கார்த்திக் நேத்தா கவிதைகள்
பரிசு ஒளி குறைந்து குறைந்து இருளில் இயைகிறது நீ செய்ய வேண்டியது இருளைக் குறைத்துக் குறைத்து ஒளியை எடுத்துக் கொள்வதுதான். தூய்மை பிரகாசத்தில் இருள் வேறாய் நிற்பதில்லை அவிழா மலரின் அந்தரத்தில் மணத்தின் பெருவிழிப்பு. அந்தர மணமும் பிரகாசத்தில் இருளும் விழிப்பின் லயிப்பு. சுடர்ந்து அசையும் பிரகாசத்தில் இருளின் தூய்மை. அந்தர வெளியில் மணத்தின் தவம். விழிப்பும் செயலும் வேறு வேறு. விழிப்பு அநாதி. விழிப்பில் செயலை கவனித்தல் எனது விதி. எண்ணத்தை கவனமுறுதலே எனக்கு வேலை. […]
