Category: எழுத்து

எழுத்து

காலத்தின் ஊற்றுமுகம் – போரும் வாழ்வும் நாவலை முன்வைத்து

சுரேஷ் பிரதீப் · 18.11.20

“ஒரு ஆப்பிள் பழுத்து மரத்திலிருந்து உதிர்கிறது. ஏன் அது உதிர்கிறது? புவியீர்ப்பு விசையினாலா, அதன் காம்பினால் அக்கனியைத் தாங்க முடியாததாலா? அது சூரிய ஒளியால் வறண்டு போவதாலா? அதன் எடை கூடிவிட்டதாலா? காற்று அதை அசைப்பதனாலா? அல்லது ஆப்பிள் மரத்தின் அடியில் நிற்கும் சிறுவன் அதைச் சாப்பிட விரும்புவதாலா?” – போரும் வாழ்வும் நாவலில். புனைவெழுத்தின் வாசகனாக ‘தரமான’ புனைவு என்ற வரையறைக்குள் எப்படி வந்து சேர்ந்திருக்கிறேன் என்று வாசிப்பின் அடிப்படையில் யோசிக்கும்போது புனைவின் தரத்தைத் தீர்மானிக்க காரணகாரியத் […]

எழுத்து

ஷேக்ஸ்பியர் படைப்புகள் மீதான தல்ஸ்தோயின் விமர்சனம்

கோ.கமலக்கண்ணன் · 18.11.20

ஷேக்ஸ்பியர் பற்றி நன்கு பிரஸ்தாபிக்கப்பட்ட கருதுகைகள் மீதான எனது மறுப்பென்பது தற்செயலான மனநிலையில் இருந்து விளைந்ததோ, அக்கருதுகை மீது மேலோட்டமாக நான் கொண்ட பார்வையோ அன்று. மாறாக ஆண்டாண்டுகளாக ஷேக்ஸ்பியர் பற்றி ஏற்கனவே கிறித்துவ உலகின் புத்தியில் நிறுவப்பட்டிருக்கும் அனைத்தின் மீதும் எனது சொந்த புலமையைத் தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டும் அதை மீண்டும் மீண்டும் நான் செப்பனிட்டுக்கொண்டும் இருந்து வருவதன் வெளிப்பாடே.  நான் முதன்முதலாய் ஷேக்ஸ்பியரை வாசித்த போது அடைந்த திகைப்பை நினைவில் வைத்திருக்கிறேன். ஒரு ஆற்றல் மிக்க […]

எழுத்து

கடைத்தேறுதலின் ஊர்வலம்: தல்ஸ்தோயின் போரும் வாழ்வும்

எம்.கே.மணி · 18.11.20

கதை மாந்தர்களுள் ஒருவரான பியர் அசந்தர்ப்பமாக பிடிபட்டு ஃபிரெஞ்சுப் படையினரால் கொண்டுசெல்லப்படுகிறார். அவர் எந்தக் குற்றமும் செய்திருக்கவில்லை. அதுபற்றி யாருக்கும் ஒன்றுமில்லை. யுத்த வெளியில் பொருட்படுத்தக் கூடியதாக எதுவுமில்லை. ஒரு உயிருக்கு தனியான மதிப்போ, மாண்போ இல்லை. விசாரணை நடக்கிறது. மேலும் ஒரு அசந்தர்ப்பமாக ஒரு திருப்பம் நிகழ்கிறது. அதை தல்ஸ்தோய் இப்படி எழுதியிருக்கிறார். “டாவூட் தலை நிமிர்ந்து அவரை உன்னிப்பாக நோக்கினார். சில வினாடிகள் அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்தப் பார்வைதான் பியரைக் காப்பாற்றியது. […]

எழுத்து

ஒரு கதையும் மூன்று கதைசொல்லிகளும்

B.C. அனீஷ் கிருஷ்ணன் நாயர் · 18.11.20

உலக இலக்கியத்தில் தல்ஸ்தோய் தவிர்க்கவே இயலாத ஒரு பெயர். அவரது தர்க்கம் இலக்கிய வட்டங்களில் மட்டும் அல்லாமல் அரசியல், சமூக செயல்பாடு என்ற பல தளங்களிலும் இன்றளவும் உண்டு. காந்தி முதற்கொண்டு ஜெயமோகன், போகன் சங்கர் வரை பல வரலாற்று ஆளுமைகளும் ஏதோவொரு வகையில் தல்ஸ்தோயால் ஈர்க்கப்பட்டவர்களே. ஆன்னா காரனீனா நாவலுக்குப் பிறகு தல்ஸ்தோய் ஒரு பரப்புரையாளராக மாறினார். தல்ஸ்தோயியர்களால் குறுந்தெய்மாக வழிபடப்பட்டார். (அவர்களது பெருந்தெய்வம் கிறிஸ்து. விவிலியத்தின் கிறிஸ்து அல்ல, தல்ஸ்தோயால் உருவாக்கப்பட்ட கிறிஸ்து) தல்ஸ்தோயின் […]

எழுத்து

எடுப்பார் கைப்பிள்ளை – லேவ் தல்ஸ்தோய்

எஸ்.கயல் · 18.11.20

ஒருமுறை, அல்யோஷாவின் அம்மா, பால் நிறைந்த பானை ஒன்றை மத குருவின் மனைவியிடம் தரச் சொல்லி அவனிடம் கொடுத்து அனுப்பிய போது அவன் எதிலோ இடறி விழுந்து அதை உடைத்துவிட்டான். இதனால் அவனுடைய அம்மாவிடம் இருந்து அவனுக்கு நல்ல அடி கிட்டியதோடு கிராமத்திலிருந்த சிறுவர்கள் அவனை, “பானை! பானை!” என்று கிண்டலடிக்கத் துவங்கினர். இப்படித்தான் இந்தச் “செல்லப் பெயர்” அவனை வந்தடைந்தது. அல்யோஷா, ஒடிசலான உடலும், பறவைகளின் சிறகுகளைப் போல வெளியே நீட்டிக்கொண்டு தனியாகத் தொங்கும் காதுகளும், […]

எழுத்து

தல்ஸ்தோயின் காதல்

அருண் நரசிம்மன் · 18.11.20

நான் முதல்முதலில் ஆன்னா காரனீனாவைப் படிக்க ஆரம்பித்தது வருடங்களுக்கு முன் என் முதுகலைப் பட்ட ஆய்வுக் கட்டுரைக்காக. அப்போது எனக்கும் காதலில் விழும் வயது – கவனியுங்கள், காதலிக்கும் வயதில்லை, காதலில் விழும் வயது. ஒரு காதல் கதையைப் படிக்கும் மனநிலையில்தான் அதை முதலில் வாசித்தேன். கதாமாந்தர்களுடைய மனப்போராட்டங்களையும் தேர்வுகளையும் காதல் கண்ணோட்டத்துடன் மட்டும் பார்த்து, அவர்கள் எதைச் சரியாகச் செய்தார்கள், எதைத் தவறாகச் செய்தார்கள் என்றெல்லாம் என்னுடைய தனிப்பட்ட நெறிமுறைகளின் வழியே மதிப்பிட்டு, அவர்களின் செயல்களை […]

எழுத்து

புனிதர்களும் மனிதர்களும்

ஜெயமோகன் · 18.11.20

அரங்கு: ஒரு ரஷ்யப் புகைவண்டி நிலையத்தின் காத்திருப்பு அறை. உக்ரைன் பிராந்தியத்தைச் சார்ந்தது. பிரபுக்களுக்காக வடிவமைக்கப்பட்டது. ஆனால், மோசமாகச் சிதைந்துவிட்டது. தோல்உறை போடப்பட்ட இருக்கைகள் பிய்ந்து பஞ்சு பறக்கின்றன. பலவகையான தட்டுமுட்டுச் சாமான்களும் உடைசல்களும் குவிந்து கிடக்கின்றன. பின்புறம் பெரிய கண்ணாடிச் சன்னல், நிறைய விரிசல்களுடன். அறையில் ஐந்து பேர் காத்திருக்கிறார்கள். நெடுநேரமாகக் காத்திருப்பவர்கள் போன்ற தோற்றம். ஒருவர் செம்படையின் கர்னல். வயதானவர், சீருடையும் பதக்கங்களும் அணிந்தவர். பதற்றத்துடன் சுருட்டை மென்று துப்பியபடி, புகைபிடித்தபடி இருக்கிறார். அருகே […]

எழுத்து

நீண்ட காத்திருப்பு – லேவ் தல்ஸ்தோய்

ஜான்ஸி ராணி · 18.11.20

இவான் டிமிட்ரிச் அக்சியோனோவ் என்ற இளம் வணிகன் விளாடிமிர் நகரத்தில் வாழ்ந்து வந்தான். அவனுக்கு இரு கடைகளும் ஒரு வீடும் சொந்தமாக இருந்தது. அக்சியோனோவ் வெளிர்நிற சுருண்ட தலைமுடியுடன் அழகாக இருந்தான். பாடுவதில் பெரும் விருப்பம் கொண்டவனாகவும் கொண்டாட்டம் நிரம்பியவனாகவும் இருந்தான். இளவயதில் குடிப்பழக்கமுடையவனாக, அதீதமாக குடித்தால் கலகம் செய்பவனாக இருந்தபோதிலும், திருமணமான பின் எப்போதாவது ஒருமுறை குடிப்பதைத் தவிர்த்து குடிப்பழக்கத்தை கைவிட்டிருந்தான். அப்போது கோடைகாலம். நீஜ்னி பொருட்காட்சிக்குப் புறப்பட்டுச் செல்வதற்காக தன் குடும்பத்தினரிடம் விடைபெறும் சமயம், “இவான் […]

எழுத்து

கொலையின் நறுமணம்: The Kreutzer Sonata

ப.தெய்வீகன் · 18.11.20

துயர் நிரம்பிய மனித மனம் பதில்களே இல்லாத எண்ணுக்கணக்கற்ற கேள்விகளால் நிறைந்தது. அந்தக் கேள்விகளுக்குப் பதில் தேடிச்செல்கின்ற போது இன்னும் குழப்பமான சிக்கல்களுக்கு மனதைப் பறிகொடுப்பது அநேகரது அனுபவம். பதில்தேடும் ஆழ்துளைப் பயணங்களில், மனிதன் ஏதோவொரு புள்ளியில், தான் தேடிய விடுதலையை, மகிழ்ச்சியை, சிலவேளைகளில் குழப்பத்திற்கான வேர்களைக் கண்டடைகிறான். அந்த விடுதலையை அருளக்கூடிய அந்தரங்கம் அநேக தருணங்களில் அச்சம் தரக்கூடியது. பிரகாசம் குறைந்தது. ஆனால், உண்மையானது. உருவகங்களிலிருந்து துலக்கி தூய பொருளை முன்வைக்கக்கூடியது. இவ்வாறு, அகத்துக்கும் புறத்துக்குமான […]

எழுத்து

மரித்தெழுதல்: தல்ஸ்தோயின் புத்துயிர்ப்பு

பாலாஜி பிருத்விராஜ் · 18.11.20

செவ்வியல் நாவல்களின் கட்டமைப்பை கவனித்துப் பார்க்கையில் ஒரு பொதுத்தன்மையை வாசகர்கள் கண்டுகொள்ள முடியும். நாவலை எழுவதற்கான தூண்டுதலை அவ்வமைப்பே ஆசிரியருக்கு அளித்திருக்கும். நீர்ப்பரப்பின் சுழிமையமென்று அதைச் சொல்லலாம். ஆற்றுநீர்த்துளிகள் அச்சுழி நோக்கி வருவதும் சுழியைத் தொட்டவுடன் அவை கொள்ளும் அலைவும், சுழிப்பும், அமிழ்வுமென அதன் கட்டமைப்பு இருக்கும். போரும் அமைதியும் நாவலில் அதை நெப்போலியனின் படையெடுப்பு என்றால் அன்னா கரீனினா நாவலில் வெரான்ஸ்கியுடன் அன்னா கிளம்பிச்செல்வது அதன் மையச்சுழி. புத்துயிர்ப்பு நாவலை தல்ஸ்தோய் எழுதுவதற்கு அப்படியான உந்துதலை […]

எழுத்து

கலை என்றால் என்ன? – லேவ் தல்ஸ்தோய்

அருண் நரசிம்மன் · 18.11.20

தல்ஸ்தோய் சுமார் நூறு வருடங்களுக்கு முன்னால் ‘கலை என்றால் என்ன’ எனும் தலைப்பில் ஒரு ஆக்கத்தை வழங்கினார். எவை நல்ல கலை எனச் சொல்ல முனைந்து, பதினைந்து வருடங்கள் பல வடிவங்களில் எழுதி, இறுதியிலும் முடிவான வடிவமென்று தனக்கு முழுவதும் திருப்தியில்லாத ஒன்றையே அளித்தார். அவ்வாக்கத்திற்கு இன்றளவில் இரண்டு ஆங்கில வடிவங்கள் உள்ளன. இவற்றை வாசித்ததும் புரிபடுவது – எவை நல்ல கலை எனச் சொல்ல முனைந்து எவையெல்லாம் நல்ல கலைகளல்ல என்பதையே தல்ஸ்தோய் தன் பார்வையில் […]

எழுத்து

ஆன்னாவின் மனப்போரும் மரணத்தின் அமைதியும்: ஆன்னா காரனீனா

நவீனா அமரன் · 18.11.20

“Happy families are all alike; every unhappy family is unhappy in its own way.” –ஆன்னா காரனீனா நாவலின் முதல் வரி. ரயில் பெட்டிகளும் தண்டவாளங்களும் போல, காலமும் மனிதனின் விருப்பங்களும் தெரிவுகளும் (Choices) முடிவில்லாதவை. எதிர்காலம், கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் தன்னகத்தே கொண்டு, காலத்தின் முடிவிலி தன்மையை பிரதிபலிக்கும் பிம்பமாக, மனிதனால் தகர்த்து உடைக்க முடியாத பெரும் மதிலாக, அவனால் குடித்துத் தீர்க்க முடியாத பரந்த சமுத்திரமாக, காட்சிப்பிழையாக உருப்பெறும் போது, […]