் தந்தன. அவள் தன்னைச் சுற்றி இருக்கும் பிள்ளை
மேரி
நாங்கள் செனியாவைப் பார்த்துக்கொள்கிறோம். நாங்கள் எவ்விதத்திலேனும் அவளுக்கு உதவி செய்வோம்.
செவிலி
(கவனச்சிதறலுடன்)
நல்ல யோசனை. அது அவளுக்குக் கொஞ்சம் ஊக்கம் தரும்.
அவள், கதவின் வழியே வெளிவரும் தனது மகனைக் கண்டு
செவிலி
அட, பாடல்களைப் பாடி மகிழ்ந்தாயா?
ஹேன்ஸ்
(மகிழ்வுடன் தலையாட்டியபடி)
ரொம்ப சிறப்பா இருந்துச்சி!
பள்ளி ஆசிரியர் வந்து சேர்கிறார்.
பள்ளியாசிரியர்
நீ பாடிக்கொண்டிருந்ததை அம்மாவிற்குப் பாடிக் காட்டு.
ஹேன்ஸ் குழப்பத்துடன் முதலில் பள்ளியாசிரியரையும் பின்னர் தன் அம்மாவையும் பார்க்கிறான். அவள் ஆமோதித்துத் தலையாட்டியதும், ஒரு நொடி நிதானித்துப் பிறகு பாடத் தொடங்குகிறான் :
ஹேன்ஸ்
லா… லா… லலலா…
மேரி அங்கிருந்து கிளம்பும் பொருட்டு திரும்புகிறாள்.
மேரி
விடைபெறுகிறேன், ஐயா. விடைபெறுகிறேன், திருமதி வேக்னர்.
அவளது பிரியாவிடை பிற பிள்ளைகளுக்கான முன்மாதிரியாகிறது. அவர்களும் விடைபெறுகை சொல்கிறார்கள். ஆயினும், அவர்களது சொல்லல் அவள் சொன்னதைப் போல் அத்தனை விகார
பிள்ளைகளோடே ஒரு நகர்வு ஷாட். கொஞ்சம் தொலைவிற்குப் போனதும், 13 வயது வலுவான சிறுவன் ஜியார்ஜ், சத்தமெழுப்பிப் பிறரை ஊக்கப்படுத்துகிறான்:
ஜியார்ஜ்
கடைசி முட்ட பீ முட்ட!
பின், அவன் ஒரு விருட்டோட்டம் எடுக்கிறான். பெரும்பாலான பிள்ளைகள் அவனைத் தொடர்கிறார்கள். ஆனால், மேரியும் சில பிள்ளைகளும் நடந்தபடியே தங்கள் வேகத்தை அதிகரிக்கின்றனர்.
காமிரா, ஜியார்ஜ் ஓடிப்போனதும் நிலைகொண்டு, இப்போது மேரியைப் பின்தொடர்கிறது. அவ்விதம், சற்று நேரத்தில், பிறரும் தெருவின் கோடியில் தெரிகின்றனர்.
4.வெளியே / பகல் : மருத்துவரின் வீடு
பரிதாப
செனியா
(மெல்லிய குரலில்)
நீ விரும்பினால் சென்ற வாரம் செய்தது போலவே இப்போதும் மிருகங்
எந்த மறுவினையும் இல்லை.
செனியா
(தொடர்ந்து…)
உனக்கு அது பிடிக்கும்தானே?
மிக மென்மை
செனியா
(தொடர்ந்து…)
நாமிருவரும் சேர்ந்து அவற்றிற்கு வர்ணம் தீட்டலாம். வேண்டாமா?
எந்த மறுவினையும் இல்லை.
செனியா
(தொடர்ந்து…)
இல்லையெனில், அழகான தங்கத்தாளில் இருக்கிறதே, உனக்கு நினைவிருக்கிறதா? ஈஸ்டருக்கு வாங்கினேனே? அதை நாம் கத்தரித்து விளையாடலாம்.
எந்த மறுவினையும் இல்லை. செனியா செய்வதறியாது தன் தம்பியின் தலையின் மீது தன் தலையைச் சாய்த்து முணுமுணுக்கிறாள்.
செனியா
(தொடர்ந்து…)
வாடா, என் செல்வமே!
அவர்கள் அப்படியே கொஞ்ச நேரம் இருந்தனர். இறுதியாக செனியா ருடோல்ஃபைத் தூக்கி எழுப்பித் தானும் எழுந்தாள்.
செனியா
(தொடர்ந்து…)
சரி. நாம் சாப்பிடுவதற்கு எதையாவது சமைக்கிறேன். திருமதி வேக்னர் அனைத்தையும் தயார்செய்து
ருடோல்ஃப்
(தன் தலை குனிந்த நிலையிலேயே மெலிதாக அவளை இடைமறித்து)
அவர் திரும்பி வராமலேயே போய்விட்டால் என்னவாகும்?
செனியா
(புரியாததைப் போல)
என்ன?
ருடோல்ஃப் குனிந்த தலையை வெறுமனே அசைக்கிறான்.செனியா தன் தம்பி முன் முழங்காலிட்டு அவன் விழிகளைப் பார்க்க முயல்கிறாள். அவனோ இன்னும் அழுத்தமாகத் தலையைப் புதைத்
செனியா
(கனிவுடன்)
எழுந்திரு. மூடனைப் போலப் பேசாதே! காய்ச்சலைப் போலவே இதுவும் சரியாகிவிடும். சென்ற குளிர்காலம் நினைவிருக்கிறதா? உனக்குக் கடுமை
ஒரு பெரிய சத்தம் அவளது செவியைக் கூர்மையாக்கியது. பக்கத்து அறையின் சாளரத்தில் ஏதோ ஒன்று விழுந்ததைப் போன்ற சத்தம்.
செனியா எழுந்து உற்று கேட்டாள். மெளனம். கொஞ்ச நேரம் தொடர்ந்து உற்று கேட்டதற்குப் பிறகு மீண்டும் அதே சத்தம்.
செனியா
உஷ்ஷ்…
அவள் அடுத்திருந்த அறைக்குள் சென்றாள். திரைச்சீலைக்குப் பின்னால் மறைந்து
வெளியே மேரியும் அவளைச் சூழ்ந்திருந்த பிள்ளைகளும் இருந்தனர். அவர்கள் வீட்டைப் பார்த்தபடி நின்றனர். எதற்கோ காத்திருக்
கொஞ்ச நேரம் கழித்து முன்பு எல்லோரையும் ஓட்டப்பந்தயத்திற்குத் தூண்டிய அதே சிறுவன் – ஜியார்ஜ், இன்னொரு கல்லை சாளரக்கதவின் மேல் எறிகிறான். செனியா திடுக்கிடுகிறாள். தயங்குகிறாள். இறுதியாக சாளரத்தைத் திறக்கிறாள்.
ஜியார்ஜ்
ஏய். ஜியார்ஜ்!
செனியா பதிலளிக்க
மேரி
(மெதுவாக)
எப்படி இருக்
5. வெளி / இரவு : மாளிகை
ஐம்பது
மேற்பார்வையாளன்
இதன் கால்தசை நாண் முற்றிலும் அறுந்து
நில உரிமையாளர் மண்டியிட்டு அமர்ந்து இறந்த அந்த விலங்கின் முன்னங்கால் குறுதுண்ட என்பில் இருந்த காயத்தைப் பரிசோதித்துப் பார்க்கிறார்.
நில உரிமையாளர்
இங்கு எப்படி இது வந்தது? மருத்துவர் இது குறித்து ஏதும் சொல்ல
மேற்பார்வையாளன்
(அடக்க
அவருடைய கழுத்துப்பட்டை எலும்பு தொண்டையைக் கிழித்து வெளியே நீட்டியிருப்பதால் அவர் பேசும் நிலையில் இல்லை. அவர் மகளிடம் கேட்டேன். அவளுக்கு ஒன்றும் தெரிய
நில உரிமையாளர்
நீ அந்த கம்பியைப் பார்த்தாயா?
மேற்பார்வையாளன்
ஆம். பார்த்தேன். அது மெலிதாக இருந்தது. ஆனாலும் நல்ல வலிமையுடன் இருந்தது. உற்று பார்க்காவிடில் அது கண்களுக்குப் புலப்படாது.
நில உரிமையாளர்
ஆனால், அது ஏன் அங்கே கட்டப்
மேற்பார்வையாளன்
(தோளைக் குலுக்கியபடி)
அதுவும் முழங்கால் உயரத்தில்! எனக்குத் தெரிய
நில உரிமையாளர்
அதற்கு என்ன பொருள்?
மேற்பார்வையாளன்
பொருள். நான் அறியேன் என்பதே. எப்படியோ அது வேண்டுமென்றே அங்கு கட்டப்பட்டிருப்பதைப் போலவே தெரிகிறது. கொடுமை…
6. உள்ளே / இரவு : மாளிகை – மேல்மாடியில் உள்ள வாழ்வறை
நில உரிமையாளரின் மகன் – 9 வயது சிஜி சாளரத்தில் நின்று, இறந்த குதிரையையும் அதை பந்தம் ஏற்றிப் பார்த்தபடி இருக்கும் தன் தந்தை, மேற்பார்வையாளர் இருவரையும் பார்க்கிறான்.
பின்னணி இசை (பியானோ / வயலின்) ஒலிக்கிறது.
கொஞ்ச நேரத்திற்குப் பின் முற்றத்தில் இரு ஆண்களும் – நில உரிமையாளர் மாளிகைக்கும் மேற்பார்வையாளன் வண்டிக்குதிரைகளோடு பண்ணைக் கட்டடத்திற்கும் – தனித்தனியே பிரிந்து செல்கின்றனர்.
சிஜி சாளரத்திலிருந்துத் தலையைத் திருப்பி அறைக்குள் பார்க்கிறான்.
அங்கே அவனது அழகிய, பதற்ற
இசையாசிரியன்
மன்னிக்கவும் அம்மையீர். என்னைப் பொறுத்தமட்டில் நீங்கள் அதீதச் சிறப்புடன் வாசிக்கிறீர்கள்.
பீட்ரிக்ஸ்
மன்னிப்பு கோருவதை நிறுத்தி

இசையாசிரியன்
உண்மையைச் சொல்ல வேண்டுமெனில், நீங்கள் மிகவும் வேகமாக வாசிக்கிறீர்கள். ஆனால், நான் பகானினி இல்லை.
பீட்ரிக்ஸ்
சரி, மீண்டும் ‘டி’ஸ்வரத்தில் ஆரம்பத்திலிருந்து வாசிக்கலாம்.
இசையாசிரியன் அதைப் பின்பற்றினான். ஒருகணம் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து
சிஜி அவர்களைச் சாளரத்தின் வழியாகப் பார்த்து
பீட்ரிக்ஸ் சடுதியில் மீண்டும் தன் வாசிப்பை நிறுத்துகிறாள்.
பீட்ரிக்ஸ்
செல்லமே கொஞ்சம் கேள். உனக்கு இசை பிடித்திருந்தால் என்னருகே அமர்ந்து இசைத்தாள்களைத் திருப்பு. இல்லை சலிப்பாக உணர்ந்தாயெனில் குறைந்தபட்சம் என் பார்வையிலேனும் படாதபடி, உன் அறைக்குப் போய்விடு. எனக்கு முன்னால் நீ அன்ன நடை போட்டபடியே இருந்தால் எனக்குப் பதற்ற
சிஜி நாணித் தன் தலையைத் தாழ்த்துகிறான். இருப்பினும் அங்கிருந்து அகன்றிட
பீட்ரிக்ஸ்
(இசையாசிரியனை நோக்கி)
சரி, இப்பொழுது நேரம் என்ன ஆயிற்று? பெண்பிள்ளை எங்கே?
இசையாசிரியன் தனது பைக்கடிகாரத்தை வெளியே எடுத்துப் பார்க்கிறான்.
இசையாசிரியன்
அவள் இரட்டையருடன் இருப்பாள் என நினைக்கிறேன். எட்டு நாற்பது ஆகிறது.
பீட்ரிக்ஸ்
எட்டு நாற்பதா?
(சிஜியை நோக்கி)
நீ படுக்கையில் இருக்க வேண்டிய நேரமெல்லாம் கடந்தே போய்விட்டது.
(இசையாசிரியனை நோக்கி)
அவன் தன் வீட்டுப்பாடத்தை முடித்துவிட்டானா?
இசையாசிரியன்
ஆம், அம்மையீர்!
பீட்ரிக்ஸ்
சரி.
(சிஜியிடம்)
நீ எனக்காகப் பக்கங்களைத் திருப்ப விரும்புகிறாயா இல்லையா?
சிஜி ஆமோதித்துத் தலையாட்டுகிறான்.
பீட்ரிக்ஸ்
அப்படியானால், இங்கே வா!
மந்தகாசப் புன்னகையுடன் அமர்வுப் பலகையில் தன்னருகே இருந்த இடத்தில் தட்டுகிறாள். சிஜி அவளருகே வந்தமர்ந்து இசைத்தாளைப் பார்க்கிறான். பீட்ரிக்ஸ் பக்கங்
பீட்ரிக்ஸ்
(இசையாசிரியனிடம்)
சரி. இதோ மீண்டும் தொடங்குவோம். ‘டி’ ஸ்வரம். கொஞ்சம் வேகமாக வாசிக்க முயற்சி செய்யுங்கள். இல்லாவிடில் நான் கிராமத்துப் பள்ளியாசிரியருடன் சேர்ந்து வாசிக்க நேரிடும்.
அவர்கள் மீள வாசிக்கின்றனர். சிஜி அவளுடன் சேர்ந்து இசையைப் படிக்கிறான். பின் பக்கத்தைத் திருப்புகிறான்.
7. உள்ளே / இரவு : கல்லூரிமுதல்வரின் வீடு.
மேரியும் மார்டினும் கதவின் வழி நுழைந்து முன்பாக நிற்கின்றனர்.
உணவு மேசையில் தன் முதுகைக் கதவிற்குக் காட்டியவாறு அமர்ந்திருக்
மெளனம்.
மேரி
(மெல்லிய குரலில்)
தயவுசெய்து எங்களை மன்னித்துவிடுங்கள்.
மார்டின்
(அவளைப் பின்பற்றி)
தயவுசெய்து எங்களை மன்னித்துவிடுங்கள்.
மெளனம்.
அந்த இரு பிள்ளைகளிடமும் பாராமுகமாய் மிகவும் குன்றிய ஒலியில் போதகர் பேசத் தொடங்குகிறார்:
போதகர்
மன்னிப்பதற்கான வினாவே எழவில்லை. நீங்கள் என்னை அவமதிக்க
அவர் இரு பிள்ளை
போதகர்
நீங்களே சொந்தக் காலில் நிற்குமளவு வளர்ந்துவிட்டீர்களா? என்ன? வீட்டைவிட்டு வெளியேறி சொந்தமாகத் தம்மைப் பார்த்துக்கொள்ளும் திறன் வந்துவிட்டதா உமக்கு? அப்படியிருந்தால் நீங்கள் எந்நேரமும் வரலாம் போகலாம். வீட்டில் யாரும் உங்களைக் கேட்க இருக்க மாட்டார்கள். இதுதான் உங்களுக்கு வேண்டுமா?
இரு பிள்ளைகளும் தலைதாழ்த்தி மெளனம் காக்கின்றனர். போதகர் மீண்டும் அவர்களுக்குப் புறமுதுகு காட்டி மேசையில் அமர்கிறார்.
போதகர்
இன்று இந்த பந்தியில் யாருமே உண்ண
(நிறுத்தம்)
இன்றிரவு நாம் அனைவருமே பசியுடன் படுக்கைக்குச் செல்வோம்.
அவர் எழ, அவரைத் தொடர்ந்து தாயும் மேசையில் அமர்ந்திருந்த பிள்ளைகளும் எழுகின்றனர். மீண்டும் அவர் பிழை செய்த இருவரையும் நோக்கி:
போதகர்
நம்மிடையே பரஸ்பர மரியாதை இருக்க வேண்டுமெனில், நான் உங்களுக்குத் தண்டனை தராமல் இருக்க முடியாது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று கருதுகிறேன். நாளை மாலை இதே நேரம் ஆளுக்குப் 10 பிரம்படிகள் தருவேன். அதுவரை உங்கள் பிழையை நீங்கள் மனத்தில் ஓட்டிப் பார்க்கலாம். என்ன ஏற்கிறீர்களா?
மேரி
(மார்டினுடன் சேர்ந்து
ஏற்கிறோம் தந்தையே.
போதகர்
அப்படியெனில், எல்லாம் முடிந்தது. இப்போது எல்லோரும் படுக்கைக்குச் செல்லுங்கள்.
மேசையில் அமர்ந்திருந்த பிள்ளைகள் நிரையாக – முதலில் தாயிடமும் பின் தந்தையிடமும் செல்கின்றனர். அவர்கள் கைகளுக்கு முத்தமிட்டு, அறையைவிட்டு வெளியேறுகின்றனர். அதையே தாமும் செய்ய மேரியும் மார்டினும் முயல, அவர்களிடம் சொல்கிறார்.
போதகர்
உங்கள் தொடுகையை நான் மறுக்கிறேன். நாளை உங்களை அடிக்க வேண்டியதால் இன்று நானும் உங்கள் தாயும் நல்லுறக்கம் கொள்ள முடியாது. விளாசல்கள் உங்களுக்குத் தரவிருக்கும் வலியைவிட நாங்கள் அதிக வலியை உணர்வோம். எங்களை விட்டு
இரு பிள்ளைகளும் அறையைவிட்டு வெளியேறும் போது சொல்கிறார்.
போதகர்
நீங்கள் சின்னதாக இருந்தபோது உங்கள் தாய், உங்கள் கைகளைச் சுற்றி அவ்வப்போது ஒரு வெண்ணிற நாடாவைக் கட்டு
8. வெளியே / பகல் : மருத்துவரின் இல்லம்.
அண்மைக் கோணம் : மருத்துவரின் புரவியைத் தடுக்கிவிட்ட கம்பி கட்டப்பட்டிருந்த மரங்களுள் ஒன்று. காவலர் ஏதேனும் துப்பு கிடைக்கிறதா என்று அவதானிக்கிறார்.
அவருடன் செனியா, ருடோல்ஃப், செவிலி, அவள் மகன் ஹேன்ஸ் ஆகியோர் இருக்
காவலர்
இப்போது கம்பி எங்கே இருக்
செவிலி செனியாவைப் பார்க்க, அவளோ தான் அறியேன் எனும்விதமாகத் தோளைக் குலுக்குகிறாள்.
காவலர்
அப்படியெனில், யார் அதை கழற்றியது?
செனியா
எனக்குத் தெரியாது.
காவலர்
நீங்கள் இங்கே இருக்க
செனியா தெளிவற்ற முகத்துடன் செவிலியைப் பார்க்கிறாள்.
செனியா
நகரத்திற்குச் செல்லும் போது உங்கள் தந்தையுடன் நீங்களும் போனீர்களா?
செனியா
இல்லை.
காவலர்
அப்படியானால் நீங்கள் இங்கு
செனியா
நான் பள்ளியில் இருந்தேன். இன்று.
காவலர்
நீங்கள் பள்ளிக்குச் சென்றபோது கம்பி அப்படியே
செனியா
நான் அதைக் கவனிக்க
காவலர் செவிலியை நோக்கித் திரும்புகிறார்.
காவலர்
நீங்கள் எப்போது வந்தீர்கள்?
செவிலி
நண்பகலில். மருத்துவருக்கும் அவர் பிள்ளை
காவலர்
அது எப்போதிலிருந்து?
செவிலி
நான்காண்டுகளாக. ருடோல்ஃப் பிறந்ததிலிருந்து. நான் செவிலியாகப் பணிபுரிகிறேன். நாங்கள் அடிக்கடி சேர்ந்தே பணிபுரிவதும் உண்டு.
காவலர்
ஆனால் நீங்கள் எதையுமே பார்க்க
செவிலி
இல்லை.
காவலர்
எவ்வளவு நேரம் வரை கம்பி இங்கேயே இருந்தது என்பது பற்றி ஏதும் தெரியுமா?
செவிலி
நான் அதை இதுவரை பார்க்கவே இல்லை.
காவலர்
(சினத்துடன்)
தெரியாமல்
என்ன பதிலளிப்பது என்று தெரியாமல் செனியாவும் செவிலியும் விழித்தனர். அப்போது ஆர்வத்துடன் அங்கே ஹேன்ஸ் ஓடி வந்தான்.
ஹேன்ஸ்
அம்மா! பாரு. பாரு. வா!
செவிலி
(தயக்கத்துடன்)
என்ன நிகழ்கிறது?
ஹேன்ஸ்
மக்கள்! நிறைய மக்கள். வா!!
செவிலி
(காவலரிடம்)
மன்னிக்கவும்.
செவிலி நிலத்தை நோக்கியபோது நிறைய ஆட்கள் சேர்ந்து மருத்துவரின் நிலத்தை ஒட்டியிருந்த பாதையைக் கடந்து நம் பார்வையில் பட்டுச் செல்கின்றனர். பாடையில் ஒரு சடலத்தை எடுத்துச் செல்கின்றனர். காவலரும் செனியாவும் செவிலியைப் பின்தொடர்ந்து வந்து சேர்கின்றனர். தோன்றிய வேகத்திலேயே அந்த மக்கள் கூட்டம் புதர்களைத் தாண்டி மறைந்தும் போயினர். அவர்கள் அருகில் வருகையில் நாம் இதைக் கேட்கிறோம்.
கதைசொல்லி
மருத்துவருக்கு ஏற்பட்ட விபத்தின் மறுநாள் அதை யார் செய்தது என்பதற்கான எந்தப் பதிலும் கிடைக்க
9. உள்ளே / பகல் : பண்ணை.
தாழ்கூரை இருந்த அறையில் கடும் இருள் இருந்தது. சிறிய சாளரங்கள். குடியானவப் பெண்கள் இருவர் படுக்கையில் கிடத்தப்பட்டிருந்த பிணத்தைச் சீர்படுத்திக்
கதைசொல்லி
கையில் காயம் இருந்ததால் அந்தப் பெண்ணுக்கு இலகுவான பணிகளை மட்டுமே செய்ய முடியும். எனவே மேற்பார்வையாளர் அவளை அறுவடைப் பணியிலிருந்து விடுவித்து இலகுவான பணிசெய்யும் பொருட்டு மரம் அறுப்பு ஆலைக்கு அனுப்பியிருந்தார்.
எல்லாமே மெல்லிய ஒலியில் நடந்துகொண்டிருக்கின்றன. பிணத்தைக் கழுவித் தூய்மை செய்வதில் திறன்பெற்ற ஒரு முதிய செவிலி அனைத்து செயல்முறைகளையும் கவனித்துக்
முதிய செவிலி
நீ வெளியே போ! நாங்கள் இன்னும்…
உழவர்
(மெதுவாக)
வெளியே போ!
அரை நிர்வாணமாய்க் கிடந்த சடலத்தின் மீது இன்னும் போர்த்தப்படாமல் வைக்கப்பட்டிருந்த சீலையை அப்படியே விட்டு
10. வெளியே / பகல் : நதியும் ஒரு பாலம் அமைந்த புல்வெளியும்.
தூண்டில் வலையுடன் பள்ளியாசிரியர் மீன்பிடித்தவாறு இருக்
கதைசொல்லி
அதே நாள் நான் ஒரு விசித்திர
பள்ளியாசிரியர் சடுதியில் பிரம்மை பிடித்து நின்றார். முப்பது அடி உயர்ந்திருந்த பாலத்தின் மீது, ஏதோ கயிற்றில் நடக்கும் கூத்தாடியைப் போல மார்டின் நடந்து
பள்ளியாசிரியர்
(அச்சத்துடன் கத்துகிறார்)
மார்டின்!
அவர் குரலைக் கேட்காதவனாய் அவன் தொடர்ந்து சமநிலையைப் பேணி நடந்து
பள்ளியாசிரியர்
(இன்னும் சத்த
மார்டின்!
மார்டின் அவன் போக்கில் இருக்
பள்ளியாசிரியர் தன் தூண்டிலையும் துடித்துக்கொண்டிருக்கும் மீனையும் ஆற்றின் படுகையில் இருந்த சரளைக்கற்
பள்ளியாசிரியர்
மார்டின், கவனம்!
ஒரு சில அடிகள் எடுத்து வைத்ததும் பாலத்தின் சுவரினைக் கடந்து முடித்துவிட்டுப் பாலத்தின் மறுமுனையில் இறங்கிவிடுகிறான்.
அவனை நோக்கி வரும் பள்ளியாசிரியரை விருப்பமின்றித் திரும்பிப் பார்க்கிறான்.
பள்ளியாசிரியர்
நீ என்ன உலகமகா முட்டாளா? விழுந்து கழுத்து உடைபட வேண்டுமா உனக்கு?
மார்டின்
(தன் தலையைக் குனிந்தபடி)
வணக்கம், ஐயா!
பள்ளியாசிரியர் அவனருகே சென்று சேர்கிறார்.
பள்ளியாசிரியர்
என்ன நடக்கிறது? நீ என்ன பைத்தியமா?! இது எத்தனை உயரம் என்று தெரியாதா?
சிறுவன் தலைகுனிந்து மெளனம் காக்கிறான்.
பள்ளியாசிரியர்
நான் அழைத்தது கேட்டதா இல்லையா? கத்தினேன்!
மார்டின்
(சிறிய மெளனத்திற்குப் பின்)
ஆம், கேட்டது.
பள்ளியாசிரியர்
அதற்குப் பின்னும்?
சிறுவன் மெளனம் காக்கிறான்.
பள்ளியாசிரியர்
சரியாகப் போயிற்று!
தலைகுனிந்தபடியே தோளை ’ஒன்றுமில்லை’ என்பது
பள்ளியாசிரியர்
நீ நான் அங்கு இருப்பதைப் பார்த்து என் கவனத்தை ஈர்க்கத்தானே இப்படிச் செய்தாய்?
சிறுவன் இல்லை என்று தலையசைக்கிறான்.
பள்ளியாசிரியர்
ஏன் நீ அப்படிச் செய்யாமல்…
மார்டின்
(இடைமறித்து)
என்னைக் கொல்வதற்கான வாய்ப்பைக் கடவுளுக்குத் தந்தேன். அவர் செய்ய
பள்ளியாசிரியர்
(குரல் தடுமாறி)
என்ன சொல்கிறாய்?
மார்டின்
நான் மரணிப்பதை அவர் விரும்ப
பள்ளியாசிரியர்
(குழம்பியவராக)
யார்? யார் உனது மரணத்தை விரும்ப
மார்டின்
கடவுள்!
நிறுத்தம்.
பள்ளியாசிரியர்
நீ இறக்க வேண்டுமென கடவுள் ஏன் விரும்பப் போகிறார்?
சிறுவன் பதிலளிப்பதை நிறுத்தி
பள்ளியாசிரியர்
இதைப் போன்ற முட்டாள்தனத்தை இனி செய்யவே மாட்டேன் என்று உறுதி தா. சரியா? என்னைப் பார்.
மார்டின் மனமின்றி பார்க்கிறான்.
பள்ளியாசிரியர்
உறுதி செய்து தா.
மார்டின் மெளன
பள்ளியாசிரியர்
நீ என்னை நம்ப
மார்டின்
(பணிவுடன் உணர்ச்சியின்றி)
நான் நம்புகிறேன் ஐயா!
இதற்கு மேல் பேசுவதில் எந்தப் பயனும் விளையாது என்று பள்ளியாசிரியர் புரிந்துகொள்கிறார்.
பள்ளியாசிரியர்
(முடிவாக)
எல்லாம் சரி. இப்போது வீட்டிற்குச் செல். நாளைக்குப் பியானோ பாடத்திற்காக வருவேன். அப்போது உன் தந்தையுடன் பேசுகிறேன்.
தன் முகத்தைத் திருப்பி ஆசிரியரைப் பார்த்து கெஞ்சும் குரலில் மார்டின் இறைஞ்சுவதைப் பார்த்து பள்ளியாசிரியர் திடுக்கிடுகிறார்.
மார்டின்
வேண்டாம். தயவுசெய்து அவரிடம் சொல்ல வேண்டாம்.
பள்ளியாசிரியர்
ஏன்?
இடவலமாகத் தலையை ஆட்டியபடி அவரைக் கெஞ்சும் விழிகளுடன் பார்க்கிறான். தனது கோரிக்கையை ஏற்றுக்கொள்ள மன்றாடுவது போலிருந்தது.
-தொடரும்.

திரைக்கதையைப் படித்துக் கொண்டிருக்கிறேன். இறந்த உடலை சுத்தப்படுத்தும் காட்சி மனதில் விரிகிறது. தொடர்ந்துப் படிக்கும் போது இன்னும் முழுமையான காட்சிகளைக் காண முடியுமென நம்புகிறேன்.